PDA

View Full Version : தமிழில் நிரல்(புரொகிராம்) எழுதுவது எப்படி?



nrs.rajkumar
26-04-2010, 11:01 AM
நிறைய நிரல் மொழிகளில்(programming languages) தமிழ் இடைமுகப்புடன்(interface) கூடிய நிரல்களை எழுதலாம். ASCIIல் இடைமுகப்பை உருவாக்குவது சுலபம்.
ASCII குறியீட்டிலிருக்கும்(encoding) TAM,TAB,TSCII... போன்ற எழுத்துருக்களை(fonts) வைத்தே label,textbox போன்றவற்றில் பயன்படுத்திக் கொள்ளலாம். Message box, menus போன்றவற்றை வரவழைப்பது கடினம். ஒருங்குறிக்கு(யுனிகோட்) ஆதரவளிக்கும் நிரல் மொழிகளில் எந்த மொழியில் வேண்டுமானாலும் மென்பொருட்களை உருவாக்க இயலும். விபியிலும், ஜாவாவிலும் தமிழில்(ஒருங்குறி) நிரலெழுதிப் பழகுவதற்கு உதவியாக சிறு எடுத்துக்காட்டு நிரலை இணையத்தில் பகிர்ந்துள்ளேன். இது குறித்து மேலும் விவரங்களுக்கு http://tamilcpu.blogspot.com பார்வையிடவும்.

பாரதி
29-04-2010, 03:38 PM
நண்பரே,
உங்கள் வலைத்தளத்தைக் கண்டேன்; மகிழ்ந்தேன்.
சிறப்பாக இருக்கிறது. இங்கிருந்து தொடுப்பு அளிப்பதைக் காட்டிலும், இயலுமெனில் அவற்றை மன்றத்திலேயே பதிவு செய்யுமாறு அன்புடன் உங்களை வேண்டுகிறேன்.

பா.ராஜேஷ்
29-04-2010, 08:06 PM
நல்ல தகவல்கள் ராஜ்குமார். நன்று. பாராட்டுக்கள்