PDA

View Full Version : பிறந்தநாள் வாழ்த்து!



குணமதி
28-04-2010, 06:04 AM
என்றும் மகிழ்ந்திடுக!


ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரலிலே

உயர்நாள் இருபத் திரண்டதுவே

செவ்வி மிகுந்தே சிறந்திடும்எம்

செல்வி அருவி பிறந்ததுவே!

அவ்வோர் அரிய நாளினிலே

அன்பில் ஆயா தாத்தாவும்

செவ்வை நெஞ்சில் வாழ்த்துகிறார்

சிறப்பாய்ப் படித்து வளர்கவென!



அழகுத் தம்பி செம்மலுக்கே

அன்பாய்ப் படிப்பில் உதவிடவும்

பழக்க மான சிறுவருடன்

பாடிப் பழகி ஆடிடவும்

வழக்கம் போலத் தாய்தந்தை

வாய்ச்சொல் மதித்து நடந்திடவும்

ஒழுக்கம் உண்மை மாறாது

ஒளியாய்த் திகழ வாழ்த்துகிறார்!



நன்றாய் உடலைப் பேணிடுக!

நலமாய் வாழக் கற்றிடுக!

ஒன்றி உள்ளம் படிப்பினிலே

ஊன்றி நன்கு படித்திடுக!

என்றும் மகிழ்வாய் இருந்திடுக!

எதற்கும் கலங்கா மனங்கொள்க!

இன்று போல இனிமையுடன்

என்றென் றைக்கும் மகிழ்ந்திடுக!


---------------------------------------------
செவ்வி = அழகு
செவ்வை = நேர்மை, செப்பம், தூய்மை
ஒளியாய் = அறிவாய், புகழாய்
பேணிடுக = காப்பாற்றுக
ஊன்றி = ஆழ கவனம் செலுத்தி
கலங்கா = மிகவும் வருந்தாத
இனிமையுடன் = இன்பத்துடன்
----------------------------------------------

kavitha
28-04-2010, 06:10 AM
செல்வி (யார்?) பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் குணமதி

குணமதி
28-04-2010, 01:03 PM
மிக்க நன்றி கவிதா.

அனபளிப்புப் பணம் ஒரு நூறு அளித்தமைக்கும் நன்றி.

செல்வி அருவி என் நண்பர் ஒருவரின் பெயர்த்தி.

உங்கள் வாழ்த்து அருவிக்கு ஊக்கம் தரும்.

செல்வா
28-04-2010, 02:29 PM
இனியப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வி அருவி அவர்களுக்கு.

இனிய வாழ்த்துக்கள் தங்கள் இனிய கவிதைக்கு.

தமிழால் வாழ்த்து பெற்ற செல்வி. அருவி உண்மையிலேயே பேறுபெற்றவர்.

govindh
28-04-2010, 02:38 PM
என்றும் மகிழ்ந்திடுக...!
செல்வி அருவிக்கு....
கவி அருவியாய் ஒரு வாழ்த்துக் கவி..!

மிக அருமை..!

அக்னி
28-04-2010, 02:43 PM
கவிச்சாரல் நனைந்து,
மகிழ்வுடனே வாழ்த்துகின்றேன் அருவி அவர்களை...

இந்த கவிச்சாரலை அருவி மீதும் வீசுங்கள்.
செல்வி அருவியும் மனம்மகிழட்டும்...

சிவா.ஜி
28-04-2010, 02:56 PM
செல்விக்குப் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

கலையரசி
28-04-2010, 03:07 PM
ஆகா! அருவி எவ்வளவு அருமையான தமிழ்ப் பெயர். பிறந்த நாள் காணும் அருவிக்குப் பிறந்த நாள் வாழ்த்து.

அக்னி
28-04-2010, 03:10 PM
ஆகா! அருவி
இல்லீங்க...
செல்வி அருவி... :rolleyes:

பா.ராஜேஷ்
28-04-2010, 06:49 PM
செல்வி அருவிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

கீதம்
28-04-2010, 09:31 PM
செல்வி அருவிக்கு எம் இனிய பிறந்தநாள் வாழ்த்தைச் செப்பிடுக.


இல்லீங்க...
செல்வி அருவி... :rolleyes:

இதென்ன? இப்போதெல்லாம் பிரித்து மேய்வதையே ஒரு வேலையாகச் செய்யத்தொடங்கிவிட்டீர்கள்.

குணமதி
29-04-2010, 03:05 AM
செல்வா
கோவி
அக்னி
சிவா
கலையரசி
பா.ரா.
கீதம்
- அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

அனைவரின் வாழ்த்துக்களையும் அருவிக்குத் தெரிவித்தேன்.
நெகிழ்ந்து போய் மகிழ்ந்தாள்.
அனைவர்க்கும் தன் நன்றியை எழுதுமாறு கூறினாள்.

அனுராகவன்
23-09-2010, 02:29 AM
என்றோ வாழ்த்த முடியல..
ஆனால் வாழ்த்த வயதுமில்லை..வாழ்த்த நேரமில்லை...
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

குணமதி
24-09-2010, 05:22 PM
நன்றி அனு.

சூறாவளி
29-09-2010, 03:51 AM
நானும் லேட்டா வந்துட்டேங்ங்க... என்னோட வாழ்த்தும் சமர்பிக்கிறேன்

செல்வி அருவிகிட்ட சொல்லுங்க... இன்னும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லிகிட்டே இருக்காங்கன்னு... (செல்வி "அருவி" - இதுபோல் பெயர்கள் இப்போதுதான் இருக்கிறது என அறிந்து கொள்கிறேன்)

அதுபோல் சில தமிழ் சொற்கலும் இப்போதான் புதிதாய் அறிகிறேன்.. "நண்பர் ஒருவரின் பெயர்த்தி" என்றால் மகளா? மகளைதான் தமிழில் பெயர்த்தி என்பார்களோ!!!

ஆன்டனி ஜானி
04-12-2010, 02:27 PM
லேட்டா வந்தாலும்
லேட்டஸ்ட்ட்டா வாழ்த்து சொல்ல வந்திருக்கிறேன் .....

இனிய பிறந்த நாள், நல்வாழ்த்துக்கள் குணமதி அவர்களே !!

பல்லாண்டு வாழ இந்த இனிய நண்பனின் வாழ்த்துக்கள் ,,,,

nambi
04-12-2010, 04:55 PM
உங்கள் நண்பரின் பெயர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ஜனகன்
04-12-2010, 08:22 PM
எனது சார்பிலும் உங்கள் நண்பரின் பேத்திக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

பாலகன்
05-12-2010, 03:45 AM
செல்வி அருவி கொடுத்துவச்சவங்க ஏன்னா முகம் தெரியத மன்ற உறவுகள் அனைவரும் அவங்களுக்கு வாழ்த்து சொல்றாங்களே!

நானும் சொல்லிடுறேன் என் வாழ்த்தை.