PDA

View Full Version : வினை விதைத்தவன்...

மதி
23-04-2010, 07:38 AM
மு.கு: சத்தியமா இதில் வரும் சம்பவங்கள் உண்மையே. மேலும் இதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

கல்யாணம் ஆகாம இருந்தாலும் தான் இருக்கோம். எங்க பாத்தாலும் கல்யாணத்தை பத்தி மட்டும் பேசறதே காதுல விழறது. அடிக்கடி மாப்ளே கல்யாணம் நிச்சயமாயிடுச்சுடா.. மச்சான். குழந்தை பொறந்திருக்குடான்னு வரிசையா போன் வரும். நமக்கு தான் ஒன்னும் நடக்கல. அடுத்தவனுக்காவது நல்லது நடக்கட்டுமேன்னு போய் நல்லபடியா இருங்கன்னு வாழ்த்திட்டு வர்றது வழக்கம்.

இப்படி தான் அலுவலகத்துல சும்மா மொக்கை போட்டுட்டு இருந்த நேரம் பயலுவ ஒரு விஷயத்தை சொன்னாங்க. எங்க ஜீனியர் பையன் ஒருத்தன் கிட்டத்தட்ட ரெண்டு மூணு நாளா ஆள காணல. எங்கடா ஆளக்காணோமேன்னு விசாரிச்சா. பயபுள்ள பொண்ணு பார்க்க ஊருக்கு போயிருக்கான்னு சொன்னாங்க. அட்றா..அட்றா.. வந்தவுடனே ட்ரீட்டுக்கு ஆட்டைய போட்டுட வேண்டியது தான்னு கங்கணம் கட்டிக்கிட்டு காத்திருந்தோம்.

போன வாரம் ஊருக்கு போன பய முந்தாநேத்து தான் வந்தான். அன்னிக்கு அதிசயமா வேலை கொஞ்சம் அதிகமா இருந்ததால் பாத்து பேச முடியல. சரி.. அப்புறமா பேசிக்கலாம்னு பாத்தா ஆள் அஞ்சு மணிக்கெல்லாம் எஸ்ஸாயிட்டான். முகம் வேற சரியில்லை. சரி.. ஊருக்கு போய்ட்டு வந்த களைப்பு நாளைக்கு பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். ஆறு மணிவாக்கில் எல்லோரும் டீத்தண்ணீ குடிக்க காஃபிட்டேரியா போன போது 'என்னடா ஆச்சி.. ஆள் மூஞ்சியே சரியில்ல.. பொண்ணு புடிக்கலேன்னு சொல்லிடுச்சா என்ன' னு ஆரம்பிச்சேன்.

அப்போ பசங்க சொன்ன கதைய கேட்டு கொஞ்சம் அசந்துட்டேன். சரித்திரத்தை பன்னிரண்டு வருஷம் புரட்டிப்பார்த்தா அந்த புள்ளையாண்டான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்திருக்கான். இப்ப போல அப்பவும் வாலு. எவனையும் விடறதில்லை. பசங்க படத்துல வர்ற வில்லன் கேரக்டர் போல. சும்மா இல்லாம ஒரு நாள் கூட படிக்கற பையன் குடுமிய புடிச்சு இழுத்து வம்பிழுத்திருக்கான். அந்த பையன் அழ பெரிய கலாட்டாவாயிடுச்சு. அதுக்கப்புறம் அந்தப்பையனும் இவனும் பேசிக்கறதில்லை. வீட்டிலே இவனுக்கு செம அடி.. திட்டு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எப்படியோ படிச்சி ஒருவழியா கரை சேர்ந்து எங்க கம்பெனியில சேர்ந்துட்டான். இப்போ அப்படியே நேர் மாறா இருப்பான். அவ்ளோ சாது.

அப்படியாப்பட்டவன் பொண்ணு பாக்க வாடான்னு வீட்ல கூப்பிட்டது ஆச ஆசையா போயிருக்கான். போனது சனிக்கிழமை காலை. அன்னிக்கு பொண்ணு பார்க்க கூடாது அடுத்த நாள் தான் பாக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்போனு பார்த்து பையன் ஜாதகத்தை பார்க்கலாம்னு ஒரு ஜோசியக்காரன்கிட்ட குடுத்திருக்காங்க. அந்த நல்லவன் ஜாதகத்தைப் பார்த்துட்டு இப்போ பொண்ணு பார்த்தா அமையாது. பையனுக்கும் நல்லதில்ல. இன்னும் நாலு மாசம் கழிச்சு தான் பொண்ணு பாக்கணும். அதனால கொஞ்சம் தள்ளிப் போடுங்கன்னு சொல்லிட்டாப்ல..

பயந்து போன இவன் அப்பா அம்மா பொண்ணு வீட்டு சொல்லி அனுப்பிட்டாங்க. 'இப்போதைக்கு நேரம் சரியில்ல. நாலு மாசம் கழிச்சு பாத்துக்கலாம். அதுக்குள்ள உங்களுக்கு வரன் அமைஞ்சா பாத்துக்குங்கன்னு'. அதான் பையன் மூட் அவுட். அவ்ளோ தூரம் போய் பொண்ண கண்ணுலேயே காட்டலேன்னு..

நண்பன் முடிக்க...

'ஓ. அதான் காரணமா.. ஆமா இதுக்கும் அந்த பன்னிரண்டு வருஷ ப்ளாஷ்பேக்குக்கும் என்ன சம்பந்தம்?'

'இருக்கே... அன்னிக்கு இவன் குடுமிய புடிச்சு வம்பிழுத்த அந்த பையன் தான் இப்போ இவனுக்கு ஜோசியம் பாத்த ஜோசியக்காரர்.. பயபுள்ள சரியான நேரம் பார்த்து கால வாரிவிட்டுட்டான்... ஹாஹா..'

அடங்கொப்புறானே.....

நீதி: வினை விதைத்தவன்... எப்போதும் யார்கிட்டேயும் தேவையில்லாம வம்பிழுக்க வேணாம். விதியும் வினையும் எப்போ வேணும்னாலும் சுத்தி சுத்தி அடிக்கும்.

செல்வா
23-04-2010, 07:47 AM
மேலும் இதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

நம்பிட்டேன்... :)

இந்தமாதிரி இன்னும் எத்தனை வினை(கள்) காத்திருக்கு...

நல்ல நகைச்சுவை பதிவு....

கலக்கல் தல...

மதி
23-04-2010, 07:53 AM
அட.. நான் சொல்ல வந்தது.. பாதிக்கப்பட்டது நானில்லைன்னு.. இந்த மாதிரி சிலர பாத்து தான் மனச தேத்திக்க வேண்டியிருக்கு... :):)

அன்புரசிகன்
23-04-2010, 07:56 AM
இவன் தான் குடுமிய ஆட்டிய வில்லன் என்று அந்த ஜோசியக்கார நல்லவனுக்கு சொல்லிக்கொடுத்த வல்லவன் யார்??? தாங்கள் இல்லியே??? வயித்தெரிச்சலில் பண்ணக்கூடாததெதுவும் பண்ணலியே..

மதி
23-04-2010, 08:00 AM
அட.. இந்தப்பையன எனக்கு கம்பெனியில சேர்ந்ததுக்கு அப்புறம் தான் தெரியும்.. மத்தபடி... அடுத்தவன் குடியை கெடுக்கற அளவுக்கு நான் நல்லவன் இல்லீங்க

govindh
23-04-2010, 08:51 AM
நீதி: வினை விதைத்தவன்... எப்போதும் யார்கிட்டேயும் தேவையில்லாம வம்பிழுக்க வேணாம். விதியும் வினையும் எப்போ வேணும்னாலும் சுத்தி சுத்தி அடிக்கும்.

வினை விதைத்தவன்... நல்ல நீதி கதை...!?
நாலு மாசம் தானே...நாலு வருஷம்னு சொல்லாமல் விட்டாரே...!

நினைவுகள் இன்னும் மலரட்டும்...

Akila.R.D
23-04-2010, 09:28 AM
அடடே பாவம் அந்த பையன்...
சரி சரி நாலு மாசம் தானே நல்ல பொண்ணா கிடைக்கும்....

//கல்யாணம் ஆகாம இருந்தாலும் தான் இருக்கோம். எங்க பாத்தாலும் கல்யாணத்தை பத்தி மட்டும் பேசறதே காதுல விழறது. அடிக்கடி மாப்ளே கல்யாணம் நிச்சயமாயிடுச்சுடா.. மச்சான். குழந்தை பொறந்திருக்குடான்னு வரிசையா போன் வரும். நமக்கு தான் ஒன்னும் நடக்கல. அடுத்தவனுக்காவது நல்லது நடக்கட்டுமேன்னு போய் நல்லபடியா இருங்கன்னு வாழ்த்திட்டு வர்றது வழக்கம்.//

அடிக்கடி என் நண்பர்கள்கிட்ட இருந்து வரும் வசனங்கள் இவை...

ஏன் மதி பெங்களூர்ல நிறைய பேர் இப்படிதான் இருக்காங்களோ?..

மதி
23-04-2010, 09:44 AM
நீதி: வினை விதைத்தவன்... எப்போதும் யார்கிட்டேயும் தேவையில்லாம வம்பிழுக்க வேணாம். விதியும் வினையும் எப்போ வேணும்னாலும் சுத்தி சுத்தி அடிக்கும்.

வினை விதைத்தவன்... நல்ல நீதி கதை...!?
நாலு மாசம் தானே...நாலு வருஷம்னு சொல்லாமல் விட்டாரே...!

நினைவுகள் இன்னும் மலரட்டும்...

ஹாஹா.. அதான் நாலு வருஷம்னு சொல்லாம விட்டுட்டாரே...! நல்ல ஜோசியக்காரர் போல.

அடடே பாவம் அந்த பையன்...
சரி சரி நாலு மாசம் தானே நல்ல பொண்ணா கிடைக்கும்....

//கல்யாணம் ஆகாம இருந்தாலும் தான் இருக்கோம். எங்க பாத்தாலும் கல்யாணத்தை பத்தி மட்டும் பேசறதே காதுல விழறது. அடிக்கடி மாப்ளே கல்யாணம் நிச்சயமாயிடுச்சுடா.. மச்சான். குழந்தை பொறந்திருக்குடான்னு வரிசையா போன் வரும். நமக்கு தான் ஒன்னும் நடக்கல. அடுத்தவனுக்காவது நல்லது நடக்கட்டுமேன்னு போய் நல்லபடியா இருங்கன்னு வாழ்த்திட்டு வர்றது வழக்கம்.//

அடிக்கடி என் நண்பர்கள்கிட்ட இருந்து வரும் வசனங்கள் இவை...

ஏன் மதி பெங்களூர்ல நிறைய பேர் இப்படிதான் இருக்காங்களோ?..

தெரியலீங்க... பெங்களூர்ல இருக்கற நிறைய பேருக்கு கல்யாணமாயிடுச்சு.. இருக்கற மிச்சம் சொச்சம்.. என்னைய மாதிரி கொஞ்சம் பேர்... நீங்களும் பெங்களூர்காரவுக தானே.. உங்களுக்குத் தெரியாதா?

Akila.R.D
23-04-2010, 09:48 AM
தெரியலீங்க... பெங்களூர்ல இருக்கற நிறைய பேருக்கு கல்யாணமாயிடுச்சு.. இருக்கற மிச்சம் சொச்சம்.. என்னைய மாதிரி கொஞ்சம் பேர்... நீங்களும் பெங்களூர்காரவுக தானே.. உங்களுக்குத் தெரியாதா?

கொஞ்சம் தாங்க தெரியும்... நீங்க சீனியர்ல அதான் கேட்டேன்...

மதி
23-04-2010, 09:53 AM
கொஞ்சம் தாங்க தெரியும்... நீங்க சீனியர்ல அதான் கேட்டேன்...
ஓ.. எனக்கும் அவ்வளவா தெரியாது..!!! சீனியர்னு சொல்லி இப்படி கவுத்திட்டீங்க.... நிறைய சீனியர்ஸ் இங்க இருக்காங்க.. நான் இப்போ தான் காலேஜ் முதல் வருஷம் முடிச்சு.. ப்ளஸ் டூ படிக்க போறேன்..

Akila.R.D
23-04-2010, 09:58 AM
ஓ.. எனக்கும் அவ்வளவா தெரியாது..!!! சீனியர்னு சொல்லி இப்படி கவுத்திட்டீங்க.... நிறைய சீனியர்ஸ் இங்க இருக்காங்க.. நான் இப்போ தான் காலேஜ் முதல் வருஷம் முடிச்சு.. ப்ளஸ் டூ படிக்க போறேன்..

பத்தாவது படிக்கிற நான் ப்ளஸ் டூ படிக்கிற உங்கள சீனியர்ன்னு தான சொல்லனும்... நான் சரியாதாங்க சொன்னேன்...

மதி
23-04-2010, 10:03 AM
பத்தாவது படிக்கிற நான் ப்ளஸ் டூ படிக்கிற உங்கள சீனியர்ன்னு தான சொல்லனும்... நான் சரியாதாங்க சொன்னேன்...
அப்போ சரி..!!!:icon_b: ஜூனியரே..

Akila.R.D
23-04-2010, 10:07 AM
அப்போ சரி..!!!:icon_b: ஜூனியரே..

தேங்க்ஸ் சீனியர்...:lachen001:

ஓவியன்
23-04-2010, 03:19 PM
ம்ஹூம்,

பேசாம இன்னொரு நல்ல(!) ஜோசியர் கிட்ட போயி, அந்த குடுமிக்கார ஜோசியரோட குட்டை உடைக்காமல் இப்படி புலம்பிட்டு இருக்கிறவரை என்ன சொல்ல...??? :sauer028:

நல்ல பகிர்வு மதி, தனக்கு ஒன்றுமே சம்பந்தமில்லாத ஒரு பதிவூடாக தன் சொந்தக் கதை, சோகக் கதைகளைச் சொல்லுவதே ஒரு திறமைதான்..!! :icon_b: :D:D

மதி
23-04-2010, 04:05 PM
அட நீங்க வேற... என் கதையில நானே பாதி ஜோசியகாரனாயிடேன்.. என் பிரச்சனை ஜாதகமே இல்லே. வேற வேற வேற... ஹிஹி

அந்த பையன் பாவம்.. இப்போ தான் முதல் அனுபவம். என்னை மாதிரி அனுபவமுள்ள ஆளுன்னா அந்த ஜோசியக்காரர போய் வெட்டியிருப்பார். இனி போக போக பொழைக்க கத்துப்பார்.

aren
24-04-2010, 04:23 AM
மதி உங்களுக்கா இப்படிப்பட்ட ஒரு நிலமை. எப்போவோ செய்த தப்புக்கு இப்போ ஆப்பு கிடைச்சிருக்கே, அதை நினைச்சாதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு!!!!!!

மதி
24-04-2010, 04:38 AM
இல்லே இல்லே சத்தியமா இந்த ஆப்பு எனக்கில்லே.. ஸ்ஸ்.. இனிமே இந்த காதல் கல்யாணம் பத்தி எழுதவே கூடாது போல. அட போங்கப்பா.

aren
24-04-2010, 06:21 AM
மதி,

இனிமே உண்மையாக நடந்ததை வெளியே சொல்லக்கூடாது என்று முடிவு எடுத்திடுங்கள், பிரச்சனை வராது.

பா.சங்கீதா
24-04-2010, 10:41 AM
என்னத்த சொல்லறது
சிரிச்சி சிரிச்சி வயிறு வலி
என்னும் எத்தன வினை இருக்கோ?
பாவம்

மதி
24-04-2010, 03:14 PM
மதி,

இனிமே உண்மையாக நடந்ததை வெளியே சொல்லக்கூடாது என்று முடிவு எடுத்திடுங்கள், பிரச்சனை வராது.
அட எழுதவே வேணாம்னு முடிவு பண்ணிட்டா யாரும் தப்பா நினைக்க முடியதில்ல..ஹிஹி :icon_ush::icon_ush::icon_ush::icon_ush:

மதி
24-04-2010, 03:16 PM
பாவம்
இதுக்கு என்னங்க அர்த்தம்?

மன்மதன்
24-04-2010, 06:50 PM
நாப்பது வருசம் காத்திருந்திட்டோம்.. நாலு மாசம் காக்க முடியாதா என்ன..!!?? :D:D:rolleyes::rolleyes:

செல்வா
24-04-2010, 09:00 PM
நாப்பது வருசம் காத்திருந்திட்டோம்.. நாலு மாசம் காக்க முடியாதா என்ன..!!?? :D:D:rolleyes::rolleyes:

அப்டின்னா...........??? :eek::eek:

கலையரசி
25-04-2010, 05:00 AM
"இதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை'.

எங்கப்பா குதிருக்குள் இல்லை என்ற இந்தக் குறிப்பைப் பார்த்ததுமே நினைத்தேன், இவர் ஏன் சம்பந்தம் இல்லாமல் இந்தக் குறிப்பைக் கொடுக்கணும் என்று.

ஓவியன் அவர்கள் சொன்னது போல் சொந்த சோகக் கதையைத் தனக்குச் சம்பந்தம் இல்லாததது போல் சொல்லிப் புலம்ப தனித் திறமை தான் வேண்டும். அது உங்களுக்கு நன்றாகவே கை வந்திருக்கிறது. அந்த ஜோஸ்யரைப் பார்த்து பழசுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு சம் திங் வெட்டுங்கள். எல்லாம் சரியாயிடும். சரியா?

மதி
25-04-2010, 06:01 AM
சொல்லி சொல்லி போரடிச்சு போச்சுங்க. நான் எத எழுதினாலும் என் கதைனே நம்புறதால அந்த டிஸ்கி. மத்தபடி இது என்னுடன் வேலை செய்யும் நண்பன் கதை தான்.

அமரன்
25-04-2010, 06:20 AM
முன்குறிப்பு - இது மதியின் கதைக்கான... இல்லை... இல்லை...கதைக்கான விமர்சனம் இல்லை.

விடுங்கப்பா.... எத்தனை நாளைக்குத்தான் மதியைப் போட்டு மிதிப்பீங்க.

செல்வா
25-04-2010, 07:13 AM
விடுங்கப்பா.... எத்தனை நாளைக்குத்தான் மதியைப் போட்டு மிதிப்பீங்க.

தாங்குகிறவரை.... :D

மதி
25-04-2010, 08:09 AM
தாங்குகிறவரை.... :D
ஒன்னு ரெண்டு மூணு ....

அட நீங்க மிதிங்க :rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

எவ்ளோ தாங்குவேனு தெரிஞ்சுக்க தான் எண்ணுறேன் :traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:

மதி
25-04-2010, 08:11 AM
முன்குறிப்பு - இது மதியின் கதைக்கான... இல்லை... இல்லை...கதைக்கான விமர்சனம் இல்லை.

விடுங்கப்பா.... எத்தனை நாளைக்குத்தான் மதியைப் போட்டு மிதிப்பீங்க.

போற போக்க பாத்தா எழுதவே வேணாம்னு தோணுது. ஆனாலும் மக்கள் சந்தோஷமா இருக்கறது புடிக்காதுங்கரதால விட முடி..ல

செல்வா
25-04-2010, 08:21 AM
ஒன்னு ரெண்டு மூணு ....

எவ்ளோ தாங்குவேனு தெரிஞ்சுக்க தான் எண்ணுறேன் :traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:

அட எதுக்காக கஷ்டப்பட்டு எண்ணிக்கிட்டு....

நீங்க ரொம்ப நல்லவருங்க.....

எவ்ளோன்னாலும்........... தாங்குவீங்க... :icon_ush: :eek:

பாரதி
30-04-2010, 02:12 PM
இந்தக்காலத்திலேயும் இப்படியும் ஆட்கள் இருக்காங்களா.!?
பாவம்... உங்க நண்பர். ஆனாலும் கதை படிக்க நல்லா இருந்துச்சு.

பா.ராஜேஷ்
02-05-2010, 03:05 PM
கதையா, சம்பவமா என்று சிறு குழப்பம் ஏற்படுத்திய நல்ல நகைச்சுவையுள்ள கதை... பாராட்டுக்கள்

மதி
03-05-2010, 03:30 AM
இந்தக்காலத்திலேயும் இப்படியும் ஆட்கள் இருக்காங்களா.!?
பாவம்... உங்க நண்பர். ஆனாலும் கதை படிக்க நல்லா இருந்துச்சு.
நன்றிண்ணா..

கதையா, சம்பவமா என்று சிறு குழப்பம் ஏற்படுத்திய நல்ல நகைச்சுவையுள்ள கதை... பாராட்டுக்கள்
நன்றி ராஜேஷ்..

xavier_raja
11-05-2010, 09:55 AM
பொதுவாக ஜோசிகாரர்கள் இதுபோன்று விளையாட மாட்டார்கள் என்பது என் கருத்து..

மதி
11-05-2010, 10:44 AM
பொதுவாக ஜோசிகாரர்கள் இதுபோன்று விளையாட மாட்டார்கள் என்பது என் கருத்து..
உண்மையிலேயே அவனுக்கு நேரம் சரியில்லாம இருந்திருக்கலாம்.. ஆனா இதுக்கும் பழைய கணக்குக்கும் முடிச்சுப் போட்டது தான்... எங்க திருவிளையாடலே..!