PDA

View Full Version : பயம்



ஆதி
18-04-2010, 09:11 PM
நேற்று,
காலி செய்து சென்ற
மூன்றாம் வீட்டுக்காரர் வந்திருந்தார்..

நிலா இருளும் நாட்களில்
மர்ம கைகள் கனமாக கதவறைவதாகவும்,
திறந்தால்
விருச்சோடிய வாசல் பயமுறுத்துவதாக*வும்
விசயம் சொன்னார்..

..........................................த.................................

..........................................னி................................

..........................................மை...............................

ஊறும் இந்த இரவில்
என் வீட்டுக் கதவையும் யாரோ அறைகிறார்கள் கனமாய்..
ஒருவேளை மூன்றாம் வீட்டுக்காரர்
காலி செய்துவிட்டது தெரிந்துவிட்டிருக்கலாம்
அந்த
கை

ளு
க்
கு......

செல்வா
23-04-2010, 08:17 PM
கவிதை நேரடிப்பொருளை மட்டும் தான் குறிக்கிறதா ஆதன்?

சித்திரத்திற்கும் கவிதையின் பொருளிற்கும் தொடர்பிருக்கிறதா?

விருச்சோடிய (அ) வெறிச்சோடிய

கீதம்
24-04-2010, 12:04 PM
வாடகை ஏற்ற வழியில்லாமல் வீட்டுக்காரர் செய்த சதியாகவும் இருக்கலாம்.

இருந்தாலும் படிக்கையில் பயம் கவ்வுவதென்னவோ உண்மைதான். பாராட்டுகள் ஆதன்.

அமரன்
24-04-2010, 07:26 PM
என்ன பெரிய பயம்..... வெங்காயம்.

அப்படித்தானே ஆதன்..

ஏன்.... எதுக்கு.... எப்படி....
ஏகப்பட்ட கேள்விகளின் குடைச்சல்..
விளைவு.. ஏகாந்த வனம்...
இந்தப் பயம் எந்த ரகம்..

செல்வா
24-04-2010, 08:56 PM
என்ன பெரிய பயம்..... வெங்காயம்.


சரி சரி ஒத்துக்கறேன்......

நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்....