PDA

View Full Version : ஊக்கப்பரிசு



simariba
29-04-2010, 02:33 AM
மன்றம் தந்த தன்னம்பிக்கையும், எப்போதும் கதை எழுத கனன்றெழும் ஆர்வமும், தமிழ் மீது நான் கொண்ட தீராக்காதலும் சிங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய முத்தமிழ் விழா சிறுகதை போட்டியில் பங்கேற்க தூண்டியது.
முதல் முயற்சி... ஏதேதோ யோசித்து, எப்படியோ எழுதி முடித்து, திருத்தி அழகாக்கி திருப்தியானவுடன் ஒரு வழியாக அனுப்பிவைத்தேன் என் முதல் கதையை. யோசிக்க 10 நாட்களும் எழுத, திருத்த 2 நாட்களும் என எல்லாம் நன்றாக முடிந்தது. அனுப்பி 20 நாட்களில் ஒரு தபால். நீங்கள் எழுதிய கதைக்கு ஊக்கப்பரிசு கிடைத்துள்ளது என. எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை இன்னும் பன்மடங்கு பெருக்கிய உண்மையான ஊக்கப்பரிசு. நன்றி மன்ற நண்பர்களே!!! நீங்கள் தந்த ஊக்கமும் நம்பிக்கையும் அளித்த பரிசாகத்தான் இதை நினைக்கிறேன்.:):icon_rollout:

பாரதி
29-04-2010, 02:41 AM
ஆஹா.....! அருமை.. அருமை..!!
சிங்கையிலா...?!!
அருமையான ஊரில் மன்றம் தந்த ஊக்கத்தில் நீங்கள் பெற்ற பரிசு எங்களை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இது முதல்படி மட்டுமே. தொடர்ந்து எழுதுங்கள். மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்.

குணமதி
29-04-2010, 02:44 AM
பாராட்டும் வாழ்த்தும்!

simariba
29-04-2010, 02:53 AM
நன்றி பாரதி, நன்றி குணமதி!

கீதம்
29-04-2010, 04:21 AM
பாராட்டுகள், அபி. அடுத்தடுத்த முயற்சிகளில் முதல் பரிசு பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.

muthuvel
29-04-2010, 04:22 AM
பேனா mai தீர்த்தாலும் உங்கள் எண்ணங்கள் தீர வில்லை

simariba
29-04-2010, 06:41 AM
நன்றி கீதம், நன்றி முத்துவேல்.

கலையரசி
29-04-2010, 01:58 PM
முதல் கதைக்கே போட்டியில் ஊக்கப் பரிசு கிடைக்கிறதென்றால், வியப்பாய் இருக்கிறது. தொடர்ந்து எழுதினால் விரைவில் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆகிவிடுவீர்கள். (அப்போது எங்களை எல்லாம் கொஞ்சம் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்)
பாராட்டி வாழ்த்துகிறேன் அபி.

செல்வா
29-04-2010, 03:20 PM
நம் மன்ற நண்பர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் நமக்கேக் கிடைத்தாற்போல ஒரு மகிழ்ச்சி...

இன்னும் இன்னும் பலபல பரிசுகளை இலக்கிய உலகில் வெல்ல வாழ்த்துக்கள் நண்பரே...

தொடர்ந்து எழுதுங்கள்.

சிவா.ஜி
29-04-2010, 04:43 PM
முதல்முயற்சிக்கேப் பரிசு கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. நம் மன்ற உறுப்பினரின் வெற்றி அனைவரையும் மகிழவைத்திருக்கிறது.

இன்னும் மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள் அபி.

aren
29-04-2010, 07:35 PM
முதலில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் நிறைய எழுதுங்கள். இங்கே அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நீங்கள் பரிசு வாங்கிய கதையை இங்கே பதியுங்கள், நாங்களும் படித்து பூரிப்படைகிறோம்.

பா.ராஜேஷ்
29-04-2010, 08:05 PM
மகிழ்ச்சியான செய்திதான். வாழ்த்துக்கள் அபிராமி. இங்கே தந்தால் நாங்களும் மகிழ்வோமே!!!

simariba
30-04-2010, 12:01 AM
நன்றி நண்பர்களே! விரைவில் பதிவேற்றுகிறேன்.

அமரன்
01-05-2010, 01:08 PM
வாழ்த்துகள் அபி.

தொடர்வெற்றிகள் குவியட்டும்.

simariba
02-05-2010, 01:17 AM
நன்றி அமரன்!

விகடன்
04-05-2010, 06:30 AM
சிக்கையிலேயே கன்னிமுயற்சியில் ஊக்கப்பரிசை தட்டிச்சென்ற படைப்பளிக்கு பாராட்டுக்கள்.

தொடர்ந்து வெற்றிகள் சரவெடிபோல சரமாரியாக வந்துசேரட்டும்.

simariba
04-05-2010, 06:43 AM
நன்றி விராடன்!

அக்னி
04-05-2010, 07:21 AM
மனம் நிறைந்த பாராட்டும் வாழ்த்தும்...

தூண்டி விட்டது மன்றம் என்பதனால்,
சந்தோஷப் பிரகாசம் இரட்டிக்கின்றது...

எழுத்துலகம் உங்கள் வசப்படட்டும்.
உங்கள் எழுத்துக்கள் வசப்படுத்தட்டும்.

simariba
04-05-2010, 07:56 AM
நன்றி அக்னி!