PDA

View Full Version : அழுகை பெய்கிறது

சொ.ஞானசம்பந்தன்
13-04-2010, 04:47 AM
போல் வெர்லேன் ( Paul Verlaine ) 19 ஆம் நூற்றாண்டுப் பிரெஞ்சுக் கவிஞர்களுள் ஒருவர். வாழ்க்கையில் துன்பங்களையும், ஏமாற்றங்களையும் அனுபவித்தவர். அவரது சோகக்கவிதையொன்றின் நேரடி மொழிபெயர்ப்பைக் கீழே படிக்கலாம்:

அழுகை பெய்கிறது இதயத்துக்குள்
ஊரிலே மாரி ஊற்றுவது மாதிரி.
என்றன் இதயத்தைத் துளைக்கின்ற
அந்த ஒடுக்காற்றல்தான் என்ன?

தரைமீதுங் கூரை மீதும்
மழையின் இதமான ஒலி!
மகிழ்ச்சியிழந்த நெஞ்சுக்கு
மழையின் தாலாட்டு!
தன்னையே வெறுக்கும் இந்த இதயத்தில்
பெய்கிறது அழுகை காரணம் இன்றி.

எதுவுமே புரியவில்லை.
இந்தத் துயருக்கு இல்லை காரணம்.
அன்போ பகையோ இல்லாமலே
துன்பம் எவ்வளவு மனத்துக்கு!
இது ஏன் என்பதை அறியாததைவிடப்
பெரிய துன்பம் வேறொன்றுமில்லை.

அக்னி
13-04-2010, 06:35 AM
மகிழ்ச்சியிழந்த நெஞ்சுக்கு
மழையின் தாலாட்டு

ரசிக்க வைத்த வரிகள்...

அன்போ பகையோ இல்லாமலே
துன்பம் எவ்வளவு மனத்துக்கு!
இது ஏன் என்பதை அறியாததைவிடப்
பெரிய துன்பம் வேறொன்றுமில்லை.
வலிக்க வைக்கும் வரிகள்...

சோகம் ஊற்றெடுத்த மனதில்
அழுகை பெய்த கவிதை,
வலி சொல்கின்றது...

நன்றி!

கலையரசி
13-04-2010, 02:14 PM
நெஞ்சை நெகிழ வைக்கும் வரிகள்.

எனக்குச் சிறு சந்தேகம். வாழ்வில் துயரங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர், இந்தத் துயருக்கு இல்லை காரணம் என்று ஏன் கூறவேண்டும்?

இளசு
13-04-2010, 10:57 PM
Major Depression எனும் மன அழற்சி/ தளர்ச்சியை
இத்தனை நேர்த்தியான கவிவரிகளில் வாசித்ததில்லை இதுவரை..

மூலவருக்குப் பாராட்டு..
உற்சவருக்கு நன்றி!

கீதம்
13-04-2010, 11:51 PM
காரணமின்றி சில சமயங்களில் மனம் கனப்பதென்னவோ உண்மைதான். காரணம் இல்லாமலிருக்காது. ஆனால் நம் கருத்துக்கு உடன்படாமல் கண்ணாமூச்சி காட்டும். அவ்வரிய மனவோட்டத்தை அழகாய் எடுத்தியம்புகின்றன, கவிதை வரிகள்.

கவிஞருக்கும், கருத்துக் குலையாமல் மொழிபெயர்த்த சொ.ஞா. அவர்களுக்கும் நன்றியும், பாராட்டுகளும்.

கலையரசி
14-04-2010, 06:54 AM

இப்போது புரிந்தது. விளக்கத்துக்கு நன்றி கீதம்!

govindh
14-04-2010, 10:21 AM
அழுகை பெய்கிறது...
"இது ஏன் என்பதை அறியாததைவிடப்
பெரிய துன்பம் வேறொன்றுமில்லை. "

வெறுமையும் பெருந்துன்பம் தான்...

படைப்புக்கு நன்றி...
பாராட்டுக்கள்..

சொ.ஞானசம்பந்தன்
15-04-2010, 05:39 AM
ரசிக்க வைத்த வரிகள்...

வலிக்க வைக்கும் வரிகள்...

சோகம் ஊற்றெடுத்த மனதில்
அழுகை பெய்த கவிதை,
வலி சொல்கின்றது...

நன்றி!

ரசித்து அளித்த பின்னூட்டுக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
15-04-2010, 05:53 AM
நெஞ்சை நெகிழ வைக்கும் வரிகள்.

எனக்குச் சிறு சந்தேகம். வாழ்வில் துயரங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர், இந்தத் துயருக்கு இல்லை காரணம் என்று ஏன் கூறவேண்டும்?

பின்னூட்டத்துக்கு நன்றி.கவிஞரது வாழ்வில் இன்ப அத்தியாயங்களும் இருந்தன.கீதம் கருத்துரைத்ததுபோல் இனம் புரியா சோகம் சில சமயம் யாரய்யும் கப்பும்..அப்படிப்பட்ட நேரத்தில் இயற்றிய கவீ இது.

சொ.ஞானசம்பந்தன்
15-04-2010, 05:55 AM
Major Depression எனும் மன அழற்சி/ தளர்ச்சியை
இத்தனை நேர்த்தியான கவிவரிகளில் வாசித்ததில்லை இதுவரை..

மூலவருக்குப் பாராட்டு..
உற்சவருக்கு நன்றி!

ஆழமான விமர்சனத்துக்கு நன்றி

சொ.ஞானசம்பந்தன்
15-04-2010, 05:58 AM
காரணமின்றி சில சமயங்களில் மனம் கனப்பதென்னவோ உண்மைதான். காரணம் இல்லாமலிருக்காது. ஆனால் நம் கருத்துக்கு உடன்படாமல் கண்ணாமூச்சி காட்டும். அவ்வரிய மனவோட்டத்தை அழகாய் எடுத்தியம்புகின்றன, கவிதை வரிகள்.

கவிஞருக்கும், கருத்துக் குலையாமல் மொழிபெயர்த்த சொ.ஞா. அவர்களுக்கும் நன்றியும், பாராட்டுகளும்.

விவரமான விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
15-04-2010, 05:59 AM
அழுகை பெய்கிறது...
"இது ஏன் என்பதை அறியாததைவிடப்
பெரிய துன்பம் வேறொன்றுமில்லை. "

வெறுமையும் பெருந்துன்பம் தான்...

படைப்புக்கு நன்றி...
பாராட்டுக்கள்..

பாராட்டுக்கு நன்றி