PDA

View Full Version : புன்னகை



simariba
29-04-2010, 02:50 AM
சகியே உன் உதடுகள்

இரண்டும் நீண்டு

கண்கள் இரண்டும் மலர்ந்து

எப்போது சிரிப்பாய்

எனைப்பார்த்து...



என காத்து கிடந்தேன்

காதலிக்கும் போது...



அந்த அழகில்

அமிழ்ந்து கிடந்தேன்

பல காலம்...



இப்போதும் ஏக்கத்துடன்

காத்துத்தான் கிடக்கிறேன்

நீ நம் குழந்தைகளை

கவனிப்பதை முடித்து

என் பக்கம் எப்போது

பார்ப்பாயென்று...



ஒரு பிள்ளை இடையில்

தூக்கி ஒரு பிள்ளை

கையில் பிடித்து

நடக்கும் அழகில்

அமிழ்ந்து தான் போகிறேன்

இப்போதும்....



ஆனால் நீ மட்டும் சகியே

அப்படியே இருக்கிறாயே

அதே புன்னகையுடன்...

கீதம்
29-04-2010, 04:27 AM
அழகிய இல்லறக்காட்சி, அருமையாய் விரிகிறது என் கண்முன்.

காதலித்தபோது சிந்திய புன்னகை
கையிலிரண்டு பிள்ளை வந்தபோதும்
கச்சிதமாய்த் தொடர்கிறதென்றால்....

அதை வரமென்றுதான் சொல்லவேண்டும்.
அந்த வரத்தை நல்கிய தலைவனை
வாயாரப்புகழவேண்டும்.

அருமையான படைப்பு. வாழ்த்துகள், அபி.

simariba
29-04-2010, 06:40 AM
நன்றி கீதம்!

பா.சங்கீதா
03-05-2010, 06:27 AM
என்ன சொல்வதென்றே தெரியவில்லை
அவ்வளவு நல்ல இருக்கு,
வாழ்த்துகள்..........

ஜனகன்
03-05-2010, 08:17 AM
காதலுக்கு வயதில்லை
காதலிக்க ஏது வயதெல்லை
அருமையாக எழுதி உள்ளீர்கள்........வாழ்த்துக்கள் .

govindh
03-05-2010, 08:55 PM
புன்னகை.....அழகு நகை...
கவி அழகு...
வாழ்த்துக்கள்..

simariba
03-05-2010, 11:39 PM
நன்றி சங்கீதா, ஜனகன், கோவிந்த்!

Akila.R.D
04-05-2010, 09:06 AM
//ஒரு பிள்ளை இடையில்

தூக்கி ஒரு பிள்ளை

கையில் பிடித்து

நடக்கும் அழகில்

அமிழ்ந்து தான் போகிறேன் //

என்னைக்கவர்ந்த வரிகள்...

தொடர்ந்து எழுதுங்கள் அபி...

muthuvel
04-05-2010, 12:13 PM
ஒரு பிள்ளை இடையில்

தூக்கி ஒரு பிள்ளை

கையில் பிடித்து

நடக்கும் அழகில்

அமிழ்ந்து தான் போகிறேன் //

என்னைக்கவர்ந்த வரிகள்...

பா.ராஜேஷ்
06-05-2010, 09:52 AM
என்றென்றும் புன்னகை ... நல்ல கவிதை.. வரிகள் வெகுவாய் ஈர்த்தன. பாராட்டுக்கள்

செல்வா
11-05-2010, 03:30 PM
கவிதை நல்லாருக்கு...

வாழ்த்துக்கள்.