PDA

View Full Version : முதல் கல்..ஆதி
18-04-2010, 10:55 PM
பைத்தியமென ஆடையணிவோரை ஒதுக்கும் நிர்வாணவுலகில்,
கோயில் சிலைகளின் துருத்திய அங்கங்களோடு
ஆண்கள் மத்தியில்
எந்நாணமுமற்று நடந்தார்கள் பெண்கள்..

எச்சிரமமுமின்றி மிகச் சாதாரணமாய்
யதார்த்தப் பார்வை பார்த்தார்கள் ஆண்கள்..

எல்லா ஆடையும் பூண்டிருந்த
என் மனதில் பொங்கிப் பெருகிய விரகம்
விழிகளைப் பெண்களில் அந்தரங்க அங்கங்களில் ஊர விட்டது..

நான் நிறம்மாறுவதை அறிந்த கூட்டம்
கல்லெடுத்து என்னைத் துரத்த,
தப்பிக்க ஓடி
தடுக்கி விழுந்தேன் கர்த்தனின் மடியில்..

விசாரித்த கர்த்தன் எறிந்தான் முதல் கல்..

கீதம்
19-04-2010, 01:03 AM
சரிதான். எடுக்கவேண்டியதுதான். எத்தனை நாளுக்குதான் பாவிகளை மன்னித்துக்கொண்டும் ரட்சித்துக்கொண்டும் இருப்பது?

அழகிய கவிதை வரிகள். பாராட்டுகள். ஆயினும் அச்சுப்பிழைகளாய் ஆங்காங்கே கல்...பொங்கி வைத்த பொங்கலை ருசிக்கவிடாமல்!

ஆதி
19-04-2010, 04:47 AM
சரிதான். எடுக்கவேண்டியதுதான். எத்தனை நாளுக்குதான் பாவிகளை மன்னித்துக்கொண்டும் ரட்சித்துக்கொண்டும் இருப்பது?

அழகிய கவிதை வரிகள். பாராட்டுகள். ஆயினும் அச்சுப்பிழைகளாய் ஆங்காங்கே கல்...பொங்கி வைத்த பொங்கலை ருசிக்கவிடாமல்!

பிழைகள் கண்ணுக்கு பட்டவரை திருத்திவிட்டேன் கீதம் அவர்களே.. இன்னும் பிழை இருந்தால் அதுவும் என் பிழைதான்.. எனக்கு எழுத்து பிழை அதிகமாகவே வரும், இப்போ எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கிறேன்..(செல்வா கோவப்படாத டா.. ஒரு நம்பிக்கையில் சொல்லிட்டேன்.. )

இது திட்டமிட்டு எழுதிய கவிதை அல்ல, நவீன ஓவியம் மாதிரி, மனதி தோன்றியவைகளை எல்லாம் எடுத்து எழுதியவை.. கவிதைக்கு தலைப்பு வைக்க வேண்டாம் என்று நினைத்தேன்.. புரிந்து கொள்ள சிரமம் படுவபவர்கள் கவிதையை என்னோடு இணைத்து பேசிவிட்டால் பிரச்சனையாகிவிடும் என்று தலைப்பு வைத்துவிட்டேன்..

பாராட்டுக்கு நன்றி கீதம் அவர்களே... ( உங்களை அக்கா என்று கூப்பிடலாமா ? யவனி அக்கா மன்றம் வராத குறையை நீங்க தான் தீர்க்குறீங்க, அதனால்தான் கேட்டேன்)

கீதம்
19-04-2010, 06:04 AM
கவிதையின் அழகை எழுத்துப்பிழைகள் கெடுத்துவிடுவதால் சொன்னேன். மற்றபடி உங்கள் கவிதைகள் அனைத்துமே சூப்பர். (என்னை தாராளமாய் அக்காவென்று அழைக்கலாம். ஆட்சேபணையில்லை.)

ஆதி
19-04-2010, 06:18 AM
கவிதையின் அழகை எழுத்துப்பிழைகள் கெடுத்துவிடுவதால் சொன்னேன். மற்றபடி உங்கள் கவிதைகள் அனைத்துமே சூப்பர். (என்னை தாராளமாய் அக்காவென்று அழைக்கலாம். ஆட்சேபணையில்லை.)

அக்கா, நீங்க சுட்டிக்காட்டியதில் எனக்கு மகிழ்ச்சிதான், எனக்கே தெரியும் நான் நிறைய பிழைவிடுவேன், இன்னும் பிழை இருந்தாலும் சொல்லுங்க திருத்திக்கிறேன், சாம்பவி இல்லாததால் குட்டு வாங்காமல் இருக்கேன் இல்லைனா அடிக்கடி குட்டு விழும்..

குறைகளை சுட்டிக்காட்டினாலும், பிழைகளை சுட்டிக்காட்டினாலும் நான் கற்றுக்குவேன் தவிர வருத்தப்பட மாட்டேன்..

பாரதி
19-04-2010, 07:59 AM
முதன்முறை படிக்கும் போதும் பிழைகள் உறுத்தவே செய்தன..

சிரம் இன்றி பார்ப்பவர்களா...? சிரமம் இன்றிப்பார்ப்பவர்களா ஆதன்..?

சற்றே வேறுபட்ட கரு. கர்த்தனின் கையிலும் கல்! ஏற்கனவே துரத்தும் கூட்டமும் கற்களோடுதானே வருகின்றது? முதல் கல் என்பது பொருந்துகிறதா..? அவரேந்திய முதல் கல் எனக்கொள்ள வேண்டுமா..?

ஆதி
19-04-2010, 08:16 AM
முதன்முறை படிக்கும் போதும் பிழைகள் உறுத்தவே செய்தன..

சிரம் இன்றி பார்ப்பவர்களா...? சிரமம் இன்றிப்பார்ப்பவர்களா ஆதன்..?

சற்றே வேறுபட்ட கரு. கர்த்தனின் கையிலும் கல்! ஏற்கனவே துரத்தும் கூட்டமும் கற்களோடுதானே வருகின்றது? முதல் கல் என்பது பொருந்துகிறதா..? அவரேந்திய முதல் கல் எனக்கொள்ள வேண்டுமா..?

சிரமம் என்று தான் தட்டச்ச நினைத்தேன் அண்ணா.. சிரம என்று ஆகிவிட்டது, திருத்திவிட்டேன் அண்ணா..

விசாரித்த கர்த்தன் எறிந்தான் முதல் கல்..

என்றுதான் கவிதை எழுதினேன் அண்ணா..

கவிதையை பதிந்த போது எடுத்தான் என்பது இன்னும் சுருக் என்று இருப்பது போலிருக்க அப்படியே தட்டச்சிவிட்டேன்..

அப்படியே மாற்றிவிடுகிறேன் அண்ணா.. வேறு திருத்தம் இருந்தாலும் சொல்லுங்க அண்ணா.. ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க பதிவு என் திரியில் நன்றிங்கண்ணா...

muthuvel
29-04-2010, 11:23 AM
கொஞ்சம் விளக்கலாமா ?
என்ன சொல்லவருகிறீர்கள் என்று ,
நீங்கள் எழுதும் கவிதை படித்தவர்களுக்கு மட்டும் புரிந்தால் போதாது ,
பாமரருக்கும் புரிய வேண்டும்,
நீங்கள் மூட நம்பிக்கையை சொல்கிறீர்களா
இல்லை காமத்தை பற்றி சொல்கிறீர்களா ,

nambi
29-04-2010, 12:36 PM
''உங்களில் யாதொருவன் உத்தமரோ! அவரே இப்பெண்ணின் மீது கல்லெறியக் கடவர்'' என்று இயேசுபிரான் கூறியதாக பைளில் கூறப்பட்டுள்ளதே! அதை பிரதிபலிக்கும் கவிதையா? ஆகையால் தான் இயேசு பிரான் கல்லெறிந்ததாக குறிப்பிடுகிறதா? கவிதை....ஆனால் யார் மீது? கல்லெறிய வந்தவர் மீதா? நிறம்மாறிவயவரின் மீதா?

யூகித்தது சரியா? தவறா? தெரியவில்லை பிழையாகவும் இருக்கலாம்?

ஆதி
30-04-2010, 07:07 AM
கொஞ்சம் விளக்கலாமா ?
என்ன சொல்லவருகிறீர்கள் என்று ,
நீங்கள் எழுதும் கவிதை படித்தவர்களுக்கு மட்டும் புரிந்தால் போதாது ,
பாமரருக்கும் புரிய வேண்டும்,
நீங்கள் மூட நம்பிக்கையை சொல்கிறீர்களா
இல்லை காமத்தை பற்றி சொல்கிறீர்களா ,

உண்மைதான் முத்துவேல்..

கவிதையின் மீதான என் புரிதல் ஆழ்ந்து விசாலமுற்றிருப்பதாய் தானே நம்பிக் கொண்டு எழுதிய கவிதை இது.. கவிதைதானிது எனும் என் புரிதல் கூட தப்பிதமாய் இருக்கிலாம்.. முழுதன்மை உறாத அரைவேக்காட்டு கவிதையாவும் இது இருக்க கூடும்.. கவிதைக்கான தகுதியேயற்ற வெறும் வார்த்தை விழலாக இருகலாம்..

எழுதும் ஒவ்வொன்று எதையாவது ஒன்றை சொல்ல வேண்டும் எனும் நோக்கில் இருந்து விலகி, எதுவுமே சொல்லாததும் கவிதைதான் எனும் நோக்கொடு எழுதிய கவிதை இது.. இந்த கவிதை வாசிப்பவருடைய மனநிலைக்கேற்ப பொருள்படும், பொருளற்றதாகவும் போகும்..

சிவா.ஜி
01-05-2010, 09:52 AM
ஆடையற்றவர்களின் உலகில் கோவணம் அணிந்தவன் பைத்தியக்காரன் என்ற பழஞ்சொல்லுக்கு முரணாக.....விகல்பமில்லா உலகில், முழு ஆடையணிந்தவன்...நிர்வாணத்தை..நேர்ப்பார்வைப் பார்க்காமல்...நிறம் மாறியப் பார்வைப் பார்த்தன் விளைவு கர்த்தரின் கல்லடி.

நிச்சலமான உள்ளங்கள் வாழும் உலகில்.....நீச்சத்தனமான உள்ளத்துக்கு என்ன வேலை...கர்த்தரின் கல்லடி நியாயமானதுதான்.


வாழ்த்துக்கள் இளவலே.

அமரன்
13-05-2010, 08:53 AM
ஆழத்தில் இருந்து மேல்மட்டம் நோக்கி மெள்ள வந்தால்
மிதக்கின்றன கவிதையின் சிதற்ல்கள்..

அடியில் விழுந்தால் கடவுள். மடியில் விழுந்தால் அம்மா.

கர்த்தன் யாரை அடிக்க கல்லெடுக்கிறான்.
அம்மா யாரை அடிப்பாள்.. யாரைக் காப்பாள்..

நெருக்கமாக நிற்பவனுக்கு கல்லெறிவது அசாத்தியம். எறியெல்லைத்தூரத்தில் இருப்பவனுக்கே கல்லெறிவது சாத்தியம்.

கர்த்தன் எடுத்த கல் யாருக்குக் குறிவைக்கப்பட்டது. அதை நோக்கியே இந்தக் கவிதையும் வீசப்பட்டது.

அப்படித்தானே ஆதன்.

எதையும் சொல்லாததும் கவிதைதான்..
என்ற பின் வேறென்ன நீட்டிச் சொல்ல ஆதன்..

பாபா.ஜி
13-05-2010, 11:04 AM
எவ்வளவு அர்த்தமுள்ள கவிதை, நயமாக நாகரீகத்தையும் - அழகாக அகத்தையும் சொல்லி.

’... முதல் கல்லை எறியுங்கள்’ என்று சொன்ன பிறகு நிலவிய நிசப்த்தத்தைக்கூட இது உடைத்து விட்டதே !

இதுதான் மூன்றாவது பரிமாணத்தில் இருந்து பார்ப்பதோ !

எப்பிடியோ, நீங்கள் கல்/கவிதை எறிந்ததில்/பதிந்ததில் கலங்கிவிட்டது குளம்/மனம். அதில் பிடித்த விண்மீன்களில் ஐந்து உங்களுக்கு, கவிதைக்கு நட்சத்திரங்களாக.

பாராட்டுக்கள் ஆதன், அமைதியாக ஆர்ப்பரிப்பதற்கு !