PDA

View Full Version : வேட்டைக்காரன்



kulirthazhal
17-04-2010, 07:03 AM
சிலு சிலு நீர்காற்று,
செந்தாழம் பூ வாசம்,
வளைந்தோடும் காற்றாறு,
வளையாத மூங்கில்கள்,
சிலை செய்த வண்டல்கள்,
சிதையாத சிலந்தி வலை,
விளையாடும் சிட்டுக்கள்,
வில்லோடு விஷ அம்பு.........

-குளிர்தழல்

கீதம்
17-04-2010, 10:20 AM
கவர்ந்திழுக்கும் அழகுக்குப் பின்னே கவலை கொள்ளத்தக்க அபாயம் இருப்பதை அழகாய்ச் சொல்லி எச்சரிக்கின்றன கவிதை வரிகள். பாராட்டுகள் குளிர்தழல்.

அமரன்
17-04-2010, 10:34 AM
குளிர்தழல் கவிதைகள் படிமங்களின் குவியல்.

அந்த வகையில் இந்தக் கவிதை படிமங்களின் படையல்.

கீதம் சொன்ன ஒரு வரிக் கருவுக்கு எத்தனை உருவகங்கள்..
அதன் பின்னால் எத்தனை உண்மைப் பளிங்குகள்..

செந்தாழம்பூ வாசனைக்கு பாம்புகள் தேடி வருமாம்.
வேட்டைக்காரனும் ஒரு வகையில் பாம்புதான். மகுடி ஊதும் பாம்பு..

கலையரசி
17-04-2010, 12:20 PM
மனதுக்கு இதமான ரம்மிய சூழ்நிலையை விளக்கி விட்டு கடைசி வரியில் வில்லோடு விஷ அம்பு எனச் சொல்லிப் பயமுறுத்திவிட்டீர்கள்.
காடு, நதி, மலை என்ற இயற்கையின் அற்புதங்களை அழித்த, அழிக்கின்ற மனிதனை விஷ அம்பு ஏந்தி வரும் வேட்டைக்காரனுடன் ஒப்பிடுகிறீர்களோ!
நன்று குளிர்தழல். மேலும் எழுதுங்கள்.

வளைந்தோடும் காற்றாறு? காட்டாறா?