PDA

View Full Version : உற்றத் தோழன் நீயடா!!?



sivani
24-04-2010, 02:06 PM
தத்தளிக்கும் பொழுதினிலே...:icon_rollout:
கைக்கொடுத்து காப்பாயோ!!??:icon_rollout:
கரை சேர்ந்து, முன்னரே...
வேடிக்கைதான் பார்ப்பாயோ!!??:icon_rollout:
உற்றத் தோழன் நீ என்று...
உயிர் உருகி நின்றேனே !!:)
சற்றும் என்னைப் பாராமல் ...
விட்டு நீயும் போவாயோ!!!???:traurig001:

ஓங்கிடும் தமிழே!!! உயர்வேன் நான் உன் போல !!:icon_b:

கீதம்
29-04-2010, 05:06 AM
உற்ற தோழன் நீயாடா? என்றிருந்தால் மிகப்பொருத்தமாக இருக்கும்.

இடர் வரும்போதுதானே உண்மை நட்பை அறிய இயலும். அறியமுடிந்ததற்காய் இடருக்கு நன்றி சொல்லி , இல்லாத நட்புக்கு இரங்கற்பா பாடிக்கொண்டிராமல், இயன்றவரை ஒதுக்கி, உண்மை நண்பனைத் தேடிச் செல்வதே புத்திசாலித்தனம்.

கவிதை நன்றாக உள்ளது.பாராட்டுகள், சிவானி.

அமரன்
13-05-2010, 09:14 AM
பழங்கஞ்சி.... ருசி.

நாஞ்சில் த.க.ஜெய்
18-11-2010, 06:48 AM
உடுக்கை இழந்தவன் கை போல
ஆங்கோர் இடுக்கண் களைவதாம் நட்பு

குறள் கூறும் இன்றைய கால உண்மையை மிகதெளிவாக கூறியது உங்கள் கவிதை .கீதம் கூறியது போல உற்ற தோழன் நீயாடா? என்றிருந்தால் மிகப்பொருத்தமாக இருக்கும்.
வாழ்த்துகளுடன்
த.க.ஜெய்

govindh
18-11-2010, 07:22 AM
இடரில் காக்காத நண்பனுக்கு
இடித்துரைத்தல் நன்று.

பாராட்டுக்கள் சிவானி.

பென்ஸ்
18-11-2010, 03:38 PM
வாங்க சிவானி...

கவிதை நன்று... அதை எழுதும் போது இத்தனை ஸ்மைலி அழகு சேர்க்கவில்லையே....

sivani
23-11-2010, 02:32 PM
பாராட்டுகளுக்கு நன்றி !! பிழைகளைத் திருத்திக் கொண்டு மேலும் முன்னேறுவேன் !

வானவர்கோன்
25-11-2010, 01:06 PM
தத்தளிக்கும் பொழுதினிலே...:icon_rollout:
கைக்கொடுத்து காப்பாயோ!!??:icon_rollout:
கரை சேர்ந்து, முன்னரே...
வேடிக்கைதான் பார்ப்பாயோ!!??:icon_rollout:
உற்றத் தோழன் நீ என்று...
உயிர் உருகி நின்றேனே !!:)
சற்றும் என்னைப் பாராமல் ...
விட்டு நீயும் போவாயோ!!!???:traurig001:

ஓங்கிடும் தமிழே!!! உயர்வேன் நான் உன் போல !!:icon_b:

உற்ற தோழனா நீ தத்தளிக்கும் போதினிலே
கைகொடுத்து காப்பாயோ!
கரை சேர முன்னமே கைவிட்டு
வேடிக்கைதான் பார்ப்பாயோ!
உற்ற தோழன் நீயென
உயிர் உருகி நின்றேனே!
சற்றும் என்னைப் பாராமல்
விட்டு நீயும் போவாயோ!

sivani
04-02-2011, 12:48 PM
:frown:
மனதில் ஆயிரம் இன்னல்கள்...
மனம் திறக்க முடியவில்லை !
மரங்கொத்திப் பறவைகளாய்...
மனத்தைக் கொத்தும் ஆயிரம் பேர்,
மரணம் வரை உடன் வரும்போது!!
மனதில் ஆயிரம் இன்னல்கள் !
மனம் திறக்க முடியவில்லை!!



*தமிழோடு வாழ்வோம்!
தமிழோடு உயர்வோம் !!

கீதம்
04-02-2011, 10:20 PM
:frown:
மனதில் ஆயிரம் இன்னல்கள்...
மனம் திறக்க முடியவில்லை !
மரங்கொத்திப் பறவைகளாய்...
மனத்தைக் கொத்தும் ஆயிரம் பேர்,
மரணம் வரை உடன் வரும்போது!!
மனதில் ஆயிரம் இன்னல்கள் !
மனம் திறக்க முடியவில்லை!!



*தமிழோடு வாழ்வோம்!
தமிழோடு உயர்வோம் !!

வாயென்னும் வாயில்திறக்க
வாய்ப்பின்றிப்போகலாம்,
மனச் சாளரத்தைத்
தாழிடத்தான் இயலுமோ?
மனந்திறவும் நாள்வரும்,
மனவேதனை மாயமாகும்,
துணைவரவே கவிதையுண்டு,
துயரங்களைத் துடைப்பதுண்டு.

பாராட்டுகள் சிவானி.