PDA

View Full Version : சந்திரனின் நகைச்சுவை-2



gvchandran
14-04-2010, 12:40 AM
சந்திரனின் நகைச்சுவை-2

1. ரகு : ஏன் வட்டமான மாத்திரைகளை
சதுரமா வெட்டி வச்சிருக்கே?
ரவி: சைட் எஃபக்ட் தவிர்க்கத்தான் !

2 நாகராஜ் முதல் முறையாக விமானத்தில் பங்களூரு சென்றான். விமானம் தரை
இறங்கும் போது உற்சாகத்துடன் ஹை பங்களூரு பங்களூரு என்று கத்தினான்,
அருகில் இருந்தவட் பி சைலண்ட் என்று சொல்லவே அங்களூரு அங்களூரு
என்று கத்தினான்.

4 சு .கட்சி நபர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு
மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

கி.கட்சி நபர் ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை
கொடுத்து 'காசாடா கேக்கறே.. ஒழுங்கா உன் ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி
பேரை**சொல்லிட்டு வருவோம்ல.

வங்கி மேலாளர்: நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை கட்டாததால நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.
நபர்: இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!

வங்கி மேலாளர் மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?
கிராம த்தான் : கயிற்றாலே தான்

குணமதி
14-04-2010, 01:31 AM
நாகராஜ் முதல் முறையாக விமானத்தில் பங்களூரு சென்றான். விமானம் தரை
இறங்கும் போது உற்சாகத்துடன் ஹை பங்களூரு பங்களூரு என்று கத்தினான்,
அருகில் இருந்தவட் பி சைலண்ட் என்று சொல்லவே அங்களூரு அங்களூரு
என்று கத்தினான்.



நல்ல நகைச்சுவை.

சரி, 3. எங்கே?

govindh
14-04-2010, 12:23 PM
நகைச்சுவை...எல்லாம்
நல்லா இருக்கு...!

ஜனகன்
15-04-2010, 04:09 PM
நல்ல நகைச்சுவை:icon_b:
தாங்க முடியல்ல:angel-smiley-010::angel-smiley-010:

simariba
16-04-2010, 03:40 AM
நல்லாயிருக்கு சந்திரன்...தொடர்ந்து எழுதுங்க.

கீதம்
16-04-2010, 04:38 AM
வங்கி ஜோக்குகள் சூப்பர். நன்றாகவே நகைக்கவைக்கின்றன, உங்கள் நகைச்சுவைகள். வாழ்த்துகள்.தொடருங்கள்.

gvchandran
16-04-2010, 09:11 PM
மூன்றாவது இது

3. விஞ்ஞானி 1: நான் உலகத்திலே உள்ள எல்லா பொருளையும் கரைக்கிற
ஒரு திரவத்தை கண்டுபிடிச்சிருக்கேன்
விஞ்ஞானி 2 :அது உபத்திரவம் ஆச்சே!
விஞ்ஞானி 1 ஏன் அப்படி சொல்றே?
விஞ்ஞானி 2 அதை எந்த பாத்திரத்தில் சேமித்து வைப்பே?

பா.ராஜேஷ்
21-04-2010, 08:07 PM
நல்ல நகைச்சுவை துணுக்குகள். உங்களுக்கு மூன்றை மறக்கும் வியாதியா என்ன!? ;)

உமாமீனா
28-02-2011, 05:24 AM
எல்லாமே அசத்தல்