PDA

View Full Version : தல வீட்டுக்கு போனேன் - இறுதி பாகம்.



ரங்கராஜன்
15-04-2010, 03:36 PM
தல வீட்டுக்கு போனேன்

கிரிக்கெட் காலமான இந்த ஐபிஎல் காலத்தில் தலையை பார்க்கவே முடியாது என்று நினைத்து இருக்கிறேன். காரணம் தலயுடன் என்னுடைய மீட்டிங் எல்லாவற்றிலும் கண்டிப்பாக மூன்று
விஷயங்களை பற்றி பேச தலை மறக்கவே மாட்டார். முதலில் கிரிக்கெட் அதுவும் ஐபிஎல் முடிந்து மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகி இருந்தால் பழைய ஐபிஎல்-லை பற்றி பேசுவார். ஆட்டம் முடிந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகியிருந்தால் வரப்போகும் ஐபிஎல்-லை பற்றி பேசுவார்.

"ஐய்யோ நீங்க அந்த மேட்சை பார்த்தீங்களா?????? ச்ச சான்ஸே இல்லை. அவன் அடிச்சான் பாரு ஐய்யோ" குழந்தையை போல குதுகலிப்பார்.

அந்த நீங்க என்ற வார்த்தை பெரும்பாலும் தாமரை அண்ணன் இல்ல ஆரென் அண்ணா மதி போன்றவர்கள் தான் இருப்பார்கள். நான் கிரிக்கெட்டில் அதிகமாக கோல் அடிப்பேன் என்ற காரணத்தால் என்னிடம் அதுபற்றி பேச மாட்டார். இப்படி இருக்க கிரிக்கெட் டிக்கெட் கேட்க அவருக்கு போன் செய்தேன். எனக்கு கிரிக்கெட்டின் மீது பெரிய ஆர்வம் எல்லாம் கிடையாது, காரணம் சின்ன வயதில் பொறுமையாக டிவியின் முன் அமர்ந்து பார்க்கும் பழக்கம் எல்லாம் இல்லை. ஆனால் கிரிக்கெட் விளையாடுவேன் ஸ்கூல் படிக்கும் போது, அதுவும் கார்க் பாலில் தான். எனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்கும் வழியாக
கிரிக்கெட்டை நான் பயன்படுத்தினேன். குறிவைத்து பார்ட் பை பார்ட்டாக எதிரிகள் ஆடும் போது அடிப்பேன், கனுக்கால், தொடை, கால் முட்டி, கை முட்டி, நெஞ்சு, தாடை என்று பந்து வீச்சுளே அடிப்பேன். ஒரு கட்டத்தில் எதிரிகள் சுதாரித்துக் கொண்டார்கள், அந்த சமயம் பார்த்து ஸ்கூலில் பேடு, ஹெல்மட் ஆகிய பாதுகாப்பு சாதனங்கள் வாங்கி தந்து நிர்வாகம் எதிரிகளை காப்பாற்றி விட்டு என்னுடைய சாபத்தை பெற்றுக் கொண்டது. அதன்பின் கிரிக்கெட் விளையாடுவதை விட்டுவிட்டேன், காரணம் கல்லூரியில் கைப்பந்து விளையாட்டுக்கு மாறிவிட்டேன், அதுல இன்னும் எதிரியின் முகத்திலே குறிப்பார்த்து
அடிக்கலாம் இல்லையா............. தல பேசும் இரண்டாவது விஷயம், சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்த கோலங்கள் தொடரை பற்றி பேசுவார், காதில் இருந்து ரத்தம் வரும் வரை பேசுவார். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும் இவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருக்கும் மனிதர் எப்படி அந்த கருமாந்திர சீரியலை பார்க்கிறார் என்று.
மூன்றாவது நம் மன்ற உறவுகளை பற்றி.

இப்படி இருக்க முதல் முறை மைதானத்தில் சென்று மேட்ச் பார்க்கலாம் என்ற ஆசையில் தலையிடம் கேட்கலாம் என்று தோன்றியது. வருட கணக்கில் ஒரே ஊரில் இருந்தும், ஒரு பேச்சுக்கு
கூட எப்படி இருக்கீங்க என்று ஒரு வார்த்தை கூட நான் தலையை கேட்டது கிடையாது. ஆனால் டிக்கெட்டுக்கு மட்டும் அவரிடம் போய் நிற்க அசிங்கமாக இருந்தது. இருந்தாலும் நம்ம தலையிடம் என்
அசிங்கம் என்று நினைத்து மெசேஜ் அனுப்பினேன்.

"எத்தனை டிக்கெட் வேண்டும்" என்றார்.

"இரண்டு தல"

"இரண்டு இருக்காதே, பார்க்கனும்பா"

"தல நானும் என்னுடைய கேள் ப்ரன்டும் வரோம் தல, அதனால் கண்டிப்பா இரண்டு டிக்கெட் வேணும்"

"கிடைத்தால் கண்டிப்பா தருகிறேன்"

"தல அப்படி சொல்லாதீங்க, நான் அவளை கண்டிப்பாக மேட்சுக்கு அழைத்து செல்வதாக வாக்கு கொடுத்து விட்டேன்"

"அப்ப கவலைப்படாதே நானும் உன் கேள் ப்ரன்டும் மேட்சுக்கு போகிறோம்"

"யப்பா சாமி எனக்கு டிக்கெட்டை வேண்டாம்" என்று அனுப்பி விட்டு மெசேஜ் செய்வதை நிறுத்திவிட்டேன்.

கொஞ்ச நேரத்தில் முதலுக்கே மோசமாகி இருக்கும். இரண்டு நாள் கழித்து தலையே போன்
செய்தார்.

"டிக்கெட் இருக்கு, 10 டூ 1 ஆபிஸில் இருப்பேன், 1டூ 2 வீட்டுக்கு போயிடுவேன். மறுபடியும் 2 டூ 5 ஆபிஸில் இருப்பேன் எப்ப வர"

"எனக்கு ஒண்ணுமே புரியவில்லை, தலை நான் இப்போ டபுள் சிப்டில் இருக்கேன் நாளை காலை வீட்டிலே வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றேன்"

"வீட்டுக்கா??????? யோசிச்சி சொல்றேன்" என்று போனை வைத்து விட்டார்.

எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. தலைவர் நம்மை வீட்டுக்கு அழைக்க மறுக்கிறார். அப்போ வீட்டுல மாமியிடம் இவர் பண்ணுகிற வேலைகள் எல்லாம் தெரியாது, ராயல் செலஞ்ஜர்ஸ் அணியின் உரிமையாளர் விஜய மல்லையா மாதிரி எப்போதும் பெண்கள் கூட்டத்திற்கு நடுவில் தல இருக்கும் மேட்டர் எல்லாம், மாமிக்கு தெரியாது போல, நாம் எப்படியாவது வீட்டிற்கு சென்று மாமியிடம் இவரை போட்டு கொடுத்து விடவேண்டும் என்று ஒரு ஆப்பிரேஸன் திட்டத்தை ஆரம்பித்தேன். இவர் என்ன சொன்னாலும் கேட்காமல் அவர் வீட்டுக்கு போக வேண்டும் என்று முடிவு பண்ணினேன். அதே போல அடுத்த நாள் காலை அவருக்கு போன் செய்து அவருடைய வீட்டிற்கு வழி கேட்டேன். போனை எடுத்தவர் அவர் வீடு இருக்கும் தெரு பெயரை மட்டும் சொன்னார்.

"தல வீட்டு நம்பரை சொல்லுங்கோ"

"முதல்ல அந்த தெருவுக்கு வா அப்புறம் சொல்றேன்" என்று போனை கட் செய்து விடுவார். ஆஹா அப்ப எதோ, மாமியிடம் சொல்லப்போகிறார். நான் எங்கே வந்து அவரைப் பற்றி சொல்லிவிடப்போறேன் என்ற பயத்தில் மாமியிடம்,

"இப்ப வீட்டுக்கு ஒருத்தன் வருவான், அவனிடன் நீ பேச்சு கொடுக்காதே. அவன் ஏற்கனவே ஜெயிலில் இருந்தவன், மூன்று கொலை செய்து இருக்கான். அவன் வந்ததும் வா என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு
உள்ளே போய்விடு. அப்புறம் ஒரு நிமிஷத்திற்கு ஒருமுறை கிச்சனில் இருந்து ஒவ்வொரு பாத்திரமாக கீழே சத்தமாய் போடு, நாய் பூனையை விரட்டுவது போல அடிக்கடி சூசூசூசூ என்று விரட்டு,,,, அவனே போய் கிளம்பி விடுவான்" என்று சொல்வதற்காக அந்த அவகாசம் அவருக்கு தேவைப்பட்டு இருக்கும்.

நான் இருந்தாலும் விடுவதாக இல்லை இவர் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் மாமியிடம் சொல்லியிருக்கட்டும், மாமி என்னை அடிக்க வந்தால் கூட அடியை வாங்கிக் கொண்டு தலையை பற்றி சொல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். பைக்கை ஆபிஸில் இருந்து விரட்டினேன் தல வீட்டிற்கு. பைக்கை ஒட்டிக்கொண்டே தலையுடனான என் பழைய சந்திப்பை நினைத்து பார்த்தேன். மன்ற சந்திப்புகளில் எத்தனை பேர் இருந்தாலும் தல தனியாக தெரிவார்
ஆனால் கடந்த சந்திப்பின் போது தலையை தூக்கி சாப்பிடும் விதமாக ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது. அது தலையின் கசின் சுவாமிநாதன், பார்க்க நல்ல கலர், நல்ல உயரம், அழகான சிரிப்பு தலையின் வயதுக்கு கொஞ்சம் கம்மியாக இருக்கும்................ஆம் தலைக்கு 16 இவருக்கு 14 இருக்கும். மனிதன் பேசினாலே கிண்டல் தான், அதுவும் கிண்டல் என்றால் சிரித்துக் கொண்டே செய்வது. ஆனால் இவர் சாந்தமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லும் போது, சிரிப்பு பிடுங்கிக் கொண்டு வரும், ஒர் உதாரணம்

நாங்கள் டின்னர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம், நான் தல, சுவாமிநாதன் மற்றும் நம்ப ஆரென் அண்ணா. சிக்கன், ரைஸ், என்று நிறைய பண்டங்கள் இருந்தது.

"தல அவருக்கு கொஞ்சம் சிக்கன் போடுங்க" என்றேன் நான்.

"இல்ல இல்ல அவர் அதெல்லாம் சாப்பிட மாட்டார்" என்றார் தல.

"யார் சொன்னது" இது அவர். உடனே தலை என்னை பார்த்து

"எப்பவாவது சாப்பிடுவார்" என்றார். உடனே அவர்

"அந்த எப்பவாவது தான் இன்னைக்கு வை" என்றார். உடனே தல, சிரித்துக் கொண்டே வைத்தார். சிக்கனை சாப்பிட்டவர், நன்றாக இருக்கு என்றவர். திடீரென

"இந்த சிக்கன் பிளேட் எவ்வளவு இருக்கும்" என்றார். உடனே தல

"என்ன 150 ரூபாய் இருக்கும்" என்றார். கேட்டுவிட்டு சாப்பிட ஆரம்பித்தவர். மறுபடியும் ஆரென் அண்ணாவை பார்த்து

"சிங்கப்பூரில் மருத்துவத்துக்கு அதிகமா செலவு ஆகும் இல்ல" என்றார். அவரும் ஆமா என்பது போல தலையை ஆட்டினார்.

"ஒரு பல்லை பிடுங்க எவ்வளவு ஆகும் என்றார்".

"உடனே அவர் என்ன ஒரு 150 டாலர் ஆகும்" என்றார். உடனே சுவாமிநாதன்

"சோ திஸ் சில்லி சிக்கன் சேவ்டு மீ, 150 டாலர்ஸ்" என்று சிரிக்காமல் கையில் இருந்த பல்லை காட்டினார். அனைவரும் சிரித்தோம், அவரும் லேசாக சிரித்தார், மனதுக்கு இதமான சிரிப்பு அது. கிரிக்கெட்டை பற்றி பிச்சி உதறினார். எந்த பவுலர் எந்த விக்கெட் எடுத்தான், எந்த வருடம், யாருடன் விளையாடும் போது எடுத்தான் என்று அனைத்து தகவல்களையும் சொன்னார். பொது அறிவும் அப்படித்தான் புவனேஸ்வரி கேஸில் இருந்து போப் பாண்டவர் வரை அலசுகிறார். தினம் நிகழும் நிகழ்வுகளை விரல்நுனியில் வைத்து இருக்கிறார். இதில் என்ன அதிசயம் இருக்கு என்று நீங்கள் கேட்டால். அதற்கான பதில் கண்டிப்பாக இருக்கு என்பது தான்........................... அவருக்கு இரு கண்களும் தெரியாது. ஆனால் ஒருமுறை பார்த்தாலே மனதில் ஒட்டிக்கொள்ளும் பர்சனாலிட்டி

தல தெருவின் பக்கத்தில் வந்து விட்டேன். அடுத்த பாகத்தில் அவர் வீட்டிற்குள் சென்று விடுவேன்.

இறுதி பாகம் விரைவில்...........

மதி
15-04-2010, 05:22 PM
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே... வாப்பா..தக்ஸ்... உன் வழக்கமான கிண்டல் பாணியில் அட்டகாசமா போயிட்டு இருக்கு.. கடைசீல உன் கேர்ள்ப்ரண்டோட மேட்ச் பாத்தியா இல்லியா.. அதை விட்டுட்டு... தொடரும் போட்டுட்ட...

கீதம்
16-04-2010, 12:11 AM
கலக்குங்க, கலக்குங்க!

தொடரட்டும் உங்கள் கலாய்ப்புகள்!

sarcharan
16-04-2010, 08:55 AM
நன்றாக தொடங்கி உள்ளீர்கள்
"தலை" அங்கம் பாத்தாச்சு மற்ற பாகங்களும் தொடரட்டும்

பூமகள்
16-04-2010, 12:00 PM
வாங்க தக்ஸ்.. நலமா?

வந்ததும் வராததுமா தல வீட்டுக்குப் போனேனேன்னு எங்களுக்கெல்லாம் கொக்கானி காட்ட வந்தாச்சா...??!!

நடத்துங்க நடத்துங்க.... அடுத்த பாகத்துக்கு ஆர்வமா இருக்கேன்.. மீண்டும் பழைய தக்ஸின் எழுத்து நடை வாசிக்க மகிழ்கிறது மனம்..

தொடருங்கள் தக்ஸ். :)

arun
16-04-2010, 12:32 PM
வழக்கமான தங்களது இயல்பான எழுத்து உருவில் கொடுத்து உள்ளீர்கள் ரசித்து படித்தேன்

கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாது என்பதற்காக டெக்கான் சார்ஜர் உரிமையாளர் விஜய் மல்லையா என்று சொல்ல கூடாது :D

ரங்கராஜன்
16-04-2010, 03:39 PM
அனைவருக்கும் நன்றி, ஹா ஹா ஹா அருண் இதுலையே தெரிலையா என்னுடைய கிரிக்கெட் அறிவு. ஹா ஹா இருந்தாலும் சுட்டிக் காட்டியதற்கு நன்றி

aren
16-04-2010, 04:15 PM
சரி தக்ஸ். கடைசியில் ராயல் சாலஞ்சர் பெங்களூருக்கும் ராஜஸ்தான் ராயலுக்கும் சென்னையில் நடந்த மாட்ச்க்கு டிக்கெட் கொடுத்தாரா தல என்று சொல்லிவிடுங்கள்.

தல, இப்படி கிரிக்கெட் தெரியாத பசங்களுக்கெல்லாம் சென்னை சூப்பர் கிங்கின் மாட்சைப் பார்க்க டிக்கெட் கொடுத்ததால்தான் இப்படி தோனியோட டீம் சொதப்புது. இனிமேலாவது ஆட்களைப் பார்த்து டிக்கெட் கொடுங்கள்.

ஆமா, கேர்ள் ஃப்ரெண்டு என்று சொன்னீர்களே, மதி எப்படி கோச்சுக்கிறார் பாருங்க, நீங்க சொன்னது உடான்ஸ்தானே?

ரங்கராஜன்
16-04-2010, 05:08 PM
இறுதி பாகம்

தலையின் வீட்டின் பக்கத்தில் போய் போன் செய்தேன்.தல எடுத்தார்,

"தல நான் வந்துட்டேன்,வீடு எங்க இருக்கு,என்ன நம்பர்" என்றேன்.

"நேரா வா, அங்கே பெருசா ஒரு கட்டிடம் இருக்கும்"

"ஆமா தெரியுது தல"

"அது எட்டு மாடி கட்டிடம்"

"ஆமா ஆமா பெருசு தான், அதுல எந்த வீடு தல"

"அதுக்கு பக்கத்துல ஒரு வீடு இருக்கும், அதுதான் என்னுடைய வீடு, நீ வா" என்று போனை வைத்துவிட்டார்.

செம மொக்கையுடன் வண்டியை கிளப்பி சென்றேன். வீட்டின் வாசலிலே எனக்காக காத்து இருந்தார் நம்ம தல. வயசு பையன் மாதிரி டிராக் சூட், ஹிரித்திக் ரோஸன் போடும் கெசுவல் சட்டை,அதே கூர்மையான மூக்கு, அதே பன்னீர் ரோஸ் நிறம். என்னை பார்த்ததும் சிரித்து வரவேற்றுவிட்டு, வண்டியை எதிரில் நிறுத்தி வைக்க சொன்னார்.

"இல்லை தல,நான் இன்னும் குளிக்கவில்லை,கீழே நிற்கிறேன் நீங்க டிக்கெட்டை மட்டும் எடுத்து வந்து குடுங்க" என்றேன்.

வேண்டாம்பா ஏற்கனவே நான் உன்னை வீட்டுல சேர்க்கவில்லைனு சொல்லிட்டு இருக்க, வம்பே வேண்டாம் நீ வா வீட்டுக்கு என்றார்.

வேண்டாம்,நான் இன்னும் குளிக்கவே இல்லை தல

அதுக்காக தான் நாங்களும் குளிக்காம இருக்கோம், நீ வா என்று எப்போதும் போல இரண்டு கைகளையும் தன்னுடைய பான்டு பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,

விறுவிறுவென நடக்க தொடங்கினார். நடையில் கொஞ்சமே கொஞ்சம் தள்ளாட்டம் இருந்தது, காரணம் தெரியவில்லை வயது ஆகிவிட்டதா இல்லை......நேத்து ராத்திரி டிஸ்கோதெட்டில் ஆட்டமா என்று. விறுவிறுவென்று படி ஏறினார், கதவு திறந்து இருந்தது தல உள்ளே சென்றார். சென்றவர் திரும்பவும் அதே வேகத்தில் வெளியே வந்து அழைப்புமணியை அடித்து விட்டு உள்ளே சென்றார்....... அதாவது மாமிக்கு சிக்னல் கொடுத்தார், ராவுகாலம் வீட்டிற்கு வந்து விட்டது என்று, உள்ளே சென்றேன். விசாலமான வீடு, அழகான வீடு பெரிய வீடு ஆம் பெ..ரி..ய வீ...டு தான். எனக்கு வாஸ்து சாஸ்திரம் எல்லாம் தெரியாது, எனக்கு தெரிந்த வரை எந்த வீட்டில் சூரிய ஒளி வீட்டிற்குள் வருகிறதோ அது அருமையான வீடு. தலையின் வீட்டில் சூரிய ஒளி அதிசயமாக இரண்டு பக்கமும் வந்தது, அதவும் முதல் மாடியில். பார்த்தவுடனே வீடு பிடித்து விட்டது. உள்ளே இருந்து மாமி அவசர அவசரமாக முகத்தில் பவுடரை போட்டுக் கொண்டு வந்து இருந்தார்.பாவம் காலையில்தூங்கிக் கொண்டு இருந்தவர்களை நான் எழுப்பி விட்டேன் என்று அப்போது தான் எனக்கு உறைத்தது.

வணக்கம் மாமி நல்லா இருக்கீங்களா

நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க

ம்ம் நல்லா இருக்கேன், இருங்க காபி எடுத்துண்டு வரேன் என்று எழுந்தார்.

இல்ல மாமி எல்லாத்தையும் ஆபிஸிலே முடித்துவிட்டேன்.

உங்க ஆபிஸ் பாலாஜீ நகர், முதல் தெருவில் தானே இருக்கு என்றார் புள்ளி விவரத்துடன்.

நான் ஆச்சர்யத்துடன் ஆமாம் மாமி உங்களுக்கு எப்படி தெரியும்.

என்னுடைய சொந்தக்காரங்க வீடு அங்க தான் இருக்கு. என்று கிச்சனுக்குள் சென்றார்.

தல எனக்கு வீட்டை சுற்றி காட்ட அழைத்து சென்றார். கிச்சனை பார்த்தேன் ஹாலில் இருந்து கிச்சனுக்கும் பஸ்ஸில் தான் செல்ல வேண்டும் அவ்வளவு தூரம்.தல வீட்டை சுற்றிக்காட்ட ஆரம்பித்தார் முதலில் பெரிய மாஸ்டர் பெட்ரூம், அடுத்து ஒரு சின்ன பெட் ரூம் அடுத்து ஒரு பாத்ரூம்,நடுவில் ஹால் அதற்கு எதிரில் பெரிய மாஸ்டர் பெட்ரூம் அதன் உள்ள நுழைவதற்கு முன்பு மாமி சொன்னார்.

அதுதான் அவரோட ரூம்,திகார் ஜெயில் மாதிரி எப்போதும் அதுலே தான் அடைஞ்சி கிடப்பார் என்று சிரித்தார்.அவருடைய அந்த அறைக்குள் நுழைந்தேன் தரையில் காலை வைத்தவுடன் ஜில்லென்று இருந்தது. ஏசி இரவு முழுவதும் ஒடி இருக்க வேண்டும். பெரிய டிவி,பெரிய கட்டில், என்ன தல டிவி எல்லாம் பார்ப்பீங்களா. ஆமா சீரியல் எல்லாத்தையும் ரெக்கார்டு செய்து பார்ப்பேன். கொஞ்சம் வேலை அதனால் சீரியல் எல்லாம் பார்க்க முடியலை. அடேங்கப்பா என்ன தீவிர சீரியல் ரசிகர். மாமி வந்தார் நித்தியாநந்தாவை பற்றி பேசினார். தல எனக்கு டிக்கெட் கொடுத்து வி்ட்டார்,எவ்வளவு ரூபாய் என்பது சஸ்பனஸ் தலயை விட்டுக் கொடுக்காமல் பேசினார். தலையை

பற்றி மாமியிடம் போட்டுக் கொடுக்க நினைத்தேன் ஆனால் பாவம் இளச்ஜோடிகளை பிரிக்க மனம் வரவில்லை, காரணம் கோபத்தில் தலையை, மாமி அவரின்

அம்மாவிட்டிற்கு அனுப்பி விடுவார். அப்புறம் தலை சிறுவயதில் அம்மா வீட்டில் இருந்து துன்பப்படவேண்டும் என்று நினைத்து சொல்லவில்லை. ஆனால் அடுத்த நாள்

தலையை ஒரு விஷயத்தில் மாமியிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டினேன். உடனே சொல்லிக்கோ என்று மாமியிடம் போனை கொடுத்துவிட்டார்.

என் மாமி தலைக்கு நிறைய கேள் ப்ரண்டஸ் இருப்பாங்க போல இருக்கே

இல்லப்பா எல்லாம் கிழவிங்க, என்னைப்போலவே என்று சிரித்தார்.

அப்படியா நான்கூட எல்லாம் சின்ன பொண்ணுங்க என்று நினைத்தேன்,

சும்மா அப்படி பெருமைக்கு சொல்லிக்குவாரு, எல்லாருக்கும் என்னுடைய வயசுதான் இருக்கும்.

எல்லாம் உங்க வயசா அப்ப பரவாயில்லை

அப்ப என்னையும் கிழவின்னு சொல்ற

ச்சே இல்லை மாமி,எப்படி இவரு கூட இருக்கீங்க

என்ன பண்றது, கல்லானாலும் கணவன்....புல்லானாலும் (அதில் அழுத்தம் கொடுத்து) புருஷன் என்று சிரித்தார்.

நீங்கள் இரண்டு பேரும் உண்மையில் மெட் பார் ஈச்சதர்.......... நீங்க இரண்டு பேரும் சேர்ந்து சுத்தி போட்டுக்கோங்கோ....தலையை சுத்தி கீழே போட்டுடாதீங்கோ மாமி. இருவரும் சிரித்தோம்.

வீட்டில் கொஞ்ச நேரம் இருந்து விட்டு வீட்டிற்கு கிளம்பி விட்டேன்.கிளம்பும் போது மாமி கேட்டார் என்னை பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்று தலையை

பார்த்தார். பின்பு அவரே மன்றத்துல சொல்லுவீங்களோ என்று சிரித்தார். நானும் சிரித்துக் கொண்டு வந்தேன்.தல புண்ணியத்தில் மேட்சை என்னுடைய கேர்ள் ப்ரண்டுடன்

பார்த்தேன், ஆரென் அண்ணா அது நிஜம் தான்.உண்மையில் எனக்கு கிரிக்கெட் பத்தி தெரியாது தான், அவள் கிரிக்கெட்டை ரசிக்க, அவள் ரசிக்கும் அழகை நான் பக்கத்தில் அமரந்து ரசித்து
வந்தேன்.........அப்புறம் தலையும், மாமியும் உண்மையில் இருவரையும் பார்த்தால் பொறாமை தான் வந்தது.35 ஆண்டு காலத்திற்கு மேல் பூரண வாழ்க்கையை வாழ்ந்தவர்களுக்கு ஆண்டவன் இன்னும் பலநூறு ஆண்டு காலம் வாழவைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே வெளியில் வந்தேன். மன்றம் சார்பில் நீங்கள் அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள்.

இளசு
16-04-2010, 07:45 PM
வாங்க தக்ஸ் நலமா?

எனக்கு ஆதர்சம் தலையும் மாமியும்.

பார்க்கவும் பழகவும் நமக்கு இடம் கொடுக்கும் பெரிய மனது குழந்தைகள் அவர்கள்.

மனமும் சிரிக்கும் உயர்ந்த எளியவர்கள்...

அந்த நல்ல மனமும் நகைச்சுவை உணர்வும்
இந்த இருபாகக் கட்டுரை முழுக்க நுகர முடிகிறது..


சபாஷ் தக்ஸ்..

மதி
17-04-2010, 01:47 AM
யோவ் உண்மையிலேயே கேர்ள் ப்ரண்டா... ம்ம்ம்.. நடத்து.. நடத்து...

தல வீட்டுக்கு போனது உன் பாணியில் அசத்தலாய் இருந்தது... தல இவ்ளோ லூட்டி அடிக்கறதுக்கு காரணம்.. வீட்டில் மாமி கொடுக்கும் செல்லம் தான்னு புரியுது..ம்ம்ம்

அமரன்
17-04-2010, 10:26 AM
நலம்தானே தக்ஸ்.

உங்களுக்கே உரித்தான தமிழில் நயமாக எழுதியுள்ளீர்கள்.

தலை என்றால் முன்மாதிரியாக இருக்க வேணும். நம்ம தல பல விசயங்களில் நமக்கு முன்மாதிரியாக உள்ளார் என்று எங்கே வேண்டுமானாலும் சூடம் கொளுத்தலாம். எவராவது ஆதாரம் கேட்டால் இந்தப் பதிவைக் குடுக்கலாம்.

Mano.G.
18-04-2010, 06:54 AM
நீண்ட இடைவெளிக்கு பிறகு,
தம்பியின் பதிவை கண்டு
மகிழ்ந்தேன், அதுவும் நம்ம
தலையுடன் நடந்த சம்பவம்.

இது நான் ரொம்ப ரசித்து இன்னும்
சிரிச்சுகிட்டு இருக்கிரது.

"எத்தனை டிக்கெட் வேண்டும்" என்றார்.

"இரண்டு தல"

"இரண்டு இருக்காதே, பார்க்கனும்பா"

"தல நானும் என்னுடைய கேள் ப்ரன்டும் வரோம் தல, அதனால் கண்டிப்பா இரண்டு டிக்கெட் வேணும்"

"கிடைத்தால் கண்டிப்பா தருகிறேன்"

"தல அப்படி சொல்லாதீங்க, நான் அவளை கண்டிப்பாக மேட்சுக்கு அழைத்து செல்வதாக வாக்கு கொடுத்து விட்டேன்"

"அப்ப கவலைப்படாதே நானும் உன் கேள் ப்ரன்டும் மேட்சுக்கு போகிறோம்"

"யப்பா சாமி எனக்கு டிக்கெட்டை வேண்டாம்" என்று அனுப்பி விட்டு மெசேஜ் செய்வதை நிறுத்திவிட்டேன்.
சரிப்பா கல்யாணம் எப்போ,
திருமண பத்திரிக்கை அனுப்ப
மறந்திடாதே,

மனோ.ஜி

பாரதி
18-04-2010, 08:27 AM
அன்பு மூர்த்தி,
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் மனநிறைவைத் தந்த பதிவு.
மணியா அண்ணா.... மணியான அண்ணா.
அவருடன் பழகியவர்கள் எல்லாம் அறிவார்கள் அவருடைய மேன்மையைப் பற்றி!
மாமியையும் சந்தித்து கலாய்த்த நீங்கள் கொடுத்து வைத்தவர்தான்.
மணியா அண்ணாவின் பார்வையை பார்க்க காத்திருக்கிறேன்.

உதயா
19-04-2010, 12:57 PM
அழகாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி.

நம் குடும்பத்து நபரை பற்றி படித்தது போல் உள்ளது. ஆம் மன்றமும் நம் குடும்பம் தானே....

தாங்கள் வேண்டிக்கொண்டது போல்.... இன்னும் பல நூறு ஆண்டுகள்... அன்போடும், ஆரோக்கியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

வாழ்க வளமுடன்.

விகடன்
26-04-2010, 07:35 AM
தலை தலைதாங்க.
ஒருதடவை சந்தித்தேன். அந்த சந்திப்பின் அனுபவத்தால் மறுமுறை சந்திக்க பலதடவை சிந்தித்து கோட்டை விட்டுவிட்டேன்.

மீண்டும் சந்திப்பேன் தலையை.

கா.ரமேஷ்
26-04-2010, 02:00 PM
நலமா தக்ஸ்...

எப்படியோ தலயோட தயவுல கிரிக்கெட் பாத்தாச்சு அதுவும் பொண்ணுகூட ...

மன்மதன்
26-04-2010, 03:56 PM
ஆஹா..

தலை வீட்டிற்கே சென்று (டிக்கட்) கௌண்டர் அட்டாக் செய்தாச்சா??

அப்படியே எனக்கு தலை அட்ரஸ் அனுப்பி வைங்க.. இவ்வளவு பெரிய வீட்டை எப்படித்தான் மறைச்சி வச்சிருக்கான்னு தெரியல..:rolleyes:

அப்புறம், மேட்ச் பத்தி ஒண்ணுமே சொல்லல..!!?? (கிரிக்கெட் மேட்ச் பத்தி கேட்டேன்..!!):D:D

jayashankar
26-04-2010, 04:02 PM
உண்மைங்க தக்ஸ்....

கருத்தொருமித்து வாழ்தலின் மகத்துவமே இதுதான்.

இருவரும் இன்னும் பல்லாண்டு நல்லபடி வாழ இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.