PDA

View Full Version : ஹாஸ்டல் கவிதைகள்.சுஜா
20-04-2010, 07:14 AM
வெட்டித் தனமாய் நான் எழுதிய கவிதைகள் உங்கள் பார்வைக்கு.

சீரும் பாம்பை நம்பு
பாய்ந்து வரும் தண்ணி
டேப்பை நம்பாதே.
*
தண்ணீர் நின்று போதல்
சிலருக்கு கட்டடிப்பதற்கான வாய்ப்பு
பலருக்கு குளிக்காமல் இருப்பதற்கான
சாக்கு.
*

மெஸ் செல்லும்
ஒல்லிப் பசங்கள்
'இதோ வந்துர்றேன்' என்று சொல்லிச் செல்கிறார்கள்
குண்டர்களோ டாட்டா காட்டிச் செல்கின்றனர் .
*

'சேச்சே... நைட்டு ஃபுல்லா படம் பாத்தேன்...
இந்த எக்ஸாமுக்கு எவன் படிப்பான் ?!...
observe பண்ணி எழுதனுடா... ' என்று கிளாஸ்
வராண்டாக்களில் சீன் போடும் என் நண்பா,
உன் நெற்றியில் என்ன காயம்?
*
டாப்பர் பெண்களை ஜெராக்ஸ் மெசின்
என்றவன் - தன் தங்கை
கோல்ட் மெடலிஸ்ட் என்றதும்
புல்லரித்துப் போனான் .
*
எக்ஸ்ட்ரா முட்டை வாங்கியவனை
திட்டியவர்களில் ஒருவன் திருட்டை வெறுப்பவன்
மற்றொருவன் எக்ஸ்ட்ரா வாங்க சாமர்த்தியமற்றவன்.
*
காது கருகும் வரை கடலை போட்டுவிட்டு
sweet dreams என்றாய்.
நைட்டெல்லாம் அப்பாவிடம் டோஸ் வாங்குவதாய்
கனா கண்டேன் தோழீ நான்.

*
லேடிஸ் ஹாஸ்டல் செல்லும் சோற்றின்
அளவை எப்படி குறைக்கலாம்?
' வெண்டைகாய் ,முருங்கை கீரை, முள்ளங்கி,
சோயாபீன்ஸ் என
வெறித்தனமாய் வெரைட்டி காட்டலாம்.'
' சப்பாத்திக்கு மிளகு ரசம் கொடுக்கலாம் '
'கரப்பான்பூச்சி இருப்பதாய் புரளி கிளப்பலாம் '....
வட்ட மேசை போட்டதில் வந்து விழுந்தன ஐடியாக்கள்
முனி சொன்ன ஐடியா கொஞ்சம் தூக்கல் - ' boys-ஐ விட்டு
பரிமாறச் செய்யலாம். '
*

குரங்கெனினும்
கொஞ்சதான் வேண்டும் .
டீச்சர் புள்ளைல..!
*
anonymous said:
நல்லவர்களாக காட்டிகொள்ளும் அனைவரிடமும் உள்ளது
இரண்டு மூன்று சிம் கார்டுகளும் நான்கைந்து mail id-களும்.
*

தவறில்லாதவர் முதலில்
கல்லெறியலாம்...
சொல்கேட்டவர்
கல்லெடுக்கவில்லை
ஏசு உட்பட .
*

' விட்றா மச்சான்... '
' அவுட்புட் வராததெல்லாம் ஒரு மேட்டரா..? '
' அவுட்புட் மட்டும் வாழ்க்கையில்லை... '
' cool buddy... '
' past is past... சாய்ந்தரம் ஐஸ்வர்யா போறேன் வர்றியா..? ' ......
ஆறுதல்/அட்வைஸ் சொன்னவர் அனைவரும் அவுட்புட் வெரிஃ பைடு வாங்கியவர்கள் !

muthuvel
20-04-2010, 07:29 AM
மிகவும் அருமை ரசிக்கவைத வரிகள்

சுஜா
21-04-2010, 11:00 AM
மிகவும் அருமை ரசிக்கவைத வரிகள்

நன்றி முத்துவேல் அண்ணா

ஆதி
21-04-2010, 11:13 AM
//தவறில்லாதவர் முதலில்
கல்லெறியலாம்...
சொல்கேட்டவர்
கல்லெடுக்கவில்லை
ஏசு உட்பட .
//

இந்த கவிதை இங்கே இருக்கு http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21630

சமீபத்தில் தான் பின்னூட்டம் போட்டேன்..

சுஜா
21-04-2010, 11:19 AM
இந்த கவிதை இங்கே இருக்கு http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21630

சமீபத்தில் தான் பின்னூட்டம் போட்டேன்..

அமாம், அதை நான் கவனிக்கவில்லை. தொகுத்து வைத்திருந்ததை அப்படியே போட்டுவிட்டேன்.

நன்றி அண்ணா.

ஆதி
21-04-2010, 11:23 AM
அமாம், அதை நான் கவனிக்கவில்லை. தொகுத்து வைத்திருந்ததை அப்படியே போட்டுவிட்டேன்.

நன்றி அண்ணா.

ஹி.. ஹி.. கவிதையை குறித்து சில சந்தேகம் எனக்கு இருந்துச்சு, அதனால்தான் சுட்டி காண்பித்தேன்.. அதுக்கு பதில் கொடுங்க..

அப்பறம் அர்த்தமுள்ளை அரட்டை பகுதிக்கு http://www.tamilmantram.com/vb/showthread.php?p=467438#post467438 வாங்க.. நீங்க முன்பு கேட்ட நவீன, பின்னவீனத்துவம் எல்லாம் விவாதிக்க ஒரு பதிவு போட்டிருக்கேன்..

rajarajacholan
22-04-2010, 01:58 AM
எல்லாமே நல்லா இருக்குங்க.

சுஜா
22-04-2010, 01:29 PM
எல்லாமே நல்லா இருக்குங்க.

நன்றி அண்ணா

செல்வா
23-04-2010, 08:00 AM
உங்க தொகுதியில நான் இரசித்தவை...மெஸ் செல்லும்
ஒல்லிப் பசங்கள்
'இதோ வந்துர்றேன்' என்று சொல்லிச் செல்கிறார்கள்
குண்டர்களோ டாட்டா காட்டிச் செல்கின்றனர் .
*

'சேச்சே... நைட்டு ஃபுல்லா படம் பாத்தேன்...
இந்த எக்ஸாமுக்கு எவன் படிப்பான் ?!...
observe பண்ணி எழுதனுடா... ' என்று கிளாஸ்
வராண்டாக்களில் சீன் போடும் என் நண்பா,
உன் நெற்றியில் என்ன காயம்?
*
காது கருகும் வரை கடலை போட்டுவிட்டு
sweet dreams என்றாய்.
நைட்டெல்லாம் அப்பாவிடம் டோஸ் வாங்குவதாய்
கனா கண்டேன் தோழீ நான்.

*
லேடிஸ் ஹாஸ்டல் செல்லும் சோற்றின்
அளவை எப்படி குறைக்கலாம்?
' வெண்டைகாய் ,முருங்கை கீரை, முள்ளங்கி,
சோயாபீன்ஸ் என
வெறித்தனமாய் வெரைட்டி காட்டலாம்.'
' சப்பாத்திக்கு மிளகு ரசம் கொடுக்கலாம் '
'கரப்பான்பூச்சி இருப்பதாய் புரளி கிளப்பலாம் '....
வட்ட மேசை போட்டதில் வந்து விழுந்தன ஐடியாக்கள்
முனி சொன்ன ஐடியா கொஞ்சம் தூக்கல் - ' boys-ஐ விட்டு
பரிமாறச் செய்யலாம். '
*

anonymous said:
நல்லவர்களாக காட்டிகொள்ளும் அனைவரிடமும் உள்ளது
இரண்டு மூன்று சிம் கார்டுகளும் நான்கைந்து mail id-களும்.
*

' விட்றா மச்சான்... '
' அவுட்புட் வராததெல்லாம் ஒரு மேட்டரா..? '
' அவுட்புட் மட்டும் வாழ்க்கையில்லை... '
' cool buddy... '
' past is past... சாய்ந்தரம் ஐஸ்வர்யா போறேன் வர்றியா..? ' ......
ஆறுதல்/அட்வைஸ் சொன்னவர் அனைவரும் அவுட்புட் வெரிஃ பைடு வாங்கியவர்கள் !

நல்லாருக்கு தொடரட்டும் உங்கள் ஹாஸ்டல் கிறுக்கல்கள்.

ஜனகன்
23-04-2010, 12:28 PM
காமடி கலந்த கவிதைகள்.எல்லாமே சுப்பர்.பாராட்டுகின்றேன்.மேலும் எழுதுங்கள்.

அமரன்
24-04-2010, 07:41 PM
ஹா.....ஸ்டல்.

ஹாஸ்டல் கரிக்கட்டி மனச்சுவரில் கிறுக்குவது குறு குறுக்க வைப்பது.. கடைசி வரைக்கும் அசைபோட விதிப்பது.. இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல..

கலக்குங்க சுஜா.

அமரன்
24-04-2010, 07:45 PM
உங்க தொகுதியில நான் இரசித்தவை...நல்லாருக்கு தொடரட்டும் உங்கள் ஹாஸ்டல் கிறுக்கல்கள்.

பங்காளி..
நான் சாப்பிட எடுத்துக்கொள்ளும் நேரம் கால்மணிக்கும் குறைவானது..
கன நேரம் கஷ்டப்பட்டுச் சமைச்சதைக் கண நேரத்துல `கவுத்துட்டுப்` போறியே என்று திட்டு வாங்காதா நாளே இல்லைத் தெரியுமா..

கலையரசி
25-04-2010, 04:49 AM
"காது கருகும் வரை கடலை போட்டுவிட்டு
sweet dreams என்றாய்.
நைட்டெல்லாம் அப்பாவிடம் டோஸ் வாங்குவதாய்
கனா கண்டேன் தோழீ நான்."

குரங்கெனினும்
கொஞ்சதான் வேண்டும் .
டீச்சர் புள்ளைல..!

இவை நான் ரசித்த வரிகள். நகைச்சுவை கலந்த கவிதைகள். நன்றாகயிருக்கிறது. மேலும் எழுதுங்கள்.

செல்வா
25-04-2010, 07:15 AM
பங்காளி..
நான் சாப்பிட எடுத்துக்கொள்ளும் நேரம் கால்மணிக்கும் குறைவானது..
கன நேரம் கஷ்டப்பட்டுச் சமைச்சதைக் கண நேரத்துல `கவுத்துட்டுப்` போறியே என்று திட்டு வாங்காதா நாளே இல்லைத் தெரியுமா..

அதுக்காக...ரெண்டு மணிநேரமா உக்காந்து ஒவ்வொரு பருக்கையாவா சாப்பிடுறது....?

govindh
25-04-2010, 09:57 AM
'சேச்சே... நைட்டு ஃபுல்லா படம் பாத்தேன்...
இந்த எக்ஸாமுக்கு எவன் படிப்பான் ?!...
observe பண்ணி எழுதனுடா... ' என்று கிளாஸ்
வராண்டாக்களில் சீன் போடும் என் நண்பா,
உன் நெற்றியில் என்ன காயம்?
*
டாப்பர் பெண்களை ஜெராக்ஸ் மெசின்
என்றவன் - தன் தங்கை
கோல்ட் மெடலிஸ்ட் என்றதும்
புல்லரித்துப் போனான் .

ரசித்தேன்.... வாழ்த்துக்கள் ....
தொடருங்கள்...சுவைக்கக் காத்திருக்கிறோம்...

சுஜா
26-04-2010, 04:54 AM
நன்றி செல்வா, ஜனகன், அமரன், கலையரசி,கோவிந்த் அண்ணன் அக்காக்களுக்கு.