PDA

View Full Version : வாய் விட்டு சிரிப்போம்



gvchandran
13-04-2010, 04:33 AM
வாய் விட்டு சிரிப்போம்

1. கலா: வீட்டு பக்கத்துலே இருக்கேன்னு அந்த பார்மசியிலே மாத்திரை வாங்கினேன்.
பிராடு பண்றாங்கடி.
மாலா : என்ன ஆச்சு?
கலா : மாமியாருக்கு வாங்கின மாத்திரையிலே எக்ஸ்பைரி தேதி 31 மார்ச்னு போட்டிருந்தது.
ஆனா அந்த தேதியிலே அவங்க சாகலையே. நம்ப வச்சு கழுத்தறுக்கறாங்க டி.

2. இரு பைத்தியங்கள் சாலையில் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை கண்டு எடுத்தன. ஆளுக்கு பாதி
என்று சம்மதித்து பங்கு போட்ட பின் 5 நிமிஷம் கழித்து முதல் பைத்தியம் சொன்னது-
“என்னை ஏமாற்றி பெரிய பாதியை நீ எடுத்துக்க பாக்கறியே.
சரி சமமா கிழிக்க கூட தெரியலை உனக்கு.”

3.மணி உன் போன் நம்பர் சொல்லு
கோபு : 42020259
மணி சரியா கேக்கலை திருப்பி சொல்லேன்.
கோபு : 95202024
மணி ?/?

4 ஒரு பொருட்காட்சியில்
ராமு : அந்த பக்கம் போக வேணாம் என் மனைவியும் காதலியும் வந்துட்டிருக்காங்க.
சீனு :ஆமாம் என் மனைவியும் காதலியும் கூட வராங்க. எதுக்கு பயம்?
அவங்க ஒத்துமையா தானே இருக்காங்க.

ஜனகன்
13-04-2010, 10:51 AM
நல்ல நகைச்சுவை,ரசித்து சிரித்தேன்.
இன்னும் கொடுங்க சந்திரன்.

உமாமீனா
28-02-2011, 05:22 AM
4 அருமையுளும் அருமை

dellas
28-02-2011, 06:10 AM
நல்ல தொடர்பு, நல்ல சிரிப்பு.

Nivas.T
28-02-2011, 06:29 AM
:lachen001::lachen001::lachen001: