PDA

View Full Version : உன்னை தற்கொலை செய்யவா?! - அத்தியாயம் 10Pages : 1 [2]

Nivas.T
20-07-2010, 04:54 PM
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தியா வந்தமாதிரி ஒரு மகிழ்ச்சி:). நீங்கள் கூறும் நுண்ணறிவியல் விளக்கங்கள் என் சிற்றரிவுக்கு எட்டாவிடினும் அந்த விங்ஞானிகளின் உரையாடல் மெய்சிலிர்க்க செய்கிறது :sprachlos020:. அடுத்தது அசர்பெய்ஜான், அங்கும் ஒரு தற்கொலை என்பது என் கணிப்பு. தொடரட்டும் உங்கள் களப்பணி. வாழ்த்துக்கள்.:icon_b:

சிவா.ஜி
20-07-2010, 05:21 PM
கலக்கல் மதி. முன்கதை சுருக்கத்தை ரொம்ப தெளிவா அழகா சொல்லியிருக்கீங்க. அதே மாதிரி...பெரிய லெவல் பேச்சுக்களை அதே அழுத்தத்தோட எழுதியிருக்கிறது ரொம்ப நல்லாருக்கு.

அணுக்கருப் பிளவில் புதிய விஷயமா...பரபரப்பா இருக்கு இந்த அத்தியாயம். ரொம்பவே புரெஃபெஷனலா எழுதறீங்க. பாராட்டுக்கள். அஸர்பெய்ஜானில் எங்கே பாக்குவா?(BAKU). பட்டையக் கிளப்புங்க....ஆவலோட கூட வரேன்....

கீதம்
20-07-2010, 10:53 PM
முன்கதைச் சுருக்கத்துடன் தொடர்ந்ததற்கு நன்றி, மதி.

இந்த பாகத்தில் தேவையான செய்திகளை தேவையான அளவில் கொடுத்து எங்களுக்கு புரியவைக்க முயற்சித்துள்ளீர்கள். தாமரை அவர்களின் விளக்கமும் அருமை. ஆவலைத் தூண்டும் தொடரின் அடுத்தபாகத்துக்காய் காத்திருக்கிறேன்.

அன்புரசிகன்
21-07-2010, 12:15 AM
இந்த பாகத்தின் தலைப்பில் நிறைவுப்பகுதி என்று வரும்வரை உள்ளே நுழையக்கூடாதென்று நினைத்திருந்தேன். ஆர்வமிகுதி. வந்துவிட்டேன். ஒவ்வொருபாகத்திலும் சரமாரியான எதிர்பார்ப்புக்கணைகள். மீண்டும் ஒரு தற்கொலை. ஒரு இடத்தில் தான் ஒரு யோசனை... தண்டவாளத்தில் விழுந்தால் எப்படி கருகியிருக்கும். உடல் சிதைந்திருக்கும். அலைபேசி நொருங்கியிருக்கும். எப்படி கருகும்? மின்சார கம்பியை பிடித்துவிட்டாரோ???
-----
விஞ்ஞானிக்குண்டான அதே உத்வேகம். நல்ல அரசியல் வாதிகளின் உசாத்துணை என அழகாக காட்டியுள்ளீர்கள்.
தொடருங்கள்.
வாழ்த்துக்கள் மதி அண்ணா...

அன்புரசிகன்
21-07-2010, 12:22 AM
“சார்.. இது தான் இப்போ நம்ம ஆராய்ச்சியில இருக்கற புதிய ஏவுகணை. மணிக்கு நூறு மைல் வேகத்தில் போகக் கூடியது…”

மணிக்கு நூறு மைல் வேகத்தில் ஏவுகணையா? அடேங்கப்பா என் காரை விட ஸ்லோவா இருக்கும் போல இருக்கே.. என்ன விஜய் காந்த் படத்துக்காக டம்மியா தயார் பண்ணறாங்களா?

அட.. தமிழ் படத்துல வாற துப்பாக்கி குண்டு மாதிரியா???:lachen001::D

தாமரை
21-07-2010, 01:34 AM
வணக்கம் மதி,

நான் ராஜேஷ் குமார் கதைகளை விரும்பி படிப்பேன். உங்கள் தொடரினை நேற்று முழுவதும் படித்தேன், அவருடைய புத்தகத்தை எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது அதுபோலவே இருந்தது உங்கள் தொடர். நிறைய இடங்களில் அவருடைய யுத்தியை கையாண்டு இருப்பது மிக சிறப்பாக உள்ளது. இதற்காக எவ்வளவு விஷயம் திரட்ட வேண்டும். மிக அற்புதமாக எழுதுகிறீர்கள். கண்டிப்பாக இக்கதையை புத்தகமாக வெளியிடுங்கள். வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராக @ கதையாசிரியராக வருவீர்கள். ராஜேஷ் குமார்க்கு பிறகு அவர் விட்ட இடத்தை நீங்கள் நிரப்புவீர்கள் என்பதை நம்புகிறேன்:). அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இப்போதைக்கு தங்களுடைய வாசகி

ஜமிலா பானு

நாம சொன்னாலும் சொல்லாட்டியும் நிஜமாவே அவர் ஒரு இராஜேஷ்குமார்தான்...

மதி
21-07-2010, 03:28 AM
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தியா வந்தமாதிரி ஒரு மகிழ்ச்சி:). நீங்கள் கூறும் நுண்ணறிவியல் விளக்கங்கள் என் சிற்றரிவுக்கு எட்டாவிடினும் அந்த விங்ஞானிகளின் உரையாடல் மெய்சிலிர்க்க செய்கிறது :sprachlos020:. அடுத்தது அசர்பெய்ஜான், அங்கும் ஒரு தற்கொலை என்பது என் கணிப்பு. தொடரட்டும் உங்கள் களப்பணி. வாழ்த்துக்கள்.:icon_b:
நன்றி நிவாஸ்... அறிவியலை தமிழில் கற்காததால் எனக்கு நிறைய சிக்கல்கள்.. ஒவ்வொரு வார்த்தைக்கும் இணையான வார்த்தை கண்டுபிடிப்பதற்கு..

கலக்கல் மதி. முன்கதை சுருக்கத்தை ரொம்ப தெளிவா அழகா சொல்லியிருக்கீங்க. அதே மாதிரி...பெரிய லெவல் பேச்சுக்களை அதே அழுத்தத்தோட எழுதியிருக்கிறது ரொம்ப நல்லாருக்கு.

அணுக்கருப் பிளவில் புதிய விஷயமா...பரபரப்பா இருக்கு இந்த அத்தியாயம். ரொம்பவே புரெஃபெஷனலா எழுதறீங்க. பாராட்டுக்கள். அஸர்பெய்ஜானில் எங்கே பாக்குவா?(BAKU). பட்டையக் கிளப்புங்க....ஆவலோட கூட வரேன்....
நன்றிண்ணா.. அஸர்பெய்ஜானில் இன்னும் இடத்தை முடிவு பண்ணல.. சிலதகவல்களை இன்னும் திரட்டிக் கொண்டிருக்கிறேன்..

முன்கதைச் சுருக்கத்துடன் தொடர்ந்ததற்கு நன்றி, மதி.

இந்த பாகத்தில் தேவையான செய்திகளை தேவையான அளவில் கொடுத்து எங்களுக்கு புரியவைக்க முயற்சித்துள்ளீர்கள். தாமரை அவர்களின் விளக்கமும் அருமை. ஆவலைத் தூண்டும் தொடரின் அடுத்தபாகத்துக்காய் காத்திருக்கிறேன்.
நன்றிங்க கீதம்.. அடுத்து சீக்கிரம் தர முயற்சிக்கறேன்..

இந்த பாகத்தின் தலைப்பில் நிறைவுப்பகுதி என்று வரும்வரை உள்ளே நுழையக்கூடாதென்று நினைத்திருந்தேன். ஆர்வமிகுதி. வந்துவிட்டேன். ஒவ்வொருபாகத்திலும் சரமாரியான எதிர்பார்ப்புக்கணைகள். மீண்டும் ஒரு தற்கொலை. ஒரு இடத்தில் தான் ஒரு யோசனை... தண்டவாளத்தில் விழுந்தால் எப்படி கருகியிருக்கும். உடல் சிதைந்திருக்கும். அலைபேசி நொருங்கியிருக்கும். எப்படி கருகும்? மின்சார கம்பியை பிடித்துவிட்டாரோ???
-----
விஞ்ஞானிக்குண்டான அதே உத்வேகம். நல்ல அரசியல் வாதிகளின் உசாத்துணை என அழகாக காட்டியுள்ளீர்கள்.
தொடருங்கள்.
வாழ்த்துக்கள் மதி அண்ணா...
நன்றி அன்புரசிகரே.. நீங்க சொன்ன இடம் சரியாக புரியாவிடில் என் தப்பு தான். அந்த Line 2, Third Rail எனப்படும் முறையில் கட்டப்பட்டுள்ளது.. அதாவது மின்கம்பங்கள் இல்லாமல் தண்டவாளங்களுக்கு இடையே இருக்கும் இரும்பின் மூலமாக மின்சாரம் கிடைக்கும். அதனாலேயே தடுப்பு எப்போதும் வைத்திருப்பர் அந்த மெட்ரோ லைனில்... தவறி விழுந்தால் மரணம் தான்.. ஒரு சாவுக்கு எத்தனை ஆராய்ச்சி பண்ண வேண்டி இருக்கு..:icon_b:

மதி
21-07-2010, 03:31 AM
நாம சொன்னாலும் சொல்லாட்டியும் நிஜமாவே அவர் ஒரு இராஜேஷ்குமார்தான்...
:D:D:D:D:D

அன்புரசிகன்
21-07-2010, 03:49 AM
அட.. எனக்கு இதெல்லாம் தெரியாதுங்க... உண்மையில் நீண்ட காலம் எடுக்கும் தான். இப்படியான ஆராய்ச்சி எல்லாம் செய்து கதை எழுதுறதென்றால்..............

இவ்வளவு தெரிஞ்சிருக்கு ஒன்றை தவிர...

மதி: ஒன்று தானே.. எனக்கு தெரியாத ஒன்றா... இதோ இப்படி தான். 1
:D :D :D

மதி
21-07-2010, 04:53 AM
அட.. எனக்கு இதெல்லாம் தெரியாதுங்க... உண்மையில் நீண்ட காலம் எடுக்கும் தான். இப்படியான ஆராய்ச்சி எல்லாம் செய்து கதை எழுதுறதென்றால்..............

இவ்வளவு தெரிஞ்சிருக்கு ஒன்றை தவிர...

மதி: ஒன்று தானே.. எனக்கு தெரியாத ஒன்றா... இதோ இப்படி தான். 1
:D :D :D

உண்மை தான்.. ஏகத்துக்கும் அலைய வேண்டி இருக்கு... :eek::eek:
கதைக்கான விஷயங்கள் தேடி...

samuthraselvam
21-07-2010, 05:28 AM
ம்ம்ம் இந்தப் பாகம் நல்லாத்தான் போச்சு..... அணுக கரு இணைவுங்கறீங்க அணுக்கரு பிளப்புங்கறீங்க...

எல்லாம் பள்ளிப் படிப்போட சரி... அப்பப்ப இந்த மாதிரி யாரவது மதி ஜீவிங்க (அறிவு ஜீவிங்க) சொன்னா காதில் கேட்டுகறதோட சரி....

அடுத்த பாகம்?

மதி
21-07-2010, 05:30 AM
ம்ம்ம் இந்தப் பாகம் நல்லாத்தான் போச்சு..... அணுக கரு இணைவுங்கறீங்க அணுக்கரு பிளப்புங்கறீங்க...

எல்லாம் பள்ளிப் படிப்போட சரி... அப்பப்ப இந்த மாதிரி யாரவது மதி ஜீவிங்க (அறிவு ஜீவிங்க) சொன்னா காதில் கேட்டுகறதோட சரி....

அடுத்த பாகம்?
இப்போ தான் மூச்சு விடாம எழுதி.. இருக்கேன்.. கொஞ்ச நாளைக்குப் பொறுங்க.. :icon_b:

பா.ராஜேஷ்
21-07-2010, 08:02 PM
முன்கதை சுருக்கத்தோட தொடங்கியது மிக நன்று... வழக்கம் போலவே இந்த பாகமும் மிக நன்றாக எழுதி இருக்கீங்க... அசர்பெய்ஜனில் காத்திருக்கிறோம்... ;)

மதி
29-07-2010, 11:02 AM
கெய்ரோ…

கொஞ்சம் கொஞ்சமாக சகஜநிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் நோரா. அவள் காதலன் பொம்மானி தன் நண்பனின் பெற்றோரை வரவேற்று அவன் உடலை போலிஸிடமிருந்து வாங்கி அவர்களுடன் ஊருக்குச் சென்று திரும்பி இருந்தான். அடுத்தடுத்து பயணங்களினாலும் அலைச்சலினாலும் மனமும் உடலும் சோர்ந்திருந்தன. வந்ததிலிருந்து நோராவை சரியாக கவனிக்காததை உணர்ந்து அவளுக்கு போன் செய்தான். நேரம் அப்போது காலை ஏழரையை நெருங்கிக் கொண்டிருந்தது.

மறுமுனையில் போன் எடுத்த நோரா,
“ஹே.. சொல்லு. எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சா? உன் ப்ரண்ட் பெற்றோர் தான் பாவம்..”

அவள் குரலில் உண்மையிலேயே துக்கம் தோய்ந்திருந்தது. இதுவரை பார்த்திராத பார்க்கப் போறாத அந்த நபருக்காகப் பரிதாபப்பட்டது.

“ம்ம். வரிசையா அலைச்சல். அவன் பெற்றோர் தான் பாவம். ரொம்பவும் நொந்துட்டாங்க. கொஞ்ச நாளாகவே அவன் சரியில்லேயாம். வேலை இல்லாமல் பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருந்தானாம். இப்படியா தற்கொலை பண்ணிக்குவான்னு பேசிட்டு இருந்தாங்க.ப்ச். நல்லவன்.”

“ம்ம்.. உன் கூட ஸ்கூல்ல படிச்சவனா..?”

“ஆமா. அதுக்கப்புறம் அவ்வளவா டச் இல்ல. திடீர்னு வர்றேன்னான். என்ன ஏதுனு சொல்லல. இப்படியாகிப்போச்சு.”

“ம்ம்.. கவலைப்படாத.. சரி. இன்னிக்கு ஈவினிங் மீட் பண்ணலாமா? எனக்கு யுனிவர்சிட்டியில முக்கியமான வேலை இருக்கு. அத முடிச்சுட்டு ஆறு மணிக்கு மேல.. என்ன சொல்ற..?”

“கண்டிப்பா. எனக்கும் ரொம்ப அசதியா இருக்கு. ஆபிஸுக்கு போய் கொஞ்சம் முடிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கு. அரைநாள்ல திரும்பிடுவேன். எங்க சந்திக்கலாம்..?”

“வழக்கம் போல எங்க யுனிவர்சிட்டி மெட்ரோ ஸ்டேஷனுக்கு வந்துடு. அங்கிருந்து எங்கியாச்சும் போகலாம்..”

“ம்ம்.. சரி.”

போன் வைக்கப்பட்டவுடன் நோராவின் மனது லேசானது. நீண்ட நாட்களுக்குப் பின் பொம்மானியை சந்திக்கப் போகிறாள். அந்த மரணத்தைக் கேட்டதிலிருந்து அவள் மனம் ரொம்ப கலக்கமடைந்திருந்தது. இப்போது அவனுடன் பேசியதில் சற்றே தெம்பா இருந்தது. ‘கொஞ்ச நாள் எங்கேயாவது அவனுடன் போய் வர வேண்டும். இருவருக்குமே மாற்றமாயிருக்கும்’. நினைத்தாள் கூடிய விரைவிலேயே அது நடக்கப் போவதை அறியாமல்.

வேகமாய் குளித்து முடித்து சாப்பிட்டு ரயிலேறி பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த போது மணி ஒன்பதை நெருங்கியது. அன்று அவளுக்குப் பிடித்தமான புரொபஸர் அப்த்-எல்-மொனேம் வகுப்பு. அன்று பழமையான கலாச்சாரத் தொடர்பு பற்றி சொல்வதாக சொல்லி இருந்தார்.

வகுப்பில் நுழைந்ததும் வழக்கம் போல அனைவருக்கும் காலை வணக்கம் தெரிவித்து நோராவைப் பார்த்து புன்னகைத்தார். அவருக்கு பிடித்தமான மாணவி. அவரின் ஆராய்ச்சியில் தன்னாலான ஒத்துழைப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.

“நோரா.. வகுப்புகள் முடிந்ததும் என்னை வந்து பார். உன்னிடம் பேச வேண்டும்..”

சரியென நோரா தலையாட்ட வகுப்பு ஆரம்பமாகியது.

“ஸ்டூடண்ட்ஸ்.. ஏற்கனவே உங்களிடம் சொன்னபடி இன்று பழங்கால எகிப்துக்கும் பண்ட் என்று அழைக்கப்பட்ட ஆசிய நாட்டையும் பற்றி பார்க்கப்போறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செங்கடல் அருகில் குற்றுயிரும் கொலையுருமாக ஒரு மாலுமி மாட்டினான். அவனை அலெக்ஸாண்டிரியாவிற்கு கொண்டு சென்று மருத்துவம் பார்த்தனர். தன்னை விட்டுவிட்டால் கடல் தாண்டி இருக்கும் தன் நாட்டிற்கு செல்ல குறுக்குவழிகளைக் காண்பிப்பதாக சொன்னான். அப்போது தான் ஆரம்பித்தது எகிப்திற்கும் இந்தியாவிற்கும் கலாச்சாரத் தொடர்பு.

மேலும் காலம் காலமாக நமக்குக் கிடைத்துள்ள பல ஆவணங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஜான் ஸ்பெக்ங்கற ஆங்கில ராணுவ அதிகாரி நைல் நதியில் மூலம் கண்டுபிடிக்க இந்து பிராமணர்கள் தான் உதவியதாகத் தெரிவித்துள்ளார். நைல் என்ற வார்த்தையே நீலா என்னும் சமஸ்க்ருத வார்த்தையில் இருந்து வந்தது என்றும். இந்து புராணங்களில் இந்த நதியின் மூலம் பற்றி இருப்பதாகவும் கூறுகிறார். இதிலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமக்கும் இந்தியாவிற்கும் வாணிகத் தொடர்பு இருந்தது. இன்னும் சுவாரஸ்யமான விஷயம், நம் பிரமிடுகளில் இருக்கும் மம்மிக்களை பாதுக்காக்க பயன்படுத்தப்பட்ட லினன் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இப்படி நிறைய வரவாற்று சம்பவங்களும் ஆவணங்களும் கிடைத்துள்ளன.

மேலும்.. பார்க்கப்போனால இந்திய மன்னன் அசோகர் காலத்தில்….”

அவர் பல சான்றுகளையும் சம்பவங்களையும் சொல்லிக்கொண்டே போக வகுப்பில் அனைவரும் அசையாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். வகுப்பு முடிந்ததும் அவரின் அறைக்கு சென்ற நோராவிற்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

“யெஸ் நோரா.. கம்மின்”

உள்நுழைந்து நிற்க

“சிட் டவுன்” உட்கார்ந்தாள்.

“நோரா.. உனக்கே தெரியும். தற்சமயம் நான் ஈடுபட்டிருக்கிற ஆராய்ச்சி. இந்தியாவிற்கும் எகிப்திற்கும் இருக்கும் கலாச்சாரத் தொடர்பு. கொஞ்ச நாள் முன்பு அகழ்வாய்வுத்துறை அழைப்பின் பேரில் குவாஸிர்-அல்-குவாதீம் சென்றிருந்தேன். பண்டைய ரோமானிய குடியிருப்புப் பகுதியில் ஒரு பானை சிதறல்கள் கிடைத்துள்ளது. பழங்கால எழுத்துக்கள் அதில் உள்ளன. பழங்கால தென்னிந்திய மொழியான தமிழ்ப்ராமி எழுத்தாக இருக்கலாம் என்று நம்புகிறோம். அதன் பிரதியை இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி இருக்கிறோம்.

மேலும் அடுத்த மாதம் குஜராத்தில் நடைபெறும் புத்தமத கருத்தரங்கில் வெளிநாடுகளில் புத்தமதம் என்ற தலைப்பில் நாம் அனுப்பிய பேப்பர் தேர்வாகி இருக்கு. அதற்கு நம்மிருவரில் ஒருவர் போக வேண்டும்.”

சந்தோஷத்தில் நோராவின் கண்கள் விரிந்தன.

“முழுதாக கேள். இதையெல்லாம் யோசித்தேன். நீயும் உன் கோர்ஸ் முடிக்க தீஸிஸ் செய்தாகணும். புத்தகங்களும் இண்டெர்நெட்டும் போதுமென்றாலும் இந்தியாவைப்பற்றி நீ செய்யும் ஆராய்ச்சிக்கு அங்கு சென்று வந்தால் நல்லா இருக்கும்னு நான் நம்பறேன். நீ என்ன சொல்ற”

ஆனந்தத்தில் பேச்சு வராமல் தவித்தாள் நோரா. இந்தியா செல்ல வேண்டுமென்பது அவள் நீண்ட நாள் கனவு. பொருளாதார சூழ்நிலை அவளை தடுத்திருந்தது.

“உனக்கு சம்மதம்னா. அந்த செமினாரில் பேப்பர் ப்ரஸண்ட் பண்ண நீ போ. அதற்கான ஏற்பாடுகளை யுனிவர்சிட்டி செய்யும். அப்படியே தமிழ் பல்கலைக்கழகத்தில் இருக்கும் பேராசிரியரையும் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். அதன் செலவை அகழ்வாராய்ச்சித்துறை ஏத்துக்கும். ஒரு மாதம் இந்தியாவில் இருக்க வேண்டி வரும். அப்படியே ஹைதராபாத்தில் இருக்கும் ம்யூசியத்தில் மம்மியின் நிலை பற்றியும் தகவல் சேகரித்து வா. என்னசொல்கிறாய்?”

புரொபஸர் எப்பவும் இப்படித்தான். வாழ்நாள் முழுக்க பேசிப்பேசி மூச்சுவிடாமல் பேசக் கற்றிருந்தார். அவர் சொன்ன அத்தனையும் தனக்கு விளங்கிய மாதிரியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள் நோரா.

“ரொம்ப.. ரொம்ப.. சந்தோஷமான விஷயம். என் ஆராய்ச்சிக்குத் தேவையான பல விஷயங்கள் அங்க கிடைக்கும்னு நம்பறேன். எப்போ சார் கிளம்பணும்? எப்போ உங்களுக்கு உறுதிப்படுத்தணும்.”

சந்தோஷத்தில் மிதந்தாள். வாழ்நாளில் எதிர்பாராத வாய்ப்பு.

“இன்னும் நான்கு நாட்களில் கிளம்ப வேண்டும். நாளை காலையிலேயே சொன்னால் விசா ஏற்பாடுகளை செய்ய சொல்றேன்.. சந்தோஷமா?”

“ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார். நான் நினைச்சுப் பார்க்காத ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. நன்றி..காலையில் சொல்கிறேன்”

விடைப்பெற்றுக் கிளம்பினாள். மதியம் முழுக்க வேற சிந்தனைகளே இல்லை. இந்தியாவே அவள் நினைவை ஆக்ரமித்துக் கொண்டிருந்தன, அங்கே அவளுக்குக் காத்திருக்கும் ஆபத்தை தெரிவிக்காமல்.

மாலை ஆறு மணியளவில் வானம் மேகத்தால் மூடப்பட்டு எந்நேரமும் மழையாய் கொட்டலாம் என்று காத்திருந்தது. அதைப்பற்றி கவலைப்படாமல் பொம்மானியை சந்தித்து விஷயத்தை சொல்லும் ஆவலில் மெட்ரோ ரயில் நிலையத்தில் காத்திருந்தாள் நோரா. ஆறு ஐந்து என்று மணி காட்டும் போது பொம்மானி இறங்கினான். வேகவேகமாக அவனருகில் சென்று அவன் கைபற்றினான். அவளைப்பார்த்ததும் பொம்மானியின் முகம் களையானது. சரியான தூக்கமில்லாததால் கண்ணைச் சுற்றி கருவளையமும் ஆங்காங்கே சுருக்கமும்.

“ஹே.. என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க…”

“ஆமா.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. வா எங்கியாச்சும் போலாம். அங்க போய் சொல்றேன்.”

“என்னனு சொல்லு..”

“இல்ல.. அங்க போனதும் தான். எங்கே போலாம்?”

“நீயே சொல்லு…”

“ரிவர் ஸ்டேஷன் பக்கத்துல ரிவர்வ்யூ ரெஸ்டாரண்ட் இருக்குல்ல. அங்க போலாம்.”

“செம குஷியா தான் இருக்க போல. சரி அங்கேயே போலாம்..”

எதிர்பக்கமிருந்த ப்ளாட்பார்மில் அடுத்த மெட்ரோ ரயில் வர ஏறி ஐந்து நிமிடத்துல நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். மழை லேசாகத் தூற ஆரம்பித்திருந்தது. நடைபாதை மூன்று நிமிடங்கள் நடந்து அந்த பெரிய ரெஸ்டாரண்டை அடைந்தனர். அவ்வளவாக கூட்டமிருக்கவில்லை. நேரம் ஆக ஆக இடமே களை கட்டும். இருவருக்கும் டேபிள் சொல்லி அமர்ந்தனர். அவர்களது பக்கதிலிருந்த கண்ணாடிச்சுவர் தாண்டி நைல்நதியின் பரப்பு விஸ்தீரணமாக இருந்தது. விளக்கு வெளிச்சத்தில் நீர் பல வண்ணங்கள் எடுத்திருந்தது.

“ம்ம். இப்போவாவது சொல்லு. என்ன விஷயம்?”

“உன்கிட்ட சொல்லி இருந்தேனே.. என் ப்ராஜக்ட் பத்தி”

“ஆமா. ஏதோ கலாச்சாரம் சம்பந்தமா.. அதுக்கென்ன?”

“அதுக்காக இந்தியா போக சந்தர்ப்பம் வந்திருக்கு. அடுத்த மாசம் ஒரு பேப்பர் ப்ரஸெண்டேஷன். அப்படியே இரண்டு மூணு பேரை சந்திக்கணும். எங்க புரொபஸர் என்னைப் போக சொன்னார் யுனிவர்சிட்டி ஸ்பான்ஸர்ஷிப்ல. ஒருமாதம் அங்க இருந்து வேலைய முடிச்சுட்டு அப்படியே என் ப்ராஜக்ட் சம்பந்தமாவும் முடிச்சுடலாம்.”

பொம்மானியின் முகம் சுருங்கியது.

“ஒரு மாசமா.. எப்போ போகணும்?”

அவன் முகம் மாறுவதைக் கண்டு சுரத்தற்ற குரலில்

“நாலுநாள்ல. நாளைக்கு காலைல கன்பர்ம் பண்ணனும்.”

“ஓ… இப்போ தான் ரெண்டு மாசம் கழிச்சு பாக்கறோம். அதுக்குள்ள ஒரு மாசம் பிரியணும்னு சொல்ற..”

அவன் வருத்தம் அவளுக்குப் புரிந்தது.

“எனக்குத் தெரியுது. ஆனா இது நல்ல சான்ஸ். விட்டா கிடைக்காது.. என்ன பண்ண?”

“ம்ம்..”

சிறிது நேரம் அசைந்தோடிக் கொண்டிருந்த நதியையே பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் ஆயிரம் சிந்தனைகள்..சலனங்கள். ஏற்கனவே இரண்டு மாதங்கள் ரணமாய் கழிந்தது. இன்னும் ஒரு மாதமா?

அப்போது முகம் பிரகாசமான நோரா,

“ஹேய்.. எனக்கொரு ஐடியா தோணுது. நீயும் ஏன் என்கூட வரக்கூடாது. உனக்கும் நிறைய லீவ் இருக்கும். அப்படியே ஊர் சுத்திட்டு வரலாம். நாலு வாரம் லீவ் தான் கிடைக்கும்ல..”

பொம்மானியின் கண்ணில் அப்போது தான் ஒளிவந்தது.

“ம்ம். நிறைய இருக்கு. இப்போ தான் ப்ராஜக்ட் முடிஞ்சு வந்ததால வேல ஒன்னுமில்ல. ஈசியா லீவ் கிடைக்கும்..”

“சூப்பர். அப்போ எங்க யுனிவர்சிட்டியில சொல்லி உனக்கும் விசாக்கு ஏற்பாடு பண்ண சொல்றேன். உன் டிக்கட் செலவுகளை மட்டும் நாம கொடுத்திடலாம்..”

“ம்ம்.. சந்தோஷம்.. அப்படியே செஞ்சிடலாம். இப்போ தான் ஒரு நாட்டிலேர்ந்து வந்தேன் அதுக்குள்ள இன்னொரு நாடா..?”

“இந்தியான்னு சொல்லாத. அங்க வந்து பாரு. நிறைய பொக்கிஷங்கள் இருக்கு. பழங்கால மனிதர்கள் அங்க தான் வாழ்ந்தாங்களாம். இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே நைல் நதிக்கு வந்திருக்காங்க. அதை பத்தி தெரிஞ்சு வச்சிருக்காங்க…”

“போதும்.. போதும்.. உன் லெக்ஸர நிறுத்து….”

இருவரும் சிரிக்க அவன் புதிதாய் வாங்கியிருந்த மொபைல் அழைத்தது.

“ஹலோ..’

“நாங்க போலீஸ் ஸ்டேஷன்லேர்ந்து பேசறோம். உங்க நண்பர் மரணம் சம்பந்தமா உங்க கூட பேசணும்..”

“வர்றேன்.”

இருவரும் போலீஸ் ஸ்டேஷன் செல்ல,

“சார். உங்க நண்பர் தவறி விழுந்திருக்கார். பேசிக்கிட்டே போனதுல சறுக்கியிருக்கலாம். மேற்கொண்டு எந்த விசாரணையும் இல்லேன்னு சொல்லத் தான் உங்கள கூப்பிட்டோம்..”

“ம்ம். அவன் விதி… ரொம்ப நன்றி சார்…”

விடைபெற்றனர்.

அடுத்த நாள் இருவரும் விசா வாங்க விண்ணப்பிக்க எண்ணி நாலாவது நாளில் இந்தியக் கனவுகளோடு நோரா பயணத்தை ஆரம்பித்தாள் காதலன் பொம்மானியுடன். துபாயில் இறங்கி விமானம் மாறி சென்னையை அடைந்து இமிகிரேஷன் முடித்து வெளிவரும் போது “நோரா – கெய்ரோ” எனப் பெயர்பலகையைத் தாங்கியிருந்தா ஆள் நின்றிருந்தான். அவர்களை வரவேற்க வந்தவன். அவனை நோக்கி இருவரும் நடக்க, துபாய் சென்னை விமானத்தில் இவர்களுக்கு இரண்டு சீட் பின்னால் உட்கார்ந்திருந்த அந்த வெள்ளைக்காரப்பெண் நாலடி தள்ளி நின்றிருந்த ஆளை நோக்கிப் போனாள்.

“ஹாய்.. ஏமி, வெல்கம் டூ இண்டியா…”

வரவேற்றவன்.. சந்தேகமில்லாமல் ப்ராங்க், அவளைத் தொடர்ந்த அபாயங்களை அறியாமல்.

samuthraselvam
29-07-2010, 11:18 AM
இந்தியா வந்துட்டாங்களா? இனி உலகம் சுற்றும் அவசியமில்லை... பாவம் ஆபத்துக்களுடன் வரும் நோரா... (பேர் வித்யாசமா இருக்கு மதி...)

Nivas.T
29-07-2010, 11:26 AM
//“ஸ்டூடண்ட்ஸ்.. ஏற்கனவே உங்களிடம் சொன்னபடி இன்று பழங்கால எகிப்துக்கும் பண்ட் என்று அழைக்கப்பட்ட ஆசிய நாட்டையும் பற்றி பார்க்கப்போறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செங்கடல் அருகில் குற்றுயிரும் கொலையுருமாக ஒரு மாலுமி மாட்டினான். அவனை அலெக்ஸாண்டிரியாவிற்கு கொண்டு சென்று மருத்துவம் பார்த்தனர். தன்னை விட்டுவிட்டால் கடல் தாண்டி இருக்கும் தன் நாட்டிற்கு செல்ல குறுக்குவழிகளைக் காண்பிப்பதாக சொன்னான். அப்போது தான் ஆரம்பித்தது எகிப்திற்கும் இந்தியாவிற்கும் கலாச்சாரத் தொடர்பு.

மேலும் காலம் காலமாக நமக்குக் கிடைத்துள்ள பல ஆவணங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஜான் ஸ்பெக்ங்கற ஆங்கில ராணுவ அதிகாரி நைல் நதியில் மூலம் கண்டுபிடிக்க இந்து பிராமணர்கள் தான் உதவியதாகத் தெரிவித்துள்ளார். நைல் என்ற வார்த்தையே நீலா என்னும் சமஸ்க்ருத வார்த்தையில் இருந்து வந்தது என்றும். இந்து புரானங்களில் இந்த நதியின் மூலம் பற்றி இருப்பதாகவும் கூறுகிறார். இதிலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமக்கும் இந்தியாவிற்கும் வாணிகத் தொடர்பு இருந்தது. இன்னும் சுவாரஸ்யமான விஷயம், நம் பிரமிடுகளில் இருக்கும் மம்மிக்களை பாதுக்காக்க பயன்படுத்தப்பட்ட லினன் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இப்படி நிறைய வரவாற்று சம்பவங்களும் ஆவணங்களும் கிடைத்துள்ளன.

மேலும்.. பார்க்கப்போனால இந்திய மன்னன் அசோகர் காலத்தில்….”//

அழகான அற்புதமான வரலாற்று விளக்கங்கள்

மீண்டும் ஒரு யவனர் பயணம்

மிக்க நன்றி மதி, தொடருங்கள்

மதி
29-07-2010, 11:52 AM
இந்தியா வந்துட்டாங்களா? இனி உலகம் சுற்றும் அவசியமில்லை... பாவம் ஆபத்துக்களுடன் வரும் நோரா... (பேர் வித்யாசமா இருக்கு மதி...)
எனக்கும்ம் ஊர் சுற்றி போரச்சிடுச்சு... :D:D:D
ரெண்டு மூணு நாட்டோட நிறுத்திக்கலாம்னு..ஹிஹி


அழகான அற்புதமான வரலாற்று விளக்கங்கள்

மீண்டும் ஒரு யவனர் பயணம்

மிக்க நன்றி மதி, தொடருங்கள்
தொடர்ந்து வருவதற்கு நன்றி நிவாஸ்...!!

சிவா.ஜி
29-07-2010, 01:49 PM
அசத்துங்க...அசத்துங்க....நைல்நதியின் மூலமறிய உதவியது இந்து பிராமினர்களா....ஆச்சர்யமான விஷயம். நோராவுக்கும் பொம்மானிக்கும் ஆபத்து எந்த ரூபத்துலக் காத்திருக்குன்னு தெரியலையே....பாப்போம்...சொல்லாமலா போயிடுவீங்க....!!!

நல்ல வரலாற்றுத் தகவல்களுடன்...கலக்கலான அத்தியாயம். தொடர்ந்து அசத்துங்க மதி....வாழ்த்துக்கள்.

மதி
29-07-2010, 01:52 PM
அசத்துங்க...அசத்துங்க....நைல்நதியின் மூலமறிய உதவியது இந்து பிராமினர்களா....ஆச்சர்யமான விஷயம். நோராவுக்கும் பொம்மானிக்கும் ஆபத்து எந்த ரூபத்துலக் காத்திருக்குன்னு தெரியலையே....பாப்போம்...சொல்லாமலா போயிடுவீங்க....!!!

நல்ல வரலாற்றுத் தகவல்களுடன்...கலக்கலான அத்தியாயம். தொடர்ந்து அசத்துங்க மதி....வாழ்த்துக்கள்.
நன்றிண்ணா... ஒரு கருவை மட்டும் வச்சுக்கிட்டு அப்பப்போ கிடைக்கற தகவல்களை கோர்த்துட்டு இருக்கேன்.. பார்க்கலாம்.. எது வரைக்கும் போகுதுன்னு... :icon_b:

கீதம்
31-07-2010, 02:02 AM
கதை படிப்பது போன்ற உணர்வில்லாமல் கூடவே வாச்கர்களை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்த கதையோட்டமும், வசனங்களும், காட்சிவர்ணனைகளும் பிரமாதம். பல அரிய தகவல்களையும் அநாயாசமாக சொல்லிச் செல்கிறீர்கள். இக்கதைக்குப் பின்னாலிருக்கும் உங்கள் உழைப்பை மிகவும் பாராட்டுகிறேன், மதி.

ஆதவா
14-08-2010, 02:18 PM
பத்து அத்தியாயங்களையும் படித்தேன் மதி. ரொம்ப சிறப்பு என்றெல்லாம் சொல்ல ஒரு தகுதி வேண்டும். அது எனக்கில்லை. விறுவிறுப்பு மாத்திரம் எதிலும் குறையவேயில்லை.
வசன நடை மட்டும் ஓரிடங்களில் வழக்கு நடையும், எழுத்துநடையும் மாறி மாறி வந்திருந்தது.
இன்னும் சொல்லப்போனால், இதற்கு எப்படி பின்னூட்டம் போடுவதென்றே தெரியவில்லை. அவ்வளவு நன்றாக இருக்கிறது.

கதையை தொடர்ந்து எழுதுங்கள். நான் முடிந்திருக்கும் என்றுதான் இவ்வளவு நாள் கழித்து வந்து படித்தேன்./

ஆதவா
14-08-2010, 02:19 PM
இக்கதைக்குப் பின்னாலிருக்கும் உங்கள் உழைப்பை மிகவும் பாராட்டுகிறேன், மதி.

நிச்சயமாக.... ஊர் ஊராக சுற்றி, சில தகவல்களைச் சேர்த்து..... அது ஒண்ணும் சாமானியப்பட்டதல்ல.

விவேகானந்தரையும் கலாமையும் கதைக்குள் கொண்டுவந்ததும் சிறப்புதான்..

மதி
15-08-2010, 03:39 AM
பத்து அத்தியாயங்களையும் படித்தேன் மதி. ரொம்ப சிறப்பு என்றெல்லாம் சொல்ல ஒரு தகுதி வேண்டும். அது எனக்கில்லை. விறுவிறுப்பு மாத்திரம் எதிலும் குறையவேயில்லை.
வசன நடை மட்டும் ஓரிடங்களில் வழக்கு நடையும், எழுத்துநடையும் மாறி மாறி வந்திருந்தது.
இன்னும் சொல்லப்போனால், இதற்கு எப்படி பின்னூட்டம் போடுவதென்றே தெரியவில்லை. அவ்வளவு நன்றாக இருக்கிறது.

கதையை தொடர்ந்து எழுதுங்கள். நான் முடிந்திருக்கும் என்றுதான் இவ்வளவு நாள் கழித்து வந்து படித்தேன்./
ஆஹா ஆதவா.. நீங்கள் சொன்ன மாதிரி எனக்கு அந்த தடுமாற்றம் வந்தது. பிறமொழியாளர் பேசுவதை எழுத்துநடையில் எழுதியிருப்பேன்..

இடையில் சில தொய்வுகள்.. என்னை நான் திருப்திபடுத்த மெனக்கெடல்கள் வேண்டியிருக்கு. அதிகம் லாஜிக் இடிக்காத வண்ணம். இடைப்பட்ட நிலையில் பணி மாறுதல்...

ஹூம்... ஏழுவருடங்கள்.. ஒரே கம்பெனியில்.. ஒரே டீமில்... நிறைய உறவுகள்... வெள்ளிக்கிழமையன்று கடைசி நாள். கண்கலங்கி கண்கலங்க வைத்துவிட்டனர். இன்று வேலையில் இல்லா பட்டதாரி.. :icon_b::icon_b:

தொடர்கிறேன்.. விரைவிலேயே ஆதவரே.. அறிவியல் சம்பந்தமா நிறைய படிக்க வேண்டியிருக்கு..!!

மதி
15-08-2010, 03:41 AM
நிச்சயமாக.... ஊர் ஊராக சுற்றி, சில தகவல்களைச் சேர்த்து..... அது ஒண்ணும் சாமானியப்பட்டதல்ல.

விவேகானந்தரையும் கலாமையும் கதைக்குள் கொண்டுவந்ததும் சிறப்புதான்..
காதோடு ஒரு ரகசியம்.. விவேகானந்தர் தான் சில பல விஷயங்களுக்கு மூலக்காரணமாம்.. என்னவென்று தெரிந்து கொள்ளாமல் யாரும் சர்ச்சையை கிளப்ப வேண்டாம்..:icon_b:

தாமரை
27-08-2010, 04:09 AM
இப்ப மதியே இந்தக் கதையை முதல்ல திரும்பப் படிக்கணும்.

அது அவருக்கே புரியணும்

அவரோட பிளாட் முழுசும் ஞாபகம் இருக்கணும்..

எத்தனை கஷ்டங்கள்.. பாருங்க...

மதி
27-08-2010, 05:01 AM
இப்ப மதியே இந்தக் கதையை முதல்ல திரும்பப் படிக்கணும்.

அது அவருக்கே புரியணும்

அவரோட பிளாட் முழுசும் ஞாபகம் இருக்கணும்..

எத்தனை கஷ்டங்கள்.. பாருங்க...
அதெல்லாம் ஞாபகம் இருக்கு... இன்னும் கூட கதைய இழுக்கலாம்..
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..சென்னையில் செட்டில் ஆயிடறேன்..

பா.ராஜேஷ்
29-08-2010, 02:20 PM
இன்னிக்குத்தான் பத்தாவது அத்தியாயத்தை படிக்க முடிந்தது... ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க மதி... அடுத்த பாகத்தை எப்போ தொடர போறீங்க!!?

sarcharan
01-02-2011, 12:04 PM
ஒரு வருஷம் ஓடிப் போச்சு. அடுத்த பாகம் எப்போ வரும்னு 16 வயதினிலே ஸ்ரீதேவி கணக்கா மக்கள் எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க..

oru varusam odi pochu. adutha paagam eppo varummnnu 16 vayadhinile sreedevi kanakka makkal ellarum kathukittu irukkanga....