PDA

View Full Version : நிகழ்ந்தும் நிகழாமலும்



ஆதி
22-04-2010, 11:52 AM
நிகழாமாற் போனச் செயலைப் பற்றி
பேசிக் கொண்டிருக்கிறோம்
ஆற்றாமையோடு.. வருத்தத்தோடு..
துயரத்தோடு.. கனத்தோடு..

நிகழ்ந்த செயலொன்றை பற்றியும்
பேசிக் கொண்டிருக்கிறோம்
ஆற்றாமையோடு.. வருத்தத்தோடு..
துயரத்தோடு.. கனத்தோடு..

நிகழ்கிற, நிகழாமல் போகிற செயல்களினூடே
இன்னும் நிறையவே நிரைந்திருக்கின்றன
ஆயிரம் ஆயிரம் ஆற்றாமைகள்
ஆயிரம் ஆயிரம் வருத்தங்கள்
ஆயிரம் ஆயிரம் துயரங்கள்
ஆயிரம் ஆயிரம் கனங்கள்
நிகழ்ந்தும் நிகழாமலும்..

muthuvel
22-04-2010, 12:00 PM
அருமை வரிகள் மிக அருமை வாழ்த்துக்கள்

செல்வா
23-04-2010, 06:01 AM
கவிதையைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை ஆதன்.
உனது கவிதைக்கு வெறும் நல்லாருக்கு என்பதை... நான் வந்து எழுத வேண்டியதில்லை அது உனக்கும் தெரியும்.

நிற்க மனுஷ்ய புத்ரன் அதிகமா வாசிக்கிறனு நெனக்கிறேன்.

அதே பாணியில் பல கவிதைகள் வருகிறது.

வெறும் முயற்சி என்றால் பரவாயில்லை.. ஆனால் தொடராதே...

நீ தொலைந்து போகாமல் பார்த்துக்கொள்...

ஆதி
26-04-2010, 01:38 PM
அருமை வரிகள் மிக அருமை வாழ்த்துக்கள்

நன்றி முத்துவேல்..


கவிதையைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை ஆதன்.
உனது கவிதைக்கு வெறும் நல்லாருக்கு என்பதை... நான் வந்து எழுத வேண்டியதில்லை அது உனக்கும் தெரியும்.

நிற்க மனுஷ்ய புத்ரன் அதிகமா வாசிக்கிறனு நெனக்கிறேன்.

அதே பாணியில் பல கவிதைகள் வருகிறது.

வெறும் முயற்சி என்றால் பரவாயில்லை.. ஆனால் தொடராதே...

நீ தொலைந்து போகாமல் பார்த்துக்கொள்...


மனுஷ்ய புத்ரன் கவிதைகள் வாசித்தது உண்மைதான், ஆனால் வெகு நாட்களுக்கு முந்தி அதுவும் அந்த தொகுதியை இன்னும் முழுசா முடிக்கல..

பாணி என்று எதையும் குறித்து எல்லாம் எழுதுவதில்லை டா..

சமீபமா நவீனத்துவ இலக்கியங்கள் அதிகமா வசிக்கிறேன், நிறைய கவிஞர்கள், அவர்களின் நிறைய நேர்காணல்கள், கட்டுரைகள், கருத்துக்கள், விமர்சனங்கள் என..

மனுஷ்ய புத்ரன படிக்கறத விட்டு பல மாதாமாகிறது, என்னை மனுஷ்ய புத்ரன விட அதிகமா பாதிச்சது கவிஞர் சல்மா, இளம்பிறை, தேன்மொழி, உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, ஆண்டாள் பிரிய தர்சணி, இன்னும் பல பெண் கவிஞர்கள்..

நவீனக்கவிதையின் முழு உக்தியை கையகப்படுமத்தும் முயற்சியிலையும், அதில் எனக்கென்று ஒரு மொழியையும், வடிவங்களில் புது சோதனையையும், படிமமங்களில் புது உக்தியையும், கையாள முயற்சிகிறேன்.. சுய விமர்சனம் செய்து தவறுகளை கண்டறிந்து திருத்த முயற்சிக்கிறேன்..

உன் விமர்சனம் எனக்கு மகிழ்ச்சியை தருது.. கண்டிப்பா இது போன்ர பாணியுண்ட கவிதைகளை தவிர்க்க முயற்சிப்பேன்..

வேறு மொழி வேறு வடிவம் தர மெனக்கெடுவேன்..

நன்றி டா.. உன் நேர்மையான விமர்சனத்துக்கு.. இது போன்ற விமர்சனங்களை தயங்காமல் செய்வாய் என்று நம்புகிறேன்..