PDA

View Full Version : ஒரு சுடு சொல்



ஆதி
18-04-2010, 09:58 PM
ஓணானென
எண்ணச்சுவரில்
ஒளிந்தும் தலைக்காட்டுவதுமாய் இருக்கிறது
ஒரு சுடு சொல்
தூக்கம் எரிந்து சாம்பலான இந்த இரவில்
அலையென
தரைக்கடலில் புரண்டு புரண்டு படுக்கும்
என் கைகளுக்கு
எக்கல்லும் அகப்படவில்லை அதைக் கொல்ல..

பா.சங்கீதா
21-04-2010, 09:45 AM
மிகவும் நன்றாக இருக்கிறது...... வாழ்த்துகள் ......:)

govindh
21-04-2010, 11:58 AM
ஒரு சுடு சொல்...
அதைக் கொல்ல..
தேவை ஒரு கல்...
அமைதி...நிதானம்...

நல்ல கற்பனை..!

ஆதி
22-04-2010, 12:34 PM
நன்றி சங்கீதா, நன்றி கோவிந்

கலையரசி
22-04-2010, 12:56 PM
சுடு சொல் மனச்சுவரில் உண்டாக்கிய வடுவை அற்புதமாகப் பதிவு செய்யும் கவிதை. பாராட்டு ஆரென் அவர்களே!
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
என்ற குறளை நினைவுப்படுத்தும் கவிதை.

செல்வா
23-04-2010, 05:58 AM
ஆஹா... நான் சொல்ல வரதுக்குள்ள முந்திக்கிட்டாங்களே... கலையரசி.

அதே.. அதே... தீயினால் சுட்ட புண்ணின் மறுபதிப்பு நல்லாருக்குடா... நண்பா.

அமரன்
24-04-2010, 05:53 PM
புத்தன் சொன்னதுதான்..
ஏற்றுக் கொள்ளாதவரை உனக்குச் சொந்தமில்லை..
ஊர் வழக்கில் சொல்வதானால்.. வேலியில் போற ஓணான்..
என்னமோ தெரியவில்லை ஆதன்..
என்னதான் சுடுதண்ணி ஊற்றுண்டாலும் உழைத்துக் களைத்து வந்தால் உறக்கம் உடனணைத்து விடும் என்னை..