PDA

View Full Version : ஏன்?



குணமதி
14-04-2010, 04:43 AM
ஏன்?



பெண்ணாய்ப் பிறந்தேன் முதுகலைபோல்

........பெரிய படிப்பும் நான்படித்தேன்

ஒண்ணா வேலையும் கிடைத்திலையால்

........ஓய்ந்து தளர்ந்தேன் உற்றவரின்

எண்ணம் போன்றே திருமணமும்

........ஏற்க இசைந்தேன் என்றாலும்

கண்ணன் பெருமை பேசுலகம்

........கருப்பென் றென்னை ஒதுக்குவதேன்?

---------------------------------------------------------

கீதம்
14-04-2010, 07:25 AM
நறுக்குத் தெறித்தாற்போல் கேட்டாலும் 'ஏன்' என்ற பல கேள்விகளுக்கு நம்மிடம் பதில்தான் இல்லை.

கவிதை அருமை. பாராட்டுகள்.

கலையரசி
14-04-2010, 07:40 AM
"கண்ணன் பெருமை பேசுலகம்

........கருப்பென் றென்னை ஒதுக்குவதேன்?"

நியாயமான கேள்வி தான். கறுப்பு தான் இந்த மண்ணின் நிறம் என்றாலும் ஏனோ வெள்ளைத் தோலைத் தான் நம்மவர்க்குப் பிடிக்கிறது.

அண்மையில் தினமணியும் தில்லி தமிழ்ச் சங்கமும் நடத்திய பாராட்டு விழாவிற்கு வருகை தந்த நோபெல் பரிசு பெற்ற தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்:-
"தமிழ் நாட்டில் இல்லாதது போன்ற பெண்களை, ரொம்ப கஷ்டப்பட்டு குஜராத்திலிருந்தும், மும்பையிலிருந்தும் அழைத்து வந்து நடிக்க வைப்பது எதற்காக? வெண்மை நிறமாக இருந்தால் தான் உசத்தி என்ற மேற்கத்திய சிந்தனையை சினிமாவில் வலியுறுத்துவது மாதிரி இருக்கிறதே...." (தினமணிக்கதிர்)
பாராட்டு குணமதி.

குணமதி
14-04-2010, 04:48 PM
நறுக்குத் தெறித்தாற்போல் கேட்டாலும் 'ஏன்' என்ற பல கேள்விகளுக்கு நம்மிடம் பதில்தான் இல்லை.

கவிதை அருமை. பாராட்டுகள்.

உண்மைதான்.

நன்றி.

குணமதி
14-04-2010, 04:50 PM
சரியான செய்தியைப் பொருத்தமாக நினைவூட்டினீர்கள் கலையரசி.

பாராட்டுக்கு நன்றி.