PDA

View Full Version : என்று தொலைந்தோம்..??சுடர்விழி
22-04-2010, 03:17 AM
பாரபட்சமின்றி பண்போடு
புன்னகை சிந்தும் உதடுகள்....
கண்ணில் காணும் காட்சிகள்
யாவும் ரசித்த மனம்...

அறிந்தவர் எல்லாம் அன்பான
நண்பராய் ஏற்ற மனம்....
நிலா முதல் காக்கை வரை
நெஞ்சில் நிறைத்த மனம்....

மலர்,மரம்,ஆகாயம் எனப் பரந்த
பார்வை கொண்ட மனம்...
நாளை பற்றிய பயமும்
நேற்றைய கவலையும்
மறந்த மனம்...

இன்றைய இன்பத்தை
முழுதும் உள்வாங்கி
அனுபவிக்கும் மனம்...

என்று தொலைத்தோம் இவைகளை ..???

குழந்தையும் தெய்வமும் ஒன்றாம்..!!!!!!!!!

என்று தொலைத்தோம் நாம்
தெய்வத் தன்மையை......????

கூட்டிக் கழிக்கும் குணம்
கொத்திச் சென்றதோ???

ஆன்மாவையே மறைத்த மதியீனங்கள்
அழித்து விட்டனவோ???

காண்பதில் எல்லாம் பணப்பார்வை படிய
பரந்த பார்வை மங்கிப் போயிற்றோ???

மனம் சுருங்கி அங்கே
வறுமை குடிகொண்டதால்
தெய்வம் வெளியேறியதோ???

என்று தொலைத்தோம்
தெய்வத் தன்மையை......????

என்று தொலைந்தோம் நாம்???


-----சுடர்விழி

அக்னி
22-04-2010, 06:32 AM
எதுவுமே தொலையவில்லை...

உலகச் சுற்றலில்,
நம் வாழ்வும் சுற்றி வருகின்றது.

தேவைகளின் தேடல்
இயல்புகளை மூடிவிட..,
தேடி முடித்துத் தேவை முடிந்ததும்
இயல்புகள் மீண்டுவருகின்றன...

அதனாற்தான்,
குழந்தையாய் வாழ்வைத் தொடங்கி,
குழந்தையாக மாறி வாழ்வை முடிக்கின்றோம்.

இடைப்பட்ட பருவத்திற்தான்
உங்கள் கவிதை ஆக்கிரமித்துக்கொள்கின்றது...

பாராட்டு...

செல்வா
22-04-2010, 08:41 AM
பேராசிரியர் பெரியார் தாசன் (அவர் பெரியார் தாசனாக இருக்கும் போது. இப்போது அப்துல்லாவாக மாறிவிட்டார்.) ஒரு மேடைப்பேச்சின் போது அருமையாகச் சொன்னார்.

விலங்குகளுக்கும் மனிதனுக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம்.

விலங்குகள் பிறக்கும் போதே கற்றுக்கொண்டுப் பிறக்கின்றன..

மனிதக் குழந்தைகளோ பிறக்கும் போது எதுவும் தெரியாமலே பிறக்கின்றன பிறந்தபின்னே தான் கற்றுக்கொள்ளத் துவங்குகின்றது.

கற்றுக்கொள்ளும் போது அதன் சூழலில் என்ன இருக்கிறதோ அவற்றைக் கற்றுக்கொள்கிறது.

எனவே நமது வீட்டுச் சூழல் எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்துத் தான் அமையப் போகிறது சமுதாயம்.

அக்னி கூறியபடி எல்லாம் வட்டத்துக்குள்ளே தான் இருக்கின்றன. எதுவும் காணாமல் போகவில்லை.

நல்ல சமூக அக்கறையுள்ள கவிதை... தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்...!

govindh
22-04-2010, 08:57 AM
"நாளை பற்றிய பயமும்
நேற்றைய கவலையும்
மறந்த மனம்..."
இப்படி இருந்தால்...அனுதினமும் ஆனந்தம் தான்...!

என்று தொலைந்தோம்..??
மெய் வரிகள்...!
மெய் வலிகள்..!

பாராட்டுக்கள்...!

சுடர்விழி
22-04-2010, 10:05 AM
இடைப்பட்ட பருவத்திற்தான்
உங்கள் கவிதை ஆக்கிரமித்துக்கொள்கின்றது...

பாராட்டு...


உண்மை தான்....இடைப்பட்ட பருவம் தான் நம்மையும் அதிகம் ஆக்கிரமிக்கிறது...பாராட்டுக்கு நன்றி அக்னி அவர்களே !

சுடர்விழி
22-04-2010, 10:07 AM
நன்றி செல்வா அவர்களே....

சுடர்விழி
22-04-2010, 10:08 AM
நன்றி கோவிந்த் அவர்களே !

கலையரசி
22-04-2010, 01:02 PM
நல்லதொரு சமுதாயச் சிந்தனையோடு எழுதப்பட்ட கவிதை.
பாராட்டு சுடர்விழி! மேலும் எழுதுங்கள்.

சுடர்விழி
23-04-2010, 04:45 AM
நன்றி கலையரசி !

வசீகரன்
28-04-2010, 10:15 AM
காண்பதில் எல்லாம் பணப்பார்வை படிய
பரந்த பார்வை மங்கிப் போயிற்றோ???

மனம் சுருங்கி அங்கே
வறுமை குடிகொண்டதால்
தெய்வம் வெளியேறியதோ???


மிக மென்மையான சிந்தனை...
வாழ்கை போராட்டத்தில் நம்மை இழந்து விட்டோம்...!

தெய்வம் போய் மனிதன் மிருகங்களாக ஆகி கொண்டிருக்கும் காலகட்டம் இது..!

நமது சுயம் நாம் எப்போதோ இழந்து விட்டோம்..
வேகமாக ஓடி கொண்டிருக்கும் இந்த ந(க)ரக வாழ்க்கையில் அதை பற்றியெல்லாம் நினைப்பது கூட அபூர்வமாகிவிட்டது,

மேன்மை சொன்ன இந்த கவிதைக்கு சுடர்விழி அவர்களுக்கு மனதார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..!

சுடர்விழி
02-05-2010, 01:58 PM
ரொம்ப நன்றி வசீகரன் அவர்களே