PDA

View Full Version : கோபுரங்கள்



simariba
16-04-2010, 03:14 AM
கோவில் கோபுரம்
மசூதி கோபுரம்
பேராலய கோபுரம்
எல்லாம் வானுயர
நிற்கின்றன...

ஒவ்வொன்றும் தலையில்
இடி தாங்கியை
சுமந்தபடி...

இயற்கை சீற்றங்களிலிருந்து
மனித குலத்தை
காத்தபடி...

வீடுகள் யாவும்
குடில்களாக
இருந்தபோது...

கடவுள் அருகில் சென்றால்
பாதுகாப்பு...
என நம்பியவர்
ஏராளம்...

இன்று
கோவிலை விட
உயரமான
அடுக்கு மாடி
குடியிருப்பு
இடி தாங்கியுடன்...

இன்றும் அவற்றுக்கு
சென்று கொண்டு தான்
இருக்கிறோம்..
நிம்மதி தேடி..

பாரதி
16-04-2010, 05:01 AM
கோ-புரங்கள் மட்டுமே நிம்மதியாய்.
கோவில் - கோ இல்
இப்போது கோவும் இல்லை; கோவும் இல்லை.
குடிகள் மட்டுமே இடியை தாங்கும் காலம்...
நிம்மதியை தேடுகையில் கோபம் மட்டுமே இருக்கிறது... ம்ம்....

நல்லாருக்கு. எழுதுங்க நண்பரே.

பா.சங்கீதா
16-04-2010, 12:45 PM
நல்ல இருக்கு வாழ்த்துகள்.........
:)

simariba
04-05-2010, 01:25 AM
நன்றி சங்கீதா!

அமரன்
13-05-2010, 09:06 AM
கவிதையையும் கவிதை கொண்டு வந்த பாரதி அண்ணாவின் கருத்தையும் ரசித்தேன்.

நம் முன்னோர்களது நம்பிக்கைகளின் பின்னால் அறிவியல் ஒளிந்திருக்கும் என்பதை மையமாக வைச்சு சுழற்றப்பட்ட பம்பரக் கவிதை.

பாராட்டு அபிரா,

நான் கோயிலுக்குப் போவேன். ஆனால் உள்ளே போவதை விட வெளியே இருக்கும் மரத்தடியில் அதிகம் அமர்ந்திருப்பேன். இப்போது மரத்தடியுடன் கோயில்கள் நானிருக்கும் இடத்தில் இல்லை.

சிவா.ஜி
13-05-2010, 09:22 AM
கோவிலும், கடவுளும் பழசு...கோபுர இடிதாங்கி புதுசு...அதான் நம்மக் கட்டடத்துல இடிதாங்கி இருந்தாலும் கோவிலுக்குப் போறோம்...நம்ம சோதனைகளை தாங்குற சுமைதாங்கி அங்க இருக்கறதுனால...

ஓல்ட் ஈஸ் கோல்ட்..

வாழ்த்துக்கள் அபி.