PDA

View Full Version : கோடை கால கவனம்(செய்தித் தாளில் படித்தது)



அசோகன்
17-04-2010, 02:47 AM
வெயில் காலத்தில், தண்ணீர் தாகத்தை தணிக்க குளிர்பானங்களை அருந்துகின்றோம். கோடை காலத்தில், நாம் குடிக்கும் குளிர்ந்த நிலையில் உள்ள மென்பானங்கள் உடலுக்கு கலோரியைத் தருவதை விட, உடலில் இருந்து கலோரியைக் குறைத்து விடும். எனவே பானங்களை குளிரூட்டி அருந்துவதை விட, சாதாரண வெப்ப நிலையில் அருந்துவதே நல்லது என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.குளிரான வெப்ப நிலையில் உள்ள உணவுப் பொருள், சாதாரண வெப்ப நிலைக்கு மாறியவுடன் உணவுப்பாதையில் செரித்தல் நடைபெறும். இப்படிக் குளிரான பானத்தை, நம் உடலின் வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றுவதற்கு, நம்முடைய உடலில் குறைந்தது 10 கலோரிகள் செலவாக வேண்டி உள்ளது. 10 கலோரிக்கும் குறைவான குளிர் பானத்தை, நாம் அருந்தினால் நம்முடைய உடலில் இருந்து ஏற்கனவே உள்ள 10 கலோரிகளும் வீணாகி விடும். எனவே கோடை காலத்தில் தாகம் எடுத்தவுடன், முதலில் சாதாரண வெப்ப நிலையில் உள்ள தண்ணீரையே அருந்த வேண்டும்.

வெளியீடு:தினமலர்.காம்(அறிவியல் ஆயிரம்)

சரண்யா
17-04-2010, 12:42 PM
ஒ...இது புதுசா இருக்கே...
பகிர்வுக்கு நன்றி அசோகன் அவர்களே...

govindh
18-04-2010, 12:28 PM
பயனுள்ள செய்தி...
பகிர்வுக்கு நன்றி...

sarcharan
21-04-2010, 06:30 AM
மிகச்சரி!!

(P.S: ஆனா நம்ம பயலுவ "கலர" பாத்தவுடனே "கலோரி" போனாலும் பரவால்லன்னு கேக்காம போறன்கியா)

தாமரை
21-04-2010, 07:13 AM
அப்போ வெயில் காலத்தில் ஜில்லுன்னு தண்ணீர் குடித்தால் எடையை குறைக்கலாம்னு சொல்லுங்க...

(இப்படியும் யோசிப்பமில்ல... )

இன்பா
22-04-2010, 10:55 AM
அப்போ வெயில் காலத்தில் ஜில்லுன்னு தண்ணீர் குடித்தால் எடையை குறைக்கலாம்னு சொல்லுங்க...

(இப்படியும் யோசிப்பமில்ல... )

உங்களால மட்டும்தா இப்படி யோசிக்க முடியும்....