PDA

View Full Version : தொ. கா. வுக்கு ஒரு முற்றுப்புள்ளி



simariba
15-04-2010, 02:29 AM
மடி கனிணியை
திறந்து வலை பார்க்க
ஆரம்பித்து
ஒரு மணி நேரம் ஆயிற்று...

தொ. கா வில் உன்
டோரா முடிந்து
டியோகோ வந்தாயிற்று...

போதும் கண்ணா
தொலைக்காட்சி பார்த்தது போதும்...

அன்று உன் சோர்ந்த
முகம் பார்த்து
போதும் அம்மா
எழுதியபின்...

ஒரு நாளில் உன் தொ. கா நேரம்
இனி ஒரு மணி நேரம் தான்...
முடிவான முடிவாயிற்று..

நீ போய் மடி கனிணியை
வைத்துக்கொண்டு
உட்கார்ந்திரு, என்னை விடு என
நீ சொல்ல ஆரம்பிக்குமுன்..
நான் சொல்கிறேன்...

வா வெளியில் சென்று
விளையாடலாம்...

காக்கை யை தேட முடியாது
கார் பார்த்துக்கொண்டே
சாப்பிடலாம்...

பூக்களையும், செடிகளையும்
ரசிக்கலாம்...

இதோ கையில்
உன் ஆசை தூரிகையை எடு
சுவர் முழுதும்
ஓவியம் தீட்டலாம்...

இன்னும் தண்ணீரில்
கூட விளையாடலாம்...

உனக்கான நேரம்
இன்னும் ஒரு வருடம் தான்
நீ பள்ளி செல்லும் வரை தான்

வா விளையாடலாம்
போதும் கண்ணா..
தொ. கா. வுக்கு இனி ஒரு முற்றுப்புள்ளி.

பாரதி
15-04-2010, 02:49 AM
காணொளியிலும் கணினியிலும் நிஜத்தை இழக்கும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. சரியான நேரத்தில் சரியான சிந்தனை. பாராட்டுகிறேன்.

கீதம்
15-04-2010, 03:13 AM
வாழ்த்துகள் + பாராட்டுகள் அபி. வாழ்த்து, தொலைக்காட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவிழைந்தமைக்கு. பாராட்டு, அச்சிந்தனைக்கு அழகிய கவி வடிவம் கொடுத்தமைக்கு.

என் குழந்தைகள் (வயது 15 மற்றும் 10) இன்னமும் என்னிடம் அனுமதி பெற்றபிறகுதான் தொலைக்காட்சியையோ, கணினியோ காண முற்படுகிறார்கள் என்பதையும், குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் நிறுத்திவிடுகிறார்கள் என்பதையும் உங்களால் நம்பமுடிகிறதா? சிறுவயதிலிருந்தே கொடுக்கப்பட்ட பயிற்சிதான் அது. உங்கள் முயற்சிக்கும் விரைவில் பலன்கிட்டும்.வாழ்த்துகள்)

ஜனகன்
15-04-2010, 06:45 AM
உங்கள் கவிதை புதுசு அபிராமி.
விமர்சனம் அழகு வாழ்த்துக்கள்.

simariba
15-04-2010, 08:19 AM
நன்றி உறவுகளே.

govindh
15-04-2010, 11:17 AM
'போதும் அம்மா' எழுதியபின்...
தொ. கா. வுக்கு இனி ஒரு முற்றுப்புள்ளி.

கவி அழகு..பாராட்டுக்கள்.

simariba
18-04-2010, 08:19 AM
நன்றி கோவிந்த்.

பா.சங்கீதா
18-04-2010, 12:54 PM
மிகவும் நன்றாக இருக்கிறது
தொடர்ந்து எழுதுங்கள்.........
வாழ்த்துகள்.....:)

simariba
04-05-2010, 07:02 AM
நன்றி சங்கீதா!

செல்வா
06-05-2010, 08:43 PM
நிகழ் காலத்திற்கு வேண்டிய கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

அமரன்
06-05-2010, 10:05 PM
ஓடி விளையாடு பாப்பாவின் நவீன வடிவம்.

இலத்திரன் சாதனங்களைக் கவசமாகக் கொண்டு
தற்கால கல்வி முறையை தாக்கும் கவிதை.

ஆனால்,
இதற்கு முழுக்காரணம் பெற்றோரே என்பேன்.

பாராட்டுகள் அபி.

அத்தியாவசியமான கருத்து!

simariba
31-05-2010, 02:22 AM
நன்றி செல்வா!!, நன்றி அமரன்!!