PDA

View Full Version : 23 ம் எலிகேசி - பாகம் 6lenram80
19-04-2010, 03:11 PM
தளபதி: அரசே! சுமார் 15 நாட்களுக்கு விடுப்பு வேண்டும் அரசே!
அரசர்: ஏன் என்னாயிற்று?
தளபதி: ஒன்றும் இல்லை. பக்கத்து நாட்டு அரசன் நம் மீது படை எடுக்க போகிறானாம்!

=============

தளபதி: அரசே! எங்காவது சென்று ஒளிந்து கொள்ளுங்கள்..!
அரசர்: ஏன்? கப்பம் கட்டச் சொல்லி வெள்ளைக்காரன் வந்து விட்டானா?
தளபதி: இல்லை அரசே! பொழுது போகவில்லை. அதான்.. ஒளிந்து பிடித்து விளையாடலாம் என்று சொல்ல வந்தேன்!
அரசர்:நீ செய்யும் வேலைக்கு உனக்கு எல்லாம் சம்பளம் வேறு!

=============

புலவர்: உங்களைப் போற்றி பாடப் வந்துள்ளேன், அரசே!
அரசர்: என்னைப் போற்றி பாடும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன் உனக்கு?

=============

அமைச்சர்: பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறைந்துவிட்டது அரசே!
அரசர்: அரசியார் இருக்கும் போது அசிங்கமாகப் பேசாதீர்கள் அமைச்சரே!
கவுண்டமணி அமைச்சர்: அடடடடா...சென்செக்ஸ்-னா என்னன்னு தெரியாதவனை எல்லாம் அரசனா வச்சுகிட்டு தொல்லை தாங்க முடியலப்பா....

=============

அமைச்சர்: ஒரு வார்த்தை சொன்னேன். தளபதி இறந்துவிட்டார், அரசே!
அரசர்: அப்படி என்ன வார்த்தை அது?
அமைச்சர்: போர்!....
அரசர்: அய்யோ! எனக்கே நெஞ்செல்லாம் நடுங்குகிறதே! நம் பச்சிளம் தளபதியை இப்படி அநியாயமாய் கொன்று விட்டாயே!

============
அமைச்சர்: அரசே! நாட்டு நடப்பு பற்றி விசாரிக்க உடனே அரச சபையை கூட்டுங்கள்!
அரசர்: நான் எல்லாம் கூட்ட முடியாது! யாராவது வேலையாட்கள் இருந்தால் கூட்டச் சொல்லுங்கள்!
கவுண்டமணி அமைச்சர்: அடடடா.. இவன் ரோதனை தாங்கமுடியலப்பா...

============

அமைச்சர்: என் தந்தை உங்கள் தந்தைக்கு அமைச்சராக இருந்தார். நான் உங்களுக்கு அமைச்சராக இருக்கிறேன்.இது எதைக் காட்டுகிறது?
அரசர்: நம் நாடு அழியப் போவதைக் காட்டுகிறது!

============

அமைச்சர்: அரசே! எதிரி நாட்டுப் படை நெருங்கி விட்டது. நீங்கள் ஏதோ எழுதிக் கொண்டிருகிறீர்கள்? என்ன சமாதானத் தூதா?
அரசர்: இல்லை அமைச்சரே! லீவ் லெட்டர் எழுதிகொண்டு இருக்கிறேன்.

============

தளபதி: அரசே! எங்கே நம் ராணுவம் ?
அரசர்: நல்ல விலைக்கு கேட்டார்கள் என்று அமெரிக்கர்களிடம் விற்றுவிட்டேன்!
தளபதி: நாம் என்ன செய்வது இப்போது?
அரசர்: சீனாவிலிருந்து சீப்பாக சிப்பாய்களை இறக்கி விடலாம். கவலை வேண்டாம் தளபதியாரே!

==========

அறிவிப்பாளன்: நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!
மக்களில் ஒருவர் முந்திக் கொண்டு: அரசர் நாட்டை விட்டு போயிட்டாரா?
அறிவிப்பாளன்: இருப்பா.. படிப்பதற்குள் என்ன அவசரம். நம் அரசருக்கு முக்கிய பிரச்சனையில் பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது!
இன்னொருவர்: பட்ஜெட் விஷயத்திலா? இல்லை பாதுகாப்பு விஷயத்திலா?
அறிவிப்பாளன்: டேய்! படிக்க விடுங்காடா...! பெண்களின் நகங்களுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்பது தான் அரசரின் குழப்பம்.
மற்றொருவர்: கருமம்டா. எவ்வளவு வெட்டியா இருந்தா..இவன் நகத்தை எல்லாம் மோந்து பாத்துட்டு உக்காந்திருப்பான்! இவன் எல்லாம் ஒரு அரசன்!

============

அரசர்: அமைச்சரே! என் சந்தேகத்தை தீர்க்கும் பாடல் கிடைத்ததா?
அமைச்சர்: கருமி கொண்டு வந்த பாடலில் பொருட் குற்றம் உள்ளது அரசே!
கருமி: டேய் !"இல்லை"ன்னு தான்டா எழுதிக் கொடுத்தேன். அதெல்லாம் நீ "பாடல்" கணக்குலே சேக்குறியா?
அமைச்சர்: 666 க்கு ஃபோன் செய்து கேட்டுப் பாருங்கள். அவரும் பொருட் குற்றம் என்று தான் சொல்லுவார்.
அரசர்: யார்? சிவபெருமானிடமா?
அமைச்சர்: இல்லை அரசே! என் தந்தையாரிடம்!
அரசர்: அடச் சே! எத்துனே பேருடா என்னை மாதிரி இவ்ளோ வெட்டியா இருக்கீங்க?

=============

govindh
19-04-2010, 04:42 PM
நகைச்சுவை ...நல்ல சுவை..
நன்றி...நல்வாழ்த்துக்கள்...!

ரவிசங்கர்
19-04-2010, 07:24 PM
நல்ல சிரிப்பு நன்றி......வாழ்த்துக்கள்.

sarcharan
20-04-2010, 03:05 PM
அறிவிப்பாளன்: டேய்! படிக்க விடுங்காடா...! பெண்களின் நகங்களுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்பது தான் அரசரின் குழப்பம்.
மற்றொருவர்: கருமம்டா. எவ்வளவு வெட்டியா இருந்தா..இவன் நகத்தை எல்லாம் மோந்து பாத்துட்டு உக்காந்திருப்பான்! இவன் எல்லாம் ஒரு அரசன்!

=============

ஹி ஹி உண்மையிலேயே... வெட்டி தான்... (நகத்தை) வெட்டி போட்ட சரியாய் இருந்துருக்கும்லா

பா.ராஜேஷ்
21-04-2010, 09:11 PM
ஹா ஹா ஹா... எலிகேசியின் நகைச்சுவைகள் அருமை.

lenram80
22-04-2010, 02:10 PM
வாழ்த்தியமைக்கு நன்றி - கோவிந்த், ரோமர், சார்சரண், ராஜேஷ்!!!

gankrish
08-07-2010, 12:39 PM
லென்ராம் அசத்தீட்டீங்க அரசவை ஜோக் பிராமாதம்

தமிழ் மைந்தன்
12-07-2010, 06:19 PM
:lachen001: நல்ல நகைச்சுவை உணர்வோடு எழுதியதோ ?

வாழ்த்துக்கள்

உமாமீனா
06-03-2011, 09:44 AM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

முரா...எங்கப்பா இருகிக....சீக்கிரம் வாங்க உங்களை பத்திய பதிவு போட்டு இருக்காங்க...

ராரா வந்ததும் சொல்லணும்...