PDA

View Full Version : அன்புப்பரிசு



simariba
16-04-2010, 03:30 AM
காகிதத்தில் எழுதி பின்
கனிணியில்
அச்சிடலாம்...

சரி காகிதமும்
நீ எனக்களித்த
பரிசுப் பேனாவும்...

எழுதும் போதே
உன் நினைவுகளுடன்
அட இவ்வளவு மணம்
எங்கிருந்து?

அன்புத்தோழியே
உன் நட்பு போல்
உன் பரிசும்
சுகந்தமணம் வீசுகிறது..

பா.சங்கீதா
16-04-2010, 12:43 PM
மிகவும் நன்றாக இருக்கிறது...
கவிதை வரியில் சிறிது அக்கறை காட்டுங்கள் (தவறாக எண்ண வேண்டாம்)
வாழ்த்துகள் :)

simariba
03-05-2010, 11:56 PM
நன்றி சங்கீதா!

செல்வா
06-05-2010, 08:56 PM
நல்லாருக்கு...

பரிசுப்பொருட்கள் வாங்குவதும் கொடுப்பதும்
இரண்டுமே மகிழ்வைத் தருபவை...

தொடர்ந்து எழுதுங்கள்...

அமரன்
06-05-2010, 10:10 PM
தத்தளிக்கும் சமயங்கள் பலதில் பரிசுகள்தாம் பரிசல்களாகின்றன.

பதில் கவிதைகள் பலதை பிறப்பிக்கும் ஆற்றல் கொண்ட கவிதை.

எடுத்தாண்ட விசயம் உணர்வுபூர்வமானது.

எழுதிய விதம் இயல்பானது.

விமர்சனங்களைக் நினைவில் இருத்தி தொடர்ந்து எழுதினால் எழுத்து வளமை படிந்துவிடும்.

வாழ்த்துகிறேன் அபி.

simariba
19-05-2010, 09:55 AM
நன்றி அமரன்! நன்றி செல்வா!

கலையரசி
23-05-2010, 08:06 AM
அன்புத்தோழியே
உன் நட்பு போல்
உன் பரிசும்
சுகந்தமணம் வீசுகிறது..

இந்த வரிகளை நான் ரசித்தேன். நன்று. தொடர்ந்து எழுதுங்கள்.