PDA

View Full Version : உன்னை தற்கொலை செய்யவா?! - அத்தியாயம் 10



Pages : [1] 2

மதி
18-04-2010, 06:05 PM
வழக்கம் போல மு.கு: நீண்ட நாள் கழித்து எழுதுகிறேன். எழுதவே வரவில்லை. அதனால் கதையோட்டப்பிழைகளை பொறுத்தருளவும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தவறாக பயன்படுத்தப்பட்ட வார்த்தை தான் தலைப்பாகியுள்ளது. தலைப்பை வைத்துவிட்டு கதையை தேடிக்கொண்டிருக்கிறேன்.


http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_UTS_-Title-doc.jpg
செப்டம்பர் மாத பெங்களூர் காலை. இரவு முழுவதும் பெய்த மழைக்கு சாட்சியாக சாலையெல்லாம் கழுவிவிட்டது போலிருந்தது. சாலையெங்கும் லாரி தடங்கள். மழை இன்னும் சரியாக விட்டபாடில்லை. சாறலாய் தூறிக் கொண்டிருந்தது. இதமானதொரு தென்றற்காற்று முகத்தை வருடி சொர்க்கம் இன்னும் இருக்கிறது என கங்கணம் கட்டியது. ஆசுவாசமாய் நடந்து செல்லும் வயதானவர்களும் தொப்பையைக் குறைக்க வேகவேகமாய் நடைபயிலும் இளம்வயது மென்பொருள் வல்லுநர்களும் சாலையெங்கும் நிறைந்திருக்க, மரங்களும் செடிகளும் நிறைந்த பச்சைப்பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சி காட்டிய அந்த பூங்கா வெளியே தன் பல்ஸர் பைக்கை நிறுத்திவிட்டு அவன் நுழைந்த போது காலை சரியாக மணி ஆறைத் தாண்டியிருந்தது.
அவன். மாதவன். இளநிலை பட்டதாரி. லட்சத்திற்கும் மேல் பணியாளர்களைக் கொண்ட அந்த மாபெரும் மென்பொருள் நிறுவனத்தில் என்னவோ செய்து குப்பை கொட்டுபவன். வயது இருபத்தியேழு. உயரம் ஐந்தடி பத்தங்குலம். சிறுவயதிலிருந்த உடற்பயிற்சி முறுக்கேறியிருந்த உடம்பு. களையான முகவெட்டு. யாருக்கும் அடங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் தலைமுடி அழகாய் சுருள் சுருளாய் அழகைக்கூட்டியது. வலது கண்ணோரத்தில் சின்னதாய் முகத்தில் வெட்டு பொருத்தமாயிருந்தது. ட்ராக் சூட்டில் இயற்கை காற்றில் முகம் மலர இருந்த அவன் பூங்கா உள்ளே நுழைந்தவுடன் வழக்கம் போல் நடை பயில ஆரம்பித்துவிட்டான். முடிக்க இன்னும் அரை மணிநேரமாவது ஆகும். அதுவரை….


அதே நேரத்தில் பூங்காவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு. நகரத்தின் பரபரப்பான பகுதியிலிருந்து சற்றே ஒதுங்கியிருந்தது. குடியிருப்பின் அருகாமையிலேயே பெரிய ஏரி அழகுக்கு அழகு சேர்த்தது. ஏறக்குறைய நூறு வீடுகளுக்கும் மேலிருக்கும் அந்த குடியிருப்பில். பால் பாக்கெட் வாங்கவும் காய்கறி வாங்கவும் ஆண்களும் பெண்களும் நடமாட ஆரம்பித்திருந்தனர். வானம் இருட்டை தொலைத்து நீலத்தை அப்பத் தொடங்கியிருந்தது. பத்து மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மூன்றாவது மாடியில் மூந்நூற்றிரண்டாம் இலக்க வீட்டின் உள்ளே சென்றால் விசாலமான அறை. வலது ஓரத்தில் தொலைக்காட்சிப் பெட்டி. இன்னும் சற்று உள்ளே சென்றால் வலப்பக்கம், இடப்பக்கம் என இரண்டு படுக்கை அறைகள். அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி செல்லும் அந்தப் பெண்ணைக் கடந்து இடது படுக்கை அறைக்குள் சென்றால் முகத்தில் புன்னகையுடன் அவள் தூங்கிக் கொண்டிருந்த தோரணை அவள் கனவுலகில் சஞ்சாரம் செய்கிறாள் என பட்டவர்த்தனமாக காட்டியது. ‘போய்ட்டு வரேன் டீஈஈஈஈஈ..’ என தோழி கத்தியதில் கூட தூக்கம் கலையாமல் கனவு கண்டு கொண்டிருந்தாள். கடுப்பான தோழி வீட்டை வெளியே பூட்டிவிட்டு செல்ல அவள் கனவில் மாதவன். அவள் சரண்யா. ரம்மியமான தோற்றம். கடல் போல அலை அலையாய் தவழும் கருங்கூந்தல். லட்சணமான கலைபொருந்திய முகம். கனவில் மாதவன் செய்த சில்மிஷங்கள் அவள் முகத்தில் அப்பட்டமாய் வெட்கப்புன்னகையாய் தெரிந்தது. வயது இருப்பத்தியைந்து. எல்லோருக்கும் அடைக்கலம் தரும் பெங்களூர் அவளுக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை தந்திருந்தது. இன்னும் கலையாத தூக்கத்துடன் காலைத் குறுக்காக போட்டு நைட்டியுடன் அவள் படுத்திருந்த தோரணை… அவ்வ்.. இதுக்கு மேல விவரம் வேண்டாம்.


‘என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே…’ செல்போன் செல்லமாய் சிணுங்கியது. அதற்கு குறையாமல் சிணுங்கியபடி செல்போன் எடுத்த சரண்யா உற்சாகமானாள்.
“ஹாய் டா.. குர்மார்னிங்… என்ன நடுராத்திரியிலே போன் பண்ணிருக்க..?”
“என்னது.. நடுராத்தியா… சுத்தம் போ.. மணி இப்போ ஆறரையாகறது. இந்த லட்சணத்துல இருந்தா கல்யாணம் பண்ணி குடித்தனம் நடத்துன மாதிரி தான்.. தூக்கம் கூட கலையல போல…”


“ம்ம்.. இன்னும் முழிக்கவே இல்லே.. ச்சே.. செம கனவு… கெடுத்துட்ட…கனவுல…நீ..”


“கனவுல….நான்..?”


“ச்சீ.. வேண்டாம். சுத்த மோசம்பா நீ.”


“கனவை நீ கண்டுட்டு என்னைய திட்டுற. நல்ல கதையால இருக்கு.”


“ஆமாம்.. அப்படித் தான்.. என்ன பண்ணுவ..”


“இப்போவே அலுத்துக்கற.. உன்னைய தான் எங்கம்மா பையன இந்த பொண்ணு நல்லா வச்சு காப்பாத்தும்னு மலை போல நம்பறாங்க..”


“நான் என்ன பண்ண.. எனக்கென்ன வேற ஆளா கிடைக்காது. என் மகனுக்கு நீ தான் ஏத்த பொண்ணுன்னு உங்கம்மா கெஞ்சுனாங்க.. போனா போதுன்னு ஒத்துக்கிட்டேன்”


“அட..அட.. பொண்ணுக்கு உங்க பையன புடிச்சிருக்குனு உங்கப்பா எங்க வீட்டுக்கு நாலஞ்சு தடவ நடையா நடந்தது மறந்துடுச்சா… என்ன?”


“சரி..சரி.. இன்னும் எந்திரிக்க கூட இல்ல.. அதுக்குள்ள எதுக்கு சண்டை. வழக்கமா ஆபிஸ் போனதும் தானே கூப்பிடுவே.. கேட்டா இத தான் இப்போதைக்கு வேலைன்னு சொல்லுவ.. இன்னிக்கு என்ன ஸ்பெஷலா?”


“ம்ம்.. அத மறந்துட்டு பேசிட்டு இருக்கேன் பாரு. இன்னிக்கு என்ன நாள்…?”


“என்ன நாள்.. உன் பொறந்தநாளா? இல்லியே இன்னும் ரெண்டு மாசமிருக்கே… என்னப்பா.. டென்ஷன் பண்ணாம சொல்லு… ஏற்கனவே தூக்கம் கலைஞ்சு போச்சுன்னு இருக்கேன்.. யோசிக்கற நிலைமையிலேயே இல்ல…”


“ம்ம்.. என்னைவிட தூக்கம் முக்கியமாடுச்சா…?”


“நிஜத்தைவிட நீ கனவுல தான் செம ரொமாண்டிக்கா இருக்க… சரி.. சரி.. கோபப்படாதே.. இன்னிக்கு என்ன நாள்… கொஞ்சமா இருக்கற மூளைய யூஸ் பண்ண வைக்காம சொல்லேன்..”


“இன்னிக்கு நாம் பாத்துக்கிட்டு ஐம்பதாவது நாள்.. ஹேப்பி பிஃப்டியத் டே…”


“ஹா.. எல்லா நாளையும் கணக்கு வச்சுப்பியாப்பா.. ஐம்பது நாளாச்சா.. நேத்து தான் வந்து என்ன பொண்ணு பாத்த மாதிரி இருக்கு..”


“ஆமா.. அதே ஜாலி மூட்ல இன்னிக்கு லீவ் போட்டுடு. நான் நிஜத்துலேயும் எவ்ளோ ரொமாண்டிக்கான ஆள்னு காட்டறேன். ஆமா உன் கூட இரண்டு லூசுங்க தங்கியிருக்குமே.. அதெல்லாம் ஆபிஸுக்கு போயாச்சா…?”


“ஏய்.. என் ப்ரண்டுங்கள லூசுங்காத. பிச்சுப்புடுவேன். காமினி ஒரு வாரம் லீவ். ஊருக்கு போயிருக்கா. தனுஜா காலையிலேயே ஆபிஸுக்கு போயிட்டா. பை த வே நெனச்ச நேரத்துக்கெல்லாம் லீவ் போட இது உங்க ஆபிஸ் மாதிரி இல்லே.. ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லியாகணும் சார். ஸோ.. இன்னிக்கு ப்ளான் கேன்ஸல் பண்ணிடுங்க”


“ஆஹா.. கனவு அது இதுன்னு சொல்லி கிளப்பிவிட்டுட்டு இப்போ என்ன வாபஸ் வாங்கற. அதெல்லாம் முடியாது. இன்னிக்கு நீ லீவ் போட்டேயாகணும். நிறைய ப்ளான்ஸ் வச்சிருக்கேன். ப்ளீஸ்பா எல்லாத்தையும் கெடுத்துடாத…”


“செம ரொமாண்டிக் மூட்ல தான் ஐயா இருக்கார் போல. சரி போ.. வழக்கம் போல வயித்துவலின்னு சொல்லி சமாளிச்சுக்கறேன். இப்போ இருக்கற மேனேஜர் சரியான சிடுமூஞ்சி. தானும் வாழாது அடுத்தவனையும் வாழவிடாது. டைவர்ஸ் கேஸ்.. சரி..விடு. எப்படியோ சமாளிச்சுக்கறேன். எத்தனை மணிக்கு வரே..?”


“இப்போ மணி ஆறு நாப்பது. ஒன்பது மணிக்கு வழக்கமா நீ ஏறுற பஸ்ஸ்டாப் பக்கத்துல நிக்கறேன். வந்துடு..”


“சரிப்பா.. வந்துடறேன். ஆனாலும் ரொம்ப தான் படுத்தற.. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கறேன்.. அப்புறம் உங்கம்மாகிட்ட சமைக்கறது எப்படினு ட்ரெயினிங் எடுக்கறல்ல… பை”


“ஏய்…ஏய்ய்…”


மாதவன் குரலை உயர்த்தியதும் கொஞ்சலுடன் செல்போனை அணைத்துவிட்டு கொஞ்ச நேரம் தூங்கப்போனாள் சரண்யா. மறுமுனையில் முகத்தில் வழக்கமான மந்தகாசப் புன்னகையுடன் போனை வைத்த மாதவன் ‘என்றென்றும் புன்னகை’யை சீட்டியடித்தபடி தன் பல்ஸரை விரட்டினான்.


எட்டரை மணிக்கெல்லாம் குளித்து முடித்து கிளம்பிய மாதவன் கூட்டமாய் ஊர்ந்து கொண்டிருந்த பெங்களூர் போக்குவரத்து ஜோதியில் கலந்து மெதுமெதுவாய் முன்னேறினான். வண்டியோட்ட எரிச்சலாய் வந்தாலும் ஒரு நாள் முழுக்க சரண்யாவுடன் செலவிடபோவதை நினைத்து மனம் குதூகலித்துக் கொண்டிருந்தது. ஒருவாறாய் போராடி சரண்யாவிடம் சொன்னபடி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்றான். மணி சரியா ஒன்பதை காட்டியது.


‘வந்துவிடுவாள். எப்போதும் அவள் பத்து நிமிஷம் லேட்.. ம்ம்’ காத்திருக்கலானான். பத்து நிமிஷம் நரகமாய் கழிந்தது. செல்போனை எடுத்து சரண்யாவின் நம்பருக்கு கால் பண்ணினான். அவனுக்காகவே ப்ரத்யேகமாக சரண்யா வைத்திருந்த காலர் ட்யூன் ஒலித்தது. ‘கண்ணுக்குள் கண்ணை வைத்து இல்லை இல்லை..என்றாயே..’ பொறுமையாய் கேட்டு முடிக்கும் வரை போன் எடுக்கப்படவில்லை. மறுமுறை மறுமுறை என்று மூன்று முறையானதும் வெறுத்துப் போனது. சற்று நேரம் கழித்து இறுதியாக முயற்சித்த போது ‘தாங்கள் தொடர்பு கொண்ட எண் தற்சமயம் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ என கன்னட நங்கை காதில் ஓதினாள்.



‘அவள் வீட்டுக்கே போக வேண்டியது தான்’ என முடிவு செய்தவனாய் வண்டியை கிளப்பி கோபத்தை ஆக்ஸிலேட்டரில் காட்டினான். சரண்யாவின் அபார்ட்மெண்ட்டை அடைந்தது வண்டியை நிறுத்திவிட்டு உள்நுழைந்த போது மக்கள் கூட்டமாய் நின்றிருந்தனர். ஆவல் உந்த உள்ளே நுழைந்து பார்த்தவன் அதிர்ந்தான். போட்டிருந்த நைட்டியுடன் குப்புற விழுந்து சுடசுட இரத்தம் கொப்பளிக்க சற்று முன் தான் சரண்யா இறந்திருந்தாள். பக்கத்தில் சுக்கு நூறாய் தெறித்தப்படி அவள் செல்போனும் அவளுடன் உயிரைவிட்டிருந்தது.

கீதம்
19-04-2010, 04:25 AM
அடப்பாவமே! அசத்தலான காதலுடன் ஆரம்பித்து அநியாயமாய் மாதவனின் காதலியைக் கொன்றுவிட்டீர்களே! தலைப்பை வைத்து ஓரளவு ஊகித்திருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் அதாவது முதல் பாகத்திலேயே கொல்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

அழகிய நடைக்கும் ஆர்வத்தைத் தூண்டும் கதைக்கும் என் பாராட்டுகள். நான் மன்றத்தில் இணைந்தபிறகு தாங்கள் எழுதும் கதை இதுதான் என்று நினைக்கிறேன். தொடரும் திகிலுக்காய் காத்திருக்கிறேன்.

மதி
19-04-2010, 05:54 AM
நன்றி கீதம். எனக்கும் தான் கஷ்டமாயிருந்துச்சு. இது வரைக்கும் என் கதைகளிலே யாரையும் கொன்னதில்லே.. :(

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. மேற்கொண்டு எப்படி போகும் என்று இன்னும் முடிவு செய்யவில்லை..

கீதம்
19-04-2010, 06:07 AM
நன்றி கீதம். எனக்கும் தான் கஷ்டமாயிருந்துச்சு. இது வரைக்கும் என் கதைகளிலே யாரையும் கொன்னதில்லே.. :(

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. மேற்கொண்டு எப்படி போகும் என்று இன்னும் முடிவு செய்யவில்லை..

என்னது? கதைகளில் யாரையும் கொன்னதில்லையா? அப்படின்னா நிஜத்தில்.......?

மதி
19-04-2010, 06:25 AM
என்னது? கதைகளில் யாரையும் கொன்னதில்லையா? அப்படின்னா நிஜத்தில்.......?

நான் ஒரு அப்பாவி.. மன்றத்துல நிறைய மக்கள்கிட்ட கேட்டு பாருங்க.. அவ்ளோ சாது.. :)

ரங்கராஜன்
19-04-2010, 07:17 AM
டேய் மச்சி சூப்பரா ஆரம்பித்து இருக்கிறாய், தலைப்பை பார்த்தவுடனே என்னடா இலக்கண பிழையுடன் ஒரு தலைப்பு என்று யோச்சித்தேன். திரியை திறந்து பார்த்தவுடனே கதையின் அட்டைப்படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது, குறிப்பாக அதன் கருப்பு நிறம். மர்மத்தின் நிறம் கருப்பு என்பதால் இந்த கதையில் பல மர்மங்கள் இருக்கும் என்று எதிர்பார்கிறேன். வாழ்த்துக்கள் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்தபடி.............

பாரதி
19-04-2010, 07:49 AM
நல்ல விறுவிறுப்பு!
சில பிரபல ஆசிரியர்களின் திகிலான முதல்பாகத்திற்கு சற்றும் குறைவில்லாத ஆரம்பம்.
சிறந்த திகில் தொடராக விளங்க வாழ்த்துகிறேன்.

sarcharan
19-04-2010, 07:54 AM
நான் ஒரு அப்பாவி.. மன்றத்துல நிறைய மக்கள்கிட்ட கேட்டு பாருங்க.. அவ்ளோ சாது.. :)

சாதுக்களையும் சாமியார்களையும் குறித்து paperல் செய்திகள் வருதாமே.. தலை சொன்னார்.... ஹி ஹி

sarcharan
19-04-2010, 08:00 AM
பாராட்டுகள்!! நல்ல கதை சுவையான சம்பவம்..

"...இளநிலை பட்டதாரி. லட்சத்திற்கும் மேல் பணியாளர்களைக் கொண்ட அந்த மாபெரும் மென்பொருள் நிறுவனத்தில் என்னவோ செய்து குப்பை கொட்டுபவன். வயது இருபத்தியேழு...."

ஐந்து அடி 10 அங்குலம் உயர ஹீரோ .. பைக்... மடிவாலா lake சரி சரி biography...

கொலையுடன் ஆரம்பித்த கதை.. உண்மையில் மதி- ராஜேஷ்குமார் பாணி. கொன்னுட்டீங்க.... திகிலு தொடரட்டும்

sarcharan
19-04-2010, 08:01 AM
நான் ஒரு அப்பாவி.. :)


அடப்பாவி!!!!:confused::confused:

இன்னொரு ராகவன்?

aren
19-04-2010, 08:11 AM
அசத்தலாக ஆரம்பித்திருக்கிறது மதி. ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல் வந்துள்ளது கதை. தொடருங்கள்.

மதி
19-04-2010, 08:18 AM
பாராட்டுகள்!! நல்ல கதை சுவையான சம்பவம்..

"...இளநிலை பட்டதாரி. லட்சத்திற்கும் மேல் பணியாளர்களைக் கொண்ட அந்த மாபெரும் மென்பொருள் நிறுவனத்தில் என்னவோ செய்து குப்பை கொட்டுபவன். வயது இருபத்தியேழு...."

ஐந்து அடி 10 அங்குலம் உயர ஹீரோ .. பைக்... மடிவாலா lake சரி சரி biography...

கொலையுடன் ஆரம்பித்த கதை.. உண்மையில் மதி- ராஜேஷ்குமார் பாணி. கொன்னுட்டீங்க.... திகிலு தொடரட்டும்
தப்பு தப்பு.....

இளநிலை - சரி...
லட்சத்தும் மேல்.... - தப்பு
இருபத்தியேழு - தப்பு
5.10 - தப்பு...
பல்ஸர் பைக்..- தப்பு

எங்கேயும் மடிவாலா லேக்னு இல்லியே...!!!
ஹாஹா

மதி
19-04-2010, 08:22 AM
டேய் மச்சி சூப்பரா ஆரம்பித்து இருக்கிறாய், தலைப்பை பார்த்தவுடனே என்னடா இலக்கண பிழையுடன் ஒரு தலைப்பு என்று யோச்சித்தேன். திரியை திறந்து பார்த்தவுடனே கதையின் அட்டைப்படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது, குறிப்பாக அதன் கருப்பு நிறம். மர்மத்தின் நிறம் கருப்பு என்பதால் இந்த கதையில் பல மர்மங்கள் இருக்கும் என்று எதிர்பார்கிறேன். வாழ்த்துக்கள் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்தபடி.............

இலக்கணப்பிழை தான்.. :D:D அப்பாடி.. நீயாச்சும்... அட்டைப்படத்தைப் பத்தி சொன்னியே.. கிட்டத்தட்ட.. 2 மணிநேரத்தும் மேல போராடி செஞ்சது.. அபாரமாக இல்லாவிட்டாலும்... ஓரளவிற்கு எதிர்பார்த்த மாதிரி வந்துள்ளது. அடுத்த பாகம் எழுதவே ஆரம்பிக்கல.. :frown::frown:


நல்ல விறுவிறுப்பு!
சில பிரபல ஆசிரியர்களின் திகிலான முதல்பாகத்திற்கு சற்றும் குறைவில்லாத ஆரம்பம்.
சிறந்த திகில் தொடராக விளங்க வாழ்த்துகிறேன்.

நன்றி பாரதிண்ணா... இந்த மாதிரி எழுதினதில்லேன்னு ஆரம்பிச்சது. சொதப்பாமலிருக்க வேண்டும்.. பார்க்கலாம்..


அசத்தலாக ஆரம்பித்திருக்கிறது மதி. ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல் வந்துள்ளது கதை. தொடருங்கள்.
நன்றி ஆரென்ண்ணா.. எல்லோரும் எழுதறாங்க.. நான் மட்டும் ஏன்னு... இதே வேகத்துடன் தொடர முயற்சிக்கிறேன்..

sarcharan
19-04-2010, 08:54 AM
தப்பு தப்பு.....

இளநிலை - சரி...
லட்சத்தும் மேல்.... - தப்பு
இருபத்தியேழு - தப்பு
5.10 - தப்பு...
பல்ஸர் பைக்..- தப்பு

எங்கேயும் மடிவாலா லேக்னு இல்லியே...!!!
ஹாஹா

அக்கார்டிங் டு சமாளிபிகேஷன் தியோரி ............

சரி சரி கதைய தொடருங்க...

மதி
19-04-2010, 08:57 AM
சமாளிபிகிஷன் இல்லீங்கண்ணா.. என் ரெண்டு ப்ரண்ட்ஸோட வர்ணனையை ஒன்னாக்கினது.. ஹிஹி... எவ்ளோ நாளைக்கு தான் நம்மளையே ஈரோவா காமிக்கறது... அதுவும்.. ஈரோயின் முதல் ரீல்லேயே புட்டுக்கிச்சுனா...

Akila.R.D
19-04-2010, 10:35 AM
ஆரம்பம் ரொம்ப சூடா இருக்கு மதி....
அடுத்த பாகத்தை சீக்கிரமா யோசிச்சு பதிச்சுடுங்க...

செல்வா
19-04-2010, 11:32 AM
சூப்பர் தல....

ஆரம்பமே அமர்க்களம்...

அட்டைப் படம் அச(த்த)ல்

கலக்க வாழ்த்துக்கள்

கலையரசி
20-04-2010, 02:51 PM
முதல் அத்தியாயத்திலேயே ஹீரோயின் இறந்தது மனதைச் சங்கடப்படுத்தியது என்றாலும் நல்ல அசத்தலான தொடக்கம். மேலும் தொடருங்கள்.

ஜனகன்
20-04-2010, 06:38 PM
சொல்ல வந்த கதையை சுவையாக,இயல்பான நிகழ்வு கோர்வையில்
சொன்ன விதம் மிக மிக அருமை.
வாழ்த்துகின்றேன் தொடருங்கள் அண்ணலே!!!!!!!!!!!!!!!!

மதி
21-04-2010, 02:33 AM
ஆரம்பம் ரொம்ப சூடா இருக்கு மதி....
அடுத்த பாகத்தை சீக்கிரமா யோசிச்சு பதிச்சுடுங்க...
மிக்க நன்றி அகிலா... யோசிச்சு யோசிச்சு மூளை குழம்புது.. :( பார்க்கலாம்..

சூப்பர் தல....

ஆரம்பமே அமர்க்களம்...

அட்டைப் படம் அச(த்த)ல்

கலக்க வாழ்த்துக்கள்
அண்ணே.. நன்றி... வழக்கம் போல மொக்கையா முடிக்கலாம்னு தான் ஆரம்பிச்சேன். :( இப்போ பயமா இருக்கு.. எப்படி கொண்டு போறதுன்னு தெரியாம.. :traurig001::traurig001::traurig001::traurig001:

முதல் அத்தியாயத்திலேயே ஹீரோயின் இறந்தது மனதைச் சங்கடப்படுத்தியது என்றாலும் நல்ல அசத்தலான தொடக்கம். மேலும் தொடருங்கள்.
எனக்கும் கஷ்டமா தான் இருந்தது.. இந்த ஒரு அத்தியாயம் வேற ஒரு கதைக்காக ஒரு வருஷத்துக்கு முன் எழுதினது. இப்போ கொஞ்சம் துசு தட்டி கடைசியா கொன்னுட்டேன்.. தப்பு தான். :icon_p:

சொல்ல வந்த கதையை சுவையாக,இயல்பான நிகழ்வு கோர்வையில்
சொன்ன விதம் மிக மிக அருமை.
வாழ்த்துகின்றேன் தொடருங்கள் அண்ணலே!!!!!!!!!!!!!!!!
நன்றி ஜனகன்.. இன்னும் இரு நாள் பொறுத்திருங்கள்..

அன்புரசிகன்
21-04-2010, 10:27 AM
உங்களுக்கு பொண்ணு கிடைக்கல என்பதற்காக கதையில் அந்த பெண்ணை கொலைசெய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். :D

தொடருங்கள்...

மதி
21-04-2010, 10:42 AM
உங்களுக்கு பொண்ணு கிடைக்கல என்பதற்காக கதையில் அந்த பெண்ணை கொலைசெய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். :D

தொடருங்கள்...
அடடா.. இப்படியெல்லாம் கூட யோசிக்கலாமா??? அதுவும் சரி.. எனக்கு பொண்ணு கிடைக்கல.. இனி ஒருத்தருக்கும் கல்யாணம் ஆகக்கூடாதுன்னு சட்டம் போட்டுடலாமா??? :D:D:D

முன்னரே சொன்ன மாதிரி.. ஒரு காதல் கதையா எழுத ஆரம்பிச்சு வச்சிருந்தேன்... கிட்டத்தட்ட ஒன்னரை வருஷம் முன்னாடி.. இறுதி மட்டும் இப்போ சேர்த்தது..

கிடைச்சா தானே தொடர முடியும்... தொடருங்கள்.. தொடருங்கள்ன்னா... எப்படி..?? நான் கதைய சொன்னேன்..:icon_b:

அன்புரசிகன்
21-04-2010, 10:46 AM
முன்னரே சொன்ன மாதிரி.. ஒரு காதல் ஆரம்பிச்சு வச்சிருந்தேன்... கிட்டத்தட்ட ஒன்னரை வருஷம் முன்னாடி.. இறுதி மட்டும் இப்போ சேர்த்தது..

கிடைச்சா தானே தொடர முடியும்... தொடருங்கள்.. தொடருங்கள்ன்னா... எப்படி..?? நான் என் காதலை சொன்னேன்..:icon_b:

இப்படி வாசிச்சு பாருங்க...:D

மதி
21-04-2010, 11:28 AM
இதுவும் நல்லா தான் இருக்கு.. படிக்க மட்டும்.. இல்ல.. இல்ல... சொக்கா.. எனக்கில்ல...

govindh
21-04-2010, 01:01 PM
துப்பறியும் 'த்ரில்லர்' கதை படித்து ரொம்ப நாளாயிற்று...!
அந்தக் குறை இப்போது நீங்கிற்று..!

அசத்துங்கள் மதி..
அடுத்த பாகம்..விரைவில் தாருங்கள்...
வாழ்த்துக்கள்.

Akila.R.D
27-04-2010, 04:21 AM
10 நாள் ஆச்சு...
அடுத்த பாகம் எப்போ வரும் மதி...

aren
27-04-2010, 05:36 AM
என்ன மதி, இந்தப் பக்கம் ஆளையே காணவில்லையே. அடுத்த பாகம் எப்போ பதிவு செய்யப்போகிறீர்கள்.

மதி
27-04-2010, 05:45 AM
அடடா.. அதற்குள்.. ஆரம்பிச்சாச்சா..? இரண்டாம் பாகம் எழுதினேன்.. ஆனால் திருப்தி இல்லாததால்.. மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.. கொஞ்சம் உடல்நலம் சரியில்லை.. அதனால் தாமதம்.. இன்று இல்லை.. நாளை பதிகிறேன்.. நினைத்ததை விட.. இந்த கதைக்களம் நீண்ட நேரமெடுக்கிறது.. :(

Akila.R.D
27-04-2010, 05:49 AM
கடவுளே மதிக்கு சீக்கிரம் உடல் நிலை சரி ஆகனும்...
அப்பத்தான் அடுத்த பாகத்தை பதிப்பார்...

சஸ்பென்ஸ் தாங்க முடியல அதான்..

மதி
27-04-2010, 05:51 AM
கடவுளே மதிக்கு சீக்கிரம் உடல் நிலை சரி ஆகனும்...
அப்பத்தான் அடுத்த பாகத்தை பதிப்பார்...

சஸ்பென்ஸ் தாங்க முடியல அதான்..
நீங்க நினைக்கிற அளவுக்கு சஸ்பென்ஸெல்லாம் இல்லீங்க... எனது வழக்கமான மொக்கைக் கதை தான்... கொஞ்சம் ஆரென் அண்ணாவையும் புடிங்க.. அவரும்.. அஞ்சாவது பாகத்தை இன்னும் பதிக்கல...:icon_ush::icon_ush:

Akila.R.D
27-04-2010, 06:00 AM
ஆமாம் ஆமாம்...
அங்கயும் இப்பத்தான் போய் சொல்லிட்டு வந்தேன்...

இனிமே நீங்க எல்லாரும் கதையை முழுசும் எழுதி முடிங்க அப்புறம் நாங்க படிக்க ஆரம்பிக்கறோம்...

மதி
27-04-2010, 06:02 AM
ஆமாம் ஆமாம்...
அங்கயும் இப்பத்தான் போய் சொல்லிட்டு வந்தேன்...

இனிமே நீங்க எல்லாரும் கதையை முழுசும் எழுதி முடிங்க அப்புறம் நாங்க படிக்க ஆரம்பிக்கறோம்...
அதுவும் சரி தான்... அப்போ இன்னும் குறைஞ்சது ஆறு மாசமாவது காத்திருக்கணும்...

Akila.R.D
27-04-2010, 06:09 AM
ஆறு மாசமா? உங்களுக்கே ஓவரா தெரியல....
நீங்க இன்னிக்கு அலுவலக வேலை எதும் செய்ய வேண்டாம்... கதை எழுதுங்க..

யாராவது கேட்டா இது ஜூனியரோட ஆர்டர்னு சொல்லுங்க...

மதி
27-04-2010, 06:26 AM
ஆறு மாசமா? உங்களுக்கே ஓவரா தெரியல....
நீங்க இன்னிக்கு அலுவலக வேலை எதும் செய்ய வேண்டாம்... கதை எழுதுங்க..

யாராவது கேட்டா இது ஜூனியரோட ஆர்டர்னு சொல்லுங்க...
இப்படி காத்திருக்கறதுக்கு பதிலா.. நீங்களே கதை எழுதலாம்.. ரொம்ப கஷ்டமேயில்லை.. ஏன்னா.. எழுதின கதையை நாம படிக்கப் போறதில்லை.. கஷ்டமெல்லாம் படிக்கறவங்களுக்குத் தான்... கதை எழுத ஆரம்பிங்க...!

Akila.R.D
27-04-2010, 06:33 AM
ஆசையாத்தான் இருக்கு..ஆனா எனக்கு மேல் மாடில்ல கொஞ்சம் வெயிட் கம்மி மதி...

கதை கவிதை எல்லாம் எழுத வராது...

மதி
27-04-2010, 06:48 AM
ஆசையாத்தான் இருக்கு..ஆனா எனக்கு மேல் மாடில்ல கொஞ்சம் வெயிட் கம்மி மதி...

கதை கவிதை எல்லாம் எழுத வராது...
இங்க யாரும் எழுதத் தெரிஞ்சு வரல... வந்தப்பறம் எழுத ஆரம்பிச்சவங்க... நீங்களும் முயற்சி பண்ணுங்க.. உற்சாகம் கொடுக்க மன்ற மக்கள் நிறைய பேர் இருக்காங்க... உங்களுக்கும் இவ்ளோ திறமை இருக்கானு அப்புறம் தெரியும்..

உற்சாகமா எழுத ஆரம்பிங்க.. நல்லா இருந்தா மக்கள் பாராட்டுவாங்க.. இல்லேன்னா.. எப்படி எழுதினா நல்லா இருக்கும்னு சொல்லித் தருவாங்க.. அப்படியே கத்துக்கலாம்.. :icon_b:

அக்னி
27-04-2010, 06:53 AM
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தவறாக பயன்படுத்தப்பட்ட வார்த்தை தான் தலைப்பாகியுள்ளது.
நிஜமாகப் பயன்படுத்தியதா... :rolleyes:



இதமானதொரு தென்றற்காற்று முகத்தை வருடி சொர்க்கம் இன்னும் இருக்கிறது என கங்கணம் கட்டியது. ஆஹா... ஆஹா... வருடலாய் ஓர் வர்ணனை.


பத்து மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மூன்றாவது மாடியில் மூந்நூற்றிரண்டாம் இலக்க வீட்டின் உள்ளே சென்றால் விசாலமான அறை. வலது ஓரத்தில் தொலைக்காட்சிப் பெட்டி. இன்னும் சற்று உள்ளே சென்றால் வலப்பக்கம், இடப்பக்கம் என இரண்டு படுக்கை அறைகள். அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி செல்லும் அந்தப் பெண்ணைக் கடந்து இடது படுக்கை அறைக்குள் சென்றால் முகத்தில் புன்னகையுடன் அவள் தூங்கிக் கொண்டிருந்த தோரணை அவள் கனவுலகில் சஞ்சாரம் செய்கிறாள் என பட்டவர்த்தனமாக காட்டியது..
வீட்டுக்குள்ள புகுந்து நல்லாத்தான் சுத்திக் காட்டுறீக மதி... ;)


‘போய்ட்டு வரேன் டீஈஈஈஈஈ..’ என தோழி கத்தியதில் கூட தூக்கம் கலையாமல் கனவு கண்டு கொண்டிருந்தாள். கடுப்பான தோழி வீட்டை வெளியே பூட்டிவிட்டு செல்ல .
மதி வீட்டுக்குள்ள சுத்திப் பார்க்கறார்டீஈஈஈ...
தூங்கற சரண்யாவுக்கு ஏதாச்சும் செஞ்சுடப்போறார்டீஈஈஈ...


அவ்வ்.. இதுக்கு மேல விவரம் வேண்டாம்.
ஆமாமா... வேண்டாம் வேண்டாம்... :traurig001:


“இன்னிக்கு நாம் பாத்துக்கிட்டு ஐம்பதாவது நாள்.. ஹேப்பி பிஃப்டியத் டே…”
இது கொஞ்சம் ஓவரோ... 51, 52... இப்பிப் போகுமோ...


சரண்யாவின் அபார்ட்மெண்ட்டை அடைந்தது வண்டியை நிறுத்திவிட்டு உள்நுழைந்த போது மக்கள் கூட்டமாய் நின்றிருந்தனர்.
10 நிமிடங்களுங்கு முன்னர் ‘கண்ணுக்குள் கண்ணை வைத்து இல்லை இல்லை..என்றாயே...’ எனக் காலர் ட்யூன் பாடி,
‘தாங்கள் தொடர்பு கொண்ட எண் தற்சமயம் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ எனக் கன்னடக்கிளி கொஞ்சி,
ஒரு 15, 20 நிமிடத்துக்குள் (5 கி.மீ. தானே) மாதவன் சரண்யா அபார்ட்மெண்டை அடைந்திருப்பானே.
வெளியே பூட்டிய வீட்டிற்குள் நிகழ்ந்த சம்பவம் அதற்குள் எப்படி வெளியே தெரிந்தது..?
அதற்குள் எப்படிக் கூட்டம் கூடியிருக்கும்..?


போட்டிருந்த நைட்டியுடன் குப்புற விழுந்து சுடசுட இரத்தம் கொப்பளிக்க சற்று முன் தான் சரண்யா இறந்திருந்தாள்.
கடைசில இப்பிடிக் கொன்னுட்டீங்களே மதி...

என்னது... நீங்க கொல்லலையா...
அப்புறம் எப்பிடி நிரூபிக்கப்போறீக...???


பக்கத்தில் சுக்கு நூறாய் தெறித்தப்படி அவள் செல்போனும் அவளுடன் உயிரைவிட்டிருந்தது.
ஒருவேளை அலைபேசி அவளைத் தற்கொலை செய்திருக்குமோ...

பி.கு. 1:
அட்டைப்படம் :icon_b:

பி.கு. 2:
விரைவில நீங்க குற்றவாளியில்லன்னு நிரூபிச்சுடுங்க...
அதாங்க அடுத்த பாகம், அதற்கடுத்த பாகம், அதற்கடுத்தடுத்த பாகம்... இப்பிடி பத்துப் பாகங்கள வரிசைகட்டி போட்டத்தானே நிரூபிக்கலாம்...

மதி
27-04-2010, 06:58 AM
கற்பூர புத்தி அக்னி... அவ்ளோ தான் சொல்லுவேன்..!!! உங்க.. பதில்கள் நல்லாவே ரசிக்க வைத்தது.. அட நான் கூட இப்படி எழுதியிருக்கறேனா... ஹிஹி.. உங்கள மாதிரி ஆளுங்க ஏத்திவிட்டு ஏத்திவிட்டு தான்.. ரணகளமாயிட்டு இருக்கு.. :D

உண்மையிலேயே நான் குற்றவாளியில்லை..!!! அட்டைப்படத்துக்கு உங்க பாராட்டு... குளிர்கிறது..

மதி
27-04-2010, 07:00 AM
அப்புறம் அது பூட்டிய வீட்டுக்குள் நடக்கவில்லை. மூன்றாம் மாடியில் இருந்து சரண்யா விழுந்திருப்பாள்..ஒரு வேளை நான் சரியா சொல்லலையோ?? மேலும் வெளியே பூட்டிய வீட்டை உள்ளிருந்தும் திறக்காலாம்... ஒரு பூட்டுக்கு ரெண்டு மூணு சாவி இருக்கும்ல..

அக்னி
27-04-2010, 07:45 AM
அதிற் கொஞ்சம் தெளிவில்லைதான் மதி.
சிலவேளை எனக்கு மட்டுமோ தெரியவில்லை.

அப்படியென்றால், நித்திரை குழப்பிய அலைபேசியோடு, ஜன்னலருகே வந்த சரண்யாவை.........

சரி சரி... முடிவில பாத்துக்கலாம்...

ஜன்னலால தள்ளித் (தற்)கொலை செய்றதுக்காகவே மூன்றாவது மாடியில் சரண்யாவை குடிவச்சிருக்காரு நம்ம மதி...

நல்லாப் பிளான் பண்ணிச் செய்திருக்கீக மதி...

பார்க்கலாம்...

மதி
27-04-2010, 08:03 AM
சரி.. விடுங்க.. முதல் மார்க்கெல்லாம் வேண்டாம்.. இருக்கற தப்புக்கு குறைச்சுக்கிட்டு அட்லீஸ்ட் பாஸ் மார்க்காவது போட்டுடுங்க.. அடுத்த பாகத்துக்கு ஏக குழப்பம்.. ஒன்னுமே புரியல..

அக்னி
27-04-2010, 09:46 AM
உங்களுக்கு எப்பிடி பாஸ் மார்க் போடுறது...
அதான் நீங்க எப்பவோ பாஸாயிட்டீங்களே...

மதி
27-04-2010, 04:24 PM
புது டெல்லி. இன்னமும் விடியாத காலைப்பொழுது. குளிருக்கு இதமாய் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு சாலையோரமாய் நடக்கும் மக்கள். எங்கும் அமைதியாக இருக்க சைரன் வைத்திருந்த வாகனங்கள் வெளிச்சதைக் கக்கியபடி சர் சர்ரென்று அந்த கட்டத்தின் முன்வாசலில் நின்றன. செக்யூரிட்டி கதவை திறந்துவிட அவர்கள் அடித்த சல்யூட்டை வாங்கிக் கொண்டே பைஜாமா குர்தாக்களில் இருந்த கேபினட் அமைச்சர்கள் இறங்கினர். வந்திறங்கிய இடம் நம்பர் 7, ரேஸ் கோர்ஸ் சாலை, டெல்லி. பிரதம மந்திரி இல்லம்.

அதிகாலையிலேயே தொலைப்பேசியில் தகவல் வந்ததை அடுத்து அனைவரும் ஏன் எதற்கென்று புரியாமல் வந்திருந்தனர். மெல்லியதாக கொட்டாவி விட்டபடி வேளாண்மை அமைச்சரும் ஜவுளித்துறை அமைச்சரும் பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.

“என்னய்யா.. காலங்கார்த்தால தூங்கக் கூட விடாம.. அப்படி என்ன தலை போற அவசரம்னு கூப்பிட்டு இருக்காங்க..” இது ஜவுளி.

“தெரியலேப்பா.. எவனாவது யாரையாவது சுட்டிருப்பான். அதுக்காக ஆலோசனைங்கற பேர்ல எல்லோரையும் கூப்பிட்டு இருப்பாங்க.. அவசரத்துல வீட்ல கூட சொல்லாம வந்துட்டேன்…” வேளாண்மை முணுமுணுக்க அனைவரும் வந்தவுடன் வீட்டின் கதவு சாத்தப்பட்டது. நீண்டு போடப்பட்டிருந்த மேஜையில் நடுநாயகமாய் உட்கார்ந்திருந்தார் இந்திய நாட்டின் பிரதம மந்திரி. வழக்கமாக மந்தகாசப்புன்னகையுடன் குழப்பம் நிறைந்திருந்த மந்திரிகளின் முகத்தைப்பார்த்துக் கொண்டே பேச்சை ஹிந்தியில் ஆரம்பித்தார்.

“அனைவருக்கும் வணக்கம். ஒரு முக்கிய விஷயமாக பேசுவதற்காக உங்க எல்லோரையும் கூப்பிட்டிருக்கோம். நாட்டின் பாதுகாப்பிற்கு ஒரு சின்ன பிரச்சனை ஏற்படலாம் என்று தெரிகிறது. இது எல்லாவற்றையும் பற்றி சொல்வதற்கு முன்னால இந்த கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட தேசிய விஞ்ஞானக்குழு ஆலோசகர் திரு. சுந்தரராமனை அறிமுகப்படுத்துகிறேன். மேலும் விவரங்களை அவர் விவரிப்பார்.”

மூலையில் உட்கார்ந்திருந்த சுந்தரராமன் தொண்டையை கனைத்துக் கொண்டே எழுந்தார்.

“எல்லோருக்கும் காலை வணக்கம். நான் சுந்தரராமன். தேசிய விஞ்ஞானக்குழு ஆலோசகர். இஸ்ரோ இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திராயன் – I ஐ நிலவுக்கு அனுப்பியது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சில தொழில்நுட்பப்பிரச்சனைகளால் எதிர்பார்த்திருந்த காலத்தைவிட முன்னதாகவே தொடர்பு அறுந்துவிட்டது.. இப்போ ஏற்பட்டிருக்கும் சில சூழ்நிலைகளால் நாம ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அடுத்த மிஷனை முன்னதாகவே அனுப்ப வேண்டிய கட்டாயம். அதைப் பற்றி தெரிவிக்கத் தான் இந்த கூட்டம்..”

அமைச்சர்கள் கூட்டம் அமைதியாக இருந்தது. இப்போது தலையை திருப்பி பிரதம மந்திரியை பார்த்தனர். அவர் இப்போது ஆரம்பித்தார்.

“உண்மை தான். சிலர் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் நமது விஞ்ஞானிகளுக்கு கிடைத்த சில அரிய தகவல்களைக் கொண்டு இந்த முடிவு எடுத்திருக்கிறோம். இன்னும் இரண்டு மாதத்தில் இந்தியாவின் புது விண்கலம் சந்திரோதயன் நிலவை நோக்கி கிளம்பும் “

இன்னும் ஒன்னும் புரியாமல் எல்லோரும் விழித்திருக்க தகவல் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் பேச ஆரம்பித்தார்.

“அப்போ இது புதுத் திட்டம். எப்போ நிதி ஒதுக்கப்பட்டது. எப்போ விண்ணில் செலுத்தும் எண்ணம்? இதைப் பற்றி ஏன் யாருக்கும் சொல்லவில்லை?”

“போன வருடம் தேசிய பாதுகாப்பு குழுவில் எடுக்கப்பட்ட முடிவு. பொதுவில் விவாதிக்க முடியாத சில விஷயங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதியிடமும் ஒப்புதல் வாங்கியாகிவிட்டது. நாட்டில் எல்லா இடத்திலேயும் ஓட்டை. இப்போ இங்கே பேசும் அத்தனை விஷயங்களும் இன்னும் பத்து நிமிஷத்தில் வெளியே இருக்கும் பத்திரிக்கையாளர்களிடம் போய்விடும். அந்த லட்சணத்தில் முக்கிய பாதுகாப்பு விஷயங்களுக்காக பரிட்சை செய்ய விரும்பவில்லை. இப்போ கூட பொதுவில் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளதால் தான் இந்த கூட்டமே.”

“ஏதோ பாதுகாப்பு பிரச்சனைனு சொன்னீங்க. என்ன அது?”

“நமக்கு வேண்டாத சிலர் தீவிரவாதிகளால் நம் விண் ஆராய்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்போறதா தகவல். அவங்க யார்.. எங்கிருந்து வர்றாங்கன்னு இன்வெஸ்டிகேஷன் நடக்குது. உள்துறை அமைச்சரின் நேரடி மேற்பார்வையில். மேற்கொண்டு விவரங்களை இப்போ பேச முடியாது. அதே சமயம் நாம் எதிர்பார்த்ததுக்கு முன்னாடியே கிடைச்ச சில தகவல்கள். அதனால நிலவுக்கு விண்கலம் அனுப்பலாம்னு ஆராய்ச்சித் துறை சிக்னல் கொடுத்திருக்காங்க. இந்த தகவல்கள் போதுமா.. இல்லை இன்னும் ஏதாச்சும்..?”

எல்லோரும் மௌனித்திருக்க

“சரி.. இன்னும் சற்று நேரத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். வழக்கம் போல எதிர்கட்சியின் பிரச்சாரத்துக்கு பிரதம மந்திரி அலுவலகம் பதில் சொல்லும். நீங்கள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம். இத்துடன் கூட்டத்தை முடிச்சுக்கலாம்”

சொல்லிய பிரதமர் எழ இன்னமும் தூக்கம் கலையாமல் கொட்டாவி விட்டபடி ‘இந்த விஷயத்துக்காகவா தூக்கத்திலிருந்து எழுப்பி வரசொன்னாங்க’ன்னு முணுமுணுத்துக் கொண்டே அமைச்சர்கள் கிளம்பி சென்றனர். அடுத்ததாய் பிரதமர் சில முக்கிய பிரமுகர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். முடிவில் அவர் முகத்தில் தெளிவு பிறந்தது.

“சபாஷ்.. சுந்தரராமன், நீங்க சொல்ற மாதிரி மட்டும் நடந்துடுச்சுன்னா.. உலக அளவில இந்தியா முன்னணி நாடா வந்துடும். ஆனா இந்த பாதுகாப்பு விஷயம் மட்டும் உறுத்துது. அதைப் பத்தி சரியா தகவல் தெரிஞ்சதும் மேற்கொண்டி விவாதிக்கலாம். முப்படைத் தளபதிகளும் அப்போது நம்முடன் இருப்பார்கள்..”

புன்னகைத்துக் கொண்டே சுந்தரராமன் எழுந்தார்.

இரண்டு மணிநேரம் கழித்து அறிவிப்பு வெளியானவுடன் தலைநகரமே அமளிதுமளிப்பட்டது. எல்லா செய்திகளிலும் இதைப் பற்றியே பேச்சு.
பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் கொடுத்திருந்த பேட்டியில்,

“நாடே வறுமையில இருக்கு. கிட்டத்தட்ட 37 சதவித மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்காங்க. இதுல சந்திரனுக்கு விண்கலம் அனுப்பணும்னு இப்போ என்ன அவசரம். அதற்கு செலவிடப்படும் பணத்துல நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்கள செய்யலாம். கேட்க ஆளில்லாம ஆளும்கட்சி நாட்டின் கஜானாவை காலிப்பண்ணிக்கொண்டிருக்கிறது.”

இதைப்பற்றி பல செய்தி தொலைக்காட்சிகளிலும் விருந்தினர்கள் வரவழைக்கப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டது. நாட்டின் சராசரி குடிமக்களோ எதைப்பற்றியும் யோசிக்காமல் அடுத்த நாள் நடக்கும் ஐ.பி.எல் இறுதியில் சென்னை ஜெயிக்குமா தோற்குமா என கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அதே நாள்..

ஹைதராபாத் மாநகரத்தை எல்லையை தாண்டி சில பத்து கி.மீக்கு அப்பால் பெங்களூர் நெடுஞ்சாலையில் போனால் வலப்பக்கம் அந்த சாலை பிரியும். அதில் பயணித்து பதினைந்து கி.மீ சென்றால் “கெத்திரெட்டிப்பள்ளி” என்று தெலுகிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பலகை உங்களை வரவேற்கும். எண்ணி ஊரில் இருநூறு வீடு இருந்தால் அதிகம். முக்கால்வாசி மக்கள் நெசவுத் தொழில் தான். அதனால் ஊரில் எங்கும் சாயமாக இருக்கும். ஆங்காங்கே தென்படும் டிஷ் ஆண்டெனாக்கள் நகரத்தோடு எந்தவிதத்திலும் தாங்கள் சளைத்தவரில்லை என பறைசாற்றியது.

சூரியன் மங்கும் மஞ்சள் வெளிச்சத்தில் ஊரே ஜொலிக்க அந்த கிராமத்தைக் கடந்த அம்பாசிடர் கார் பழங்கால கட்டிடமாய் இருந்த அந்த ரைஸ்மில்லின் முன் நின்றது. சரியான பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே காரை பெயர்ந்து இருந்தது.

காரிலிருந்து ஒரு ஐம்பது வயதுக்கும் மேல் மதிக்கத்தக்க அந்த மனிதர் இறங்கினார். பாதி நரைத்தும் நரைக்காமலும் இருந்த தலைமுடி, கண்ணில் வயதுக்கேற்ற கண்ணாடி, முழுக்கை சட்டை. நெற்றியில் எப்போதும் நிரந்தரமாய் கோடுகள். அவர் இந்திய தேசிய விஞ்ஞானக்குழுத் தலைவர் நாராயணரெட்டி.

மில்லுக்குள் நுழைந்ததும் கவனமாய் கதவை சாத்தினார். அரவை இயந்திரங்களைத் தாண்டி… சுவரோரமாய் உமி குமிக்கும் இடத்துக்கு அருகில் சென்றார். கீழிருந்த பலகையை நகர்த்தி மெல்லியதாய் தெரிந்த கைப்பிடியைத் திருக கீழே படிக்கட்டுகள் தெரிந்தன. பொறுமையாய் அதனுள் இறங்கியதும் அந்த இடத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லாத மாதிரி நவீன மயமாய் இருந்தது. வெளிச்ச ஒளிக்கற்றைகள் அறையெங்கும் பரவ நவீன ரக தடுப்புச்சுவர். நிற்க வேண்டிய இடத்தில் நின்றதும் கண்ணுக்குத் தெரியாத குறைந்த அழுத்த மின்காந்த அலைகள் அவருள் பரவி அவரின் அடையாளங்களையும் ரத்த அழுத்தத்தையும் சரிபார்த்து அவர் இன்னார் தான் என உறுதி செய்தவுடன் அந்தக் கதவு திறந்தது.

உள்ளே ஆங்காங்கே மேஜைகளும் அதன் மேல் வைக்கப்பட்டிருந்த பலவிதமான கருவிகளும் கம்ப்யூட்டர் சமாச்சாரங்களும் ஏதோ தீவிர சோதனை நடைபெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டியது. அந்த இடம் இந்திய அரசாங்கத்தால் ரகசியமானவர் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்டது. அந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் அரசாங்க உளவாளிகளும் பாதுகாப்பு வீரர்களும். பாதுகாப்பு வீரர்கள் ஆடு மேய்க்கும் இடையர் வேடத்தில் அந்நிய நபர்களின் நடமாட்டத்தை கவனித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி அந்த கிராமம் உருவாக்கப்பட்டது. அதைப்பற்றிய குறிப்புகளும் அரசாங்க பதிவேட்டில் ஏற்றப்பட்டது. ஏதோ ஒரு முக்கிய சோதனைக்காக கிட்டத்தட்ட பத்து கி.மீ சதுரத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் காமிரா மூலம் கவனிக்கப்பட்டு வருகிறது யாருக்கும் தெரியாமல். ஊர் உலகிற்கு அது ஒரு வழக்கமான இந்திய கிராமம். அவ்வளவு தான்.

அவர் உள்ளே நுழைந்ததும் அவருக்காகவே காத்திருந்த மாதிரி மூவரும் நிமிர்ந்தனர். சோதனைக்கான கோட்டில் இருந்தவர்களில் நடுத்தர வயதுடைய நபர் தான் அந்த சோதனைக்கு சொந்தக்காரர். ராஜசேகரன். நாற்பதுகளில் இருக்கும் அவர் வேதியியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற கையோடு அரசாங்க வேலையில் சேர்ந்தார். அவரின் மூளையில் உருவான திட்டத்திற்கான சோதனை தான் அது. அவருக்கு உதவியாளர்களாக மிருதுளாவும் ப்ரணவும். மிருதுளா. இளம் வயது. அறிவியலில் ஆர்வம் அதிகம். ஐஐஎஸ்ஸியில் மேற்படிப்பை முடித்தவுடன் ராஜசேகரனால் கண்டுபிடிக்கப்பட்டவள். பேருக்கேற்ற மாதிரி மிருதுவான உருவம். கூர்மையான நாசி. சிரித்தால் தெரியும் தெற்றுப்பல். அலையலையாய் சுருண்டிருக்கும் நெடிய கூந்தல். கண்ணில் ஆர்வம் கொப்பளிக்க ரெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பக்கத்தில் ப்ரணவ். அவள் காதலன். ஆறடி உயரம். சற்றே மாநிறம். சற்றே சுருட்டையாய் முடி. கச்சிதமாய் நறுக்கப்பட்ட மீசை. இரண்டு நாள் தாடி. காது மடல் வரை விடப்பட்ட கிருதா. அவளுடன் ஒன்றாய் படித்தவன். அவளுடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்ய ராஜசேகரனிடம் போராடி சேர்ந்தவன். சேர்ந்த நாள் முதல் கண்ணும் கருத்துமாய் வேலையில் ஈடுபட்டு நல்ல பேர் எடுத்தவன். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மட்டும் மிருதுளாவுடன் காதல் புரிந்தான். அவனும் ரெட்டியையே பார்க்க அவர் வாயைத் திறந்தார். ஆங்கிலத்தில்..

“நண்பர்களே.. நாம் நினைத்தது நடந்துவிட்டது. இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுவிட்டார்கள். இன்னும் இரு மாதத்தில் சந்திரோதயன் புறப்பட போகுது. நமது சோதனையில் வெற்றியில் தான் இந்தத் திட்டமே உருவானது. கூடிய சீக்கிரமே நாம் இதைக் கொண்டாடக்கூடிய நாள் வரும். உங்க சோதனைகள் எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு?”

சந்தோஷத்தில் முகம் மலர்ந்திருந்த ராஜசேகர் ஆரம்பித்தார்.

“ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம். சோதனைகள் எல்லாம் இதுவரை வெற்றிகரமாகத் தான் போய்க்கிட்டு இருக்கு. இதுவரை சக்ஸஸ் ரேட் நூறு சதவிகிதம். இன்னும் சில டெஸ்ட் தான் இருக்கு. அதையும் முடிச்சுட்டா போதும். ஜெயம் தான்…”

“கேட்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்கே நமது ஆராய்ச்சியின் பலன்?”

ராஜசேகரன் காட்டிய திசையில் ஆர்வமாய் பார்த்தார். அங்கே பல சாதனைகள் புரிய போகும் அந்த இயந்திரம் ஏதும் அறியாத குழந்தை போல் அமைதியாய் அந்த மேஜையின் மேல் வீற்றிருந்தது.

அக்னி
27-04-2010, 05:44 PM
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் எப்பிடி முடிச்சுப் போடப்போறீங்கன்னு புரியலை...

ஏதோ சின்னப்பிரச்சினைன்னு பார்த்தா,
பிரதம மந்திரியோடு அமைச்சரவை, விண்கலம், நிலவு என்று எங்கெங்கேயோ போகுது கதை.

இரண்டாவது பாகத்திலேயே சீட் நுனிக்குக் கொண்டு வந்து விட்டிட்டீக...

மதி
28-04-2010, 12:33 AM
கதை எங்கங்க போகுதுன்னு எனக்கும் தான் தெரியல... ஆனா ஏகப்பட்ட ஆங்கில படங்கள் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல.. ஹீஹி

Akila.R.D
28-04-2010, 04:39 AM
ஏதோ காதல் கதைனு படிக்க ஆரம்பிச்சா நீங்க எங்கெங்கயோ போய்ட்டீங்க...

நடத்துங்க... நடத்துங்க....

மதி
28-04-2010, 04:47 AM
ஏதோ காதல் கதைனு படிக்க ஆரம்பிச்சா நீங்க எங்கெங்கயோ போய்ட்டீங்க...

நடத்துங்க... நடத்துங்க....
காதல்ன்னா...
இது என்ன மாதிரி கதைன்னு.. சத்தியமா தெரியாது.. தோன்றதெல்லாம் வச்சு கதை பண்ணிக்கிட்டு இருக்கேன்...
சொதப்பினா நான் பொறுப்பில்ல.. :icon_ush::icon_ush::icon_ush:

aren
28-04-2010, 10:46 AM
கதையில் ஒரு பெரிய முடிச்சை போட்டிருக்கிறீர்கள். அதை எப்படி எடுத்துப்போகப் போகிறீர்கள் என்று படிக்க ஆவலுடன் இருக்கிறேன்

மதி
28-04-2010, 11:16 AM
இப்படி தான் எல்லோரும் சொல்றாங்க ஆரென்.. :)

செல்வா
28-04-2010, 03:40 PM
அருமையாகப் போகுது..... கதை தொடருங்கள்.... தொடர்ந்து வாசித்து விமர்சிக்கிறேன்.

ஏனுங்க... ஒரு மாதத்துக்கு ஒரு அத்தியாயம் போடாம ஒரு வாரத்திற்கு ஒரு அத்தியாயமாவது போடுங்க...

சிவா.ஜி
29-04-2010, 04:31 PM
ரெண்டு பாகத்தையும் படிச்சாச்சு(பாகம்ன்னு சொல்றது தவறு இல்லையா மதி. அத்தியாயம்ன்னு போடுங்க.) அட்டகாசமான ஆரம்பம். காலை நேரத்து கன்னட தலைநகரின் வர்ண*னை சூப்பர். சரண்யாவைச் சுடச் சுடக் கொண்ணுட்டீங்க....இப்ப சந்திரோதயன், டெல்லி, ஹைதராபாத்....இயந்திரம்ன்னு நாலுகால் பாய்ச்சல்ல கதையைக் கொண்டு போறீங்க.

அந்தக் கொலையும், இந்த சோதனையும் எந்தப் புள்ளியில இணையப் போகுதுன்னு தெரிஞ்சிக்க ரொம்ப ரொம்ப ஆவலை அதிகரிச்சிட்டீங்க. அசத்துங்க.

அட்டைப் படம் சூப்பர். பாத்ததுமே ஒரு ரிச்னெஸ் தெரியுது. கதையும் அதே அளவு ரிச்னெஸோட போகுது. அப்படியே இந்த டெம்போ குறையாமக் கொண்டு போங்க. அட்டகாசமான ஒரு கிரைம் தொடரா அமையும். வாழ்த்துக்கள் மதி.

aren
29-04-2010, 07:57 PM
அந்த ஆந்திரா கிராமத்தில் வேலை செய்யும் ஆராய்ச்சியாளரோட பொண்ணுதான் இந்த சரண்யாவா என்று நினைக்க வைக்கிறது.

பா.ராஜேஷ்
29-04-2010, 10:03 PM
உண்மையில் ராஜேஷ்குமார் கதை போலவே இருக்கிறது. விறுவிறுப்பாக எழுதி உள்ளீர்கள். வர்ணனைகளும் அருமை. பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

govindh
29-04-2010, 10:22 PM
நல்ல விறுவிறுப்பு...பெங்களூர்...டெல்லி...ஹைதராபாத் .அடுத்து..? ஆவலும்...ஆர்வமும் அதிகரிக்கிறது...!
அடுத்த அத்தியாயம் விரைவில் தாருங்கள்...
வாழ்த்துக்கள்...

மதி
30-04-2010, 04:22 AM
அருமையாகப் போகுது..... கதை தொடருங்கள்.... தொடர்ந்து வாசித்து விமர்சிக்கிறேன்.

ஏனுங்க... ஒரு மாதத்துக்கு ஒரு அத்தியாயம் போடாம ஒரு வாரத்திற்கு ஒரு அத்தியாயமாவது போடுங்க...

அடடே நன்றி.. தல.. எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்..


ரெண்டு பாகத்தையும் படிச்சாச்சு(பாகம்ன்னு சொல்றது தவறு இல்லையா மதி. அத்தியாயம்ன்னு போடுங்க.) அட்டகாசமான ஆரம்பம். காலை நேரத்து கன்னட தலைநகரின் வர்ண*னை சூப்பர். சரண்யாவைச் சுடச் சுடக் கொண்ணுட்டீங்க....இப்ப சந்திரோதயன், டெல்லி, ஹைதராபாத்....இயந்திரம்ன்னு நாலுகால் பாய்ச்சல்ல கதையைக் கொண்டு போறீங்க.

அந்தக் கொலையும், இந்த சோதனையும் எந்தப் புள்ளியில இணையப் போகுதுன்னு தெரிஞ்சிக்க ரொம்ப ரொம்ப ஆவலை அதிகரிச்சிட்டீங்க. அசத்துங்க.

அட்டைப் படம் சூப்பர். பாத்ததுமே ஒரு ரிச்னெஸ் தெரியுது. கதையும் அதே அளவு ரிச்னெஸோட போகுது. அப்படியே இந்த டெம்போ குறையாமக் கொண்டு போங்க. அட்டகாசமான ஒரு கிரைம் தொடரா அமையும். வாழ்த்துக்கள் மதி.

என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க... உங்கள பாத்து இன்ஸ்பையர் ஆகி தான் இந்த கதயே எழுத ஆரம்பிச்சேன்.. இதற்காக.. நிறைய தேட வேண்டியிருந்தது.. இன்னும் கதைக்களமே சரியா முடிவாகல.. :frown:

அந்த ஆந்திரா கிராமத்தில் வேலை செய்யும் ஆராய்ச்சியாளரோட பொண்ணுதான் இந்த சரண்யாவா என்று நினைக்க வைக்கிறது.

உங்ககுள்ள எப்பவுமே ஒரு எழுத்தாளன் முழிச்சிட்டே இருக்கான் ஆரென்ண்ணே.. இரண்டாம் பாகம் முதல் பிரதியில அந்த ஆராய்ச்சியாளரே கிடையாது... சாட்சிக்கு செல்வா இருக்கார்.. சொதப்பலா இருக்குனு அவர் சொன்னதால மாத்தி எழுதினப்போ வந்தவர் தான் ஆராய்ச்சியாளர்.. அவர் என்ன செய்யப்போறார்னு ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். ஆனா சரண்யாவோட அப்பா இல்லே.. ஹிஹி

உண்மையில் ராஜேஷ்குமார் கதை போலவே இருக்கிறது. விறுவிறுப்பாக எழுதி உள்ளீர்கள். வர்ணனைகளும் அருமை. பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி ராஜேஷ்... இதே சுவாரஸ்யத்தோட எழுத முயற்சிக்கறேன்..


நல்ல விறுவிறுப்பு...பெங்களூர்...டெல்லி...ஹைதராபாத் .அடுத்து..? ஆவலும்...ஆர்வமும் அதிகரிக்கிறது...!
அடுத்த அத்தியாயம் விரைவில் தாருங்கள்...
வாழ்த்துக்கள்...

நன்றி கோவிந்த். இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த அத்தியாயத்தைப் பதிக்கிறேன்..

பாரதி
30-04-2010, 02:03 PM
இரண்டாம் பாகமும் நன்றாக இருக்கிறது மதி!
அடுத்த பகுதியைப்படிக்க காத்திருக்கிறேன். தொடருங்கள்.

கலையரசி
02-05-2010, 02:27 PM
கொலைக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்து மூளை குழம்புகிறது. சீக்கிரம் புதிரை விடுவியுங்கள் மதி.

"ஒன்னுமே புரியல உலகத்துல
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது"

மதி
03-05-2010, 03:29 AM
இரண்டாம் பாகமும் நன்றாக இருக்கிறது மதி!
அடுத்த பகுதியைப்படிக்க காத்திருக்கிறேன். தொடருங்கள்.
நன்றி பாரதியண்ணா...
அடுத்த பாகம் இனி தான் யோசிக்க வேண்டும்..


கொலைக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்து மூளை குழம்புகிறது. சீக்கிரம் புதிரை விடுவியுங்கள் மதி.

"ஒன்னுமே புரியல உலகத்துல
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது"
அட.. இது வே மர்மமா?? புதிரை விடுவிக்க முயற்சிக்கிறேன்..
நன்றி கலையரசி..

sarcharan
03-05-2010, 06:53 AM
யோவ் அடுத்த தொடர(கதைய) குடுய்யா....

மதி
03-05-2010, 06:56 AM
யோவ் அடுத்த தொடர(கதைய) குடுய்யா....
கொஞ்சம் பொறுத்துக்குங்க பாஸ்... இன்னும் எழுதவே ஆரம்பிக்கல..

மதி
03-05-2010, 11:55 AM
அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருந்தான் மாதவன். எல்லாம் கனவு போலிருந்தது. எட்டிப்பார்த்த மறுகணம் உலகமே சுழல்வது போலிருந்தது. சற்று நேரத்தில் போலீஸும் வந்துவிட்டது. மார்சுவரி வண்டியும் டாக்டர்களும் ஆஜராயினர். அவரவர் செவ்வனே தன் கடமையை செய்ய சரண்யா விழுந்த இடத்தைச் சுற்றி கோடு வரையப்பட்டது. சரண்யாவின் உடலைப் போர்த்தி ஸ்டெச்சரில் ஏற்றினர். கண்ணில் நீர்வராமல் மனத்தில் பாரம் அழுத்த வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்.

சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கும் மேலிருக்கும். வேடிக்கைப் பார்த்த மக்களுக்கு தத்தம் வேலைகள் நினைவுக்கு வந்து ஓவ்வொருத்தராய் நழுவ ஆரம்பித்திருந்தனர். அந்த அபார்ட்மெண்ட்டின் செக்ரட்டரி இன்ஸ்பெக்டர் வைபவ்வின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

இன்ஸ்பெக்டர் வைபவ். எப்போதோ தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்திற்கு வந்து செட்டிலாயிருந்த முன்னோர். பெங்களூர் வாசத்தில் தமிழ் கொஞ்சிக் கொஞ்சி வரும். இன்ஸ்பெக்டர் ஆகவேண்டும் என்ற வைராக்யத்தில் படித்து முடித்து தேர்வில் வெற்றிப் பெற்று புதிதாய் இந்தப்பதவிக்கு வந்திருப்பவன். துக்கடா கேஸ்களையே பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு இந்த மரணம் தலைவலியை தரப்போகின்றது என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.

வைபவ்வும் செக்ரட்டரியும் சரளமாக கன்னடத்தில் மாத்தாடிக் கொண்டிருந்தனர்.
“இந்த பொண்ணு இந்த அபார்ட்மெண்ட்ல எத்தனை நாளா தங்கியிருக்குது?”
“ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும் சார். அந்தப்பொண்ணும் இன்னும் இரண்டு பொண்ணுங்களும் தங்கியிருக்காங்க. அமைதியான பொண்ணுங்க. வீட்டில இருக்கறதே தெரியாது. என்ன பிரச்சனையோ? இப்படி செத்துப் போச்சு” உண்மையிலேயே பரிதாபப்பட்டார்.

“இந்த பொண்ணு எங்க வேலை பாக்குதுன்னாவது தெரியுமா? எந்த ஊர்?”

“அதெல்லாம் தெரியாது சார். அபார்ட்மெண்ட் வாடகைக்கு விடறவங்ககிட்ட தான் அந்த விஷயமெல்லாம் இருக்கும். எத்தனையோ தடவ மீட்டிங்ல சொல்லிட்டோம். இது மாதிரி யாருக்கு வாடகைக்கு விட்டாலும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கனு. யார் சார் கேக்கறாங்க?”

“ஓ.. கூட தங்கியிருக்கற பொண்ணுங்களப் பத்தி தெரியுமா.. எங்க வேலை பாக்கறாங்க.. காண்டாக்ட் நம்பர்ஸ்…”

“இல்லே.. சார். எதுவும் தெரியாது. ஆனா வீட்டு ஓனருக்கு தெரிஞ்சிருக்கணும். அக்ரிமெண்ட்ல இருக்கும். ஒரு நிமிஷம் சார். அவர் அட்ரஸ் போன் நம்பர் எடுத்துத் தாரேன். அவர்கிட்ட கேட்டா தெரியும்..”

“அத குடுங்க சார் முதல்ல. இந்த பொண்ணோட பேரண்ட்ஸுக்கு தெரியப்படுத்தணும். அப்புறம் தடுமாறி கீழே விழ சான்ஸ் இருக்கா?"

“இல்லே சார்.. அதுக்கெல்லாம் சான்ஸே இல்லே. தடுப்புச் சுவரே மூணடி மேலிருக்கும்.”

“ஓ… இந்த பொண்ணு கீழே விழுந்தப்போ பார்த்தவங்க யாரு..?”

“இதோ.. மூணாவது மாடியில குடியிருக்கற மாமி தான். இங்க அஞ்சு வருஷமா தங்கியிருக்காங்க..”

செக்ரட்டரி மாமியைக் கூப்பிட மாமி தயங்கி தயங்கி வந்தார்.

“மேடம் நீங்க தான் போன் பண்ணினதா?”

“ஆமா சார். காலையில் எந்திருச்சு பையனுக்கு மாட்டுப்பொண்ணும் ஆபிஸுக்கு போனதும் குளிச்சுட்டு காய்கறி வாங்கப்போலாம்னு கீழே இறங்கினேன். ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பாத்தா இந்த பொண்ணு கட்டை மேலேர்ந்து கீழ குதிச்சா. எனக்கு பதட்டத்துல ஒன்னுமே புரியல. அதான் போலீஸுக்கு போன் செஞ்சேன்.”

“இந்தப்பொண்ணு தானா குதிச்சுதா.. இல்லே யாராவது தள்ளிவிட்டாங்களா? யாராச்சும் ஓடிப்போறத பாத்தீங்களா?”

“இல்லீங்க. நான் காய்கறி வாங்க கீழே இறங்கறப்ப இந்தப் பொண்ணு வராண்டாவில நின்னு பேசிட்டு இருந்துச்சு. அத தாண்டி லிப்ட்ல கீழ வந்தப்புறம் போது கீழே விழுந்துடுச்சு. அப்போ அந்த ப்ளோர்ல யாருமே இல்ல.. கண்டிப்பா தெரியும்..”

இன்ஸ்பெக்டருக்கு சப்பென்று ஆனது. தற்கொலை கேஸ். ஆனா எதுக்கு தற்கொலை பண்ணிக்கணும். யோசனையில் இருக்கும் போதே ஒரு குரல்.

“எக்ஸ்க்யூஸ் மீ சார்.”

சிந்தனை கலைந்து “எஸ்”

“சார். என் பேர் தனுஜா. சரண்யாவோட ப்ரண்ட். சரண்யா கீழே விழுந்து இறந்து போய்ட்டதா சொல்றாங்க.. என்ன சார் ஆச்சு?” கண்கள் கலங்க தனுஜா நிற்க நிமிர்ந்தான் வைபவ்.

“நீங்க தான் மேடம் சொல்லணும். உங்க ப்ரண்ட் மேலேர்ந்து கீழே குதிச்சிட்டதா போன் வந்துச்சு. வந்து பார்த்தா இறந்திருந்தாங்க. அவங்க உடலை அடாப்ஸிக்கு அனுப்பிட்டு இன்வெஸ்டிகேஷன ஆரம்பிச்சிருக்கோம். நீங்க சொல்றதுல தான் என்ன ஆச்சுன்னு தெரியணும்.. பை த வே அவங்க அப்பா அம்மாக்கு தெரியப்படுத்திடுங்க. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”

கண்ணீருடன் தனுஜா தலையாட்ட
“அப்புறம் உங்க ப்ரண்ட் சரண்யாவுக்கு யாராச்சும் வேண்டப்பட்டவங்க இருக்காங்களா..?”

தனுஜா மௌனமாய் மாதவன் இருந்த பக்கம் கைகாட்டினாள். அப்போது தான் சுவரோரமாய் சாய்ந்து சடலத்தைச் சுற்றி கிழிக்கப் பட்டிருந்த கோடுகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மாதவனைப் பார்த்தான் வைபவ்.

“சரி. மேடம். நீங்க அவங்க அப்பா அம்மாக்கிட்ட தகவல் சொல்லிட்டு வாங்க. நான் அவர்க்கிட்ட கொஞ்சம் விசாரிக்கறேன்..”

தனுஜா நகர மாதவனை நோக்கிப் போனான் வைபவ்.

“ஹலோ மிஸ்டர். நீங்க இறந்துபோனவங்களுக்கு என்ன வேணும்?”

அப்போது தான் நினைவுக்குத் திரும்பிய மாதவன், வற்றிப் போய் காய்ந்திருந்த கண்களுடன் வைபவ்வை பார்த்து

“நான் அவளுக்கு ப்யாண்ஸி சார். இன்னும் ஒன்னரை மாசத்துல கல்யாணம் பண்ணிக்க போறோம். பண்ணிக்க இருந்தோம்..ப்ச்.. இன்னிக்குக் கூட ரெண்டு பேரும் வெளில போறதா ப்ளான். அதுக்காக ஆச ஆசையா வந்தேன். என்னாச்சுன்னே தெரியல..?”
“ஐம் ரியலி சாரி.. உங்க பேர்?”

“மாதவன் சார்…”

“சாரி டூ டிஸ்டர்ப் யூ.. எதுக்காக இவங்க தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?”

அப்போது தான் வெடித்து வரும் அழுகையுடன்..
“எதுக்கு சார் தற்கொலை பண்ணிக்கணும்.. இன்னிக்கு நாங்க பாத்துக்கிட்டு அம்பதாவது நாள். அதைக் கொண்டாடலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம். அவளை பிக்கப் பண்ணிட்டு போகதான் வந்தேன். வந்து பாத்தா இப்படி. ஏன் சார் தற்கொலை பண்ணனும்.. அவ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தா சார்…”

சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் பிரவாகம் எடுக்க மேலும் தொல்லைத் தர விரும்பாமல்.
“ஓக்கே மாதவன். உங்களை மேலும் டிஸ்டர்ப் பண்ண விரும்பல. அவங்க பேரண்ட்ஸுக்கு தகவல் சொல்ல சொல்லிட்டேன். அப்புறமா உங்களை நான் சந்திக்கறேன். உங்க கஷ்டம் புரியுது. ரிலாக்ஸ் யுவர்செல்ஃப். “

தலையாட்டிக் கொண்டிருந்த மாதவன் இன்னும் வெறித்துக் கொண்டிருக்க தொலைப்பேசிவிட்டு வரும் தனுஜாவை பார்த்து நடக்கலானார்.

“என்ன மேடம் அவங்க பேரண்ட்ஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா?”

“ம்ம்.. பண்ணியாச்சு சார். கேட்டதும் அவங்கம்மா ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டாங்க. டாக்ஸி புடிச்சு வராங்க.” கொஞ்சம் தெளிவானது போலிருந்தாள்.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். இஃப் யு டோண்ட் மைண்ட் உங்க வீட்டுக்குள்ள போய் பேசலாமா? அப்படியே ஏதாச்சும் துப்பு கிடைக்குதான்னு பாக்கணும்”

“ம்ம்.. ஓக்கே சார்.”

லிஃப்ட் ஏறும் போது மாதவன் இருந்த திசையினை பார்த்தார். இன்னமும் கீழே வரையப்பட்டிருந்த கோடுகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் அவன் பார்வை ஒவ்வொரு பொருளாய் அலச ஆரம்பித்தது. வீடு சுத்தமாய் இருந்தது. பெண்கள் இருப்பதற்கான அறிகுறிகள் எங்கேயும் தென்பட்டது. குளியலறைக்குள் நுழைந்தால் சோப்பு வாசம் கமகம என்றிருந்தது. இறப்பதற்கு முன் தான் குளித்திருப்பாள் போலும்.

“உங்களுக்கும் சரண்யாவிற்கும் எப்படி பழக்கம்?”

“நாங்க ரெண்டு பேரும் காலேஜ்லேர்ந்து ப்ரண்ட்ஸ் சார். பெங்களூர்லேயே வேலை கிடைச்சதும் ஒன்னா வீடு எடுத்து தங்கிட்டு இருந்தோம்.”

“ஓ.. காலேஜ் படிக்கும் போது காதல்..கீதல்னு.?”

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை சார். வெளிய பாக்க அமைதியா இருப்பா ஆனா அறுந்த வாலு. நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க. ஆனா காதல்னு ஒன்னும் கிடையாது. மேரேஜ் பிக்ஃஸ் ஆனப்புறம் தான் மாதவனை விழுந்து விழுந்து காதலிச்சுட்டு இருந்தா..”

“ம்ம். மாதவன் எப்படி? அவர பத்தி உங்களுக்குத் தெரியுமா?”

“ரெண்டு மூணு தடவை பேசிருக்கேன். ஆள் ஜெம் ஆஃப் த பர்சன். நல்ல மனுஷன். ரொம்ப நாளா காதலிக்கறவங்க மாதிரி ரெண்டு பேரும் அவ்ளோ உருகிட்டு இருப்பாங்க. இவ இழப்ப எப்படி தான் தாங்கிக்கப் போறாரோ?” மாதவன் மேலிருந்த சந்தேகக் கோடு மெல்லியதாய் அழிய ஆரம்பித்தது.

“வேற ஏதாச்சும் உங்க ப்ரண்ட டிஸ்டர்ப் பண்ணின விஷயங்கள்..? இப்படி தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு..”

“அவ தற்கொலை பண்ணிட்டு இருக்கான்னே எனக்கு நம்ப முடியல சார். அவ்ளோ தைரியமான பொண்ணு. எங்களுக்கெல்லாம் தெம்பே அவ பேச்சு தான். காலையில கூட ஆபிஸுக்கு போனதும் அவகிட்டேர்ந்து போன். மாதவன் கூட வெளிய போறதாவும் ராத்திரி வர லேட்டானாலும் ஆகும்னும் சந்தோஷமா சொன்னா.. சொல்லிட்டு இருக்கும் போதே தடால்னு சத்தம் கேட்டுச்சு. அப்புறம் அவ நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆச்சுனு வந்தது. என்ன ஆச்சு ஏதாச்சுனு புரியாம ஆபிஸுக்கு லீவ் போட்டுட்டு வந்தேன். வந்துப்பாத்தா…”

இதுவரை நிறுத்தி வைத்திருந்த கண்ணீர் மறுபடி எட்டிப்பார்க்க ஆரம்பிக்க..
“ஓக்கே.. தனுஜா. இதுக்கு மேல கஷ்டப்படுத்த விரும்பல. அப்புறமா பேசலாம். கொஞ்சம் சரண்யா திங்க்ஸ் இருக்கற இடத்தை காட்டுனீங்கன்னா.. ஏதாச்சும் கிடைக்குதான்னு பாக்குறேன். அப்புறம் சரண்யாவோட பேரண்ட்ஸ்கிட்ட அப்புறமா விசாரிக்க வரேனு சொல்லுங்க. அவங்க எந்த ஊரு?”

“சேலம்..”

யோசித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் வைபவ். ஏறக்குறைய ஒரு மணிநேரம் தேடியும் ஒன்றும் உருப்படியாக கிடைக்காததால் தனுஜாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அன்று முழுக்க வேற வேலையிருந்ததால கவனம் திசை மாறிப் போச்சு. இதற்கிடையில் சரண்யாவின் அம்மாவும் அப்பாவும் வந்து சரண்யாவின் உடலை வாங்கிச் சென்றிருந்தனர். சாயந்திரம் போல கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் போது மனம் இந்த கேஸை அசைப்போட்டது. ‘அப்பட்டமா தற்கொலைன்னு தெரியுது ஆனா ஏன்னு மோட்டோ மட்டும் கிடைக்கல..ம்ம். மாதவன்கிட்டேயும் தனுஜாகிட்டேயும் இன்னும் பேசிப் பார்க்கணும். முடிஞ்சா ஒருதடவை சேலம் போயிட்டு வரலாம்.’

இரவு வர வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு போனான். கனவில் சரண்யாவின் உடலும் மாதவன் கண்ணீரும் மாறி மாறி வந்தது. அப்போது தனுஜாவின் குரல் எதிரொலித்தது. ‘காலையில கூட ஆபிஸுக்கு போனதும் அவகிட்டேர்ந்து போன். மாதவன் கூட வெளிய போறதாவும் ராத்திரி வர லேட்டானாலும் ஆகும்னும் சந்தோஷமா சொன்னா.. சொல்லிட்டு இருக்கும் போதே தடால்னு சத்தம் கேட்டுச்சு. அப்புறம் அவ நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆச்சுனு வந்தது.’

திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான் வைபவ். காலையிலேர்ந்த பரபரப்பில அந்த மொபைல் போன் மேட்டர கவனிக்கவில்லையே. பாரன்ஸிக் டிபார்மெண்ட்ல அங்கிருந்த பொருட்களையெல்லாம் சேகரிச்சுட்டு போயிருந்தார்கள். ஒரு வேளை மொபைல்ல ஏதாச்சும்? வேகவேகமாக பாரன்ஸிக் லேப்பிற்கு டயலிட்டு பேசினான். காலையில் நடந்த தற்கொலைக்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்று விசாரித்தான். மறுமுனையில் ஒப்பிக்கப்பட்ட பொருட்களில் மொபைல் போனும் அதன் உதிர்பாகங்களும் இல்லை. அந்த லேப்பிலிருந்த அந்த பொருட்கள் பத்திரமாய் தொலைந்து போயிருந்தது.

தாமரை
03-05-2010, 12:09 PM
வெரி குட்... இப்படித்தான் இருக்கணும்.. சமர்த்தா!!!

govindh
03-05-2010, 12:28 PM
'என்ன இது...மொபைல் போன் மேட்டர் பற்றி...வைபவ் ஒன்றும் கேட்கவில்லையே....!' என நினைத்துக் கொண்டே படித்தேன்...
கடைசியில் கவனித்து விட்டார்....

நன்றாக அமைத்திருக்கிறீர்கள்...தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...

aren
03-05-2010, 12:40 PM
யாரப்ப்பா அவங்களை தடால்னு தள்ளிவிட்டது.

மூன்றாவது பாகம் அருமையாக வந்திருக்கிறது. ஃபோன்ட்தான் கொஞ்சம் சிறிதாக இருக்கிறது

Akila.R.D
03-05-2010, 12:49 PM
இந்த பாகம் நல்லா வந்திருக்கு மதி....

தொடருங்கள்...

சிவா.ஜி
03-05-2010, 01:03 PM
எல்லாம்....கொஞ்சூண்டு நேரத்துலேயே நடந்து முடிஞ்சிருக்கு....அறைத் தோழிக்கிட்டப் பேசிக்கிட்டிருக்கும்போதே தடால்ன்னு சத்தம் வந்திருக்குன்னா...யாரோ...தள்ளிவிட்டிருக்கலாம்.(அதுசரி தோழி இதை சொல்லும்போதே டக்குன்னு பிடிச்சிருக்க வேணாமா வைபவ்.....இன்னும் ஷார்ப்பா இருக்கனும்)

தமிழ்நாட்டுலருந்து வந்த முன்னோர்கள்ன்னா...பூர்வீகம் எப்படி பெங்களூரு ஆவும் மதி?

செல்போன் காணாமப் போனதை நல்ல சஸ்பென்ஸா சொல்லி நிறுத்தியிருக்கீங்க.....அடுத்த அத்தியாயத்தைப் படிக்க ஆவலை ஏற்படுத்திட்டீங்க....சூப்பர். தொடருங்க.

செல்வா
03-05-2010, 01:44 PM
வெரி குட்... இப்படித்தான் இருக்கணும்.. சமர்த்தா!!!

யாரை சொல்றீங்க...
மதியையா?
மதியையா?



கதை கலக்கலாப் போகுது... மதி....

பாரதி
03-05-2010, 02:05 PM
கதை நன்றாக நகர்கிறது மதி. இதே வேகத்தில் இப்பயணம் தொடரட்டும்.

முதல் அத்தியாயத்தில் மாதவன் கைபேசியில் தொடர்பு கொள்ளும் போது இருந்ததாக கூறப்பட்ட செயலுக்கும், தனுஜா ஆய்வாளரிடம் கூறிய தகவலுக்கும் இடையே முரண்பாடு இருக்கிறதே..? "தடால்" சத்தத்திற்கு காரணம் தனுஜாவா..??

கலையரசி
03-05-2010, 02:32 PM
இந்தப் பாகம் நன்றாக வந்திருக்கிறது மதி. ஆனால்
பாரதி அவர்க்ள கூறுவது போல் மாதவன் அவளைத் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று செய்தி வந்ததாகக் கூறினீர்கள். இப்போது தனுஜா சொல்வது முரண்பாடாகத் தான் இருக்கிறது.
இதற்குப் பதில் வரப் போகும் பாகத்தில் கிடைக்குமா?

மதி
03-05-2010, 03:12 PM
வெரி குட்... இப்படித்தான் இருக்கணும்.. சமர்த்தா!!!
நீங்க என்ன சொல்றிங்க? :confused::confused::confused:

'என்ன இது...மொபைல் போன் மேட்டர் பற்றி...வைபவ் ஒன்றும் கேட்கவில்லையே....!' என நினைத்துக் கொண்டே படித்தேன்...
கடைசியில் கவனித்து விட்டார்....

நன்றாக அமைத்திருக்கிறீர்கள்...தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...
நன்றி கோவிந்த்

யாரப்ப்பா அவங்களை தடால்னு தள்ளிவிட்டது.

மூன்றாவது பாகம் அருமையாக வந்திருக்கிறது. ஃபோன்ட்தான் கொஞ்சம் சிறிதாக இருக்கிறது
நன்றி ஆரென்

இந்த பாகம் நல்லா வந்திருக்கு மதி....

தொடருங்கள்...
நன்றி அகிலா

எல்லாம்....கொஞ்சூண்டு நேரத்துலேயே நடந்து முடிஞ்சிருக்கு....அறைத் தோழிக்கிட்டப் பேசிக்கிட்டிருக்கும்போதே தடால்ன்னு சத்தம் வந்திருக்குன்னா...யாரோ...தள்ளிவிட்டிருக்கலாம்.(அதுசரி தோழி இதை சொல்லும்போதே டக்குன்னு பிடிச்சிருக்க வேணாமா வைபவ்.....இன்னும் ஷார்ப்பா இருக்கனும்)

தமிழ்நாட்டுலருந்து வந்த முன்னோர்கள்ன்னா...பூர்வீகம் எப்படி பெங்களூரு ஆவும் மதி?

செல்போன் காணாமப் போனதை நல்ல சஸ்பென்ஸா சொல்லி நிறுத்தியிருக்கீங்க.....அடுத்த அத்தியாயத்தைப் படிக்க ஆவலை ஏற்படுத்திட்டீங்க....சூப்பர். தொடருங்க.
வைபவ்விற்கு இது முதல் மரண கேஸ். அதான் தடுமாறிட்டான். ஹிஹி.
பூர்விகம் மாத்திடறேன்.

யாரை சொல்றீங்க...
மதியையா?
மதியையா?



கதை கலக்கலாப் போகுது... மதி....
நன்றிண்ணே

கதை நன்றாக நகர்கிறது மதி. இதே வேகத்தில் இப்பயணம் தொடரட்டும்.

முதல் அத்தியாயத்தில் மாதவன் கைபேசியில் தொடர்பு கொள்ளும் போது இருந்ததாக கூறப்பட்ட செயலுக்கும், தனுஜா ஆய்வாளரிடம் கூறிய தகவலுக்கும் இடையே முரண்பாடு இருக்கிறதே..? "தடால்" சத்தத்திற்கு காரணம் தனுஜாவா..??
முதல் பாகத்தில் அவன் முயற்சித்த போது போன் எடுக்கப்படவில்லை. இறுதியாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என வந்தது.
இங்கே தனுஜாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது போன் கீழே விழுந்து சுவிட்ச் ஆப் ஆகிறது. மாதவன் கால் பண்ணின இடைப்பட்ட நேரத்தில் சரண்யா தனுஜாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இறந்து விட்டாள். தெளிவிற்காக முதல் பாகத்தில் சற்று நேரம் கழித்து என சேர்த்திருக்கிறேன்.
மேலும் அப்போது போன் எடுக்காத காரணம் அவள் குளித்து கொண்டிருந்தது தான். அது வைபவ் பார்க்கும் பார்வையில் சொல்லி இருக்கேன். சில விஷயங்களை வேண்டுமென்றே தான் அனைவரின் ஊகத்திற்கும் விட்டுள்ளேன். ஹிஹி..

அப்பாடி எப்படியோ சமாளிச்சுட்டேன்.

இந்தப் பாகம் நன்றாக வந்திருக்கிறது மதி. ஆனால்
பாரதி அவர்க்ள கூறுவது போல் மாதவன் அவளைத் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று செய்தி வந்ததாகக் கூறினீர்கள். இப்போது தனுஜா சொல்வது முரண்பாடாகத் தான் இருக்கிறது.
இதற்குப் பதில் வரப் போகும் பாகத்தில் கிடைக்குமா?
நன்றி கலையரசி. இதற்கு மேலே பதில் சொல்லிருக்கேன். இன்னும் சமாதானமில்லை என்றால் கொஞ்சம் தெளிவாக மாற்றி எழுதணும்.. :)

பா.ராஜேஷ்
03-05-2010, 06:12 PM
நன்றாக தொடர்ந்துள்ளீர்கள் மதி. விறுவிறுப்பு கூடியுள்ளது. பாராட்டுக்கள் ..

Akila.R.D
04-05-2010, 04:51 AM
கலக்குங்க மதி...

ரங்கராஜன்
04-05-2010, 04:58 AM
என்ன மச்சி பலமான ஆதரவு இருக்கும் போல இருக்கே........... கலக்குடா

மதி
04-05-2010, 05:17 AM
என்ன மச்சி பலமான ஆதரவு இருக்கும் போல இருக்கே........... கலக்குடா
எல்லாம் உன் தயவு தான்.... உன்னை பாத்து எழுத கத்துக்கிட்டது தான்... :D:D
எல்லா பின்னூட்டத்தையும் பார்த்து தான் அடுத்து கதைய எப்படி கொண்டு போலாம்னு யோசிக்கறேன்னா பாத்துக்கோயேன்... அந்த அளவுக்கு.. எழுத்தாளர்களைக் கொண்டது.. நம்ம மன்றம். :icon_b:

மதி
04-05-2010, 05:19 AM
நன்றாக தொடர்ந்துள்ளீர்கள் மதி. விறுவிறுப்பு கூடியுள்ளது. பாராட்டுக்கள் ..

நன்றி ராஜேஷ்.. உங்கள மாதிரி ஆளுங்க குடுக்கற ஊக்கத்துல தான் எழுதணும்னு தோணுது..


கலக்குங்க மதி...

:traurig001::traurig001:

அன்புரசிகன்
04-05-2010, 05:30 AM
கலக்கச்சொன்னா கலங்குறீங்க??? என்னது சின்னப்புள்ளையாட்டம்.... வெளியில காட்டப்படாது...

இன்றிரவு சரண்யாவின் ஆவி உங்கள சும்மா விடாது..... அத விரட்டணும் என்றால் ஓவியன புடிங்க...

தொடருங்கள்...

மதி
04-05-2010, 05:32 AM
கலக்கச்சொன்னா கலங்குறீங்க??? என்னது சின்னப்புள்ளையாட்டம்.... வெளியில காட்டப்படாது...

இன்றிரவு சரண்யாவின் ஆவி உங்கள சும்மா விடாது..... அத விரட்டணும் என்றால் ஓவியன புடிங்க...

தொடருங்கள்...
ரசிகரே நீங்களுமா... ஏன் டா ஆரம்பிச்சோம்னு இருக்கு...? இருக்கற கொஞ்சூண்டு மூளைய கசக்கி கசக்கி எழுத வேண்டியதா இருக்கு... இதுல கன்னாபின்னானு திட்டு வேற...

கதை எழுதறது ரொம்ப ரொம்ப கஷ்டம்ண்ணே.. எல்லாம் சரண்யாவின் ஆவி பண்ற வேலை தான் போலிருக்கு..!

அன்புரசிகன்
04-05-2010, 05:44 AM
ரசிகரே நீங்களுமா... ஏன் டா ஆரம்பிச்சோம்னு இருக்கு...? இருக்கற கொஞ்சூண்டு மூளைய கசக்கி கசக்கி எழுத வேண்டியதா இருக்கு... இதுல கன்னாபின்னானு திட்டு வேற...

கதை எழுதறது ரொம்ப ரொம்ப கஷ்டம்ண்ணே.. எல்லாம் சரண்யாவின் ஆவி பண்ற வேலை தான் போலிருக்கு..!

இருக்குறதுக்கு மட்டும் ஆசப்படுங்க... (சும்மா சொன்னேன். கோவிச்சுக்காதீங்க)

கதை ஆவலை நீட்டுகிறது. அங்கே தான் உங்க வெற்றி...
எதுக்கும் இன்னிரவு தாமரை அண்ணாவின் வீட்ல படுங்க.. எந்த பேயும் அண்டாது...

மதி
04-05-2010, 05:48 AM
இருக்குறதுக்கு மட்டும் ஆசப்படுங்க... (சும்மா சொன்னேன். கோவிச்சுக்காதீங்க)

கதை ஆவலை நீட்டுகிறது. அங்கே தான் உங்க வெற்றி...
எதுக்கும் இன்னிரவு தாமரை அண்ணாவின் வீட்ல படுங்க.. எந்த பேயும் அண்டாது...
இதுல ஏதும் உள்குத்து இல்லியே...!! :eek::eek:

sarcharan
04-05-2010, 06:07 AM
எதுக்கும் இன்னிரவு தாமரை அண்ணாவின் வீட்ல படுங்க.. எந்த பேயும் அண்டாது...

அல்லி,

மதி வந்தால் தாமரை மகிழுமோ? கதை தொடருமோ?

தாமரை
04-05-2010, 06:31 AM
மதி, செல்ஃபோன் கீழே விழுந்து உடைந்தால், சப்ஸ்கிரைபர் ஈஸ் அவுட் ஆஃப் நெட் வொர்க் கவரேஜ் அப்படின்னு சொல்லும்...

வேணும்னா உங்க செங்கல் செல்ஃபோனை உடைச்சிப் பாருங்களேன்..

மதி
04-05-2010, 06:34 AM
மதி, செல்ஃபோன் கீழே விழுந்து உடைந்தால், சப்ஸ்கிரைபர் ஈஸ் அவுட் ஆஃப் நெட் வொர்க் கவரேஜ் அப்படின்னு சொல்லும்...

வேணும்னா உங்க செங்கல் செல்ஃபோனை உடைச்சிப் பாருங்களேன்..
சூப்பர்.. இதுவரை நான் இந்த மாதிரி ஏதும் உடைச்சு பாக்கல... எனிஹௌ.. இந்த கதையில வர்ற சர்வீஸ் ப்ரொவைடர்.. சுவிட்ச் ஆஃப்னு சொல்றாங்கன்னு வச்சுக்கலாமே.. ஹிஹி

என்னுது செங்கல் போனா... சோனி எரிக்ஸன்... தம்பி வாங்கி குடுத்ததாக்கும்.. :cool::cool:

யவனிகா
04-05-2010, 06:39 AM
இப்பத்தான் முதல் பகுதி முடிச்சேன்,இடையே சின்ன சந்தேகம் ஹீரோ நமக்கு தெரிஞ்ச பையனோன்னு....வர்ணணை எல்லாம் பலமா இருக்கேன்னு, அதுக்குள்ள பொண்ணப் போட்டுத்தள்ளியாச்சா?தலைப்பு அட்டகாசம். மதிக்குமார் மர்டர் நாவல்ஸ் அப்படின்னு ஆரம்பிச்சா கேரண்டியா ஓடும்.அடுத்த தொடர் படிச்சிட்டு வர்றேன்.

மதி
04-05-2010, 06:41 AM
இப்பத்தான் முதல் பகுதி முடிச்சேன்,இடையே சின்ன சந்தேகம் ஹீரோ நமக்கு தெரிஞ்ச பையனோன்னு....வர்ணணை எல்லாம் பலமா இருக்கேன்னு, அதுக்குள்ள பொண்ணப் போட்டுத்தள்ளியாச்சா?தலைப்பு அட்டகாசம். மதிக்குமார் மர்டர் நாவல்ஸ் அப்படின்னு ஆரம்பிச்சா கேரண்டியா ஓடும்.அடுத்த தொடர் படிச்சிட்டு வர்றேன்.
அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... வாங்க வாங்க...
ஹீரோ உங்களுக்கு தெரிஞ்ச பையன் இல்லே.. ஏன்னா.. இது வரைக்கும் இந்த கதையில யாருமே ஹீரோ இல்லே.. ஹிஹி...

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.. படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க..

அக்னி
04-05-2010, 07:09 AM
இந்தற்கொலைகள் தொடருமோ... பார்க்கலாம்...

சின்ன சந்தேகம் மதிகாரு...
‘தடால்’ன்னு சத்தம் கேட்டதா தனுஜா சொன்னத வச்சுப் பார்த்தா,
‘வீல்’ன்னு சரண்யா கத்த வேண்டிய சத்தம் மிஸ்ஸிங்.
கொன்றாலும், தற்கொன்றாலும் இந்த ‘வீல்’ வந்திருக்கணுமே.
சைலன்சர் பூட்டின மாதிரி இருக்கு.

எப்புடீ...???

லாப்பிலிருந்து தடயப் பொருட்கள் மறைவது இலேசுப்பட்ட காரியமில்லதாங்க...

இந்த அத்தியாயமும் சூப்பர்ப்...
அத்தியாயங்களுக்கிடையில் லிங் குடுக்கிறத தடுத்து எழுதறீங்க...
பார்க்கலாம், எவ்வளவு தான் சஸ்பென்ஸ்சாயே போறீங்கன்னு...

மதி
04-05-2010, 07:19 AM
உண்மைதான் அக்னி.. உங்க நெற்றிக்கண்ண திறந்ததற்கு.. ஆனா.. வீல்னு எங்க கத்தறதா இருக்கு... அப்படி எங்கேயும் இல்லேன்னு தான் நெனச்சு எழுதினேன்..

ஒவ்வொரு அத்தியாயமும் பெரிய இடைவெளி குடுத்து எழுதறதால்... கொஞ்சம் மிஸ்ஸாகலாம்.. மொத்தமும் முடிச்சுட்டு கொஞ்சம் தூசி தட்டிட வேண்டியது தான்..

அப்புறம் சின்ன ரகசியம்.. என்னமோ ஏதோனு நெனச்சுக்காதீங்க... முதல் பாகம் எழுதறப்போ இருந்த கதையே வேற.. இப்போ கொண்டு போற கதையே வேற.. இன்னும் எவ்ளோ தூரம் கதையோட போக்கு மாறும்னு தெரியல.. எழுதறது மொக்க மதில்ல.. ஹிஹி.. நானும் பாக்குறேன்.. எவ்ளோ தான் சஸ்பென்ஸ் குடுத்து எழுத முடியுதுன்னு..

அப்புறம் லேப்பிலேர்ந்து அந்த பொருட்கள் மறைவது லேசுப்பட்ட காரியமில்ல தான்.. ஒரு வேளை லேப்புக்கே போகலேன்னா....

அக்னி
04-05-2010, 07:27 AM
‘வீல்’ எங்கேயும் இன்னும் வரல்ல...
அதான் ஏன்னு கேட்டிருக்கேன்...

தடயப்பொருட்கள் முதலே தடம் மாறிப்போயிட்டுதுன்னுதான் நானும் நினச்சேன்.

சரி... இன்னொரு விசயம்...
இந்தப் பெருந்தொடர் முடிஞ்சதும்,
அந்த முதல் அத்தியாயத்துக்கு வச்சிருந்த கதைய குறுந்தொடராவாச்சும் எழுதிடுங்கோ...

கொஞ்சம் ஊகிச்சுக்கலாம்னா கதைய ஒரேயடியா மாத்திடறாங்களே...

மதி
04-05-2010, 07:30 AM
கவலைய விடுங்க.. அந்த முதல் பாகத்த வச்சே.. இரண்டு மூணு கதை எழுதலாம்.. ஹிஹி.. சரண்யாவை கொல்லாம.. ரொமான்ஸ் கதை எழுதணும்.. ம்ம்..

கீதம்
04-05-2010, 08:24 AM
பிரமாதமாக் கொண்டுபோறீங்க. மன்ற நண்பர்களும் நல்லாவே உங்களை வேலைவாங்கறாங்க. அதனால் என் பங்குக்கு நான் எதுவும் கேட்கலை.

தொடருங்கள். பின் தொடர்கிறோம்.

மதி
04-05-2010, 09:13 AM
பிரமாதமாக் கொண்டுபோறீங்க. மன்ற நண்பர்களும் நல்லாவே உங்களை வேலைவாங்கறாங்க. அதனால் என் பங்குக்கு நான் எதுவும் கேட்கலை.

தொடருங்கள். பின் தொடர்கிறோம்.
ஆமாங்க.. ரொம்பவே கஷ்டப்படுத்தறாங்க.. :(:(

தாமரை
04-05-2010, 10:04 AM
கவலைய விடுங்க.. அந்த முதல் பாகத்த வச்சே.. இரண்டு மூணு கதை எழுதலாம்.. ஹிஹி.. சரண்யாவை கொல்லாம.. ரொமான்ஸ் கதை எழுதணும்.. ம்ம்..

சரண்யா! உன்னிடம் சரண் யா!! அப்படின்னு வேணும்னா டைட்டில் வச்சுக்கோ!!!

மதி
04-05-2010, 10:35 AM
சரண்யா! உன்னிடம் சரண் யா!! அப்படின்னு வேணும்னா டைட்டில் வச்சுக்கோ!!!
சூப்பர் டைட்டில்... ஹிஹி

அக்னி
04-05-2010, 11:01 AM
சரண்யா! உன்னிடம் சரண் யா!!
:icon_b: :icon_b: :icon_b:

மதிக்குத் தலைப்பு யோசிக்கற வேலை மிச்சம்...
அண்ணா, காப்பிரைட் போட்டுக்கோங்க...

sarcharan
04-05-2010, 11:17 AM
நானும் சரண் தான்!!!

govindh
07-05-2010, 07:09 PM
நானும் சரண் தான்!!!

யாரிடம்....?! என்று எங்களுக்கு சொல்லுங்களேன்...! ஹி....ஹி... எப்பூடி...!?:lachen001::lachen001:

xavier_raja
11-05-2010, 10:01 AM
ராஜேஷ் குமார் நாவலின் சாயல் தெரிகிறது...

மதி
11-05-2010, 10:45 AM
ராஜேஷ் குமார் நாவலின் சாயல் தெரிகிறது...
சாயல் இருப்பது நியாயம் தான். எத்தனை புத்தகம் படித்திருக்கிறேன்..

அன்புரசிகன்
11-05-2010, 10:48 AM
முக்கிய செய்தி: சரவதேச பொருளாதார சரிவு காரணமாக இந்த கதையை மதியால் தொடரமுடியவில்லையாம். :D :D :D

அக்னி
11-05-2010, 11:04 AM
அடுத்த பாகத்தத்தான் போட்டுட்டீங்களோன்னு நினைத்து வந்தேன்... :mad:

மதி
11-05-2010, 11:27 AM
முக்கிய செய்தி: சரவதேச பொருளாதார சரிவு காரணமாக இந்த கதையை மதியால் தொடரமுடியவில்லையாம். :D :D :D
இது மாதிரியெல்லாம் யாருங்க.. கதைய கிளப்பிவிடறது...??
இன்னும் அடுத்த பாகம் எழுத ஆரம்பிக்கல அவ்வளவு தான்.. அதுக்காக தொடர மாட்டேன்னா போடறது..

ஸ்ஸ்ஸ்ஸ்.. இப்போவே கண்ண கட்டுதே.. எழுதினேன்னா.. நிலமை இன்னும் மோசமாயிடும்... :icon_ush::icon_ush:

மதி
11-05-2010, 11:27 AM
அடுத்த பாகத்தத்தான் போட்டுட்டீங்களோன்னு நினைத்து வந்தேன்... :mad:
எப்படியாவது எங்கிருந்தாவது அடுத்த பாகத்த தேத்தி... இன்னும் ரெண்டு நாளுக்குள்ள போட்டுடறேன்...!!!:D:D:eek::eek:

Akila.R.D
12-05-2010, 04:16 AM
எப்படியாவது எங்கிருந்தாவது அடுத்த பாகத்த தேத்தி... இன்னும் ரெண்டு நாளுக்குள்ள போட்டுடறேன்...!!!:D:D:eek::eek:

இது நல்ல பிள்ளைக்கு அடையாளம்...

sarcharan
12-05-2010, 04:26 AM
ராஜேஷ் குமார் நாவலின் சாயல் தெரிகிறது...

ராஜேஷ் குமார்-ல் ராஜேஷ் குமார்?

என்(னே)ன (உமது) மதி...

மதி
12-05-2010, 04:27 AM
இது நல்ல பிள்ளைக்கு அடையாளம்...
ரொம்ப நன்றிங்க... ரெண்டு பக்கம் எழுதிட்டேன்.. மிச்ச சொச்சம்.. தேடி கண்டுபிடிக்கணும்... இன்னிக்கு இல்ல நாளைக்கு பதிஞ்சுடறேன்...!

மதி
12-05-2010, 04:28 AM
ராஜேஷ் குமார்-ல் ராஜேஷ் குமார்?

என்(னே)ன (உமது) மதி...
:icon_ush::icon_ush::icon_ush:

என்னண்ணே... இதெல்லாமா பேசுவாங்க.. :D:D

மதி
14-05-2010, 06:21 AM
‘பயணிகளுக்கு அன்பான வணக்கங்கள். இது சென்னை நோக்கி செல்லும் LH-758 லுஃப்தான்ஸா விமானத்தில் ஏறுவதற்கான அறிவிப்பு. சிறுகுழந்தைகளுடன் வந்துள்ள பயணிகளையும் சிறப்பு உதவி தேவைப்படும் பயணிகளையும் விமானத்தில் ஏறுமாறு அழைக்கிறோம். உங்களின் விமானச்சீட்டுக்களை வைத்திருங்கள். இதர பயணிகள் இன்னும் பத்து நிமிடங்களில் ஏறலாம். நன்றி.’

ஒலிப்பெருக்கியில் லுஃப்தான்ஸா நிறுவன ஊழியை குழைவாய் ஆங்கிலத்தில் கசிந்துருக ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் டெர்மினல் ஒன்றில் இருந்த மக்கள் தங்கள் பைகளை பொறுக்கிக் கொண்டு விமானத்தின் உள்புக வரிசையில் காத்திருந்தனர். அது எப்போதும் பரபரப்பாய் இயங்கும் விமான நிலையம். கிழக்கிலிருந்து மேற்கு செல்பவரும் மேற்கிலிருந்து கிழக்கு செல்பவரும் என அனைத்து நிற மக்களும் பாகுபாடில்லாமல் தத்தம் விமானத்தை பிடிக்க காத்திருந்தனர்.

அங்கே ஓரமாய் இருந்த ரெஸ்டாரண்டில் அமைதியாய் காபி குடித்துக் கொண்டிருந்த அவன் பெயர் ப்ராங்க். அமெரிக்கன். ஆறரை அடி உயரம். ஆஜானுபாகுவாய் முறுக்கேறியிருந்த உடம்பு. கண்கூசும் அளவுக்கு கச்சிதமாய் அடித்திருந்த மொட்டை. காதில் சின்ன வளையம். அவன் போட்டிருந்த கோட்டும் சூட்டும் வில்லன் கேரக்டருக்கு இவன் பொருத்தமாய் இருப்பான் எனக்கூறியது. தன் காபிக் கோப்பையை முடித்திருந்த ப்ராங்க் குப்பைக் கூடையில் கோப்பையை எறிந்துவிட்டு பக்கத்திலிருந்த சின்ன சூட்கேஸை எடுத்துக் கொண்டு சென்னை விமானம் நிற்கும் கேட்டை நோக்கி சென்றான்.

டிக்கட்டையும் பாஸ்போர்டையும் சரிபார்த்ததும் அமைதியாய் நின்றிருந்த அந்த ஏர்பஸ் A340 ரக விமானத்தில் ஏறினான். விமான பணிப்பெண் கூறிய வணக்கத்தை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு தன் சீட்டை நோக்கிப் போனான். இன்னும் ஒன்பது மணிநேரம் பயணம் மிச்சமிருக்கிறது. பயணிகள் அவரவர் இருக்கையில் அமர சற்று நேரத்தில் விமானம் நிரம்பியதும் அது கிளம்புவதாக விமானி ஒலிபெருக்கியில் சொன்னார். பயணிகளை வரவேற்றவுடன் அவர்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்தினார். பின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் திரையில் ஓட விமான பணிப்பெண்கள் செய்முறை விளக்கம் கொடுத்தனர். எத்தனையோ முறை பயணம் செய்திருந்ததால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜன்னல் வழியே பார்த்தான். தூரத்தில் மேகங்கள் ஒன்றுக்கொன்று முட்டி மோதிக் கொண்டிருந்தன.

அன்று காலை ப்ராங்க்பர்ட்டில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தூங்கிக் கொண்டிருந்த அவனை எழுப்பி அவசர அவசரமாய் சென்னை செல்லுமாறு உத்தரவு வந்திருந்தது. ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் முறை அவன் தொழிலில் கிடையாது. அப்படி கேட்பவர்கள் உயிருடன் இருந்தார்களா என்றும் தெரியாது. மேற்கொண்டு தகவல்கள் அவ்வப்போது வந்து சேரும். ப்ராங்க் என்பது கூட அவன் உண்மையான பெயரா என அவனுக்கே மறந்து விட்டது. இப்போதைக்கு நம் எல்லோருக்கும் அவன் ப்ராங்க். அவசரமாய் ஓட்டலை காலி செய்து விட்டு காத்திருக்க அந்த வழியே சென்ற ஒருவன் மூலம் அவனிடமிருந்த பெட்டி அவனுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. ப்ராங்க் என்ற பெயரில் பாஸ்போர்ட்டும் இந்தியவிசாவும் இதர விஷயங்களும் இருந்தன.

விமான ஓடுதளத்தில் பொறுமையாக பயணிக்க ஆரம்பித்த அந்த உலோகப்பறவை ஜிவ்வென பறக்க ஆரம்பித்ததும் கண்மூடி தூங்க ஆரம்பித்தான். எத்தனை நேரம் தூங்கி இருப்பானோ தெரியாது. இன்னும் சற்று தூங்கி இருக்கலாம் என தோன்றியது. விமானத்தில் பணிப்பெண்கள் ஜூஸும் வைனும் பரிமாறிக்கொண்டிருந்தனர். அருகே வந்த பணிப்பெண்ணிடம் வைன் கேட்டு வாங்கி குடித்தான். சற்று தேவலாம் போலிருந்தது. சுற்றிப்பார்க்கையில் எல்லோரும் அவரவர் முன் இருந்த திரையில் படம் பார்க்க ஐக்கியமாயிருந்தனர். இவனுக்கு ஏனோ பயணிக்கும் போது படம் பார்க்க பிடிப்பதில்லை.

அரை மணிநேரம் கழிந்தது. உணவு பொட்டலங்களை எடுத்துக் கொண்டு பணிப்பெண்கள் வந்தனர். தனக்கு கொடுக்கப்பட்ட உணவுபொட்டலத்தை சாப்பிட்டு விட்டு திரும்பவும் தூங்க ஆரம்பித்தான்.

இந்திய நேரப்படி இரவு பதினொன்றேமுக்கால் மணியளவில் விமானம் சென்னையில் இறங்கியது. இறங்குவதற்கு முன் விமான கழிவறக்குள் சென்று பைஜாமா குர்தாக்கு மாறியிருந்த ப்ராங்க் குடியுரிமை சோதனை அதிகாரி முன் நின்றான்.

“வணக்கம் ப்ராங்க். வெல்கம் டூ இண்டியா. நீங்க என்ன விஷயமாக இந்தியாவிற்கு வந்துள்ளீர்கள்?”

குடியுரிமை அதிகாரி கேட்டுக் கொண்டே பாஸ்போர்டை ஸ்கேன் செய்தார். ப்ராங்க் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவர் முன் இருந்த திரையில் வர ஆரம்பித்தது. எல்லாம் பொய்யான விவரங்கள்.

அசராத ப்ராங்க் அமெரிக்கன் ஆங்கிலத்தில்

“நான் சுவாமி ஆத்மானந்தாவின் தீவிர பக்தன். அவரின் ஆசிரமத்திற்கு வந்து அவரை தரிசிக்க வேண்டுமென்பதற்காக வந்துள்ளேன்.”

அவனின் விசாக்காரணமும் அதுவாக இருப்பதை பார்த்து திருப்தியடைந்த அதிகாரி அவன் இந்தியமண்ணில் வந்து இறங்கியதற்கு அடையாளமாக சீலை வைத்து அனுப்பினார். சிரிப்பை உதிர்த்த ப்ராங்க் வணக்கம் சொல்லிவிட்டு கஸ்டம்ஸ் அதிகாரிகளைத் தாண்டி வெளியே வந்தான். சென்னை அந்த நேரத்திலும் வெப்பமாய் இருந்தது. குப்பென்று வியர்த்தான்.

வெளியே வந்ததும் டாக்ஸியை அமர்த்தி கொண்ட அவன் சென்னைக்கு வெளியே மதுரவாயில் தாண்டி சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள சுவாமி ஆத்மானந்தா ஆசிரமத்திற்கு போக பணித்தான். டாக்ஸி சென்னை சாலையில் வழுக்கிக் கொண்டிருந்த அதே வேளையில்…..

கெத்திரெட்டிப் பள்ளி…

தத்தம் வேலையை முடித்துவிட்டு பங்கர் போன்றிருந்த படுக்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தனர் மிருதுளாவும் ப்ரணவும். ஆராய்ச்சி இறுதிக்கட்ட நிலையில் இருப்பதால் வேலையை தான் பார்த்துக் கொள்வதாகவும் அவர்களை ஓய்வெடுக்குமாறும் ராஜசேகரன் பணித்திருந்தார். சோம்பல் முறித்தவாறே கட்டில்கள் போடப்பட்ட அறைக்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தனர்.

சட்டென நினைவுக்கு வந்தவளாய் மிருதுளா…

“ப்ரணவ்.. நீ வேணா போய் தூங்கறதுனா தூங்கு. நான் கொஞ்சம் தியானம் பண்ணிட்டு வர்றேன்..”

“ம்ம்.. போ. நான் வேணா வெயிட் பண்றேன். உன்கூட ஆராய்ச்சி தவிர வேற விஷயம் பேசியே நாளாச்சு…”

சிரித்துக் கொண்டே அடுத்திருந்த அறைக்குள் சென்ற மிருதுளா தியானத்துள் மூழ்கலானாள்.

அரை மணி நேரம் முடிந்ததும் இதுவரை இருந்த களைப்பெல்லாம் மறைய முகத்தில் புன்சிரிப்புடன் ப்ரணவ் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அதுவரை கண்மூடி சோபாவில் தலை சாய்த்திருந்த ப்ரணவ் கண் திறந்து அவளை முழுங்குவது போல் பார்த்தான். சோபாவில் இருந்த அவள் கைகளை எடுத்து ஓவ்வொரு விரலாய் சொடுக்கெடுக்கலானான்.

“என்னடா.. செம மூட்ல இருக்க போலிருக்கு” மிருதுளா சீண்ட…

“ஆமாமா.. எவ்ளோ நாளாச்சு உன்கூட ரசிச்சு சிரிச்சு பேசி.. பக்கத்திலேயே தான் இருக்கோம். ஆனா எங்கியோ தூரத்துல இருக்கற மாதிரி இருக்கு.”

“ஆஹா.. வேணும்னு தானே இந்த வேலைக்கே வந்தே…”

“அதே தான்... நீ வேணும்னு தான் நான் இந்த வேலைக்கே வந்தேன்…” ப்ரணவ் வழிய மிருதுளா ரசித்தாள். ‘இது இந்த குறும்புத்தனம் தான் அவனிடம் அவளுக்கு பிடித்தது. எது வேண்டுமென்றாலும் அடம் பிடிக்கும் குணம். இவள் வேண்டுமென்று இவளுக்காக ராஜசேகரனிடம் போராடி இந்த வேலைக்கு சேர்ந்திருந்தான்.

கிறக்கத்திலிருந்த மிருதுளா..

“நான் எங்க போனாலும் என் கூடவே வந்துடுவியா?”

“கண்டிப்பா.. இதிலென்ன சந்தேகம். நாம சுத்தின அந்த நாளெல்லாம் நெனச்சுப்பாத்தா..ம்ம்.. இங்க வந்து ரெண்டு வருஷத்துக்கும் மேலாச்சு… எப்போ வெளியே போவோம்னு இருக்கு..”

“கவலைப்படாத.. இன்னும் கொஞ்ச நாள் தான்.. வேலை முடிஞ்சுடும். நாட்டுக்காக இந்த வேலைய பண்றோம்னு உனக்கு பெருமையா இல்லியா..”

“நீ நாட்டுக்காக உழைக்கற.. நான் உனக்காக உழைக்கிறேன்.. ஆக மொத்தம் பாத்தா பெருமையா தான் இருக்கு…”

“அது சரி… ஸ்ஸ்..ஏ.. கையில் இப்படியா சொடக்கு எடுப்ப.. வலிக்குது”

செல்லமாய் சிணுங்கினாள் மிருதுளா…

“ஓ… செல்லமே.. வலிக்குதா.. இப்போ வலி போறதுக்கு ஒத்தடம் கொடுக்கறேன் பாரு. "

அவள் கையைப் பிடித்து மெல்லியதாய் முத்தமிட்டான்.

“டேய்.. என்னாதிது… உன் மீசை..குறுகுறுங்குது”

“மீச.. தான் ஆம்பளைக்கு அழகு…” சொல்லிக்கொண்டே மெல்ல மெல்ல அவன் உதடு அவள் கைகளின் மேலேறியது.

“சீ… என்னடா பண்ற… ரொம்பவும் மோசமாயிட்டே வர்ற…”

“ஆமா மோசம் தான். இந்த வேலை முடிஞ்சதும்.. மொதல்ல கல்யாணம்..”

“ம்ம்.. எந்த வேலை…? இப்போ பண்ணிட்டிருக்கிறதா..”

“அடி.. என்னைய சொல்லிட்டு.. நீ மோசமா பேசற…”

“அட..அட.. இவரு ரொம்ப ஒழுங்கு..” பழிப்பு காட்டினாள்.

“என்னைய பாத்தா பழுப்பு காட்டற.. உன்னை…” பற்கள் நறநறக்க.. கண்ணில் மின்னலுடன் அவன் அவளின் உதடை நோக்கி பாய்ந்தாள். மறுப்பேதும் காட்டாமல் கிறங்க ஆரம்பித்திருந்தாள் மிருதுளா…

இரண்டு நாள் கழித்து..

சுவாமி ஆத்மானந்தா ஆசிரமம். மதுரவாயில் சென்னை நெடுஞ்சாலையிலிருந்து சற்று தள்ளி இருக்கிறது. வெளியே பெரிய கதவு. சுற்றிலும் அமைக்கப்பட்ட பெரிய தடுப்புச் சுவர். அவ்வளவு சீக்கிரம் யாரும் உள்ளே போய்விட முடியாது. அனுமதி உள்ளவர் மட்டும் உள்ளே வர முடியும். வெளியிலிருந்து பார்த்தால் கூரை வேய்ந்த குடிசைகள். எப்போதும் ஏதாவது பஜனை பாட்டு பாடிக்கொண்டிருக்கும்.

சுற்றியிருந்த குடிசைகளிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டு பெரியதாய் அமைக்கப்பட்டிருந்த அந்த குடிலில் தான் எப்போதும் பூஜைகள் நடக்கும். நடுவில் ருத்ரதாண்டவமாடும் காளி சிலை. மகா சக்தி பொருந்திய தெய்வம் என்று பேச்சு. எல்லாவற்றிலிருந்தும் சற்றே வேறுபட்டு இரண்டு மாடி கட்டிடம் அந்த வளாகத்தின் ஓரமாய் பார்ப்பதற்கு சாதாரணமாய் இருந்தது.

கட்டிடத்தின் உள்ளே விர்ரென்று ஓடிக்கொண்டிருந்த குளிர்சாதனப்பெட்டு. குளிரூட்டப்பட்டிருந்த அறையில் நடுநாயகமாய் போடப்பட்டிருந்த சோபாவில் ஒரு பக்கம் ப்ராங்க். மறு முனையில் சுவாமி ஆத்மானந்தா. எதிரில் இருந்த டீபாயில் அப்போது தான் புதிதாய் திறக்கப்பட்டிருந்த ஜானிவாக்கர் பாட்டில். யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தனர். நேரமாகவும் கச்சேரி ஆரம்பமாகிவிட்டது.

முதல் ரவுண்டில் இருக்கையில் ப்ராங்க் ஆத்மானந்தா பற்றி தெரிந்து கொண்டான். பூர்வாசிரம பெயர் வடிவேலன். படிக்காம ஊர் சுற்றிக் கொண்டு இருந்தான். காட்டுக்குள்ள சாமி இருக்கிறதென்று புரளி கிளம்ப காட்டுப் பக்கம் போனான். மனம் போன போக்கில் திரிந்த அவன் நாளான தாடியுடன் நாட்டுக்கு வர சாமியாக்கிவிட்டனர். சாமியாரானதும் சர்வதேச தொடர்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன் விளைவு தான் ப்ராங்க் வருகை.

ஆத்மானந்தா ப்ராங்க் பற்றி விசாரிக்க சின்னதாய் புன்னகையை மட்டும் உதிர்த்தான். எந்த சூழ்நிலையிலும் போதை ஏறாத வண்ணம் அவனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது ரவுண்ட் ஆரம்பிக்கும் போது தான் அந்த நபர் நுழைந்தார். ஏற்கனவே பரிச்சயமாயிருந்ததால் ஆத்மானந்தா அவரைப்பார்த்து இளித்தார். பதிலுக்கு புன்னகைத்த வாறே ப்ராங்கை ஏறிட்ட அவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“ப்ராங்க். வெல்கம் டூ இண்டியா..”

“நன்றி.. எனக்கு உங்களை சந்திக்க சொல்லி தகவல். அதற்கு தான் இந்த ஏற்பாடே. நீங்களும் சுவாமியின் பக்தன் தானே.”

“ஆமா. என் டிபார்மெண்டுக்கே தெரியும்.”

“ம்ம்.. சரி. இப்போதைக்கு திட்டம் என்ன? என்ன பண்ணப் போறோம்?”

தனக்கான கோப்பையில் ஜானிவாக்கரை ஊற்றிக் கொண்ட அவர் தேன்நிற திரவத்தை உறிஞ்சியவாறே..

“மூன் மிஷனுக்கான வேலைகள் முடிஞ்சாச்சு. அந்த ஏரியாக்குள்ள குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் போக முடியும். பல கட்ட சோதனைகள். மூணு பேர் தான் இந்த ஆராய்ச்சியில முக்கியமா வேலை செய்யறாங்க. இதப்பத்தின மொத்த விஷயங்களும் அவங்களுக்குத் தெரியும். ஆனா யாரும் இதுவரை அந்த கிராமத்தை விட்டு வெளியே வந்ததில்ல. ஆக யாராச்சும் உள்ளே போய் தான் தகவல்கள எடுத்திட்டு வரணும்.”

“ம்ம்.. ஆனா உங்களுக்குத் தான் அனுமதி இருக்கே”

“இருக்கு. கொஞ்ச நாள் முன் தான் போய்விட்டு வந்தேன். ஆனா அங்கிருந்து எதையும் வெளியே கொண்டு வர முடியாது. மாட்டிக்குவோம். அந்தளவுக்கு பாதுகாப்பு அதிகம்.”

“நீங்களே இப்படி சொன்னால் எப்படி? உங்களால முடியாததா?”

“ம்ம்.. இது உண்மையிலேயே பலமான கோட்டை. உடைப்பது ரொம்ப கஷ்டம். நீ தான் எப்படி உள்ளே போறதுக்கு யோசிக்கணும்”

சொல்லிக் கொண்டே கண்ணடித்தார் அவர். தேசிய விஞ்ஞானக்குழுத் தலைவர் நாராயணரெட்டி.

தாமரை
14-05-2010, 06:35 AM
மதி ஒரு அடிப்படைச் சந்தேகம்..

தலைப்பு, கதைக்கு வச்சதா இல்லை வாசகர்களுக்கு கொடுக்கற எச்சரிக்கையா?

:D:D:D:D:D:D

மதி
14-05-2010, 06:37 AM
மதி ஒரு அடிப்படைச் சந்தேகம்..

தலைப்பு, கதைக்கு வச்சதா இல்லை வாசகர்களுக்கு கொடுக்கற எச்சரிக்கையா?

:D:D:D:D:D:D

எனக்கு நானே கொடுத்துக்கிட்டது... இனிமே எழுதுவியா.. எழுதுவியா...னு...!!! :frown::frown::frown::frown::frown:

பை த வே.. கதை என்ன... அவ்ளோ நானாவா இருக்கு....
சாரி.. மொக்கையாவா இருக்கு.... :fragend005::fragend005:

தாமரை
14-05-2010, 06:51 AM
அடுத்து என்ன அடுத்து என்ன என்கிற ஆர்வத்தில பலருக்கு நெஞ்சுவலியே வந்திருதாம்.. படுத்தா தூக்கமே வர்ரதில்லையாம்..

மதி
14-05-2010, 06:59 AM
அடுத்து என்ன அடுத்து என்ன என்கிற ஆர்வத்தில பலருக்கு நெஞ்சுவலியே வந்திருதாம்.. படுத்தா தூக்கமே வர்ரதில்லையாம்..
இது என்ன புது கதை..??

சிவா.ஜி
14-05-2010, 07:13 AM
அசத்தலாக் கொண்டு போறீங்க மதி. நம்ம நிலவாராய்ச்சிக்கு ஆப்பு வெக்க அமெரிக்க ஃபிராங்கா...நாராயணரெட்டி வேற பச்சோந்தியா இருக்காரு.

மிருதுளாவும், பிரணவும் என்ன செய்யப்போறாங்க...

நிஜமாவே ஆவலை அதிகரிச்சிட்டீங்க. அசத்துங்க மதி.

மதி
14-05-2010, 07:53 AM
அசத்தலாக் கொண்டு போறீங்க மதி. நம்ம நிலவாராய்ச்சிக்கு ஆப்பு வெக்க அமெரிக்க ஃபிராங்கா...நாராயணரெட்டி வேற பச்சோந்தியா இருக்காரு.

மிருதுளாவும், பிரணவும் என்ன செய்யப்போறாங்க...

நிஜமாவே ஆவலை அதிகரிச்சிட்டீங்க. அசத்துங்க மதி.
நன்றிண்ணா.... நிஜமாயே எனக்கு நாக்கு தள்ளிச்சு...:confused::confused:

Akila.R.D
14-05-2010, 08:48 AM
கதையை நல்லா கொண்டு போகறீங்க மதி...

இந்த ஆத்மானந்தா கேரக்டர் நித்யானத்தா குடுத்த inspiration ah?...

மதி
14-05-2010, 09:29 AM
கதையை நல்லா கொண்டு போகறீங்க மதி...

இந்த ஆத்மானந்தா கேரக்டர் நித்யானத்தா குடுத்த inspiration ah?...
பேர் மட்டும் நித்தி இன்ஸ்.. மத்தபடி.. அன்புரசிகன் சொன்ன மேட்டர். இந்தியாவுக்குள்ள சுலபமா நுழையணும்னா... ஏதோ ஒரு சாமியாரின் பக்தன்னு சொன்னா... தொந்தரவே பண்ணாம விசா தந்துடறாங்களாம்...

இன்னும் என்னை நம்பி இந்த கதைய படிச்சிட்டு வர்றதுக்கு மிக்க நன்றிக்கா....

அன்புரசிகன்
14-05-2010, 10:57 AM
அசத்துறீங்க மதி. நாளானாலும் அழகாக வந்துள்ளது. வாழ்த்துக்கள். கீப் வோக்கிங்.... :D :D :D

sarcharan
14-05-2010, 12:41 PM
இன்னும் என்னை நம்பி இந்த கதைய .

???:frown::frown:

sarcharan
14-05-2010, 12:45 PM
நன்றாக கதையை மூவ் பண்ணி இருக்கீங்க மதி!.

இரண்டு விடுமுறை தினங்கள் உள்ளதே.. திங்களுக்குள் அடுத்த தொடர் கிடைக்குமா?

பா.ராஜேஷ்
14-05-2010, 02:54 PM
சுத்தி சுத்தி வர்றீங்க.. நல்ல சுத்த விடறீங்க... என்னவோ போங்க. சீக்கிரம் அடுத்த பாகம் எழுதுங்க.

மதி
14-05-2010, 04:29 PM
அசத்துறீங்க மதி. நாளானாலும் அழகாக வந்துள்ளது. வாழ்த்துக்கள். கீப் வோக்கிங்.... :D :D :D
நன்றி ரசிகரே

நன்றாக கதையை மூவ் பண்ணி இருக்கீங்க மதி!.

இரண்டு விடுமுறை தினங்கள் உள்ளதே.. திங்களுக்குள் அடுத்த தொடர் கிடைக்குமா?
நன்றி சரவணன்.. தெரியல அடுத்து என்ன எழுதணும்னு


சுத்தி சுத்தி வர்றீங்க.. நல்ல சுத்த விடறீங்க... என்னவோ போங்க. சீக்கிரம் அடுத்த பாகம் எழுதுங்க.
ஹாஹா.. இதுக்கே இப்படின்னா. இன்னும் பல ஊர் பல காலம் போகணுமே.

govindh
14-05-2010, 10:51 PM
ஆவலைத் தூண்டும்....துப்பறியும் நாவல்...
அசத்துங்கள் மதி அவர்களே...!

மாதவன் & வைபவ்....!?
அடுத்த அத்தியாமும் விரைவில் கொடுங்கள்..

கீதம்
17-05-2010, 12:47 AM
அம்சமான ஒரு துப்பறியும் கதையைக் கொடுப்பதற்காக வாழ்த்துகள். இதே சூட்டோடு கதையைத் தொடர்ந்தால் தொய்வு விழாமல் இருக்கும் என்பது என் கருத்து.

உங்கள் கற்பனாசக்தியின் மேலும் (எப்படி அத்தியாயங்களைத் தொடர்புபடுத்தப்போகிறீர்கள் என்பதில்), கடுமையான உழைப்பின்மேலும் (தகவல்கள் திரட்டி தருவதில் தரும் அக்கறையில்) எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. எனவே தொடருங்கள். பின்வருகிறோம்.

aren
17-05-2010, 02:53 AM
கதை நன்றாக மெருகேருகிறது மதி. ஒரு திறமையான கிரைம் ரைட்டர் எழுதுவது போல் இருக்கிறது. தொடருங்கள்.

மதி
17-05-2010, 03:40 AM
ஆவலைத் தூண்டும்....துப்பறியும் நாவல்...
அசத்துங்கள் மதி அவர்களே...!

மாதவன் & வைபவ்....!?
அடுத்த அத்தியாமும் விரைவில் கொடுங்கள்..

நன்றி கோவிந்த் அவர்களே.. சீக்கிரமே கொடுக்க முயற்சிக்கறேன்.


அம்சமான ஒரு துப்பறியும் கதையைக் கொடுப்பதற்காக வாழ்த்துகள். இதே சூட்டோடு கதையைத் தொடர்ந்தால் தொய்வு விழாமல் இருக்கும் என்பது என் கருத்து.

உங்கள் கற்பனாசக்தியின் மேலும் (எப்படி அத்தியாயங்களைத் தொடர்புபடுத்தப்போகிறீர்கள் என்பதில்), கடுமையான உழைப்பின்மேலும் (தகவல்கள் திரட்டி தருவதில் தரும் அக்கறையில்) எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. எனவே தொடருங்கள். பின்வருகிறோம்.

அடடே.. இவ்ளோ நம்பிக்கையா..? நன்றி கீதம் அவர்களே... கதையை தொடர்ந்து படிப்பதற்கு..


கதை நன்றாக மெருகேருகிறது மதி. ஒரு திறமையான கிரைம் ரைட்டர் எழுதுவது போல் இருக்கிறது. தொடருங்கள்.
நன்றி ஆரென்.. சீக்கிரமே அடுத்த பாகம் பதிய முயல்கிறேன்.

Akila.R.D
17-05-2010, 04:07 AM
இன்னும் என்னை நம்பி இந்த கதைய படிச்சிட்டு வர்றதுக்கு மிக்க நன்றிக்கா....

மதி நீங்க சீனியர் ஞாபகம் இருக்கட்டும்...
அக்கா எல்லாம் சொல்லக்கூடாது..

மதி
17-05-2010, 04:25 AM
மதி நீங்க சீனியர் ஞாபகம் இருக்கட்டும்...
அக்கா எல்லாம் சொல்லக்கூடாது..
சரிக்கா.... :D:D:D

கலையரசி
18-05-2010, 02:23 PM
கதையை நன்றாய்க் கொண்டு போகிறீர்கள் மதி. ஏற்கெனவே படித்தது மறக்காமலிருக்க அடுத்தடுத்த அத்தியாயங்களை உடனுக்குடன் கொடுத்தால் நல்லது.

அக்னி
18-05-2010, 03:23 PM
கதைக்களம் வெளிநாட்டுக்கும் விரிகின்றதோ என எண்ணுகையில்,
பிராங்கை இந்தியாவுக்கே அழைத்து வந்துவிட்டீர்கள்...

ஆனந்தாவையும் இழுத்துவிட்டீர்கள்...

இப்படியான சாமிகள் இருக்கும்வரை, பிராங் வகை ஆசாமிகள் இந்தியாவிற்குள் நுழைய வேறு காரணங்களைத் தேடத்தேவையில்லை.

இதெல்லாம் புரியவேண்டியவங்களே, போலிச்சாமியார்கள்கிட்ட ஆசி வேண்டித்திரிகையில்,
யாரிட்டத்தான் சொல்லுறது...

மதி... பின்னூட்டங்களப் பாத்தீகதானே... அடுத்தடுத்த அத்தியாயங்களை விரைந்து கொடுத்து பெயரில்லுள்ளதைக் காப்பாத்திக்கோங்க...

மதி
18-05-2010, 04:48 PM
கதையை நன்றாய்க் கொண்டு போகிறீர்கள் மதி. ஏற்கெனவே படித்தது மறக்காமலிருக்க அடுத்தடுத்த அத்தியாயங்களை உடனுக்குடன் கொடுத்தால் நல்லது.


கதைக்களம் வெளிநாட்டுக்கும் விரிகின்றதோ என எண்ணுகையில்,
பிராங்கை இந்தியாவுக்கே அழைத்து வந்துவிட்டீர்கள்...

ஆனந்தாவையும் இழுத்துவிட்டீர்கள்...

இப்படியான சாமிகள் இருக்கும்வரை, பிராங் வகை ஆசாமிகள் இந்தியாவிற்குள் நுழைய வேறு காரணங்களைத் தேடத்தேவையில்லை.

இதெல்லாம் புரியவேண்டியவங்களே, போலிச்சாமியார்கள்கிட்ட ஆசி வேண்டித்திரிகையில்,
யாரிட்டத்தான் சொல்லுறது...

மதி... பின்னூட்டங்களப் பாத்தீகதானே... அடுத்தடுத்த அத்தியாயங்களை விரைந்து கொடுத்து பெயரில்லுள்ளதைக் காப்பாத்திக்கோங்க...
நன்றி...
பார்த்தேன் அக்னி.. எல்லோரும் என் மேல கொல வெறியில இருக்கறது புரியுது. அநேகமாக அடுத்த பாகத்தை.. வியாழனன்று கொடுக்க முயல்கிறேன்... சில விஷயங்கள சேகரிக்க நேரமாகுது.. மேலும் சிலபல பிரச்சனைகள்.. தெளிவா உட்கார்ந்து எழுத முடியல.. :(

மதி
20-05-2010, 11:37 AM
பெங்களூர்..
தன்னிடம் வாசிக்கப்பட்ட லிஸ்டில் அந்த மொபைல் போன் இல்லாததைப் பார்த்து வியர்த்தான் வைபவ். கன்னடத்தில் அந்த லேப்பில் இருந்த நபரிடம்,

“நல்லா பாருங்க.. இன்னிக்கு அந்த தற்கொலை நடந்த இடத்திலேர்ந்து ஒரு மொபைல் போன் கொண்டு வந்திருப்பாங்க..”

“இல்ல.. சார். நல்லா பாத்துட்டேன். எல்லா பொருளையும் இங்க எண்ட்ரி போட்டு தான் வாங்குவோம். மிஸ் ஆயிருக்க சான்ஸே இல்ல..”

குழம்பிய வைபவ் யூனிபார்மை எடுத்து மாட்டிக் கொண்டு அம்மா சொன்னதைக் கூட காதில் வாங்காமல் தன் ப்ரத்யேக ஹீரோ ஹோண்டாவில் கிளம்பினான். ‘எப்படி மிஸ் ஆயிருக்கும். நான் ஸ்பாட்டுக்கு போன போது கூட பக்கத்தில கிடந்ததே. ஒரு வேளை அவங்க எடுக்கவே இல்லியா..’ அவுட்டர் ரிங் ரோட்டில அந்த ராத்திரி வேளையில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே ரொம்பவும் குழம்பி வண்டியை ஓரமாய் நிறுத்தினான்.

மொபைல் போனை எடுத்து ஸ்டேஷனுக்கு கால் பண்ணினான். மூன்றாவது ரிங்கில் கான்ஸ்டபிள் போனை எடுத்தார்.

“நான் இன்ஸ்பெக்டர் பேசறேன். இன்னிக்கு காலைல அந்த தற்கொலை கேஸ் நடந்த எடத்துக்கு போனோமே.. பாரன்ஸிக் லேப்லேர்ந்து யார் வந்தா?”

“சார்.. வணக்கம் சார். எப்பவும் வழக்கமா வர்ற முனிரெட்டி தான் வந்தான். ஏன் சார்? ஏதாச்சும் பிரச்சனையா? இந்த நேரத்துல அவன பத்தி கேக்கறீங்க?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல. காலைல அங்கிருந்து என்னெல்லாம் எடுத்துட்டு வந்தான்னு கேக்கணும். ஒரு மொபைல் போன் எங்க போச்சுன்னு தெரியல”

“ஓ.. அவன நம்பர் வேணா தரட்டுமா சார். இந்நேரம் நல்லா மப்பு போட்டுட்டு இருப்பான்னு நெனைக்கிறேன்..”

“குடு..குடு”

கான்ஸ்டபிள் நம்பர் தர அங்கிருந்த மொபைலில் டைப் செய்தான். லோடு ஏற்றிய லாரி ஒன்று விர்ரென்று அவனை கடந்து சென்றது. அடுத்து முனிரெட்டிக்கு டயல் செய்தான்.

ரிங் போய் போன் எடுக்கப்பட்டு சொன்ன ‘ஹலோ’விலேயே அவன் தள்ளாட்டம் தெரிந்தது.

“முனிரெட்டி. நான் இன்ஸ்பெக்டர் வைபவ் பேசறேன். எங்க இருக்க..?”

“வணக்கம் சார். இங்க சும்மா சகாக்களோட…மடிவாலால இருக்கற பார்ல.. ஹி.. என்ன மேட்டர் சார்?”

“காலைல நீ தானே அந்த அபார்ட்மெண்டுக்கு வந்து பொருளெல்லாம் கொண்டுட்டு போன.. அதுல ஒன்னு மிஸ்ஸாவுது”

“என்னாது…. மிஸ்ஸாவுதா..?” ஏற்றியிருந்த போதை பாதிக்கும் மேல் இறங்கியது.

“ஆமா… அந்த மொபைல் போன காணல. உனக்கு தான் தெரிஞ்சிருக்கணும்..”

“மொபைல் போனா… நல்லா ஞாபகம் இருக்கு சார். அந்த பொண்ணு பக்கத்துல சுக்குநூறா கெடந்துதே. நான் தான் சார் எல்லா பார்ட்டையும் ஒன்னு விடாம எடுத்தாந்தேன்.”

“எடுத்த எல்லாத்தையும் கணக்கு பண்ணி கரெக்டா லேப்ல கொடுத்த தானே..?”

“லேப் வரைக்கும் வந்தேன் சார். திடீர்னு போன் வந்துச்சு. அதான் பேசிக்கிட்டிருந்ததால வெளிய வந்த லேப் இன்சார்ஜ் கிட்ட கொடுத்தேன். அவர் தான் எண்ட்ரி போட்டிருப்பார்..”

சுத்தமாய் குழம்பியது வைபவ்விற்கு. ‘எங்க தான் தொலஞ்சு போயிருக்கும். இல்ல யார் தான் எடுத்திருப்பாங்க..’ அந்த இரவிலும் வியர்த்தது. அடுத்து எங்கிருந்து ஆரம்பிப்பது?

“சரி.. ரெட்டி. நீங்க திரும்பி போன வழியில ஏதாச்சும் நடந்துச்சா? “

“அப்படி எல்லாம் ஒன்னும் நடக்கலியே…” யோசித்தவன். “ஆமா சார். திரும்புற வழியில போலீஸ் நின்னு எல்லா வண்டியும் செக் பண்ணிட்டு இருந்தாங்க. ஏதோ குண்டு வெடிக்கப் போகுதுன்னு புரளி வந்துச்சாம். நம்ம வண்டிய கூட திறந்து பாத்தாங்க. லேப் வண்டின்னதும் விட்டுட்டாங்க. ஏன் சார்.. ஏதாச்சும் பெரிய ப்ரச்சனையா?”

“தெரியல… அதான் விசாரிக்கணும். சரி நீ உன் கச்சேரிய நடத்து. நாளைக்கு ஸ்டேஷன் பக்கமா வந்துட்டு போ”

அடுத்த பக்கம் சரின்னதும் போனை வைத்தான். கொஞ்சம் தெளியற மாதிரி தெரிந்தது. ‘எடுத்தா வண்டிய செக் பண்ணும் போது எடுத்திருக்கணும்.’

கண்ட்ரோல் ரூமுக்கு போன் பண்ணினான்.

“ஹலோ கண்ட்ரோல் ரூம்.”

“நான் பெங்களூர் தெற்கு இன்ஸ்பெக்டர் வைபவ் பேசறேன். இன்னிக்கு ஏதாச்சும் பாம் ஸ்கேர் போன் வந்துச்சா?”

“ஒரு நிமிஷம்…. அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே சார். எவ்ரிதிங் ஓக்கே”

“ஓக்கே.. தாங்க்ஸ்.”

அவன் போனை வைக்கும் போது மணி பதினொன்னரையைத் தாண்டியிருந்தது. வண்டி சாவியைப் போட்டு கிக்கரை உதைக்கவும் எதிர் திசையில் போய்க்கிட்டு இருந்த அந்த மாருதி வேன் யூ டர்ன் போட்டு அவனருகில் நிற்கவும் சரியாயிருந்தது.

அப்போது

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் இரவு மணி பத்தைத் தாண்டியிருந்தது. ஊரே அமைதியாயிருந்தது. பனிப் பொழிவு ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச காலம் தான் இருந்தது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பழம்பெரும் நகரம். ரஷ்யாவின் மேற்கே பால்டிக் கடலை ஒட்டி அமைந்திருந்தது. நேவா நதி ஊரின் ஊடாக ஓடி பால்டிக் கடலில் கலந்தது. அதனாலேயே அந்த ஊருக்கு மேற்கத்திய வெனிஸ் என்றொரு பேரும் உண்டு. இரவு நேரத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட டிரினிட்டி பாலத்தில் நின்று ஆற்றோட்டத்தைப் பார்ப்பதற்கு கண்கோடி வேண்டும்.

எப்போதும் சல சலவென ஓடும் நேவா நதி அன்று ஏனோ அமைதி காத்தது. விளக்கு வெளிச்சங்களில் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்த வேளையில் ஆற்றின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த சர்ச் அருகில் அமைதிகாத்த அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ரஷ்ய முறைப்படி கட்டப்பட்டிருந்த அந்த கட்டிடத்தில் அரசாங்க அலுவலகங்கள் இருந்தன. அந்த நேரத்தில் எல்லா அலுவலகங்களும் மூடப்பட்டிருக்க அந்த ஒரு அலுவலகம் மட்டும் இயங்கிக் கொண்டிருந்தது.

ஒன்றிரண்டு பேர் சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருக்க அந்த அலுவலகம் “விளையாட்டுத் துறை அலுவலகம்” என பெயர்ப் பலகையைத் தாங்கியிருந்தது. கொஞ்சம் தள்ளிப் போனால் தலைமை அதிகாரி என ரஷ்ய மொழியில் எழுதியிருந்தது. இன்னும் பூட்டப்பட்டிருக்க வில்லை.

உள்ளே பெரிய மேஜை. எதிரில் இருந்த பெரிய ரஷ்ய ஜன்னல் வழியாக நேவா நதி மின்னிக் கொண்டிருந்தது. மேஜையில் முன்னிருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்த அவர் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தார். ஐந்தடிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். துடுக்கான தோற்றம். ரஷ்யக் களை முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. சிந்தனைக் கோடுகள் முகத்தில் வரிகளாய் தெரிந்தது. தீர்க்கமான அந்தப் பார்வை ஆற்றின் மேலேயே நிலைக் குத்தி நின்றது. ஏறக்குறைய ஒரு மணி நேரமாய் அவர் அப்படி தான் அமர்ந்திருக்கிறார்.

அவர் இருந்த அறை பழங்கால அறை. ஒருபக்க முழுக்க புத்தங்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பாதிக்கும் மேல் ரஷ்ய மொழிப் புத்தகங்கள். சுவரில் ஃப்ரேம் செய்து மாட்டப்பட்ட லெனின் புகைப்படம்.

உட்கார்ந்திருந்த அவர் தலையைத் திருப்பி லெனின் படத்தைப் பார்த்தார். ஒரு பெருமூச்சு விட்டு மறுபடியும் நதியைப் பார்க்கலானார். யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பது தெரிந்தது. அப்போது வரப்போகிறவர் மிக முக்கியமான நபராய் தான் இருக்க வேண்டும். உட்கார்ந்திருந்த நபர் ரஷ்யாவின் மிகப்பெரிய பதவியில் இருப்பவர். அவர் ரஷ்யாவின் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பான “Foreign Intelligence Service” தலைவர் மிகைல் ப்ராட்கோவ். திடமான மனதுடையவர். அவர் மனமே கலக்கத்திலிருப்பது முகத்தில் தெரிந்தது.

1991-ல் ரஷ்ய அதிபரை கவிழ்க்க சதி செய்ததாக புகழ்பெற்ற கேஜிபி ரகசிய உளவாளிகள் அமைப்பு கலைக்கப்பட்ட பின் உருவான அமைப்பு தான் FIS. உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வுகளை மேற்கொண்ட அந்த அமைப்புக்கு கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக மிகப்பெரிய சிக்கல்கள் எதுவும் வரவில்லை. ஆனால் இப்போது வந்திருப்பது மிக முக்கியமானது. நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கக் கூடியது. அதைப் பற்றி விவாதிக்கத் தான் அந்த நபரை அழைத்திருந்தார்.

மணி சரியாக பத்தரை ஆகும் போது கதவு திறந்தது. நல்ல உயரமாய் இருந்த அந்த நபர் நுழைவதற்கும் மேஜையிலிருந்த ரகசியம் தாங்கிய பேப்பர்கள் சலசலப்பதற்கும் சரியாய் இருந்தது.

மதி
20-05-2010, 11:40 AM
நிறைய கொலை மிரட்டல் வர ஆரம்பித்ததால்... வேற வழியில்லாமல் சீக்கிரமாய் இந்த அத்தியாயத்தை போட வேண்டியதாகிவிட்டது...
ஆனாலும் சொல்லிக் கொள்ள விரும்புவதென்றால்... எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டான் இந்த பனங்காட்டு மதி...

இவ்ளோ நாள் இதைத் தொடர்ந்து படித்து வரும் இன்னும் நிறைய எழுதத் தூண்டும் உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.. குறிப்பாய். செல்வாவிற்கு..!!!

சிவா.ஜி
20-05-2010, 11:53 AM
அசத்துறீங்க மதி....பிரபலமான பல எழுத்தாளர்கள்...உங்ககிட்ட தோத்துப்போகனும். அமெரிக்காவையும் கொண்டாந்துட்டீங்க...இப்ப ரஷ்யாவையும் இழுத்துட்டீங்க.....இந்தியா ராக்கெட் விடறது...இவங்களுக்கெல்லாம் எம்புட்டுப் பிரச்சனையா இருக்கு...

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அழகை விவரித்த விதமும், நீங்க கலெக்ட் பண்ணின விவரங்களைக் கதையோடுக் கலந்த முறையும்....ஹேட்ஸ் ஆஃப் மதி.

தொடர்ந்து அசத்துங்க.....

மதி
20-05-2010, 12:11 PM
அசத்துறீங்க மதி....பிரபலமான பல எழுத்தாளர்கள்...உங்ககிட்ட தோத்துப்போகனும். அமெரிக்காவையும் கொண்டாந்துட்டீங்க...இப்ப ரஷ்யாவையும் இழுத்துட்டீங்க.....இந்தியா ராக்கெட் விடறது...இவங்களுக்கெல்லாம் எம்புட்டுப் பிரச்சனையா இருக்கு...

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அழகை விவரித்த விதமும், நீங்க கலெக்ட் பண்ணின விவரங்களைக் கதையோடுக் கலந்த முறையும்....ஹேட்ஸ் ஆஃப் மதி.

தொடர்ந்து அசத்துங்க.....
நன்றிண்ணா.. ஆனா நீங்க புகழற அளவுக்கெல்லாம் இல்லே... ஏகத்துக்கும் பல ஊருக்கு இந்த கதை போறது பயம்மாஆஆ இருக்கு.. எப்படி எல்லாத்தையும் கோக்கறதுன்னு...

வம்புக்குன்னு எழுத ஆரம்பிச்சது..விடாது கருப்பு மாதிரி துரத்துது... :D:D :traurig001::traurig001:

சுட சுட அடுத்த கதை வேற எழுத ஆரம்பிச்சாச்சு... அறிவிப்பு வெகுவிரைவில்...:eek::eek:

சிவா.ஜி
20-05-2010, 12:18 PM
ரொம்ப தன்னடக்கம்தான்.....!!!.....எல்லாத்தையும் பக்காவா ப்ளான் பண்ணிட்டுதான் இப்படி நாடு நாடா சுத்தறீங்க....எங்களையும் கூட்டிக்கிட்டுப் போறீங்கன்னு எனக்குத் தெரியாதா...எல்லாத்தையும் இணைக்கத்தான் உங்கக்கிட்ட.....தலை நிறைய கோந்து இருக்கே...ஹி...ஹி....

கரும்பு திண்ணக் கசக்குமா.அடுத்தக் கதையோட அறிவிப்பையும் சூடாக் குடுத்துடுங்க....!!!!

செல்வா
20-05-2010, 12:44 PM
இந்தப் பாகத்தில் என்னைக் கவர்ந்த விசயங்கள் நிறைய.....!

இரஷ்யாவின் அழகு... வர்ணனை அதில் குறிப்பிடத்தக்கது.

பொறாமை கொள்ள வைக்கும் எழுத்துக்கள்.... வாழ்த்துக்கள் மதி.

ரொம்ப காக்க வச்சீங்கண்ணா விளைவுகளுக்கு மன்றம் பொறுப்பல்ல... :)

மதி
20-05-2010, 12:57 PM
இந்தப் பாகத்தில் என்னைக் கவர்ந்த விசயங்கள் நிறைய.....!

இரஷ்யாவின் அழகு... வர்ணனை அதில் குறிப்பிடத்தக்கது.

பொறாமை கொள்ள வைக்கும் எழுத்துக்கள்.... வாழ்த்துக்கள் மதி.

ரொம்ப காக்க வச்சீங்கண்ணா விளைவுகளுக்கு மன்றம் பொறுப்பல்ல... :)
ஹிஹி..
நான் ரஷ்யாவிற்கெல்லாம் போனதில்லீங்கோ...
கூகிளே ஆண்டவன்.. :icon_ush::icon_ush:

sarcharan
20-05-2010, 02:26 PM
பல ஊர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தின் பல கண்டங்களுக்கும் கதை (நீர்) பயணித்துள்ளது போலும்!!

செல்வா
20-05-2010, 02:50 PM
அடுத்தது என்ன அடுத்தது என்னனு நெறய பேரு மதியை தற்கொலை செய்ய போறாங்க...!

மதி
20-05-2010, 02:56 PM
பல ஊர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தின் பல கண்டங்களுக்கும் கதை (நீர்) பயணித்துள்ளது போலும்!!
இந்த கதையில நான் பாத்திருக்கிற ஊர்கள் பெங்களூரும் சென்னையும் தான். ஹிஹி

Akila.R.D
21-05-2010, 05:57 AM
கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது மதி...
நிறைய ரசிகர்கள் கூட்டம் வந்துடுச்சு...

வாழ்த்துக்கள் மதி...

மதி
21-05-2010, 06:18 AM
கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது மதி...
நிறைய ரசிகர்கள் கூட்டம் வந்துடுச்சு...

வாழ்த்துக்கள் மதி...
ஹிஹி...

இது கதையல்ல நிஜம்... எழுதியே தற்கொலை செய்ய வைக்கலாம்ல..:D:D

அடுத்து.. வாழ்த்துக்கு நன்றிக்கா..

aren
22-05-2010, 08:26 AM
வாவ் என்று சொல்ல வைக்கிறது உங்களின் கதை சொல்லும் அழகு. ரொம்பவும் நன்றாக வருகிறது கதை. ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல் கதை எழுதும் உங்கள் பாங்கு எனக்கு பிடித்திருக்கிறது.

பாராட்டுக்கள். இன்னும் எழுதுங்கள். அவசரம் வேண்டாம், மெதுவாகவே கதையை நகர்த்துங்கள்.

பா.ராஜேஷ்
22-05-2010, 10:26 AM
மிக நன்றாக தொடர்ந்துள்ளீர்கள். அடுத்து என்ன என்று சீக்கிரம் பதியுங்கள் ...

மதி
31-05-2010, 08:30 AM
அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் லேங்க்லி. மிகவும் பேர் பெற்ற இடம். உலகையே ஆட்டிப் படைக்கும், படைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ராஜ்யத்தின் முக்கிய உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.வின் தலைமையகம். அடர்ந்து வளர்ந்திருந்த காட்டு மரங்களுக்கிடையே அமைதியாக அமைந்திருந்தது அந்த வளாகம். மிகப்பெரிய வளாகம். ஏறக்குறைய ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையம் அமையப்பெற்றது. அனுமதிக்கப்பட்டவரைத் தவிர வேறு யாரும் அவ்வளவு எளிதில் உள்ளே நுழைந்துவிட முடியாது. பாதுகாப்பிற்காக அந்த ஏரியா முழுவதும் விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. உலகில் நடக்கும் எண்ணற்ற சம்பவங்களுக்கு காரணகர்த்தாவான அந்த மையம் பற்பல ரகசியங்களைக் கொண்டிருந்தது.

பனிக்காலமாகையால் எங்கும் வெள்ளைநிற பனிக்கட்டிகள் பரவியிருக்க சில்லென்று பனிப்பொழிவும் இருந்ததது. வெள்ளை நிற பனித் துகள்கள் மேலிருக்க மின்சார வேலியின் பக்கமிருந்த காவலர் வாசலுக்கு சர்ரென்று வந்து நின்ற அந்த நிஸ்ஸான் அல்டிமா காரில் இருந்தவரை அடையாளம் கண்டு வழிவிட்டனர் செக்யூரிட்டி. காரை ஒரு ஓரமாய் பார்க் செய்த கோட் சூட்டிலிருந்த கனவான் மைக்கேல். சி.ஐ.ஏவின் அந்தப்பிரிவின் தலைமை செயலதிகாரி. அதிபரின் ஆலோசனைக்குழுத் தலைவர். இவரின் கட்டளைக்கு கீழ் பணிபுரிய உலகெங்கிலும் பல்லாயிரம் ஊழியர்கள் சாதாரண குடிமக்கள் வேடத்திலிருந்தனர்.
காரிலிருந்து இறங்கியவுடன் மேல் போர்த்தியிருந்த ஜெர்கினை இழுத்துக் கொண்டு கண்ணாடிகளைப் பதித்து கட்டப்பட்டிருந்த அந்த கட்டிடத்தை நோக்கி நடந்தார். வழியில் அவரை கண்டு கொண்டவர்கள் வைத்த வணக்கங்களை வாங்கிக் கொண்டு பரபரப்பாக நடந்தார். பரபரப்பு எப்பவுமே அவரிடம் தொற்றிக் கொண்ட ஒரு வியாதி.

முதல் வேலையாக உள்ளே நுழைந்ததும் அந்த பெரிய கான்ஃப்ரண்ஸ் அறைக்குள் நுழைந்தார். விஸ்தீரணமான அறை, குஷன் வைத்த நாற்காலிகள், மிகப்பெரிய ப்ரொஜக்டர், நீல நிற வெளிச்சம் அந்த அறையை பிரம்மாண்டமாய் காட்டியது. உள்ளே நுழைந்தவர் நாற்காலியில் தன் ஜெர்கினை மாட்டிவிட்டு அமர்ந்தவுடன் அங்கிருந்தவர்களைப் பார்த்தார். அவர் முகத்தைப் பார்த்ததும் அவர்களில் மூத்தவரான அந்த கண்ணாடி அணிந்த அதிகாரி ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

“வணக்கம் மைக்கேல். இந்நேரம் உங்களுக்கு அந்த செய்தி கிடைச்சிருக்கும் என்று நம்புகிறோம்.”

மௌனமாக தலையாட்டினார் மைக்கேல். தொண்டையை கனைத்துக் கொண்டு மறுபடியும் பேச ஆரம்பித்தார் அந்த அதிகாரி. ப்ரொஜக்டர் திரையில் காண்பிக்கப்பட்ட அந்த படங்களை காண்பித்து,

“இது தான் நம்ம சாட்டிலைட் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள். இந்தியாவில் ஐதராபாத்திற்கு அருகில் இருக்கும் கிராமம்…”

“இங்க தெரிவது தான் அந்த செய்தியில் இருந்த ரைஸ்மில். கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாய் அமைந்திருக்கிறது.”

“அங்க தான் இந்திய அரசாங்கம் ஏதோ ரகசிய ஆராய்ச்சி நடத்திக்கிட்டு இருக்கிறது. நம்பத் தகுந்த தகவல் இது. இந்த புகைப்படங்கள் எடுத்து ஒரு மாதமாகிறது. இதற்கிடையில் தான் இந்திய அரசாங்கம் அவங்க நிலா பயணத்தை அறிவிச்சிருக்கிறது. அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கு.”

திரையில் சாட்டிலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாற ஆரம்பிக்க மேலும் அந்த அதிகாரி தொடர்ந்தார்.

“இந்த கிராமமே சந்தேகத்திற்கிடமான கிராமம். இப்படி ஒரு கிராமம் அஞ்சு வருஷத்திற்கு முன் இருந்ததா அங்க பதிவுலேயே இல்ல. திடீர்னு முளைச்சிருக்கு. இதுவும் எங்க சந்தேகத்திற்கு காரணம். இதைப்பற்றி மேலும் விவரங்கள் சேகரிக்க சொல்லி இருக்கிறோம்.”

முடித்தார் அந்த அதிகாரி.

அதுவரை மௌனமாக தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்த மைக்கேல் பேச ஆரம்பித்தார்.

“அங்க நமக்கு எதிரா இந்தியா ஏதும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்கன்னு சொல்றீங்களா?”

“ஒரு அனுமானம் தான். தெளிவா சொல்ல முடியாது. ஆனா விண்வெளி சம்பந்தமா ஏதோ செய்யறாங்கன்னு மட்டும் நல்லா தெரியுது. அது இந்த மூன் மிஷனுக்கா கூட இருக்கலாம். மேற்தகவல்களுக்காக காத்திருக்கிறோம்.”

“ரைட்.. நல்ல காரியம். இந்த இடத்துல என்ன நடக்குதுனு கண்டுபிடிக்க இவ்வளவு நாளா?”

“அந்த ஏரியாவுல யாரும் வெளி ஆளுங்க உள்ளே நுழைய முடியறதில்லை. அப்படி போன நம்ம ஆளுங்க இரண்டு பேரை காணவில்லை. அந்த ஏரியா முழுக்க பாதுகாப்பா வைச்சிருக்காங்க.”

“ம்ம்.. சரி. ஒரு வேளை இது வழக்கமா நமக்கு தண்ணி காட்டுற வேலையா இருந்தா? பொக்ரான் ஞாபகம் இருக்குல்ல.”

“நல்லாவே ஞாபகம் இருக்கு. ஒரிசா பக்கம் வண்டிகளை அனுப்பிட்டு பொக்ரான்ல சோதனை செஞ்சாங்க. உண்மையிலேயே அந்த சம்பவம் நமக்கு சறுக்கல் தான். அதற்கப்புறம் அங்க நம்ம பலத்தை இன்னும் கூட்டிட்டோம். இப்போ சில பெரிய தலைகளுக்கு வலையை விரிக்க ஆரம்பிச்சிருக்கோம். கூடியவிரைவிலேயே எல்லா தகவல்களோடு வர்றேன்”

தலையாட்டிக் கொண்டே தன் அறைக்கு போக கிளம்பினார் மைக்கேல். காலை எழுந்ததும் முதல் வேலையாய் அமெரிக்க அதிபருடன் பதினைந்து நிமிடங்கள் பேசுவார் அவர்களுக்கென்றே இருக்கும் ப்ரத்யேக டெலிபோன் இணைப்பில். யாரும் ஒட்டு கேட்க முடியாது. முதல் நாள் நடந்த சம்பவக்கோர்வையை தெரிவித்தபின் தற்போதைய பிரச்சனையைப் பற்றி பேசுவர். சுருக்கமாய் தான் இருக்கும் அவர்கள் பேச்சு. அதற்கப்புறம் அலுவலகத்திற்கு வந்தவுடன் அதிபருக்கு அனுப்ப வேண்டிய ரிப்போர்ட்களை ஒரு முறை சரி பார்த்து அனுப்பி வைப்பார்.

மீட்டிங் முடிந்ததும் தன்னறைக்கு வந்தவர் கதவை மூடிவிட்டு இருக்கைக்கு வந்தார். அன்றைக்கு அதிபருக்கு அனுப்ப வேண்டிய தகவல்களை சரிபார்த்து அனுப்பி வைத்தார். கொஞ்ச நேரம் ஆனதும் அவருக்கென இருந்த தனிப்பட்ட டெலிபோன் லைனில் அந்த நம்பரை டயல் செய்தார்.

மறுமுனையில் எடுக்கப்பட்டதும் அடையாள எண்ணைக்கூறினார். அவரது அடையாளத்தை மறுமுனை அங்கீகரித்தது. அது சாட்டிலைட் போன் ஆகையால் எந்த நாட்டினரும் ஒட்டு கேட்க இயலாது. சுருக்கமாக சொன்னால் என்க்ரிப்டட் லைன்.

அமெரிக்க ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார் மைக்கேல்.

“என்னவாயிற்று?”

“நேற்று தான் சந்திப்பு முடிந்தது. இருக்குமிடம் தெரிந்துவிட்டது. பாதுகாப்பு பலமாக இருக்கும் போல. ஏதாச்சும் வழிவகை செய்யவேண்டும்.”

“ம்ம். ஏதேனும் தேவைப்பட்டால் நம் உதவி தகுந்த நேரத்தில் வரும்.”

போனை வைத்து விட்டு ஆல்பர்ட்டுக்கு போன் செய்தார்.

ஆல்பர்ட் அவருடன் உளவு வேலைகளில் பணியாற்றிய அதிகாரி. நீண்ட காலமாக ஒருவரை ஒருவர் அறிவர். ஆறுமாதத்திற்கு முன் தான் உளவுப்பிரிவிலிருந்து ப்ரமோஷனில் வந்திருந்தார் மைக்கேல். பொதுவில் அவர் நடவடிக்கைகள் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் ரகசிய உளவுப்பிரிவிலும் அவர் கை ஓங்கி இருந்தது.

“ஆல்பர்ட்..?”

“யெஸ்… ஸ்பீக்கிங்..”

“இன்னிக்கு மதியம் லஞ்ச் .. ஒகேவா?”

“ம்ம். ரைட்டோ”

“ஓக்கே.. டாக்கோ பெல்ஸ். வார்னர் ரோட்”

போன் துண்டிக்கப்பட்டது.

சரியாய் நண்பகல் பன்னிரண்டு மணிக்கு அவர் கார் கிளம்பியது. அருகிலிருந்த ஊருக்குள் சென்று வார்னர் ரோட்டில் இருந்த டாக்கோ பெல்ஸ் கடைக்குள் நுழைந்தார். அவருக்கு முன்னே ஆல்பர்ட் அங்கே காத்திருக்க ஆளுக்கொரு பரிட்டோ ஆர்டட் செய்து வாங்கிக் கொண்டு ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தனர்.

கடையில் கூட்டம் கம்மியாக இருந்தது. கண்ணாடி சுவர்கள் இருந்ததால் வெளியில் போகும் வாகனங்களைப்பார்த்துக் கொண்டே சாப்பிடலாம். சாதம் அடைக்கப்பட்ட நம்மூர் சப்பாத்தி போல் இருந்த அந்த் பரிட்டோவை கடித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார் மைக்கேல். அந்த கடை அவர்களுக்குப் பாதுகாப்பான கடை. ரகசிய பாதுகாப்பில் இருந்தது.

“தற்போதைய நிலவரம் என்ன?”

“நம்ம ஆள் சென்னை போய் சேர்ந்தாச்சு. தக்க பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.”

“தெரியும். சற்று முன் தான் பேசினேன்”

“என்னென்ன தேவைப்படும்?”

“இப்போதைக்கு அந்த ரைஸ்மில்லுக்குள் நுழைய வேண்டும். கிடைத்த தகவல்படி அந்த இடம் நிறைய அடுக்கு பாதுகாப்பு கொண்டது. நம் ஆள் உள்ளே நுழைய அவகாசம் வேண்டும்”

“அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இன்னும் இரு மாதங்கள் கூட இல்லை. அதற்குள் அந்த யந்திரத்தில் என்னென்ன இருக்கிறது என்று தெரிந்தாக வேண்டும்.”

“கண்டுபிடித்துவிடலாம்.”

“எப்படியோ. இன்று தான் அந்தப்பிரிவு ஆட்கள் அந்த கிராமத்தைப் பற்றியே கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒன்று அந்த ரைஸ்மில்லுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியவேண்டும். இல்லையேல் அந்த ரைஸ்மில்லையே அழிக்க வேண்டும். ஏதாச்சும் ஒன்று செய்தாக வேண்டும். நிலைமை ரொம்ப மோசம். புரிகிறதா?”

“புரிகிறது. “

“எனக்கு இன்னும் இரண்டு நாளில் அப்டேட் வேணும். என்ன ப்ளான் என்னவென்று”

“சரி.”

சாப்பிட்டு முடித்தக் கையோடு இருவரும் தத்தம் காரில் கிளம்பினார்கள். ஆல்பர்ட்டும் பின்னால் போய் கொண்டிருந்த மைக்கேல் ஓரமாக தன் வண்டியை நிறுத்தி விட்டு சாட்டிலைட் போனில் அந்த ந(ம்)பரை தொடர்பு கொண்டார்.

பேசி முடித்ததும் அலுவலகத்திற்கு கிளம்பினார் மைக்கேல்.

சென்னை புறநகர். நேரம் இரவு மணி பத்தை தாண்டியிருந்தது. ஆத்மானந்தா ஏற்பாடு செய்திருந்த ப்ளாட் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தது. நாராயண ரெட்டி கொடுத்திருந்த தகவல்கள் ப்ராங்கின் திட்டத்திற்கு போதுமானதாய் இருந்தது. மேஜை மேல் ஹைதராபாத்தை சுற்றியுள்ள பகுதிகளின் வரைபடமும், இதர மின்னணு சாதனங்களும் இருந்தன. நீண்ட நேரமாக அவன் வேலையில் முழுகியிருந்ததை ஆஸ்ட்ரேயில் கொட்டிக் கிடந்த கிகரெட் துண்டுகள் காட்டிக் கொடுத்தன. காலையிலேர்ந்து பழங்களும் பாலும் மட்டுமே சாப்பிட்டு வெளியிலே போகாமல் இருந்தான். இது அவனுக்கு தரப்பட்டிருந்த பயிற்சியில் ஒன்று. சந்தேகத்திடமாக எங்கேயும் பகலில் சுற்றக்கூடாதென்பது.

ஒரு வழியாக பல கோடுகளை அந்த மேப்பில் கிறுக்கியபின் நிமிர்ந்தான். அருகிருந்த மடிக்கணினியில் ப்ராக்ஸி ஐ.பி. வழியாக தனக்கு வேண்டிய தகவல்களை தேடிக் கொண்டான். அவனது திட்டத்தை ஆரம்பிப்பதற்கான விஷயங்கள் இருந்தன. இது போதும். மேலும் வேண்டிய விஷயங்களை ஆரம்பித்தவுடன் பார்த்துக் கொள்ளலாம்.

மனதில் திருப்தி ஏற்பட்டவுடன் தன் முகத்தில் அப்படி ஒரு குரூரப் புன்னகையை பரவ விட்டான் தனக்கு இதுவே கடைசியாய் இருக்கப் போகின்றதென்பதை அறியாமல்.

Akila.R.D
31-05-2010, 08:52 AM
காலம் தாழ்த்தினாலும் அழகா கொண்டுபோறீங்க...

எல்லா சம்பவத்தையும் எப்படி முடிச்சு போடுவீங்கனு பார்க்க ஆவலா இருக்கு...

தொடருங்கள்...

மதி
31-05-2010, 08:53 AM
நன்றிங்க அகிலா... எனக்கும் அதே ஆவல் தான்.
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நிறைய ரணகளமாயிருச்சு..

சிவா.ஜி
31-05-2010, 08:56 AM
பட்டையைக் கிளப்பறீங்க மதி....ஆங்கில நாவல் படிப்பதைப்போல ரொம்ப சுவாரசியமா போகுது கதை. நிறைய விவரங்களைத் திரட்டியிருக்கீங்க....அதை மிகச் சரியாய் கதையிலக் கலந்திருக்கீங்க...சூப்பர்.

அடுத்தவங்க காரியத்துல மூக்கை நுழைக்கறதுதானே அமெரிக்கக் கழுகோட வேலையே...

பிராங்கின் திட்டம் என்ன ஆகப்போகிறது...அவனுக்கு முடிவு யாரால்...எப்படி என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை பலமா விதைச்சிட்டீங்க.

அட்டகாசமா போகுது...தொடருங்க...!!!

தாமரை
31-05-2010, 09:01 AM
கதைக்கு முதல் பலி சிவா.ஜிதான்னு நினைக்கிறேன். மதி கொஞ்சம் பாத்துப்பா.. வலிக்காம தற்கொலை செய்து விடு

மதி
31-05-2010, 09:11 AM
பட்டையைக் கிளப்பறீங்க மதி....ஆங்கில நாவல் படிப்பதைப்போல ரொம்ப சுவாரசியமா போகுது கதை. நிறைய விவரங்களைத் திரட்டியிருக்கீங்க....அதை மிகச் சரியாய் கதையிலக் கலந்திருக்கீங்க...சூப்பர்.

அடுத்தவங்க காரியத்துல மூக்கை நுழைக்கறதுதானே அமெரிக்கக் கழுகோட வேலையே...

பிராங்கின் திட்டம் என்ன ஆகப்போகிறது...அவனுக்கு முடிவு யாரால்...எப்படி என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை பலமா விதைச்சிட்டீங்க.

அட்டகாசமா போகுது...தொடருங்க...!!!
நன்றி சிவா.ஜிண்ணா..
உண்மை தான்.. அடுத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்கறது தான் அவங்க வேலையே..

காது எவ்ளோ பெரிசா இருக்கோ.. அதுவரைக்கும் பூ சுத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன்... ஹாஹா..

ப்ராங்க் பத்தின மேட்டர்.. கடைசியா சேத்தது.. ஸோ.. அவனை எப்படி முடிக்கணும்னு இனி தான் ப்ளான் பண்ணனும்.. எனி ஐடியாஸ் ப்ளீஸ்..??


கதைக்கு முதல் பலி சிவா.ஜிதான்னு நினைக்கிறேன். மதி கொஞ்சம் பாத்துப்பா.. வலிக்காம தற்கொலை செய்து விடு
இது என்ன காமெடி..?? ஏறக்குறைய முழுகதையும் உங்களுக்குத் தெரியும்னு..
பாவம். சிவா.ஜிண்ணா..

நான் யாரையும் தற்கொல்லலீங்கோ...!!!:eek::eek::eek:

aren
31-05-2010, 11:32 AM
இந்த பாகமும் அருமையாக வந்திருக்கிறது மதி. ஒவ்வொரு பாகத்திலும் புதிர்களை அழகாக நுழைத்து வருகிறீர்கள். அதை எப்படி அவிழ்க்கப் போகிறீர்கள் என்பதைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. தொடருங்கள்.

மதி
31-05-2010, 11:33 AM
நன்றி ஆரென்.. உங்கள மாதிரி உறவுகளின் ஊக்கம் தான் என் தூக்கத்தைக் கெடுக்குது..

தாமரை
31-05-2010, 11:59 AM
பெங்களூர், புதுடெல்லி, ஹைதராபாத், ஜெர்மனி, சென்னை, ரஷ்யா, அமெரிக்கா எல்லாம் போயாச்சி..

அடுத்து பாக்கி இருப்பது தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா, சைனா, ஜப்பான், மலேசியா சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், ஈராக் ... இப்படி போய்கிட்டே இருக்குமோ?

படமா எடுத்தா யாருக்கும் சம்பளம் குடுக்க முடியாது போல.. அவுட்டோர் சூட்டிங்கிற்கே 200 கோடி பட்ஜெட் வேணும் போல இருக்கே....

சிவா.ஜி
31-05-2010, 12:00 PM
அதானே...தாமரை பீதியக் கெளப்புறாருப்பா....

பாத்து மதி....ரொம்பத்தேன் தூண்டிவிடறாய்ங்கே.....!!!

மதி
31-05-2010, 12:03 PM
இதெல்லாம் படமா எடுக்கற ஐடியா வேற இருக்கா..? ஓடும்ங்கறதுக்கு நான் உத்திரவாதம் இல்லே.. :)

மதி
31-05-2010, 12:04 PM
அதானே...தாமரை பீதியக் கெளப்புறாருப்பா....

பாத்து மதி....ரொம்பத்தேன் தூண்டிவிடறாய்ங்கே.....!!!
அதான்.. இனி.. அதிகமா இடங்களுக்குப் போக வேண்டாம்னு இருக்கேன்.. இல்லாட்டி.. ஏதோ உலகம் சுற்றும் கதையா போகும்ல.. :icon_ush::icon_ush:

சிவா.ஜி
31-05-2010, 12:27 PM
பரவால்ல...சுத்துங்க மதி.....தயாரிப்பாளரா நம்ம ஆரென் இருக்காரு...!!!

மதி
31-05-2010, 12:28 PM
பரவால்ல...சுத்துங்க மதி.....தயாரிப்பாளரா நம்ம ஆரென் இருக்காரு...!!!
இதோ கிளம்பிக்கிட்டே இருக்கேன்.. ஒரு நாள் பயணமாய் சென்னை..!:icon_ush:

சிவா.ஜி
31-05-2010, 12:32 PM
பாத்துங்க... பிராங்க் அங்க ஏதோ பிளானோட இருக்கான்.....!!!

aren
31-05-2010, 12:48 PM
பரவால்ல...சுத்துங்க மதி.....தயாரிப்பாளரா நம்ம ஆரென் இருக்காரு...!!!

நானே யார் பணம் கொடுப்பாங்கன்னு தேடிக்கொண்டு இருக்கிறேன், நீங்க வேறே

aren
31-05-2010, 12:49 PM
கதைக்கு முதல் பலி சிவா.ஜிதான்னு நினைக்கிறேன்.

ஐயோ பாவம் நம்ம சிவா.ஜி என்ன தப்பு பண்ணினார்.

தாமரை
31-05-2010, 12:53 PM
பாத்துங்க... பிராங்க் அங்க ஏதோ பிளானோட இருக்கான்.....!!!

பிராங்ஸ்(Pranks) எதுவும் பண்ணாம, ஃப்ராங் கிட்ட ஃபிராங்கா பேசணும் சரியா?

சிவா.ஜி
31-05-2010, 12:59 PM
அதாங்க ஆரென் எனக்கும் தெரியல....தாமரைக்கு ஏன் இந்தக் கொலைவெறி.....???

சிவா.ஜி
31-05-2010, 01:01 PM
ஃபிராங்க் அப்படீன்னு ஃ போட்டு எழுதுனா...உங்கப் பதிவுல தெரியற மாதிரி கட்டங்கட்டமாத்தான் தெரியுது. அதான் பிராங்க் அப்படீன்னு எழுதினேன் தாமரை....

(ஆனா இப்ப மட்டும் ஏன் சரியாத் தெரியுதுன்னு தெரியலையே..???

தாமரை
31-05-2010, 01:03 PM
கட்டமா என்கண்ணுக்கு தெரிஞ்சா ஒருவேளை அதை வச்சு நான் எதாவது கடிச்சிருவேன்னு பயந்திருச்சி போல

அக்னி
31-05-2010, 01:43 PM
எங்கேயோ எதிலேயோ தொடங்கி, எங்கேயோ எதிலேயோ நிற்கின்றது கதை...

பிரதி செய்து, பரப்பி வைத்துத்தான் தொடர்புபடுத்தவேண்டும் போலிருக்கே...

மதி சார்... அங்கங்க புள்ளி வச்சிட்டீங்க... எப்படித்தான் கோலம் போடப்போறீங்க என்று ஒண்ணுமே புரியல...

கோலம் முடிஞ்சதுக்கப்புறமாத்தான் புரியும் போலிருக்கே...

மதி
31-05-2010, 02:30 PM
கோலமா அலங்கோலமானு இனிமே தான் தெரியும். ஹிஹி

கலையரசி
31-05-2010, 02:55 PM
எங்கெங்கோ சுற்றினாலும், நல்ல விறுவிறுப்பாகக் கதையைக் கொடுத்தமைக்குப் பாராட்டுக்கள். எல்லாவ்ற்றையும் இணைத்துக் கோர்ப்பதில் தான் கதையின் வெற்றி அமைந்துள்ளது. பார்ப்போம் உங்கள் சாமர்த்தியத்தை!
தொடருங்கள் மதி!

மதி
31-05-2010, 03:05 PM
நன்றி கலைஅரசி அவர்களே... புள்ளிகளை இணைப்பது கஷ்டம் தான்.. இன்னும் புள்ளி வைப்பதே முடியவில்லையே..

பா.ராஜேஷ்
31-05-2010, 04:48 PM
ஷ்ஷ்ஷ்... இப்பவே கண்ண கட்டுதே.... இன்னும் எத்தன ஊர சுத்தணுமோ!!?

கீதம்
31-05-2010, 10:51 PM
பிரமாதமாய்க் கொண்டுபோகிறீர்கள், மதி. இதற்காக எவ்வளவு மெனக்கெடவேண்டும் என்பது புரிகிறது. (என் தொடர்கதை தந்த அனுபவம். ஒரு குடும்பச்சூழலை மையமாய் வைத்து எழுதுவதற்கே நான் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன். இங்கு சர்வதேச நாசவேலை தொடர்பான நிகழ்வுகளுக்கு பன்மடங்கு கடின உழைப்பு தேவை)

எனவே அவசரப்படாமல் முடியும்போது எழுதிப் பதியுங்கள். எங்கள் ஆதரவு உங்களைத் தொடர்ந்து வரும்.

அன்புரசிகன்
01-06-2010, 01:01 AM
அசத்துறீங்க மதி... ஆனா ஒவ்வொரு தடவையும் சந்தேகம் வரும். இது யாரு என்று. அப்புறம் முன் பாகங்களை சென்று படித்து ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது...:D

அந்தளவு தலை சுத்துது. யாரு எந்த நாட்ல என்ன வேலை என்று....


பரவால்ல...சுத்துங்க மதி.....தயாரிப்பாளரா நம்ம ஆரென் இருக்காரு...!!!

நான் நேற்றிரவு படித்துவிட்டு இந்த பதிலத்தான் காலையில போடணும் என்று இருந்தேன். நீங்க முந்திக்கிட்டீங்க...

எப்புடி???? அவ்வளவு நல்லவரா நம்ம ஆரன் அண்ணா???

நம்ம ஆரன் அண்ணாவ ஜென்டில்மன் ஆக்கிடாதீங்க மதி... :D

மதி
01-06-2010, 02:54 AM
ஷ்ஷ்ஷ்... இப்பவே கண்ண கட்டுதே.... இன்னும் எத்தன ஊர சுத்தணுமோ!!?
நன்றி ராஜேஷ்... எத்தனை ஊர் ஞாபகத்துக்கு வருதோ.. அத்தனை ஊர்...


பிரமாதமாய்க் கொண்டுபோகிறீர்கள், மதி. இதற்காக எவ்வளவு மெனக்கெடவேண்டும் என்பது புரிகிறது. (என் தொடர்கதை தந்த அனுபவம். ஒரு குடும்பச்சூழலை மையமாய் வைத்து எழுதுவதற்கே நான் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன். இங்கு சர்வதேச நாசவேலை தொடர்பான நிகழ்வுகளுக்கு பன்மடங்கு கடின உழைப்பு தேவை)

எனவே அவசரப்படாமல் முடியும்போது எழுதிப் பதியுங்கள். எங்கள் ஆதரவு உங்களைத் தொடர்ந்து வரும்.
உணர்ந்தமைக்கு நன்றி.. கதை கையில் இருந்தாலும் அதை விவரங்கள் சேர்த்து எழுத வேண்டும். விக்கிப்பீடியா தான் பல நேரங்களில் கை கொடுக்கிறது. சில சமயங்களில் ஒரு விஷயத்தைப் பற்றித் தேடும் போது வேறொன்று மாட்டும். அதையும் கதையோடு முடிச்சுப் போடத் தோன்றும்.

இப்படி ஒரு கதை எழுதலாம்னு முடிவு பண்ணும் போதே தனித் தனியாக இருந்த கருவை ஒன்றாக்கி ஆரம்பித்தது. இனி கதை நடத்தும் வழியே போகிறேன். ஆதரவுக்கு நன்றி கீதம்..

அசத்துறீங்க மதி... ஆனா ஒவ்வொரு தடவையும் சந்தேகம் வரும். இது யாரு என்று. அப்புறம் முன் பாகங்களை சென்று படித்து ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது...:D

அந்தளவு தலை சுத்துது. யாரு எந்த நாட்ல என்ன வேலை என்று....



நான் நேற்றிரவு படித்துவிட்டு இந்த பதிலத்தான் காலையில போடணும் என்று இருந்தேன். நீங்க முந்திக்கிட்டீங்க...

எப்புடி???? அவ்வளவு நல்லவரா நம்ம ஆரன் அண்ணா???

நம்ம ஆரன் அண்ணாவ ஜென்டில்மன் ஆக்கிடாதீங்க மதி... :D
உண்மை தான் ரசிகரே.. நானும் அதையே தான் கடைபிடிக்கிறேன்.. பழைய பாகங்களை படித்து அந்த கதாபாத்திரங்கள் பேரை எடுக்கிறேன். இனிமே இதற்குத் தனியே ஒரு இண்டெக்ஸ் தயாரிக்க வேண்டும்..

அப்புறம் ஒரு ரகசியம்... இந்தக் கதையை முழுமையாக எழுதவேண்டுமென்றால் எப்படியும் ஆறு மாத காலமாகும்.. இன்னும் சொல்ல வேண்டிய சிக்கலான பல மேட்டர்களை தொடவே இல்லை.

நேற்று இரவு தாமரையண்ணாவிற்கு முழுக் கதையும் சொன்னேன்... கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேல். பொறுமையாக எல்லா புள்ளியையும் வைத்து ஒவ்வொன்றாக முடிச்சுகளை அவிழ்க்க சொன்னார். திரைக்கதை முக்கியம்ல.. இன்னொன்று.. இதை ஆங்கிலத்தில் எழுதவும் ப்ளான் இருக்கு.

மதி
01-06-2010, 02:55 AM
ஆரென் அண்ணா ஒரு பக்கா ஜெண்டில்மேன்.. கவலைப்படாதீங்க. காலை வாரிவிட்டுட மாட்டோம்.

Nivas.T
05-06-2010, 08:03 AM
மதி,
நல்ல கதையோட்டம், விறுவிறுப்பு, சுவாரசியம், அருமையான தலைப்பு, நிறைய விஷயம் படிச்சு சரியான இடத்துல சரியா இணைச்சுருக்கீங்க, பட்ட கஷ்டம் நல்லா தெரியுது, நல்ல பலனும் உண்டு. வாழ்த்துக்கள் (அடுத்த பதிப்பை நோக்கி)

அன்புரசிகன்
05-06-2010, 03:32 PM
(அடுத்த பதிப்பை நோக்கி)

அதை நீங்கள் நோக்கியபடி இருக்க வேண்டியது தான். நாங்கள் எல்லாம் நோக்கி நோக்கி கழைத்துப்போய்விட்டோம்.

சிவா.ஜி
05-06-2010, 03:59 PM
ஆமா..பாருங்க ரொம்பக் களைத்துப்போய்....ஸ்பெல்லிங் மிஸ்டேக்கெல்லாம் பண்றாரு அன்பு....சீக்கிரம் வாங்க மதி.

(ஏற்கனவே வாரம் ஒண்ணுன்னுதான் சொல்லியிருக்கீங்க....இருந்தாலும் ஆவலை அடக்க முடியலையில்ல......)

Nivas.T
05-06-2010, 04:08 PM
அதை நீங்கள் நோக்கியபடி இருக்க வேண்டியது தான். நாங்கள் எல்லாம் நோக்கி நோக்கி கழைத்துப்போய்விட்டோம்.

:icon_rollout: சத்தியமாக?

மதி
06-06-2010, 05:49 AM
கண்டிப்பா எழுதறேன் சீக்கிரமே.. கொஞ்சம் பிஸி அதான்... !! ஹிஹி

மதி
06-06-2010, 07:42 AM
மதி,
நல்ல கதையோட்டம், விறுவிறுப்பு, சுவாரசியம், அருமையான தலைப்பு, நிறைய விஷயம் படிச்சு சரியான இடத்துல சரியா இணைச்சுருக்கீங்க, பட்ட கஷ்டம் நல்லா தெரியுது, நல்ல பலனும் உண்டு. வாழ்த்துக்கள் (அடுத்த பதிப்பை நோக்கி)
நன்றி நிவாஸ்.. சீக்கிரமே அடுத்த பதிப்பைக் கொடுக்கறேன்..!!!

Nivas.T
07-06-2010, 12:48 PM
நன்றி நிவாஸ்.. சீக்கிரமே அடுத்த பதிப்பைக் கொடுக்கறேன்..!!!

:icon_b:

govindh
07-06-2010, 01:49 PM
மீண்டும் ஒரு முறை ....அத்தியாயம் 1-5 மீள் பார்வை பார்த்து விட்டு.... அத்தியாயம் 6 - அமெரிக்காவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு...
அடுத்த நாட்டுக்குப் பயணிக்க ஆவலுடன் தயாராகி விட்டோம்...

விரைவில் ...அடுத்த அத்தியாயம் தாருங்கள்.

Nivas.T
07-06-2010, 04:31 PM
மீண்டும் ஒரு முறை ....அத்தியாயம் 1-5 மீள் பார்வை பார்த்து விட்டு.... அத்தியாயம் 6 - அமெரிக்காவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு...
அடுத்த நாட்டுக்குப் பயணிக்க ஆவலுடன் தயாராகி விட்டோம்...

விரைவில் ...அடுத்த அத்தியாயம் தாருங்கள்.

இதை நான் வழிமொழிகிறேன் :D

மதி
07-06-2010, 04:49 PM
கி.பி. 1895.
நியூயார்க் நகரம். இன்றைய கால நகரத்தைப் போல இல்லை. அது ஜூன் மாதத்தில் ஒரு நாள். தெருவில் குதிரை பூட்டிய சாரட் வண்டிகளும் ட்ராம் வண்டிகளுக்காக போடப்பட்டிருந்த இருப்புப் பாதைகளும் அமையப்பெற்ற அழகை பறைசாற்றின. கோட் சூட் அணிந்த கனவான்களும் அவர்களின் தரையைப் பெருக்கும் வகையில் நீளமான கவுன் அணிந்த இல்லத்தரசிகளும் குதிரைவண்டியில் ஏறி பயணிக்கும் காட்சி சர்வசாதாரணம். கப்பல் வணிகமும் இதர வணிகமும் அந்நகரை பேர் பெற்ற நகராக்கியிருந்தது. அவ்வப்போது கப்பலில் வந்திறங்கும் பொருட்களை வாங்க நாடெங்கிலும் இருந்து வரும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதும்.


http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_Newyork.jpg

(1895-ம் காலத்திய நியூயார்க்)


பிரபலமான ஹூஸ்டன் தெருவில் இருந்தது அந்த இரண்டு மாடி கட்டிடம். இரண்டாம் மாடியில் மங்கலான விளக்கு வெளிச்சத்தில் அந்த நபர் தீவிரமான வேலையிலிருந்தார். எவ்வளவு நேரம் அப்படி இருந்திருப்பாரென்று அவருக்குத் தெரியாது. சிறுவயதிலிருந்தே அப்படி தான். அவரது பயணம் நாடுகள் கடந்தது. 1856ல் செர்பியாவில் பிறந்து பின் ப்ரான்ஸ் சென்று படிப்படியாக முன்னேறி இப்போது அமெரிக்காவில். இதுவரையிலுமே அவர் செய்திருக்கும் சாதனைகள் ஏராளம். ஆயினும் அதைப்பற்றியெல்லாம் அக்கறைப்படாமல் அந்த கடின செய்முறையில் ஈடுபட்டிருந்தார். உண்மையிலேயே அவருக்கு அறிவியலில் இருந்த திறமை அதை பிரசுரிப்பதில் இல்லை. இதனாலேயே பல கண்டுபிடிப்புகளை அவர் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிருந்தது. அவர் நிக்கோலா டெஸ்லா. அவரின் எண்ணற்ற கண்டுபிடிப்புகளும் குறிப்பிடத்தக்கது ரேடியோ. ஆம். அவர் தான் ரேடியோவிற்கான உரிமையை பெற்றவர்.

அவர் தான் அந்த நேரத்தில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இரவு மணி எட்டை தாண்டியிருந்தது. சாப்பிட்டிருக்கவில்லை. இன்னும் சற்று நேரத்தில் தெரு முனையிலுள்ள பேக்கரியை மூடிவிடுவார்கள். அவரின் ஆராய்ச்சிக் கூடமே அவரின் தங்குமிடமும். எப்போதும் உடல்நலத்திலும் சுத்தத்திலும் மிகவும் அக்கறை கொண்டவர். ஆயினும் அன்று மிகமுக்கிய வேலையில் ஈடுபட்டிருந்ததால் சாப்பிடவும் தோணாமல் இருந்தார்.



http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_Tesla_lab.jpg
(டெஸ்லாவின் சோதனைக்கூடம்)


சற்று நேரத்தில் அவர் அறைக்கதவு தட்டப்பட்டது. கவனம் கலைந்து கதவைத் திறந்தால் நீண்ட அங்கி அணிந்த அந்த நபர் புன்சிரிப்புடன் நின்றிருந்தார். அதுவரை இருந்த களைப்பெல்லாம் நீங்கி அவரை வரவேற்றார் டெஸ்லா.

உள்நுழைந்த அந்த நபர் சுற்றும் முற்றும் பார்த்தார். சோதனைக்கூடம் சுத்தமாய் இருந்தது. அழுக்கைக் கண்டால் டெஸ்லாவிற்கு அலர்ஜி என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. டெஸ்லாவை இதற்கு முன் ஒரு முறை தான் சந்தித்திருக்கிறார். இரு வாரங்களுக்கு முன் நடந்த சந்திப்பு அது.
சம்பிரதாயமாய் வரவேற்ற டெஸ்லா அவர் கையில் இருந்த ரொட்டி பாக்கெட்டைப் பார்த்து புன்னகைத்தார். அவர் வருவது கூட மறந்து போய் எதுவும் வாங்கி வைக்கவில்லை. செர்பிய வாடை அடிக்கும் ஆங்கிலத்தில் பேச்சைத் தொடங்கினார்.

“வாங்க. என் அழைப்பை ஏற்று வந்தமைக்கு மிக்க நன்றி.”

தலையில் இருந்த முண்டாசை சரி செய்து கொண்டே திட்சன்யமான பார்வையில் கனிவாய் அவரைப்பார்த்து புன்னகைத்தார் அவர்.

“நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அன்று உங்களுடன் நடத்திய உரையாடல் தான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்துள்ளது.”

“உண்மையில் நாம் இருவரும் சாராவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்”

மௌனமாய் தலையசைத்தார் அந்த நபர்.

அவர் நினைவில் கடந்த இரு வருடத்திய சம்பவங்கள் ஓடின. இருவருடங்களுக்கு முன் அமெரிக்கா நாடே விழாக் கோலம் பூண்டிருந்தது. உலகிலிருந்து பெரிய பெரிய தலைவர்கள் எல்லோரும் வந்திருந்தனர். எல்லோருடைய பேச்சும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அந்த நபரும் அழைக்கப்பட்டிருந்தார். இளையவராயிருந்த அவரைப்பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்பட்டனர். மாபெரும் கூட்டத்தைப்பார்த்து சிறிது கலக்கமிருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் எழுந்த அவர், ‘அமெரிக்க சகோதரர்களே சகோதரிகளே’ என விளித்தது தான். அங்கு கூடியிருந்த மாபெரும் கூட்டமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது. சத்தம் அடங்க இரண்டு நிமிடங்களுக்கும் மேலானது.

அவர் சுவாமி விவேகானந்தா.

இந்தியாவையும் இந்து பௌத்த மதங்களைப்பற்றியும் பேச வந்திருந்தார் அவர். அன்று அவர் ஆற்றிய உரையும் அதற்கு மேற்கோள் காட்டி அவர் பேசிய பகவத் கீதையும் பலரையும் ஈர்த்தது. அவரில் ஒருவர் சாரா பெர்ன்ஹார்ட். ப்ரெஞ்ச் நாடக நடிகை. சிறுவயதிலிருந்தே நாடகத்தில் பால் ஈர்ப்பு கொண்டவரான அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த நாடக நடிகை என பெயர் பெற்றவர்.

இருமுறை விவாகரத்து பெற்றிருந்த நிலையில் தான் சுவாமி விவேகானந்தாவின் பேச்சினால் ஈர்க்கப்பட்டார் சாரா. அந்த பிரபலமான உரைக்குப் பின் பல இடங்களில் சொற்பொழிவாற்றினார் விவேகானந்தர். 1895ம் வருடம் நியூயார்க் நகரில் இருமாதங்கள் வேதாந்தம் பற்றி வகுப்புகள் எடுத்த போது அறிமுகமானாள் சாரா. ஒரு நாள் சுவாமியிடம் சாரா,

“சுவாமிஜி, நாளை நான் நடிக்கும் நாடகம் நியூயார்க் செண்ட்ரல் திரையரங்கில் நடக்க இருக்கிறது. தாங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.”

சற்று நேரம் யோசித்த அவர்,

“உறுதியாக சொல்ல இயலாது. கலந்து கொள்ள முயற்சிக்கிறேன். என்னை எதிர்பார்க்க வேண்டாம்.”

கேளிக்கைகளிலும் நாடகங்களிலும் சுவாமிக்கு ஈடுபாடு இருக்காது என்று தெரிந்திருந்ததால் பெரிதாய் ஏமாற்றம் கொள்ளவில்லை சாரா. வழக்கம் போல் நாடக ஒத்திகைக்கு சென்றாள்.

அடுத்த நாள் நாடகம் ஆரம்பமானது. ‘இஸிஎல்’ என்னும் ப்ரெஞ்ச் நாடகம் அது. இஸிஎல் என்ற கதாபாத்திரமாகவே நடித்தாள் சாரா. புத்தரின் வரலாறு சொல்லும் நாடகம். நாடகம் நடந்து கொண்டிருக்கையிலேயே பி வரிசையில் அமர்ந்திருந்த சுவாமிஜியை கண்டுகொண்டாள் சாரா. மனம் சொல்லாத களிப்புற்றது. சுவாமியின் மேலிருந்த மரியாதை இன்னும் அதிகமாகியது. இடைவேளையின் போது வேகவேகமாக ஓடி வந்த சாரா சுவாமியை வணங்கி,

“நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை”

வழக்கமான புன்முறுவலை பதிலாய் அளித்தபடி

“புத்தரின் வாழ்க்கை பற்றிய நாடகமென்று அறிந்தேன். பார்க்கலாமென்று வந்தேன்”

“மிக்க மகிழ்ச்சி. நாடகம் முடிந்ததும் விருந்து நடக்க இருக்கிறது. கண்டிப்பாய் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமான ஒரு நபரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.”

மறுக்காமல் தலையாட்டினார் சுவாமிஜி.

இடைவேளைக்கு பின் நடந்த நாடகத்தில் சாராவின் நடிப்பு இன்னும் மெருகேறியிருந்தது. அவளின் குருநாதர் தன் நாடகத்தைப்பார்த்து கொண்டிருக்கிறார் என்ற பூரிப்பு அது.

நாடகம் முடிந்ததும் நடந்த கேளிக்கைகளில் ஈடுபடாமல் ஓரமாய் இருந்த மேஜையில் அந்த இருவரும் அமர்ந்திருந்தனர். சுவாமிஜி மற்றும் டெஸ்லா. டெஸ்லாவின் நீண்ட நாள் தோழி சாரா. அவரின் அறிவியல் அறிவை அறிவாள்.

நூறு வருடங்கள கழிந்து உலகையே உலுக்கப்போகும் சந்திப்பு அது என்பதை சாரா அறிந்திருக்கவில்லை. சுவாமி விவேகானந்தாவும் டெஸ்லாவும் அறிந்திருக்கவில்லை.

பார்த்தவுடனே சுவாமிஜி மேல் ஈர்ப்பு வந்தது டெஸ்லாவிற்கு. ‘என்ன பெரிதாய் பேசப்போகிறார்’ என்ற எண்ணம் மறைய ஆரம்பித்தது. சாராவின் வற்புறுத்தலுக்காக தான் இந்த சந்திப்புக்கு ஒத்துக் கொண்டிருந்தார் அவர். ஆனால் சுவாமிஜி பேசப்பேச அவர் மேல் மரியாதை கூடியது.

“உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். நீங்கள் சொல்லும் வேதாந்தங்களும் பகவத் கீதையும் இல்லாத ஒன்றை தானே சொல்கின்றன.”

“அப்படி இல்லை. இந்த உலகம் இருவேறு உந்து சக்திகளால் இயங்குகிறது. ப்ராணம் ஆகாஷம். இவற்றில் ஆரம்பிப்பது தான் எந்த ஜீவனுமே. இதை தான் எங்கள் வேதாந்தங்கள் சொல்கின்றன.”

மேலும் அவர் பேச அவரின் பால் ஈர்க்கப்பட்டார் டெஸ்லா. அவர் செய்து கொண்டிருந்த பல சோதனை முயற்சிகளுக்கான விடை வேதாங்களிலும் வேதாந்தங்களிலும் இருப்பதாய் தெரிந்தது.

‘உலகம் உந்து சக்தியினால் இயங்குகிறது’ என்பதை கணித ரீதியாக நிரூபிக்கமுயன்ற அவருக்கு ஆகாசம், ப்ராணம் ஆகியவற்றிற்கான அர்த்தங்கள் புதிய பாதையை கொடுத்தது.

“சுவாமிஜி. உங்களுடன் நிறைய பேச வேண்டும். எனக்குத் தேவையான பல விஷயங்கள் உங்கள் வேதாந்தங்களில் இருக்கிறது. இன்னும் இருவாரங்களில் என் வீட்டிற்கு வர முடியுமா?”

அழைப்பை ஏற்றார் விவேகானந்தர். அதன்விளைவே அவரின் வருகை. வருவதற்குமுன் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் தான் சந்திக்கப்போவதைப்பற்றியும் தான் எவ்வளவு ஆர்வமாய் இருக்கிறேன் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

நினைவில் ஓடிய நிகழ்வுகளை அசைபோட்ட விவேகானந்தர் நேரத்தை சற்றும் வீணாக்காமல் டெஸ்லாவுடன் விவாதத்தில் பங்குகொண்டார். டெஸ்லா சக்தி என்பதற்காக தான் செய்த ஆராய்ச்சிகளை விளக்க விவேகானந்தருக்கு ஆச்சர்யம். வேதாந்தங்களில் எழுதிய வைத்தவைகளை நிரூபிக்க முடியும் என்கிற நம்பிக்கை அவருக்குப் பிறந்தது. அதற்கு ஏற்றாற் போல் அது வரை தான் செய்திருந்த சோதனைகளை திருப்பி செய்து காண்பித்தார் டெஸ்லா. இறுதியாகடெஸ்லாவின் வேண்டுகோளின் படி அவருக்கு வேதாந்தங்களைப் பற்றி சொல்லித் தர ஒத்துக் கொண்டார்.

பின் இருவரும் மீண்டும் சந்திப்பதாய் முடிவு கொண்டு பிரிந்தனர். அடுத்த இருமாதங்கள் இருவருக்கும் பரபரப்பாய் கழிந்தது. ஏற்கனவே ஒத்துக் கொண்ட கூட்டங்களில் பங்கு கொண்டு சொற்பொழிவாற்றிய நிலையில் நான்கைந்து முறை டெஸ்லாவை சந்தித்து வேத சூத்திரங்களை விளக்கினார். அண்ட வெளியில் உயிர் சக்தி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அலைகள் மூலம் செய்தி பரிமாறும் முறைகளைப் பற்றியும் அலசினர். முடிவில் டெஸ்லாவிற்குள் அந்த அறிவியல் அற்புதம் நிகழ்ந்தது. சுவாமிஜியிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயங்களை மேலும் ஆராய்ந்து மின்காந்த அலைகள் மூலமாக செய்திகள் பரிமாறும் அதிசயம் கண்டார். மேலும் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்த அவர் 1930-களில் செய்த ஆராய்ச்சி அவரை நிலைகுலையச் செய்தது.

தனது கண்டுபிடிப்பு எவருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்த அவர் தன் நண்பர் மூலமாக ஐரோப்பாவில் அதை பாதுகாப்பாக பதுக்கி வைக்க சொன்னார். கிட்டத்தட்ட பத்தாண்டுக்கும் மேலாக மிகுந்த ரகசியமாக அது இருந்தவரை பிரச்சனைகள் ஏதும் வராமலிருந்தது. சரியாக டெஸ்லா இறந்து 10 வருடம் கழித்து அந்த ரகசியங்கள் அடங்கிய ஆராய்ச்சிக் குறிப்புகள் ரஷ்யரிடம் சிக்கியது.

கி.பி. 2010
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க். அழகாக வர்ணனைகளால் எழுதப்பட்ட அந்தக் குறிப்புகளைப் படித்த அவர், நியான் விளக்கு வெளிச்சத்தில் சிந்தனையோடு எதிரில் அமர்ந்து நேவா நதியை வெறித்துக் கொண்டிருந்த மிகைல் ப்ராட்கோவை பார்த்தார். பின் தொண்டையை கனைத்து கொண்டு பேச ஆரம்பித்தார்.

மதி
07-06-2010, 04:52 PM
இதுவரை இக்கதையை தொடர்ந்து வந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.. உண்மையிலேயே கனமான கரு என்பதால் நீண்ண்ண்ண்ட நேரம் எடுத்து எழுதுகிறேன். இந்தப்பகுதி வழக்கமான பகுதியைப் போல் இருக்காது. இருந்தாலும் வேறு வழியில்லை... சொல்லித் தானாக வேண்டும்..!! :)

சிவா.ஜி
07-06-2010, 04:57 PM
ஆபீஸ் முடியப்போகுதுங்ண்ணா....நாளைக்கு வந்து படிச்சிக்கிறேனுங்க....!!!

மதி
07-06-2010, 05:03 PM
ஆபீஸ் முடியப்போகுதுங்ண்ணா....நாளைக்கு வந்து படிச்சிக்கிறேனுங்க....!!!
:icon_b:

அக்னி
07-06-2010, 06:48 PM
1956ல் செர்பியாவில் பிறந்து
கவனிக்க...

திரும்ப எல்லாத்தையும் வாசிச்சு அப்புறமா பின்னூட்டம் வந்துட்டே இருக்கு...

பா.ராஜேஷ்
07-06-2010, 09:51 PM
யப்பா.... என்னமா யோசிக்கீறீங்க... !!!???? சுத்தல்ல இருந்து கொஞ்சமாவது எங்கள வெளில கொண்டு வாங்க ... முடியல... :D

govindh
07-06-2010, 09:56 PM
அத்தியாயம் 7....
அறிவியல் வளர்ந்த வரலாற்றுக் கதை....
அதுவும் படத்துடன் விளக்கக் குறிப்புகள்....
மிக நன்று....
அசத்துங்கள் மதி.....
வாழ்த்துக்கள்....விரைவில் தொடருங்கள்....

கீதம்
07-06-2010, 10:11 PM
பிரமாதம் என்பதைவிடவும் வேறு சொல்லத் தெரியவில்லை.

கதையின் பின்னோக்கிய நிகழ்வுகள்,
நம்மைக் கடந்தகாலத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டன.
மெய்ஞ்ஞானி விவேகானந்தர் மற்றும் விஞ்ஞானி டெஸ்லாவின்
சந்திப்பை ஒளிந்திருந்து பார்ப்பதைப் போலொரு குற்ற உணர்வினை
எங்களுக்குத் தந்ததில் இருக்கிறது, உங்கள் எழுத்தின் வெற்றி!

ஒரு கனத்த கருவை அடிப்படையாய்க் கொண்டு,
கதையை பல கோணங்களிலும் துவங்குவதில் தெரிகிறது,
உங்களுடைய அதீத தன்னம்பிக்கை!

இத்தகையக் கதைகளுக்கு அபார அறிவியல் அறிவும்,
ஆழ்ந்த கற்பனையும், கூடுதல் கவனமும், கடின உழைப்பும் தேவை.
எனவே அவசரமின்றி பொறுமையாய்
அத்தியாயங்களைத் தொகுத்து அளியுங்கள்.
ஆவலைத் தூண்டும் கிரைம் கதை படைக்கும் உங்களை
மனமார வாழ்த்துகிறேன்.

மதி
07-06-2010, 11:55 PM
கவனிக்க...

திரும்ப எல்லாத்தையும் வாசிச்சு அப்புறமா பின்னூட்டம் வந்துட்டே இருக்கு...
மிக்க நன்றி அக்னி.. பைத்தியம் பிடித்தது போல் அங்கே இங்கே நகராமல் 2 மணி நெரமாய் எழுதினேன். திரும்ப ஒரு முறை படித்துப் பார்க்க கூட தோன்றவில்லை.

மதி
08-06-2010, 12:05 AM
யப்பா.... என்னமா யோசிக்கீறீங்க... !!!???? சுத்தல்ல இருந்து கொஞ்சமாவது எங்கள வெளில கொண்டு வாங்க ... முடியல... :D

அபிமன்யு மாதிரி தான் நானும்.. சுத்த ஆரம்பித்து விட்டேன். எப்படி வெளியே வர்றதுனு தெரியல.. மிக்க நன்றி ராஜேஷ்.


அத்தியாயம் 7....
அறிவியல் வளர்ந்த வரலாற்றுக் கதை....
அதுவும் படத்துடன் விளக்கக் குறிப்புகள்....
மிக நன்று....
அசத்துங்கள் மதி.....
வாழ்த்துக்கள்....விரைவில் தொடருங்கள்....
நன்றி கோவிந்த்.


பிரமாதம் என்பதைவிடவும் வேறு சொல்லத் தெரியவில்லை.

கதையின் பின்னோக்கிய நிகழ்வுகள்,
நம்மைக் கடந்தகாலத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டன.
மெய்ஞ்ஞானி விவேகானந்தர் மற்றும் விஞ்ஞானி டெஸ்லாவின்
சந்திப்பை ஒளிந்திருந்து பார்ப்பதைப் போலொரு குற்ற உணர்வினை
எங்களுக்குத் தந்ததில் இருக்கிறது, உங்கள் எழுத்தின் வெற்றி!

ஒரு கனத்த கருவை அடிப்படையாய்க் கொண்டு,
கதையை பல கோணங்களிலும் துவங்குவதில் தெரிகிறது,
உங்களுடைய அதீத தன்னம்பிக்கை!

இத்தகையக் கதைகளுக்கு அபார அறிவியல் அறிவும்,
ஆழ்ந்த கற்பனையும், கூடுதல் கவனமும், கடின உழைப்பும் தேவை.
எனவே அவசரமின்றி பொறுமையாய்
அத்தியாயங்களைத் தொகுத்து அளியுங்கள்.
ஆவலைத் தூண்டும் கிரைம் கதை படைக்கும் உங்களை
மனமார வாழ்த்துகிறேன்.
நன்றி கீதம். நீங்கள் சொன்னது போல் எதுவும் தேவையில்லை. அறிவியல் அறிவெல்லாம் கிடையாது. இந்த கதையிலேயே எனக்கு மிகவும் பிடித்த பகுதி இது. எதைப் பற்றியோ தேடும் போது இந்த சந்திப்பு பற்றி தெரிய வர தோண்ட ஆரம்பித்தேன். இந்த அத்தியாயத்தில் வரும் சம்வங்கள் பெயர்கள் 90% உண்மையே.. ஆனால் எழுத நிறைய தடுமாற வேண்டியிருந்தது.

தாமரை
08-06-2010, 01:38 AM
ஆபீஸ் முடியப்போகுதுங்ண்ணா....நாளைக்கு வந்து படிச்சிக்கிறேனுங்க....!!!

அடப் பாவமே... ஆஃபீஸை முடிச்சே முடிச்சிட்டீங்களா?:eek::eek::eek:

மதி
08-06-2010, 01:51 AM
அடப் பாவமே... ஆஃபீஸை முடிச்சே முடிச்சிட்டீங்களா?:eek::eek::eek:
:D:D:D:D:lachen001::lachen001::lachen001::lachen001:

தாமரை
08-06-2010, 02:07 AM
இதுவரை இக்கதையை தொடர்ந்து வந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.. உண்மையிலேயே கனமான கரு என்பதால் நீண்ண்ண்ண்ட நேரம் எடுத்து எழுதுகிறேன். இந்தப்பகுதி வழக்கமான பகுதியைப் போல் இருக்காது. இருந்தாலும் வேறு வழியில்லை... சொல்லித் தானாக வேண்டும்..!! :)

கரு கனமா இருக்குன்னு சிசேரியன் பண்ணிடாதீங்க... நார்மல் டெலிவரிக்கே முயற்சி பண்ணுங்க மதி...:icon_ush::icon_ush::icon_ush:

மதி
08-06-2010, 02:11 AM
கரு கனமா இருக்குன்னு சிசேரியன் பண்ணிடாதீங்க... நார்மல் டெலிவரிக்கே முயற்சி பண்ணுங்க மதி...:icon_ush::icon_ush::icon_ush:
ஹாஹா.. அதெல்லாம் என் கையிலா இருக்கு..?

தாமரை
08-06-2010, 02:39 AM
ஹாஹா.. அதெல்லாம் என் கையிலா இருக்கு..?

முயற்சி நம்ம கையில்தான் இருக்கு.,. முடிவுதான் இல்லை...

மதி
08-06-2010, 02:55 AM
முயற்சி நம்ம கையில்தான் இருக்கு.,. முடிவுதான் இல்லை...
இதுல ஏதும் உள்குத்து இல்லியே..!!??

Akila.R.D
08-06-2010, 04:11 AM
நீங்களும் சுத்தி எங்களையும் சுத்த வைக்கறீங்க...

இந்த மாதிரி கதையை ஆரம்பிக்க ரொம்ப தைரியம் வேணும்...

பாராட்டுக்கள்..

மதி
08-06-2010, 04:47 AM
நீங்களும் சுத்தி எங்களையும் சுத்த வைக்கறீங்க...

இந்த மாதிரி கதையை ஆரம்பிக்க ரொம்ப தைரியம் வேணும்...

பாராட்டுக்கள்..
நன்றி அகிலா. எல்லாம் குருட்டு தைரியம் தான்.

தாமரை
08-06-2010, 05:14 AM
விவேக் - டெஸ்லா மீட்டிங்கை இவ்வளவு சீக்கிரம் சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கலை மதி...

அதான் அப்படிச் சொன்னேன்,

மதி
08-06-2010, 05:26 AM
விவேக் - டெஸ்லா மீட்டிங்கை இவ்வளவு சீக்கிரம் சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கலை மதி...

அதான் அப்படிச் சொன்னேன்,

இது ஏற்கனவே முடிவு பண்ணிருந்தேன். இரண்டு பாகமாக எழுதலாம்னு இருந்தேன். ஆனால் உண்மை சம்பவங்களைத் திரிக்க விரும்பவில்லை. மேலும் அவர்களின் அறிவியல் சார்ந்த உரையாடல்களை யோசித்து தமிழில் எழுத கஷ்டமாக இருந்தது.. அதான் ஒரு பாகத்திலேயெ முடித்து விட்டேன். இதில் இருக்கும் 90% உண்மை...

தாமரை
08-06-2010, 05:30 AM
இது ஏற்கனவே முடிவு பண்ணிருந்தேன். இரண்டு பாகமாக எழுதலாம்னு இருந்தேன். ஆனால் உண்மை சம்பவங்களைத் திரிக்க விரும்பவில்லை. மேலும் அவர்களின் அறிவியல் சார்ந்த உரையாடல்களை யோசித்து தமிழில் எழுத கஷ்டமாக இருந்தது.. அதான் ஒரு பாகத்திலேயெ முடித்து விட்டேன். இதில் இருக்கும் 90% உண்மை...

மதி நான் சொல்றது உங்களுக்குமா புரியலை..

நான் இந்த மீட்டிங்கை 15 ஆவது பாகத்துக்கு மேல்தான் எதிர்பார்த்தேன்...

நீங்க 7 வது பாகத்திலயே காட்டிட்டீங்க... பில்டப்பை குறைச்சிட்டீங்களே... ஹி ஹி...

சிவா.ஜி
08-06-2010, 05:50 AM
கீதம் சொன்னதை வரிக்கு வரி வழிமொழிகிறேன். உங்களுடைய இந்த திடீர் விஸ்வரூபம்...ஆச்சர்யமளிக்கிறது. உண்மையிலேயே....இந்தக் கதை உங்கள் எழுத்து வாழ்க்கையின் ஒரு மைல்கல். இது இந்த மன்றத்தில் மட்டுமில்லாமல்... உலகமெங்கும்...பிரபலமடையப் போகிறது.

இந்த அத்தியாயத்தைப் படித்ததும் பிரமித்துவிட்டேன். உங்கள் தேடலின் ஆழ அகலங்கள் பார்த்து அதிசயித்துவிட்டேன். மனமார்ந்தப் பாராட்டுக்கள்.

தொடருங்க மதி...ஒரு காலத்தில் மிகப்பிரபலமடையப் போகும் இந்தக் கதையை முதலில் வாசிப்பவர்கள் என்ற பெருமையோடு காத்திருக்கிறோம்.

மதி
08-06-2010, 05:50 AM
மதி நான் சொல்றது உங்களுக்குமா புரியலை..

நான் இந்த மீட்டிங்கை 15 ஆவது பாகத்துக்கு மேல்தான் எதிர்பார்த்தேன்...

நீங்க 7 வது பாகத்திலயே காட்டிட்டீங்க... பில்டப்பை குறைச்சிட்டீங்களே... ஹி ஹி...

இதுவரை கொடுத்த பில்டபே தாங்கல.. எல்லா புள்ளிகளையும் ஆரம்பிசதும்..... க்ளைமாக்ஸுக்கு தாவிட வேண்டியது தான்...

மீட்டிங் மட்டும் தானே இப்போ நடந்திருக்கு... அந்த மேட்டர்..??:icon_b:

மதி
08-06-2010, 06:07 AM
கீதம் சொன்னதை வரிக்கு வரி வழிமொழிகிறேன். உங்களுடைய இந்த திடீர் விஸ்வரூபம்...ஆச்சர்யமளிக்கிறது. உண்மையிலேயே....இந்தக் கதை உங்கள் எழுத்து வாழ்க்கையின் ஒரு மைல்கல். இது இந்த மன்றத்தில் மட்டுமில்லாமல்... உலகமெங்கும்...பிரபலமடையப் போகிறது.

இந்த அத்தியாயத்தைப் படித்ததும் பிரமித்துவிட்டேன். உங்கள் தேடலின் ஆழ அகலங்கள் பார்த்து அதிசயித்துவிட்டேன். மனமார்ந்தப் பாராட்டுக்கள்.

தொடருங்க மதி...ஒரு காலத்தில் மிகப்பிரபலமடையப் போகும் இந்தக் கதையை முதலில் வாசிப்பவர்கள் என்ற பெருமையோடு காத்திருக்கிறோம்.

நன்றி சிவாண்ணா...
எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பித்தது... எங்கெங்கோ என்னை செலுத்துகிறது. விஸ்வரூபம் எல்லாம் இல்லை...
நீங்கள் இந்தியா வந்திருந்தப்போ உங்களிடம் சொன்னேன் இந்த கதை பத்தி.
எல்லத்தையும் இணைக்கனும்... அதில் தான் இருக்கிறது வில்லங்கமே.. முயற்சிக்கறேன்..

தாமரை
08-06-2010, 06:49 AM
கீதம் சொன்னதை வரிக்கு வரி வழிமொழிகிறேன். உங்களுடைய இந்த திடீர் விஸ்வரூபம்...ஆச்சர்யமளிக்கிறது. உண்மையிலேயே....இந்தக் கதை உங்கள் எழுத்து வாழ்க்கையின் ஒரு மைல்கல். இது இந்த மன்றத்தில் மட்டுமில்லாமல்... உலகமெங்கும்...பிரபலமடையப் போகிறது.

இந்த அத்தியாயத்தைப் படித்ததும் பிரமித்துவிட்டேன். உங்கள் தேடலின் ஆழ அகலங்கள் பார்த்து அதிசயித்துவிட்டேன். மனமார்ந்தப் பாராட்டுக்கள்.

தொடருங்க மதி...ஒரு காலத்தில் மிகப்பிரபலமடையப் போகும் இந்தக் கதையை முதலில் வாசிப்பவர்கள் என்ற பெருமையோடு காத்திருக்கிறோம்.

இதுக்கே இப்படியா? இன்னும் முழுக் கருவும் தெரிஞ்சா? இதெல்லாம் ஜேம்ஸ் காமரூன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மாதிரி ஆளுங்க கிட்ட சேர வேண்டிய கரு சிவா.ஜி... இன்னும் நிறைய நிறைய எதிர்பார்க்கலாம்..

ஒரு 12 ஆஸ்கார் வாங்க வேண்டிய கதை இது...

:icon_b::icon_b::icon_b:

சிவா.ஜி
08-06-2010, 07:01 AM
ஆகா...அப்ப நம்ம மதிக்கு...ரெண்டு ஆஸ்கார் நிச்சயம் உண்டு....இப்பவே அவர்கூட ஒரு போட்டோ எடுத்து வெச்சுக்கனும்.

மதி
08-06-2010, 07:50 AM
இதுக்கே இப்படியா? இன்னும் முழுக் கருவும் தெரிஞ்சா? இதெல்லாம் ஜேம்ஸ் காமரூன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மாதிரி ஆளுங்க கிட்ட சேர வேண்டிய கரு சிவா.ஜி... இன்னும் நிறைய நிறைய எதிர்பார்க்கலாம்..

ஒரு 12 ஆஸ்கார் வாங்க வேண்டிய கதை இது...

:icon_b::icon_b::icon_b:
இவ்ளோ பில்டப்பு தேவையா...???!!!:eek::eek::eek:

மதி
08-06-2010, 07:52 AM
ஆகா...அப்ப நம்ம மதிக்கு...ரெண்டு ஆஸ்கார் நிச்சயம் உண்டு....இப்பவே அவர்கூட ஒரு போட்டோ எடுத்து வெச்சுக்கனும்.
முதல்ல கார் வாங்குவோம் அப்புறம் ஆஸ்கார் பத்தி பாக்கலாம்... ஏன் சும்மா இருக்கறவன உசுப்பேத்திக்கிட்டு..:traurig001::traurig001::traurig001:

அன்புரசிகன்
08-06-2010, 09:35 AM
இத அப்படியே சங்கரிடம் கொடுத்தால் அடுத்த 5-6 பில்லியன் பட்ஜட் இல் படம் எடுத்துடுவார். என்னமா எழுதுறீங்க.. லேட்டானாலும் அசத்துறீங்க...

எப்படித்தான் முடியுதோ.. விவேகானந்தரின் விளக்கவுரைகளால் கவர்ந்த அந்த சந்திப்புக்களை அழகாக கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் மதியண்ணா...

சிவா.ஜி
08-06-2010, 10:03 AM
ஆஸ்கார் வாங்கினதுக்கு அப்புறம் நீங்க "ஆஸ்க்"காமலேயே கார் வந்து வீட்டுமுன்னால நிக்கும் மதி...கவலைப்படாதீங்க....!!!

Nivas.T
11-06-2010, 08:05 AM
கீதம் சொன்னதை வரிக்கு வரி
தொடருங்க மதி...ஒரு காலத்தில் மிகப்பிரபலமடையப் போகும் இந்தக் கதையை முதலில் வாசிப்பவர்கள் என்ற பெருமையோடு காத்திருக்கிறோம்.

வார்த்தைகளே இல்லை மதி உங்களை பாராட்ட,


சிவா அண்ணன் கூறிய வார்த்தைகள் கண்டிப்பாக உண்மையாகும். வாழ்த்துகள்!

பாரதி
11-06-2010, 09:27 AM
ஒரு மாத காலம் படிக்காமல் விட்டுப்போயிருந்த பாகங்கள் அனைத்தையும் இப்போது படித்து முடித்தேன். ரொம்ப நல்லா இருக்கு மதி.

முடிவு தெரியாமல் இத்தனை விளக்கமாக நீங்கள் எழுதி இருப்பீர்கள் என்று நாங்கள் நம்ப வேண்டுமா என்ன? நண்பர்களுடன் நானும் ஆவலுடன் அடுத்த பாகம் வாசிக்க காத்திருக்கிறேன்.

மதி
20-06-2010, 11:37 AM
இந்தக் கதையை தொடரும் எல்லோருக்கும் நன்றி.. சில விஷயங்களினால் அடுத்த பாகம் எழுதுவது தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.. இன்னும் சில தினங்களில் தெளிவாகும் என்று நம்புகிறேன். அதற்கப்புறம் முழுமூச்சுடன் எழுதுகிறேன். அதுவரை உங்கள் பொறுமையை வேண்டுகிறேன்..!

அன்புரசிகன்
20-06-2010, 11:45 AM
இனிமேல் அத்தியாயம் நம்பர போடாம பதியுற திகதிய போடுங்க... அப்ப தான் ஏமாறமாட்டோம். ஒவ்வொருதடவையும் வந்து பார்த்து ஏமாந்திடுறேன். :D

அடுத்த april fool அன்று நீங்கள் ஒரு அத்தியாய இலக்கத்தை அதிகமாக போட்டு ஏமாற்றலாம். எப்படி ஐடியா??

பாரதி
20-06-2010, 11:46 AM
அதுவரை உங்கள் பொறுமையை வேண்டுகிறேன்..!
எங்க பொறுமையை உங்ககிட்ட கொடுத்துட்டா.... அப்புறம் நாங்க அவசரப்பட வேண்டியிருக்குமே..!:lachen001::icon_rollout:

அமரன்
20-06-2010, 12:11 PM
எத்தனை தொடர்கதையப்பா மன்றத்தில்.

ஒவ்வொன்றையும் ஞாபகத்தில் வைத்து வாசித்து.... அப்பப்பா... தேர்வுக்காலங்கள் பரவாயில்லை போல..

தலைப்பே வா வா என்கிறது மதி..

கொஞ்சம் ஆறுதலாவே போங்க ஈடுகொடுத்து நானும் வரனும்ல.

samuthraselvam
21-06-2010, 06:34 AM
ஹா ஹா... மதியின் "உன்னை தற்கொலை செய்யவா " கதையில் ஒவ்வொரு பாகமும் சுவாரசியமாக இருக்குக்கிறது... மதி... சூப்பர் 'மதி'?!? சரியான ஊர் சுத்தி நீங்க...!:aetsch013: கதையைப் படித்தால் பிரமிப்பாக இருந்தாலும் அனைவரின் பின்னூட்டங்களும் அவைகளுக்கு உங்களின் பதிலும் சிரித்து சிரித்து வயிற்று வலியே வரவைத்துவிட்டது...

தலைப்பு மட்டும் எங்களை நோக்கி கேட்கிறாமாதிரியே இருக்குப்பா...:eek:

முகப்பு படம் அருமை... தலைப்புக்கு ஏற்றமாதிரி அமைந்துவிட்டது... நான் இன்று தான் முழுமையாகப் படித்தேன்..:icon_b:(அப்பாடி தப்பிச்சேன்:traurig001:)

மன்ற மக்கள் எவ்வளவு பொறுமைசாலிகள்... ரொம்ப நல்லவுங்க...
மக்களே உங்க பொறுமை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...!! அயம் வெ(றி)ரி ப்ரோவுட் ஆப் யூ... கொலவெறிதான் வேறென்ன?:wuerg019:

இனி நானும் அவங்க லிஸ்டில் சேர்ந்துட்டேனே...! என் பங்குக்கு நானும் கேட்கிறேன்... அடுத்த பாகத்தை சீக்கிரமா கொடுங்க தம்பி...:sauer028:

சிவா.ஜி
21-06-2010, 06:49 AM
அண்ணாச்சி....அடுத்த பாகம் என்னாச்சி....காத்துக் காத்து, கண்ணு பூத்தாச்சி....

(பாரதி சொன்ன மாதிரி, பொறுமையை நீங்க வேண்டியதால அதைக் கொடுத்திட்டதால....இந்த அவசரம்....ஹி...ஹி...)

அன்புரசிகன்
21-06-2010, 06:56 AM
அது வேற ஒன்றுமில்ல. மிதவேக போட்டி நடக்குது. ஆரன் அண்ணாவுக்கும் மதி அண்ணாவுக்கும். யாரு கடைசிய முடிக்கிறதென்று.... :D

சிவா.ஜி
21-06-2010, 07:02 AM
அட...ஆமால்ல....ஆரென்னோட கதையும் அங்க...அந்தரத்துல நிக்குதே....!!!

நித்யாவோட ஃப்ளாஷ் பேக்கிலேயே ஃப்ரீஸ் ஆயிடிச்சே....

மதி
21-06-2010, 08:24 AM
இல்லீங்கண்ணா... உண்மையிலேயே அடுத்த பாகத்தை எழுத ஆரம்பிச்சேன்... ஆனாலும் சில தடங்கல்... அப்புறமா சொல்றேன்.. நீங்க ஊருக்கு வரும் போது... கண்டிப்பா அடுத்த பாகத்தை சீக்கிரமே தர முயற்சிக்கிறேன்..

மதி
08-07-2010, 10:10 AM
சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் தொடர்கிறேன். எழுத்தோட்டத்தில் சறுக்கல் இருக்கலாம். தவறாமல் சுட்டுங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கெய்ரோ.
எகிப்தின் தலைநகர்.ஆப்ரிக்கா கண்டத்துலேயே மிகப்பெரிய நகரம். பழங்கால எகிப்தியர்கள் கட்டிய பிரமிடுகள் அவர்கள் வாழ்க்கை முறைக்கு சான்று. கணிதத்தில் சிறந்து விளங்கியவர்கள். மிகவும் பழமைவாய்ந்த நைல் நதி பாலைவனமாயிருந்த அந்தப்பகுதியையே செழிப்பாக்கியது. எப்போதும் பரபரப்பை தன்னகத்தே கொண்ட அங்கே ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் வருவதால் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக் கொண்டு பேசும் கைடுகள். மிக முக்கியமாக சொல்லப்போனால் கிரேக்க மன்னன் ஜூலியஸ் சீயரை மயக்கிய பேரழகி கிளியோபாத்ரா வாழ்ந்த நகரம். ஏனோ அன்று நடக்கப்போகும் அந்த சம்பவத்தை தெரிந்து கொண்ட மாதிரி அதிசயமாய் வானம் தூறல் போட்டுக் கொண்டிருந்தது. மங்கிய நிலவொளியில் வீட்டுக்கு விரைவாக செல்லும் உத்வேகத்தில் பலரும் ரோட்டை ஆக்ரமிக்க ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்.

எதிர்பாராமல் வந்த மழையை நொந்துக் கொண்டே தன் அந்த நூலகத்தை விட்டு வெளியே வந்தாள் நோரா. அழகான பெயர் அவளைப்போலவே. இருபத்திரண்டு முடிந்து இருபத்து மூன்றை நெருங்கும் வயது. நீண்ட கால்கள். கூர்மையான நாசி. கிளியோபாத்ராவை ஒத்த கரிய ஆனால் களையான நிறம். பார்ப்பவர் எவரையும் சுண்டி இழுக்கும் பெரிய கண்கள், மெல்லிய உதடுகள். அந்த பல்கலைக்கழக வளாகத்திலேயே அவளைத் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது.

அன்று ஏனோ ஆராய்ச்சியில் நீண்ட நேரம் மூழ்கி இருந்ததால் ரொம்பவே நேரமாகிவிட்டது. மிகப்பழமையான கெய்ரோ பல்கலைகழகத்தில் அகழ்வாராய்ச்சித் துறையில் முதுகலை படிக்கிறாள். சிறுவயதிலிருந்தே பிரமிடுகளைப்பார்த்து வாழ்ந்ததால் ஏனோ வரலாறு மேல் அளவு கடந்த ஆர்வம். அடம் பிடித்து இந்தப் படிப்பை தேர்ந்தெடுத்திருந்தாள். பெற்றோர் சொந்த ஊரில் இருக்க கெய்ரோவில் சின்னதாய் ஒரு வீடை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தாள். வெளியே வந்தவள் கைக்கடிகாரத்தைப் பார்க்க மணி ஒன்பதை தொட்டுக் கொண்டிருந்தது.

தூரத்தில் விளக்கொளியில் பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்தின் கோபுரம் விளக்கொளியில் மின்னிக் கொண்டிருந்தது. சுற்றிலும் இடமே வெறிச்சோடியிருந்தது.

கைப்பையை தலைக்குப் பிடித்துக் கொண்டு ஓரமாக ஓடினாள். சற்று தூரத்திலேயே மெட்ரோ ரயில் நிலையம். ஐந்து நிமிட ஓட்டமும் நடையுமாக ரயில் நிலையத்தை அடைந்தாள். ஆளரவமின்றி இருந்தது. ஆங்காங்கே இரண்டு மூன்று பேர் நின்றுக் கொண்டிருந்தனர். சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது ரயில் வந்து நிற்க ஏறினாள். பல்கலைக்கழகத்திலிருந்து அவள் தங்கி இருக்கும் இடமான எல்மௌனிப் செல்ல பதினைந்து நிமிடத்திற்கு மேலாகும்.

சொற்ப ஆட்களே அமர்ந்திருக்க தன் ஸ்கர்ட்டை சரி செய்து கொண்டு கண்மூடி அமர்ந்தாள். கொஞ்ச நாளாகவே அவளுக்கு பைத்தியம் பிடித்ததைப் போலிருந்தது. ரயில் முன்னோக்கி செல்ல அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது. அவனையும் இப்படித் தான் ஒரு வருடம் முன்பு இதே ரயில் நிலையத்தில் சந்தித்தாள். அழகானவன். பார்த்த மாத்திரத்திலேயே பிடித்திருந்தது. முதலில் பேசத் தயங்கினான். பின் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பெயர் பொம்மானி. ஷோப்ராவில் ஏதோ சாப்ஃட்வேர் கம்பெனியில் வேலை.

சில விஷயங்கள் நம்மை மீறி நடக்கும். அது போல தான் அவர்கள் காதலும். அதுவாய் நடந்தது. அவளையும் மீறி நடந்தது. தன் படிப்பில் கவனம் செலுத்த முயன்ற அவளை அவன் கொஞ்சம் கொஞ்சமாய் ஈர்த்தான். அவனது வசீகரப் புன்னகையும் வெடுக்கென்ற பேச்சும் யாரையும் கவரும். அவள் காதல் வயப்பட்டதில் தவறொன்றும் இல்லை.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் காதல் பறவைகள் சிறகடித்துப் பறந்தனர். வேலை நேரம் போக மீதி நேரத்தில் பேசுவதே முழுமுக்கிய வேலை. மாலை நேரங்களில் மஞ்சள் வண்ண வானத்தின் பிண்ணனியில் நைல் நதியோரமாய் நடப்பது இருவருக்கும் மிகவும் பிடித்த விஷயம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஒரு நாள் அவளிடம் அரேபிய மொழியில்,

“ஹே நோரா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..?!”

புரியாமல் குழப்பமாய் அவனைப் பார்த்தாள்.

“எங்க கம்பெனியில என்னை ரெண்டு மாசம் வெளிநாடு போக சொல்றாங்க. ஐரோப்பாவுக்கு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல”

சட்டென்று கலவரப்பட்டாள் நோரா. பிரிதல் என்ற வார்த்தையே வலி கொடுத்தது. பெற்றோரைப் பிரிந்த போது கூட இவ்வளவு விசனமில்லை. ஏனோ பொம்மானியுடன் அவ்வளவு ஐக்கியமாயிருந்தாள்.

“என்ன முடிவு பண்ணிருக்க?”

“தெரியல. இவ்ளோ நாளா இந்த மாதிரி சூழ்நிலையை நெனச்சு கூட பார்க்கல. ஆனா எனக்கு வேற வழி தெரியல…”

முடிவெடுத்த பிறகு தான் தன்னிடம் சொல்கிறான் என்பது புரிந்தது. இரண்டு மாதம் தானே. சட்டென ஓடிப்போய்விடும். சம்மதமாய் தலையாட்டினாள். அவன் பயணப்பட இன்னும் இரு வாரங்களே இருந்தன. அந்த இருவாரமும் விடுப்பு எடுத்துக் கொண்டு அவன் கூடவே தங்கி இருந்தாள்.

கிளம்பும் நேரம் வரும் போது துக்கம் தொண்டையை அடைக்க வழிஅனுப்பினாள். ஆயிற்று. அவன் போய் சேர்ந்தவுடன் தினமும் தொலைப்பேசியில் அழைப்பான். அன்று நடந்த கதை முழுதும் ஒப்பிப்பான். நாளாக ஆக பேசும் நேரம் குறைந்தது. வேலைப்பளுவாய் இருக்கும் என்று விட்டுவிட்டாள்.

இதோ இரண்டு மாதம் என்று சொன்னவன், இன்னும் இரண்டு மாதம் இருக்க வேண்டியதாய் போயிற்று. இன்று நள்ளிரவு வந்திறங்கப் போகிறான். நினைவுகளிலிருந்து மீண்டாள். நினைக்க நினைக்க சந்தோஷமாய் இருந்தது. ஸ்டேஷனில் இறங்குவதற்கும் அவள் செல்பேசி சிணுங்குவதற்கும் சரியாய் இருந்தது. அவன் எண் தான்.
“ஹே.. எப்படி இருக்க..?”

“என்னப்பா கிளம்பியாச்சா? பெட்டியெல்லாம் எடுத்து வச்சாச்சா?”

“ஓ அதெல்லாம் எப்போவோ ரெடி ஆயாச்சு. இரண்டு மாசம்னு சொல்லி நாலு மாசமாச்சு. ஒரு வழியா தப்பிச்சு வர்றேன்.”

“தப்பிச்சு வர்றியா? நீ அனுப்பின மெயில்ல எல்லாம் ஐரோப்பிய அழகிய பத்தி தான் வர்ணிப்பே. இப்போ எனக்காக பேச்ச மாத்தறியா?”

“சீச்சீ.. அவங்கல்லாம் சும்மா பாக்குறதுக்கு தான். ஒவ்வொருத்தியும் எவ்ளோ உசரமா இருக்காங்க. என்னிக்கு இருந்தாலும் நீ தான் என் தேவதை.”

அந்த நேரத்திலும் முகம் சிவந்தாள். “சரி. எத்தனை மணிக்கு ப்ளைட் வரும்?”

“பாத்தியா அத சொல்லத் தான் கூப்பிட்டேன். நான் வந்து இறங்க எப்படியும் லேட்டாயிடும். தூக்கம் கெட்டு ஏர்போர்ட்டுக்கு வர வேண்டாம். நான் சொல்வேனே என் சின்ன வயசு ஸ்நேகிதன் அவன் ஊரிலிருந்து வந்திருக்கிறான். அவன் வருவான். ஸோ.. நான் இறங்கியதும் உன்னைக் கூப்பிடுறேன். நாளைக்கு மீட் பண்ணலாம்”

“என்னப்பா இப்படி சொல்ற.. உன்னைப்பார்த்து நாளாச்சு” நோரா இழுக்க..

“அதான் நாளைக்குப் பார்க்கலாம்னு சொல்றேன்ல. சரி.. நேரமாச்சு.. வந்தவுடன் கால் பண்றேன்.உனக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் காத்திருக்கு”
போனை வைத்து விட்டான்.

முகத்தில் வெட்கம் கலந்த புன்னகையுடன் பிரபலமான அந்த அரேபியப்பாடலை முணுமுணுத்துக் கொண்டே வீட்டை யடைந்தாள்.
சாப்பிட்டுவிட்டு தூக்கம் வராமல் நேரத்தை ஓட்டிக் கொண்டிருக்க பின்னிரவில் அவன் கூப்பிட்டான்.

“ஹே.. ஒரு வழியா வந்து சேர்ந்தாச்சு. நிம்மதியா தூங்கு. நாளைக்கு சந்திப்போம். நானே கூப்பிடுறேன்”

மறுநாள் காலை. வகுப்பிற்கு விடுப்பு சொல்லி இருந்தாள்.
காலையிலேயே அவன் வீட்டுக்குப் போகலாமா? அவன் நண்பனும் இருப்பதாய் சொன்னானே. சரி. அவனே கால் பண்ணட்டும். காதலுடன் பதைபதைப்பையும் துணைக்கு சேர்த்துக் கொண்டு காத்திருக்கலானாள். மணி பத்தாகியது. பதினொன்று ஆயிற்று. அழைப்பு வரவே இல்லை. பொறுத்துப் பார்த்த அவள் அவன் எண்ணை அழைக்க செல்பேசி அணைக்கப்பட்டிருந்தது. அழுகை அழுகையாய் வந்தது. இதற்காகவா காலையிலிருந்து சாப்பிடாமலேயே காத்திருந்தாள்.

சரியாய் பதினொன்னரை மணிக்கு புதிதாய் ஒரு நம்பரிலிருந்து போன். எடுத்து,

“ஹலோ..”

“ஹே.. நான் தான். பொம்மானி. பப்ளிக் பூத்திலிருந்து பேசறேன். ஒரு முக்கியமான விஷயமா போலிஸ் ஸ்டேஷன் போய்கிட்டு இருக்கேன். இன்னும் இரண்டு மணிநேரத்தில் கூப்பிடுறேன்.”

குரலில் அவசரமும் பதைபதைப்பும் தெரிந்தது. பயந்து போனவளாய்..

“என்னாச்சு.. என்னாச்சுனு சொல்லு? நான் வரவா”

“எல்லா விவரத்தையும் சொல்றேன். நீ வர வேண்டாம். சீக்கிரமே கூப்பிடுறேன்..” வைத்துவிட்டான்.

தலைகால் புரியாமல் என்ன செய்வதென்று யோசித்த அவள் போலிஸ் ஸ்டேஷன் கிளம்பிவிட்டாள்.

உள்ளே நுழைகையில் பொம்மானியின் கலவர முகம் தெரிந்தது. அங்கிருந்தவர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்.

“ரொம்ப நாள் கழிச்சு நடந்திருக்கு இது. அந்த ரயில் போட்டப்பவே சொன்னாங்க. ஆபத்துன்னு. யாரும் கேக்கல. இன்னும் எத்தனை பேரோ?”

இந்தக் கதையை இதுவரை படிக்கறவங்க மாதிரி தான் அவளுக்கு என்ன தான் நடந்தது, நடக்கிறதுன்னு சுத்தமா புரியல. காவல் அதிகாரி முன் உட்கார்ந்திருந்த பொம்மானி கைகுலுக்கி எழுந்து திரும்பும் போது இவளைப் பார்த்தான். அவன் முகம் ஏக களைப்புடன் இருந்தது.

அவளை பத்திரமாய் வெளியே கூட்டிக்கிட்டு வந்தான்.

“ஹே.. என்னாச்சு.. சொல்லுப்பா? எதுக்கு இங்க வந்தே..”

ஆயாசமாய் அவளைப் பார்த்தான். “காலையிலேர்ந்து சாப்பிடல. வா. எங்கியாவது சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்”

அந்த கடைக்குள் நுழைந்து ஆளுக்கொரு ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு பேச ஆரம்பித்தான்.

“நான் இறங்கினதுலேர்ந்தே நேரம் சரியில்ல. என் நண்பன் வரான்னு சொன்னேன்ல. அவன் வந்து பிக்கப் செஞ்சான். ஊரில கொஞ்சம் பழக்கம். இங்க வேலை விஷயமாய் வந்திருக்கிறான். ரொம்ப நாளா பணக்கஷ்டம். காலையில நான் தூங்கிட்டு இருக்கறப்போ எழுப்பி அவசரமா யாரையோ பார்க்க போகணும். உன் மொபைல எடுத்துட்டு போறேனு சொன்னான். சரின்னு தூங்கினேன். ஒரு மணிநேரம் கழிச்சு வீட்டுக்கு போலிஸ் வந்தாங்க.”

“என்னாச்சு…?” தவிப்பாய் அவள் கேட்க மயக்கத்திலிருந்த அவன் ஜூஸைப் பருகிக் கொண்டே,

“யாரோ தெரியாம ரயில் தண்டவாளத்துல விழுந்துட்டாங்க. அது உங்க நண்பன் தானானு அடையாளம் காட்ட முடியுமானு சொன்னாங்க. ஒன்னுமே புரியல. போனா அவன் கருகி கரியா இருந்தான்.”

“உன் நண்பன் தானா அது… என்னாச்சு?” பயமும் அழுகையும் வர அவள் கைகளைப் பற்றி ஆசுவாசப்படுத்தி,

“ஆமா. நடக்கும் போது தவறி விழுந்திருக்கலாம்னு சொல்றாங்க. அவன் பக்கத்திலேயே கொண்டு போன என் செல்போனும் கருகி இருந்துச்சு. பேசிக்கிட்டே கவனிக்காம விழுந்திருக்கலாம்னு சொன்னாங்க. தண்டாவாளத்துக்கு நடுவுல கரண்ட் போறதால யாரும் விழுந்திடக்கூடாது தடுப்பு போட்டிருந்தாங்களாம். ஏதோ பராமரிப்புப் பணின்னு அந்த இடத்துல மட்டும் தடுப்பை எடுத்திருந்தாங்களாம். அதுல போய் விழுந்துட்டான்.”

“இப்போ என்ன செய்யப் போறீங்க?”

“ஏற்கனவே அவன் ரொம்ப கஷ்டத்திலிருந்தான். அவன் அப்பா அம்மாக்கு சொல்லிட்டாங்க. தற்கொலையா இருக்கலாம்னு யோசிக்கறாங்க. எதுவா இருந்தாலும் கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரியும்..ச்சே.. வந்து இறங்கினதுமே இப்படியா?” அங்கலாயித்தான் பொம்மானி.

அப்போது போலிஸ் ஸ்டேஷனில் கருகிய நிலையில் இருந்த இறந்தவனின் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த அதிகாரி அந்த செல்போனிலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருந்த ஆண்டெனா போலிருந்த சின்னக் கம்பியை அதிசயமாய் பார்த்தார்.

பெங்களூர்.
எத்தனை நாளாய் அடைப்பட்டிருக்கிறோம் என்று தெரியாமல் தவித்தான் வைபவ். அது ஒரு சவுண்ட் ப்ரூஃப் அறை. கத்துவது வெளியே கேட்காது. கடத்தி வரப்பட்ட நாளில் மயக்கமானவன் முழிக்கும் போது இங்கே இருந்தான். வசதிகளுக்கு ஏதும் குறைவில்லை. ஆனால் எதற்காக கடத்தப்பட்டோம் என்பது மட்டும் தெரியவில்லை. பகலும் இரவும் எப்போது வருகிறதென்பதே தெரியவில்லை. அங்கிருந்த ப்ரிஜ்ஜில் வேண்டிய பழங்களும் ரொட்டியும் தண்ணீரும் இருந்தது. ஒருவாரத்திற்கு தாங்கும். கதவு எந்நேரமும் பூட்டப்பட்டிருந்தது. அறையை ஓட்டியே அட்டாச்ட் பாத்ரூம். மாற்றிக் கொள்ள துணிமணி. ஆனால் வெளியுலகத் தொடர்பு மட்டும் துண்டிக்கப் பட்டிருந்தது. அவன் கையிலிருந்த வாட்சையும் செல்போனையும் எடுத்துவிட்டுருந்தனர்.

எதுவானாலும் சரி ஒருவாரத்திற்கு மேல் இருக்கப் போவதில்லை என்று புரிந்தது. யாராய் இருக்கும் என்று யோசித்ததிலேயே தலையை வலித்தது. அவன் பொழுது போக்க புத்தங்கள். அதுவும் அவனுக்கு விருப்பமான நாவலாசிரியர்கள். நேரம் கழிக்க அவன் அந்த புத்தகத்தை எடுத்த போது ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த வீட்டின் காம்பௌண்டுக்குள் அந்த மாருதிவேன் நுழைந்தது.

பா.ராஜேஷ்
08-07-2010, 06:19 PM
அப்பா, ஒரு வழியா அடுத்த அத்தியாயம் .. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சஸ்பென்சுடன் முடிந்த குறுங்கதை மாதிரி உள்ளது.. இந்த அத்தியாயத்தையும் நல்லாவே எழுதி இருக்கேங்க...
ஆனா பாருங்க, பிரணவ் யாருனே மறந்து போச்சு :confused:...
திரும்பி ஒரு தடவ எல்லா அத்தியாத்துலையும் தேடனும் :sprachlos020:... அடுத்த அத்தியாயம் பதிக்கும் போது குறிப்பிட்ட கேரக்டர் அதுக்கு முன்னாடி எந்த அத்தியாயத்துல வந்துச்சின்னு சொல்லிட்டீங்கனா தேடி படிக்கறதுக்கு எளிதாய் இருக்கும்... :D

கீதம்
08-07-2010, 10:00 PM
இந்த அத்தியாயத்தில் யாரோ யாரையோ தற்கொலை செய்திருக்கிறார்கள் என்று புரிகிறது. திகில் மேல் திகிலா கொண்டுபோறீங்க, ஆனா பாருங்க, ராஜேஷ் நிலைமைதான் எனக்கும். முதலில் இருந்து அத்தியாயங்களை ஒரு மீள்பார்வை பார்த்தால்தான் கதை பிடிபடும்.

தொடரும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள். நாங்கள் அவசரப்படுத்துகிறோமே என்று அவசரப்படாமல் நிதானமாகவே அடுத்த அத்தியாயங்களைத் தொடருங்கள்.

govindh
08-07-2010, 11:35 PM
சிறு இடைவேளை....இல்லை...
பெரிய இடைவேளை...பரவாயில்லை...
எகிப்து விசா கிடைக்க தாமதமாகி விட்டது என நினைத்துக் கொள்கிறோம்...!

பயம் கலந்த உணர்வுடன் கெய்ரோவையும் பார்த்தாச்சு...

முதல் அத்தியாயத்தில் சரண்யா செல்போனில் பேசிக் கொண்டே தவறி விழுந்ததற்கும்....

இங்கே பொம்மானியின் நண்பன் தவறி விழுந்ததற்கும்....
அந்த செல்போனிலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருந்த ஆண்டெனா போலிருந்த சின்னக் கம்பி தான் காரணமா....? !

வைபவ் கண்டுபிடித்து சொல்வாரா...?

தொடருங்கள்...மதி....அசத்துங்கள்...
பாராட்டுக்கள்.

govindh
08-07-2010, 11:51 PM
[QUOTE=பா.ராஜேஷ்;479311]ஆனா பாருங்க, பிரணவ் யாருனே மறந்து போச்சு :confused:...
திரும்பி ஒரு தடவ எல்லா அத்தியாத்துலையும் தேடனும் :sprachlos020:...

ஹைதராபாத் ஆய்வுக்கூடத் தலைவர் ராஜசேகரன் - அவருடைய உதவியாளர்கள் மிருதுளா...பிரணவ்..! :)

மதி
09-07-2010, 01:38 AM
அப்பா, ஒரு வழியா அடுத்த அத்தியாயம் .. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சஸ்பென்சுடன் முடிந்த குறுங்கதை மாதிரி உள்ளது.. இந்த அத்தியாயத்தையும் நல்லாவே எழுதி இருக்கேங்க...
ஆனா பாருங்க, பிரணவ் யாருனே மறந்து போச்சு :confused:...
திரும்பி ஒரு தடவ எல்லா அத்தியாத்துலையும் தேடனும் :sprachlos020:... அடுத்த அத்தியாயம் பதிக்கும் போது குறிப்பிட்ட கேரக்டர் அதுக்கு முன்னாடி எந்த அத்தியாயத்துல வந்துச்சின்னு சொல்லிட்டீங்கனா தேடி படிக்கறதுக்கு எளிதாய் இருக்கும்... :D
நன்றி கோவிந்த் சுட்டி காட்டியமைக்கு.. பேர் மாறிவிட்டது.. ரொம்ப நாளாச்சா.. எல்லா பாகங்களையும் படிச்சுட்டு தான் எழுதணும்..

இந்த அத்தியாயத்தில் யாரோ யாரையோ தற்கொலை செய்திருக்கிறார்கள் என்று புரிகிறது. திகில் மேல் திகிலா கொண்டுபோறீங்க, ஆனா பாருங்க, ராஜேஷ் நிலைமைதான் எனக்கும். முதலில் இருந்து அத்தியாயங்களை ஒரு மீள்பார்வை பார்த்தால்தான் கதை பிடிபடும்.

தொடரும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள். நாங்கள் அவசரப்படுத்துகிறோமே என்று அவசரப்படாமல் நிதானமாகவே அடுத்த அத்தியாயங்களைத் தொடருங்கள்.
உங்களை கஷ்டப்படுத்தறதுக்கு மன்னியுங்கள்.. இனி வரும் அத்தியாயங்களில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்க முயற்சிக்கறேன்..

தாமரை
09-07-2010, 04:55 AM
இந்தக் கதையை இதுவரை படிக்கறவங்க மாதிரி தான் அவளுக்கு என்ன தான் நடந்தது, என்ன நடக்கிறதுன்னு சுத்தமா புரியல.


ஹா ஹா ஹா இதான் சூப்பர்...

"ஸ்பஷ்டமாக தெரிந்தது.,.. அது தற்கொலை என்று....."


"இன்னிக்கு ஜாலியா சினிமா போயிட்டு, ஹோட்டலில் டின்னர் முடிச்சிட்டு வந்து ....

ஜாலியா... "

அவள் சொல்லிக் கொண்டே இருக்க...

அவன் ஜன்னலைத் திறந்து சடாரென அவன் அங்கிருந்து குதித்தான்... அவள் "வீல்" என அலறினாள்...

இப்படிப் பலப்பல தற்கொலைகளை எதிர்பார்க்கலாம் போல இருக்கே....

"உங்க ஜாதகம், பயோடேட்டாவில் உங்க கதைகளின் சுட்டியைக் கொடுத்திருக்கீங்களா என்ன?"

மதி
09-07-2010, 05:13 AM
இல்லீங்க... இனிமேல் இப்படி எதுவும் வராது...!!! :( ஒரு தற்கொலைக்கே மூச்சு முட்டுது..!!

சிவா.ஜி
09-07-2010, 05:28 AM
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்தாலும் இன்னொரு தற்கொலையோட வந்திருக்கீங்க. கெய்ரோ வர்ணிப்பு, ஆப்பிரிக்க கறுப்பு அழகி(கெய்ரோவுல கறுப்புப் பெண்களைப் பார்ப்பது அபூர்வம்) அவளோட காதலன் பொம்மானி....எல்லாமே நல்லா வந்திருக்கு. ஆசியாவுல ஆரம்பிச்சு, அமெரிக்கா, ஐரோப்பா போய் இப்ப ஆப்பிரிக்காவுக்கு வந்திருக்கீங்க....அடுத்து ஆஸ்திரேலியாவா?

கண்டம் கண்டமா போய் தற்கொலை செய்யப்போறீங்க போல....நடத்துங்க. நிறைய உழைப்புத் தெரியுது. அசத்தலான நடை. தொய்வே இல்லாம பறக்குது. இதே வேகத்துல தொடருங்க....நாங்களும் பறந்து வரோம்.

மதி
09-07-2010, 05:30 AM
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்தாலும் இன்னொரு தற்கொலையோட வந்திருக்கீங்க. கெய்ரோ வர்ணிப்பு, ஆப்பிரிக்க கறுப்பு அழகி(கெய்ரோவுல கறுப்புப் பெண்களைப் பார்ப்பது அபூர்வம்) அவளோட பாதலன் பொம்மானி....எல்லாமே நல்லா வந்திருக்கு. ஆசியாவுல ஆரம்பிச்சு, அமெரிக்கா, ஐரோப்பா போய் இப்ப ஆப்பிரிக்காவுக்கு வந்திருக்கீங்க....அடுத்து ஆஸ்திரேலியாவா?

கண்டம் கண்டமா போய் தற்கொலை செய்யப்போறீங்க போல....நடத்துங்க. நிறைய உழைப்புத் தெரியுது. அசத்தலான நடை. தொய்வே இல்லாம பறக்குது. இதே வேகத்துல தொடருங்க....நாங்களும் பறந்து வரோம்.

நன்றிண்ணா..
அதனால தான் கறுப்பு அழகினு வச்சேன். அப்போ தானே திரும்பி பாப்பாங்க...:D:D

தாமரை
09-07-2010, 05:40 AM
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்தாலும் இன்னொரு தற்கொலையோட வந்திருக்கீங்க. கெய்ரோ வர்ணிப்பு, ஆப்பிரிக்க கறுப்பு அழகி(கெய்ரோவுல கறுப்புப் பெண்களைப் பார்ப்பது அபூர்வம்) அவளோட பாதலன் பொம்மானி....எல்லாமே நல்லா வந்திருக்கு. ஆசியாவுல ஆரம்பிச்சு, அமெரிக்கா, ஐரோப்பா போய் இப்ப ஆப்பிரிக்காவுக்கு வந்திருக்கீங்க....அடுத்து ஆஸ்திரேலியாவா?

கண்டம் கண்டமா போய் தற்கொலை செய்யப்போறீங்க போல....நடத்துங்க. நிறைய உழைப்புத் தெரியுது. அசத்தலான நடை. தொய்வே இல்லாம பறக்குது. இதே வேகத்துல தொடருங்க....நாங்களும் பறந்து வரோம்.

காதோரம முத்தம் கொடுக்கிறாப்பல கிசுகிசுக்கிறவன் காதலன்

பாதத்தில விழுந்து கிடப்பவன் பாதலன் அப்படின்னு வச்சுக்கலாமா?

கெய்ரோவில் எல்லாம் போய்... எல்லாம் நல்லா பார்த்திருப்பீங்க போல இருக்கே... இருக்கட்டும் இருக்கட்டும்.. அடுத்தச் சந்திப்புல பத்த வச்சுக்குவோம்.

சிவா.ஜி
09-07-2010, 06:03 AM
ஆஹா...தப்பு நடந்துபோச்சே...இருந்தாலும் பாதலனுக்கு ஒரு விளக்கம் சொன்னீங்க பாருங்க....அடடா...

கெய்ரோவுல இருந்ததே ஒருநாள்தாங்க தாமரை....அப்பக் கண்ணுலப் பட்டவங்களை வெச்சுத்தான் சொன்னேன்.....அதுக்காக நீங்க பரட்டையாயிடாதீங்க....ஹி...ஹி...

தாமரை
09-07-2010, 06:08 AM
ஆஹா...தப்பு நடந்துபோச்சே...இருந்தாலும் பாதலனுக்கு ஒரு விளக்கம் சொன்னீங்க பாருங்க....அடடா...

கெய்ரோவுல இருந்ததே ஒருநாள்தாங்க தாமரை....அப்பக் கண்ணுலப் பட்டவங்களை வெச்சுத்தான் சொன்னேன்.....அதுக்காக நீங்க பரட்டையாயிடாதீங்க....ஹி...ஹி...

ஓஹோ .. அப்ப கண்ணுல பட்டவங்க, மனசில பட்டவங்க.. மனசில விழுந்தவங்க.... நின்னவங்க, உக்காந்தவங்க, அப்படி பல லிஸ்டுகளை வச்சிருக்கீங்களா?

நீங்க பார்க்க மட்டும்தான் செய்வீங்கன்னு நெனச்சிருந்தேனே.. அடடா...

நாராயண நாராயண..

சிவா.ஜி
09-07-2010, 06:29 AM
யப்பா சாமி.....ரொம்பக் கண்ணக் கட்டுதே.....

அதான் படிக்கும்போதே நீங்க யாருன்னு தெரியுதில்ல....அப்புறம் எதுக்கு இந்த நாராயணா....???

Nivas.T
09-07-2010, 10:22 AM
நீண்ட இடைவேளை என்பதால் முதல் அத்தியாயத்திலிருந்து தொடர்ந்தேன், முடிசுகள் மேல் முடிச்சாக தொடர்கிறது இவை அனைத்தும் இனையும் முடிச்சை எதிர் நோக்கி... பயணப்படுவோம். :sprachlos020:

//இந்தக் கதையை இதுவரை படிக்கறவங்க மாதிரி தான் அவளுக்கு என்ன தான் நடந்தது, நடக்கிறதுன்னு சுத்தமா புரியல :confused: //

இந்த வரிகள் ஒரு நொடி கதையின் விறுவிறுப்பை அறுப்பதுபோல் :frown: ஒரு மாயை (தவறாக நினைக்க வேண்டாம் :) )

மதி
09-07-2010, 11:40 AM
நீண்ட இடைவேளை என்பதால் முதல் அத்தியாயத்திலிருந்து தொடர்ந்தேன், முடிசுகள் மேல் முடிச்சாக தொடர்கிறது இவை அனைத்தும் இனையும் முடிச்சை எதிர் நோக்கி... பயணப்படுவோம். :sprachlos020:

//இந்தக் கதையை இதுவரை படிக்கறவங்க மாதிரி தான் அவளுக்கு என்ன தான் நடந்தது, நடக்கிறதுன்னு சுத்தமா புரியல :confused: //

இந்த வரிகள் ஒரு நொடி கதையின் விறுவிறுப்பை அறுப்பதுபோல் :frown: ஒரு மாயை (தவறாக நினைக்க வேண்டாம் :) )
தவறாக நினைக்கவில்லை நிவாஸ்.. தெரிந்தே தான் அதை எழுதினேன்... அப்படி ஒரு ஆயாசம்..:)

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..

கலையரசி
09-07-2010, 03:19 PM
நீண்ட நாட்கள் கழித்து அடுத்த பாகத்தைக் கொடுத்தால் முன்னர் படித்தது மறந்து விடுகிறது. எனவே ஒவ்வொரு பாகத்தின் துவக்கத்திலும் முன் கதையின் சுருக்கத்தைக் கொடுத்தால் நல்லது.
கதை பிரமாதமாகப் போகிறது. ஒவ்வொரு நாடாகச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. நடையும் அருமை. வாழ்த்துக்கள் மதி!

மதி
10-07-2010, 03:26 AM
நீண்ட நாட்கள் கழித்து அடுத்த பாகத்தைக் கொடுத்தால் முன்னர் படித்தது மறந்து விடுகிறது. எனவே ஒவ்வொரு பாகத்தின் துவக்கத்திலும் முன் கதையின் சுருக்கத்தைக் கொடுத்தால் நல்லது.
கதை பிரமாதமாகப் போகிறது. ஒவ்வொரு நாடாகச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. நடையும் அருமை. வாழ்த்துக்கள் மதி!
நன்றி கலையரசி...
நீங்கள் சொன்னதை நானும் யோசித்தேன்.. அடுத்த பாகத்திலிருந்து மு.க.சு கொடுக்கிறேன்..:icon_b:

பாரதி
11-07-2010, 02:34 PM
நல்லா போகுது மதி! தொடர்ந்து எழுதுங்க.

தமிழ் மைந்தன்
13-07-2010, 08:46 AM
கதை படிக்க படிக்க சுவராஸ்யமாக இருந்தது.
வாழ்த்துக்கள்!

அன்புடன்
தமிழ் மைந்தன்

மதி
13-07-2010, 09:13 AM
நல்லா போகுது மதி! தொடர்ந்து எழுதுங்க.
நன்றி பாரதிண்ணா..

கதை படிக்க படிக்க சுவராஸ்யமாக இருந்தது.
வாழ்த்துக்கள்!

அன்புடன்
தமிழ் மைந்தன்
நன்றி மைந்தரே...!!

Jamilabanu
14-07-2010, 05:10 AM
வணக்கம் மதி,

நான் ராஜேஷ் குமார் கதைகளை விரும்பி படிப்பேன். உங்கள் தொடரினை நேற்று முழுவதும் படித்தேன், அவருடைய புத்தகத்தை எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது அதுபோலவே இருந்தது உங்கள் தொடர். நிறைய இடங்களில் அவருடைய யுத்தியை கையாண்டு இருப்பது மிக சிறப்பாக உள்ளது. இதற்காக எவ்வளவு விஷயம் திரட்ட வேண்டும். மிக அற்புதமாக எழுதுகிறீர்கள். கண்டிப்பாக இக்கதையை புத்தகமாக வெளியிடுங்கள். வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராக @ கதையாசிரியராக வருவீர்கள். ராஜேஷ் குமார்க்கு பிறகு அவர் விட்ட இடத்தை நீங்கள் நிரப்புவீர்கள் என்பதை நம்புகிறேன்:). அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இப்போதைக்கு தங்களுடைய வாசகி

ஜமிலா பானு

மதி
14-07-2010, 06:05 AM
வணக்கம் மதி,

நான் ராஜேஷ் குமார் கதைகளை விரும்பி படிப்பேன். உங்கள் தொடரினை நேற்று முழுவதும் படித்தேன், அவருடைய புத்தகத்தை எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது அதுபோலவே இருந்தது உங்கள் தொடர். நிறைய இடங்களில் அவருடைய யுத்தியை கையாண்டு இருப்பது மிக சிறப்பாக உள்ளது. இதற்காக எவ்வளவு விஷயம் திரட்ட வேண்டும். மிக அற்புதமாக எழுதுகிறீர்கள். கண்டிப்பாக இக்கதையை புத்தகமாக வெளியிடுங்கள். வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராக @ கதையாசிரியராக வருவீர்கள். ராஜேஷ் குமார்க்கு பிறகு அவர் விட்ட இடத்தை நீங்கள் நிரப்புவீர்கள் என்பதை நம்புகிறேன்:). அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இப்போதைக்கு தங்களுடைய வாசகி

ஜமிலா பானு
வணக்கம் ஜமீலா.. உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.. பெரிய எழுத்தாளர் ஆகணும்னு ஆசையெல்லாம் இல்லீங்க. உங்க வார்த்தைகளுக்கு நான் தகுதியானவனானு தெரியாது. எதுக்கும் என்னோட எல்லா கதைகளையும் படிச்சிட்டு முடிவுக்கு வாங்க..:icon_b::icon_b:

மதி
20-07-2010, 12:48 PM
முன்கதை சுருக்கம்: பெங்களூரில் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த நிலையில் சரண்யா திடீரென இறந்து போக அவளை மணக்கப்போகும் மாதவன் நொறுங்கிப் போனான். விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர் வைபவ் கடத்தப்பட்டார். இந்தியா நிலவுக்கு அனுப்பப்போகும் ராக்கெட் பத்தி பத்திரிக்கையில் செய்தி வெளிவந்தது. அதற்கான ஆராய்ச்சியில் ஹைதராபாத்திற்கு அருகில் ஒரு கூடத்தில் இராஜசேகரனும், அவர் உதவியாளர்கள் மிருதுளாவும் ப்ரணவ்வும் ஈடுபட்டிருக்கின்றனர். தேசியவிஞ்ஞானக்குழுத் தலைவர் அமெரிக்க உளவாளியான ப்ராங்க்கிற்கு உதவுகிறார். ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்கில் உளவுத் துறை தலைவர் மிகைல் ப்ராட்கோவ், சுவாமி விவேகானந்தர் டெஸ்லாவின் சந்திப்பு பற்றிய கோப்பை அந்த நபரிடம் கொடுத்தார். அமெரிக்காவில் லேங்க்லியில் உளவுப்பிரிவுத் தலைவர் மைக்கேல் இந்தியாவின் திட்டங்களைப் பற்றி அறிய ஆணையிடுகிறார். இதற்கிடையில் கெய்ரோவில் ஒரு நபர் ரயில் தண்டவாளத்தில் விழுந்து மின்சாரம் தாக்கி இறக்கிறார். இனி….


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கெத்திரெட்டிப்பள்ளி…

விண்கலம் விண்ணில் பறக்க இன்னும் கொஞ்ச வாரங்களே இருக்கிறது. அந்த அறிக்கைக்குப் பின் ராக்கெட் விண்வெளிக்கு அனுப்பப்படும் தேதியை எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்க அரசாங்கம் மௌனத்தை மட்டுமே பதிலாய் கொடுத்தது. அனைவரின் கவனமும் திருவனந்தபுரத்தில் கட்டுமானப்பணியில் இருந்த விண்கலத்தின் மீதே இருக்க அதனுள் பயணம் செய்யப்போகும் அந்த சாதனத்தைத் தயாரிப்பதில் இராஜசேகரன் ஈடுபட்டிருந்தார்.

நியான் வெளிச்சம் அந்த ஆராய்ச்சிக் கூடமெங்கும் நிறைந்திருக்க அவர் பலத்த சிந்தனையிலிருந்தார். இந்த ஆராய்ச்சிக்காக அரசாங்கம் அவருக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்திருந்தது. இந்த எண்ணம் அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் வந்த போது அவரே இதை நம்பவில்லை. எங்கேயும் ஓட்டைகள் நிறைந்திருக்கும் அரசாங்க இயந்திரம் அதிர்ஷ்டவசமாக அவருக்கு அந்த நல்வாய்ப்பைத் தந்தது. ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அந்த சம்பவம் அவரது மனக்கண்ணில் ஓடிக் கொண்டிருந்தது.

அது ஒரு வெயில்கால காலை. ஹைதராபாத்தில் வசித்துக் கொண்டிருந்த இராஜசேகரன் அன்று வழக்கம் போல் அலுவலகத்திற்கு புறப்பட்டுப் போனார். என்றும் இல்லாமல அவரது அலுவலக வளாகம் பரபரப்பாக இருந்தது. அது ஒரு அரசாங்க ஆராய்ச்சி நிலையம். ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நிலையத்தில் சுற்றுச்சூழல் மற்றும் ரசாயன ஆராய்ச்சி நடைபெறுவது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் பொதுமக்களுக்குத் தெரியாமல் ரகசிய ஆராய்ச்சிகளும் அங்கே மேற்கொள்ளப்படும். அதைப் பற்றி எங்கேயும் பேசவோ வெளியிடவோ கூடாது என்பது வாய்மொழி உத்தரவு. மீறினால் என்ன நடக்கும் என்பதை அனைவரும் அறிவர். இந்திய பாதுகாப்பின் மறுபக்கம்.

அந்த நிலையத்தில் தான் இராஜசேகரன் இடைநிலை விஞ்ஞானியாக பணிபுரிந்தார். அணுக்களைப் பற்றிய ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். அவரைத் தவிர ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே அவற்றைப் பற்றிய விவரங்கள் தெரியும். கொஞ்ச நாளாகவே அவரின் மனதில் சின்ன உற்சாகமும் பதட்டமும் கொஞ்ச நாட்களுக்கு முன் தான் எதேச்சையாக அந்த விஷயத்தை கண்டுபிடித்திருந்தார். அணுகதிரியக்கங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது எதேச்சையாக அந்த நிகழ்வு நடந்தது. நம்பமுடியாமல் மீண்டும் இருமுறை அந்த ரசாயனக் கலவையை செயல்படவைத்தார். ஆச்சர்யம்… அவர் நம்பமுடியாத அதிசயங்கள் நடந்தது. நல்லவேளையாக யாரும் அங்கிருக்க வில்லை. எத்தனை முக்கியமான விஷயம் என்ற எண்ணமே அவருள் சிறிது பயத்தை ஏற்படுத்தி இருந்தது. ஒரு பொழுதும் இது அந்நியர் கைகளில் மாட்டிவிடக்கூடாது என்ற எண்ணமும் மேலோங்கி இருந்தது. அப்போது தான் அவரின் வருகை நிகழ்ந்தது.

அவர் அப்போதைய ஜனாதிபதி. இந்திய நாட்டின் முதல் விஞ்ஞான ஜனாதிபதி. விண்வெளி ஆராய்ச்சிமையத்தின் இயக்குநராய் புகழ்பெற்றவர். அவரின் பதவிக் காலம் முடிவுக்கு வர இன்னும் சில மாதங்களே இருந்த நிலையில் இராஜசேகரனின் அலுவலகத்திற்கு வருகை தந்தார். எப்போதும் தனக்கிருந்த அறிவியல் தாகத்தாலும் ராணுவ் ஆராய்ச்சியில் இருந்த ஆர்வத்தாலும் அடிக்கடி இந்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு வருவது அவர் வழக்கம். அன்றும் அது போல் தான் நடந்தது.

அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தவுடன் அவசர அவசரமாக அந்த ப்ரஸண்டேஷனை தயாரிப்பதில் ஈடுபட்டார் இராஜசேகரன். இன்று எப்படியாவது சந்தர்ப்பம் அமைகையில் பேசிவிட வேண்டும். காலை முழுதும் ஜனாதிபதி பல்வேறு மீட்டிங்களில் சோர்ந்திருக்க மதியம் மூன்று மணிவாக்கில் இராஜசேகரன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் கிடைத்தது.

எப்போதும் ஜனாதிபதியை சுற்றி பாதுகாப்பு வளையம் இருக்கும். அது ராணுவத்திற்கு சொந்தமான ஆராய்ச்சி நிறுவனம். ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டதால் அவரது பாதுகாவலர்கள் சற்று வெளியே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து ஜனாதிபதியுடன் இந்திய ராணுவத்தின் அடுத்த ஏவுகணை பற்றிய விவரங்களை விவாதிக்க வேண்டிய தலைமை இயக்குநர் உடல் சரியில்லாமல் போக அந்தப் பொறுப்பு இராஜசேகரன் மேல் விழுந்தது. அதற்கான கோப்புகளையும் தன் திட்டத்திற்கான கோப்புகளையும் எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தார்.

வெள்ளை நிற முடியை நடு வகிடெடுத்து விட்டிருந்த அந்த வயதான பிரம்மச்சாரி இவரைப் பார்த்து புன்னகைத்தார். அவர் முன் இருந்த இருக்கையில் அமர்ந்த இராஜசேகரன் தொண்டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“சார்.. இது தான் இப்போ நம்ம ஆராய்ச்சியில இருக்கற புதிய ஏவுகணை. நிமிஷத்துக்கு நூறு மைல் வேகத்தில் போகக் கூடியது…”

ஆராய்ச்சி பற்றிய விவரங்களை இவர் அடுக்கிக் கொண்டே போக சுவாரஸ்யமாக கேட்க ஆரம்பித்தார். இடையிடையில் தன் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டே பல குறிப்புகளைக் கொடுத்தார். விண்வெளித் துறையில் அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவும் அனுபவமும் இராஜசேகரனின் ஆர்வத்தை அதிகப்படுத்தியது. வேகவேகமாக பேச வேண்டிய விஷயங்களைப் பேசிய பின் தயங்கி நின்றார்.

அதை கவனித்த அவர்,

“வேற ஏதேனும் சொல்லணுமா?”

அடுத்த வேலைகளைப் பற்றிய ஆய்வு இன்னும் பத்து நிமிஷத்தில் ஆரம்பிக்க இருந்தது. அதற்குள் பேச முடியுமா என்று தெரியாமல் இராஜசேகரன் குழம்ப,

“சொல்லுங்க.. ஏன் தயங்கி நிக்கறீங்க? ஏதேனும் தகவல் விட்டுப் போயிடுச்சா?”

“சார். கொஞ்ச நாளைக்கு முன்னால நான் எதேச்சையா ஆராய்ச்சியில ஈடுபட்டிருக்கும் போது சில விஷயங்கள் தெரிஞ்சுது. அதை திரும்ப செய்து பார்த்து உறுதி செஞ்சேன். இது மட்டும் சாத்தியமானா இந்தியா உலக அளவில பேசப்படும். உங்களுக்கு நேரம் இருந்தா விளக்கமா சொல்றேன்.”

வழக்கமான ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தார் ஜனாதிபதி.

“சார். அணுஆயுதம் தயாரிக்க பயன்படும் ட்ரைட்ரியம் தான் பலவகைகளில் நமக்கு பயன்படுகிறது. பொதுவாக அணுக்கருபிளப்பு முறைகளில் நிறைய சக்தி கிடைத்தாலும் அதனால் விளையக்கூடிய ஆபத்துகளும் அதிகம்.”

தெரிந்தவிஷயங்களையே மறுபடியும் கேட்டாலும் அலுக்காமல் கேட்டார்.

“அப்போது தான் நான் ஆராய்ச்சி செஞ்சிட்டு இருக்கும் போது இந்த ரசாயன மாற்றம் நடந்தது…இந்த அணுக்கரு பிணைப்பு முறையில……”

அவர் விவரிக்க விவரிக்க ஜனாதிபதியின் கண்கள் விரிந்தன. அடுத்த ஆய்வுக்காக காத்திருந்தவரை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு இராஜசேகரனுடன் விவாதிக்கத் தொடங்கினார். அவர் என்னவெல்லாம் கேள்வி கேட்பார் என முன்னரே அறிந்திருந்தபடியால் அதற்கேற்றாற் போல் தயார்படுத்தி கொண்டு வந்திருந்தார். இணையத்தில் பரவிக்கிடக்கும் பலவகையான தகவல்களையும் இணைத்து அவர் கொண்டு வந்திருந்த கோப்பின் இருந்த விஷயங்கள் ஜனாதிபதியை பெரிதும் கவர்ந்தன.

“ஆக.. உங்க கூற்றுப்படி இப்படி செய்தால் நாம் தன்னிறைவு பெற்றுவிடுவோம்னு சொல்றீங்க?”

“கண்டிப்பா சார். இது சாம்பிள் தான். இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சா நாம எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும். கண்டிப்பா நடக்கும்.”

“குட். ஆக்கப்பூர்வமான வழியில் நாம் பயன்பெறப்போறோம். உங்க திட்டப்படி என்ன பண்ணனும்.?”

“சந்திரனிலிருந்து சில விஷயங்கள் தெரியணும். நான் சொல்லும் இடத்திலிருந்து மண் சாம்பிள் வேணும்.. இது இருந்தால் கண்டிப்பாக செயல்படுத்திடலாம் சார்.”

“சபாஷ். உங்கள மாதிரியான ஆக்கப்பூர்வமான விஞ்ஞானிகளைத் தான் நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அழிவுக்கு மட்டும் இல்லாமல் ஆக்கத்திற்கும் உங்கள் ஆராய்ச்சி பயன்படட்டும். இன்றே வேண்டிய விஷயங்களை செய்கிறேன்.”

உற்சாகமாக புறப்பட்டுப் போன ஜனாதிபதி பிரதம மந்திரியுடன் கலந்து ஆலோசித்தார்.

“மிஸ்டர். ப்ரைம் மினிஸ்டர். இந்த விஷயம் கண்டிப்பாய் காப்பாற்றப்பட வேண்டிய விஷயம். எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் கசிந்துவிடக்கூடாது. இராஜசேகரன் உயிருக்கு ஆபத்தாய் கூட முடியலாம்.”

கவனமாய் தலையாட்டினார் பிரதமமந்திரி. ஜனாதிபதி மேல் அவருக்கு என்றுமே நன்மதிப்பு உண்டு.

“கண்டிப்பாய் செய்யலாம். உங்கள் ஆலோசனையில் பேரில் இது நடைபெறட்டும். ஆராய்ச்சிக்கான செலவுகளை நம் இதர செலவுகளில் கொண்டு வந்துவிடலாம். சந்திரோதயன் திட்டத்திற்கு மட்டும் சட்ட வல்லுநர்களை ஆலோசித்து தெரிவிக்கிறேன்.”

“சீக்கிரமே சொல்லுங்கள். இதற்கு என் ஒப்புதல் வேண்டுமென்றால் இப்போதே நான் தயார். என் பதவிக்காலம் இன்னும் சில மாதங்கள் தான். அதற்குள் முடிவு தெரிஞ்சாக வேண்டும்”

அவசர அவசரமாக சட்ட வல்லுநர்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டனர். ஜனாதிபதி ஒப்புதல் வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்க அடுத்த பதினைந்தாவது நாளில் அவர் கையெழுத்திட்டார். அவர் பதவிக்காலத்தில் இட்ட கடைசி ஒப்புதல் அது.

அடுத்து வேகவேகமாக பணிகள் நடைப்பெற்றன. இராஜசேகரன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் மேலதிகாரிக்குக் கூட அவர் எங்கே போகிறார் என்று தெரியபடுத்தப்படவில்லை. மிருதுளாவையும் ப்ரணவையும் அவர் தேர்வு செய்தார். கெத்திரெட்டிப்பள்ளி உருவாக்கப்பட்டது. பாதுகாப்பு வளையம் போடப்பட்டது. ஆயினும் ஜனாதிபதியைத் தவிர தன் முழு திட்டத்தையும் இதுவரை அவர் யாரிடமும் சொன்னதில்லை. அத்தனை ரகசியங்கள் காக்க சொல்லி அவருக்கு உத்தரவு.

ஆழ்ந்த சிந்தனையில் நடந்தவைகளை அசை போட்டுக் கொண்டிருந்த இராஜசேகரன் திடீரென்று யாரோ உலுக்க திடுக்கிட்டு எழுந்தார். அருகில் நின்ற மிருதுளாவைப் பார்த்து என்னவென்று கேட்க அவள் கைகாட்டிய திசையில் பார்த்தார். அங்கே அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாய் நடந்த ரசாயன மாற்றத்தால் புகைய ஆரம்பித்திருந்தது. உடனே அந்த செயலியை நிறுத்திய அவர் அந்த ரசாயன பெட்டியையே உற்றுப் பார்க்கலானார். இது வரை ஐந்து முறை இப்படியாகிவிட்டது. எதில் தப்பிருக்கும் என்று யோசிக்கலானார். அவர் முகத்தில் தெரிந்த இருட்டைப் பார்த்த மிருதுளா பயப்பட ஆரம்பித்தாள்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்.

கனைத்துக் கொண்டே பேச ஆரம்பித்த அவர் முன்னாள் ராணுவத் தளபதி டிமிட்ரி. ஓய்வுக்குப் பின் ராணுவத்திற்கு ஆலோசனை கொடுக்க ஆரம்பித்த அவரை ரகசிய உளவுப்பிரிவு தலைவர் கூப்பிடுவார் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மிடுக்கான தோற்றத்தில் இருந்த அவர் பேசினார்..

“இந்த செய்தியிலிருந்து என்ன எதிர்பார்க்கிறோம்..?”

கலக்கத்தை கண்களில் காட்டாத மிகைல் ப்ராட்கோவ்,

“இது பாதி செய்தி தான். இந்த செய்திக் குறிப்பு பாதி வரை தான் இருக்கிறது. அதுவும் மிக பாதுகாக்கப்பட்ட விஷயங்களுக்கான பெட்டகத்தில் இருந்தது…இதன் மீதியை காணவில்லை.”

“அவ்வளவு ஏன் அவசரமாக தேடுறீங்க?”

“அதில் இருக்கும் டெஸ்லா, மிகப் பெரிய விஞ்ஞானி. அவரின் கடைசிகாலங்கள் பத்தின சில ஆவணங்களே இருக்கு. மிக ரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததா குறிப்புகள் இருக்கு. அது என்னன்னு இதுவரை அமெரிக்க அரசாங்கம் வெளிப்படுத்தல. மேலும் ரஷ்யர்கள்கிட்ட இதில சொல்லி இருக்கற மாதிரி ஒரு சாதனம் இருக்குன்னா அதைப்பற்றிய குறிப்பு எங்கேயும் இல்லே. அதான் நம் கவலையே…”

“ஏன்.. இதுவரை சேர்த்து வைத்திருந்த ஆவணங்கள் எல்லாம் எங்கே?”

“சோவியத் பிரிவதற்கு முன்னால் இருந்த விஷயங்கள், சோவியத் பிரியும் போது நடந்த குழப்பத்தில் பல ரகசிய ஆவணங்கள் காணவில்லை. சில விஷயங்கள் மட்டுமே நம் பாதுகாப்பில் இருந்தது. இப்போ இதைப் பற்றி நாமே தெரிஞ்சே ஆகணும். இந்த விஷயம் வேற நாட்டிலே இருக்கற தீவிரவாதிங்க கையில் கிடைக்கக் கூடாது..”

“புரியுது. உங்க ஆளுங்க இதுவரை எந்த அளவுல இருக்காங்க.”

“ஆட்களை முடுக்கி விட்டிருக்கேன். வெளிநாடு எதற்காவது போயிருக்கலாம்னு சந்தேகம். ஆனாலும் கிடைக்கணும். அதான் மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு உங்களை கேட்க கூப்பிட்டேன்”

டிமிட்ரியின் விசுவாசம் நாடு அறிந்தது. அதனால் எல்லோரும் அவரை நம்பிக்கையுடன் அணுகுவர்.

“கொஞ்ச நாள் குடுங்க. எனக்கிருக்கிற தொடர்புகளை வச்சு தேடுறேன்.”

சலிப்புடன் எழுந்த அவர் ஆசுவாசப்படுத்திக் கொண்டே வீட்டிற்கு புறப்பட்டார். சிந்தனையோடு வீட்டிற்கு வந்த அவர் தன் ஆஸ்தான சிஷ்யனான முன்னாள் உளவுத்துறை இயக்குநரிடம் தொலைப்பேச சில தகவல்கள் கிடைத்தது. அடுத்த சில நாட்களில் அவருக்கு வேண்டிய விஷயங்கள் கிடைத்ததும் ப்ராட்கோவைத் தேடி அந்த அலுவலகத்திற்கு வந்தார்.

“மிகைல்..”

“சொல்லுங்க..”

“ஏதேனும் தகவல் கிடைத்ததா?”

“இல்லை.. தேடிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு?”

சிந்தனைவயப்பட்டவாறே,

“மத்த குறிப்புகள் அஸர்பெய்ஜினில் இருக்கு..”

கேட்டதும் நிமிர்ந்து உட்கார்ந்தார் மிகைல். அவர் முகத்தில் கவலை ரேகைகள் படரத் தொடங்கின.

govindh
20-07-2010, 02:03 PM
அசத்தலாக கதை அமைத்துள்ளீர்கள்...
வாழ்த்துக்கள் மதி.
எல்லா நிகழ்வுகளும்....ஒரு முன்கதை சுருக்கத்துடன்...
விரிவான....விரைவான...அடுத்தடுத்த சம்பவங்கள்...
அனைத்தும் நன்றாக இருக்கிறது.

தொடருங்கள்....(அஸர்பெய்ஜினில்) ஆவலுடன் காத்திருக்கிறோம்.

மதி
20-07-2010, 02:16 PM
நன்றி.. கோவிந்த்..!!
நானும் ஆவலுடன் இருக்கிறேன்.. :)

தாமரை
20-07-2010, 03:38 PM
“சார்.. இது தான் இப்போ நம்ம ஆராய்ச்சியில இருக்கற புதிய ஏவுகணை. மணிக்கு நூறு மைல் வேகத்தில் போகக் கூடியது…”

மணிக்கு நூறு மைல் வேகத்தில் ஏவுகணையா? அடேங்கப்பா என் காரை விட ஸ்லோவா இருக்கும் போல இருக்கே.. என்ன விஜய் காந்த் படத்துக்காக டம்மியா தயார் பண்ணறாங்களா?

ஒலியின் வேகம் நொடிக்கு 330 மீட்டர்(அப்படித்தான் நான் படிக்கும் போது இருந்தது.. இப்போ 343 மீட்டர் அப்படின்னு சொல்றாங்க. அப்போ ஒரு நிமிடத்திற்கு 20 கி.மீ. அப்படின்னா மணிக்கு 1200 கி.மீ


இந்திய ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை மணிக்கு 3360 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடியது, அடுத்ததா மணிக்கு 6300 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைபர் சானிக் ஏவுகணை வடிவமைக்குப் பட்டு ஆய்வகப் பரிசோதனை வெற்றி பெற்றாகி விட்டது..

இன்னொரு விஷயம்.

அணுசக்தியை நாம் இருவகைகளில் பெறுகிறோம்.

1. அணுக்கரு பிளப்பு (நியூக்ளியர் ஃபிஸன்)
2. அணுக்கரு பிணைப்பு (நியூக்ளியர் ஃபியூஸன்)

இங்கே கரு என்ற வார்த்தை விடுபட்டு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.. நியூக்ளியஸ் என்பது அணுவின் கரு ஆகும். அதில் புரோட்டான்கள், நியூட்ரான்கல் ஆகியவை இருக்கும். அதை பிரிப்பது, பிணைப்பது மூலமே அணுசக்தி உண்டாகிறது.
.
அணுஇணைவு - என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் இணைவதை குறிக்கும்... தண்ணீர் கார்பன் - டை ஆக்ஸைடு இப்படி சேர்மங்கள் கிடைக்கும்.

அணுபிளவு என்பது கொஞ்ச்ம் ஒத்துவரும்படித் தோன்றினாலும், எலெக்ட்ரான்கள் தப்பித்துச் செல்லும் மின்னோட்டமும் ஒரு வகை அணுப்பிளவுதான்.. அதனால் சரியான வார்த்தைகளை மதிக்கு இந்த தமிழ் வார்த்தைகளைக் கொடுத்த....அவர் மற்றும் அனைவரும் பயன்படுத்தவும்.

மதி
20-07-2010, 04:05 PM
கரெக்டா தப்பை கண்டுபிடித்ததற்கு நன்றி. தமிழில் இந்த வார்த்தைகளை தேடி கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று.
இப்போ மாற்றிவிட்டேன்... :):)