PDA

View Full Version : இனிய புத்தாண்டே வருக...



govindh
14-04-2010, 09:53 AM
இனிய புத்தாண்டே வருக...
இன்ப விக்ருதியே வருக...

இன்பமெல்லாம் பெருக..
இனிய நிகழ்வுகள் தருக..

மழையினை அளவாய் பொழிய வை..
மகிழ்வினை அன்பால் பொங்க வை...
மாதந்தோறும்..

உலகை நிதி நெருக்கில் மீள வை..
உலகே நிதியினை ஆள வை..
நாள்தோறும்..

நீதியினை நிலைநாட்டு..
நிம்மதியினை நிகழ்த்திக் காட்டு..
நிமிடந்தோறும்..

இனிய புத்தாண்டே வருக...
இன்ப விக்ருதியே வருக...

இன்பமெல்லாம் பெருக..
இனிய நிகழ்வுகள் தருக..
நொடிப்பொழுதும்...

sarcharan
14-04-2010, 01:45 PM
நல்ல கவிதை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

muthuvel
14-04-2010, 03:16 PM
பசி மறந்து பார்கிறான் சின்னத்திரை ,

உறங்காமல் ரசிக்கிறான் சினிமா திரை ,

பணத்துக்காக போடுகிறான் தேர்தல் முத்திரை ,

தமிழனே ,தமிழனுக்கு உலை வைத்தான் போலி மாத்திரை ,

தமிழக நெடுஞ்சாலைகள் அனைத்தும் மாறியது பொதுமக்கள் கழிவறை ,

காசு கொடுத்தாதான் மணமகன் செல்கிறான் மணவறை,

கற்கும் வயதில் பிஞ்சுகள், கஞ்சிக்காக சிவகாசி பட்டாசு பட்டறை ,

தண்ணீருக்காக கையேந்துகிறான் பிறரை,

அகதிகளாகினான் உயிர் காக்க வந்தோரை ,

இவை அனைத்தும் களைந்து புது மலர்ச்சி ஏற்படுத்தட்டும் இந்த சித்திரை ............ ......... .......

govindh
15-04-2010, 11:06 AM
நல்ல கவிதை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி...!

govindh
15-04-2010, 11:08 AM
உங்கள் கவிதையும் நல்லா இருக்கு முத்துவேல்.
நன்றி..!