PDA

View Full Version : நொடிநேர கானல்



kulirthazhal
16-04-2010, 11:23 AM
ஓசைகளற்ற
ஓய்வு,
உணர்சிகளற்றுபோன
உயிர்ப்பு,
மூச்சுக்காற்றை
விலகி
சுழல்கின்றன...

வன்மம் ஏதுமில்லை,
ஆசுவாசமில்லை,
கடினமுமில்லை,
ஏக்கமுமில்லை.
எந்த விசையும்
பரவசப்படுத்தவில்லை,
எந்த அசைவுகளும்
கலங்கச்செய்யவில்லை....,

அங்கே
குழந்தையின் உறக்கம்,
பூவின் மலர்ச்சி,
தாயின் வருடல்,
ஓடத்தின் தாலாட்டு...,

அங்கே
உள்மனப்பேச்சு
மறுக்கப்பட்ட காலம்.....,
சடலத்தில்
ஓசைகளேதுமில்லை,

இதயதுடிப்பொன்றே
கடிகார ரிதமாய்.........

அது
நொடிநேர கானல்...,
தொலைவில் சலனிக்கும்
உயிரின் வானவில்......

இத்தனை ஆண்டுகளில்
இன்றுதான் கேட்டேன்..,

எதோ ஒரு உணர்வு,
எதோ ஒரு மூளை சலவை..,
நிசப்த நீரில்
மீன் துள்ளியதாய்..,
ஈர வானில்
ஈசல் தோன்றுவதாய்..,
அது
தொடர் நிகழ்வு...,

எல்லா துடிப்பும்
மொத்தமாய் கத்தின,
அதுவும்
ரிதம்தான்,
ரீங்காரம்தான்........,

உள்மனம்,
உணர்வுகள்,
உலகம்,
பிரபஞ்சம்,
எல்லாமே
உயிர்த்துக்கொண்டாடின
பரவசமாய்.....,,,,

ஆம்,
இது
இனத்தை தின்னும்
பறவை...,
துடிப்பைக் கொன்ற
பரவசம்...,
ஏக்கமே மிச்சம்,

ஏக்கமும்
நீங்கினால்,
எல்லாமும் தூங்கினால்,
என்றேனும் காண்பேனோ
என்
வாழ்நாளில்....,

- குளிர்தழல்.