PDA

View Full Version : வா(ள்)ழ்க்கை



simariba
13-04-2010, 02:25 AM
நிச்சயம் முடிந்தபின்
காதல் நிறைந்து
தொடங்கிய வாழ்க்கை...

அன்பும் வம்பும் கலந்த
இல்வாழ்க்கை...

சொல்லிவிட்டால் முடிந்ததை
செய்கிறாய்

சொல்லாமல் தெரிந்து கொள்
என்றால் வைகிறாய்

நீ சொல்வதையும்
சொல்ல நினைப்பதையும்
கூடச் செய்கிறேன்
சரியில்லை என்கிறாய்...

எது வேண்டும் என
கேட்டுக்கேட்டுச் செய்தாலும்
சமைத்தது சரியில்லை
துடைத்தது சரியில்லை
குழந்தைக்கு உணவூட்டியது சரியில்லை
எதுவுமே சரியில்லை - என்கிறாய்

ஒன்பது வருடங்களில்
நீ சொல்லும் சரியில்லைகளை
நானும் நம்ப ஆரம்பித்துவிட்டேன்

எதுவுமே சரியில்லை என்றால்
எதற்கு தான் என் இவ்வளவு
முயற்சியும் உழைப்பும்
உனக்காக....?

உன் சரியில்லை
வாள்வீச்சிலிருந்து
என்னை நான் காக்க
எடுத்துக் கொண்ட
என்னிலும் பெரிய கேடயம்
என்னையும்,
உனக்கான என் காதலையும் கூட
மறைத்து விடுகிறது அன்பே
உன்னிடமிருந்து....

பதில் சரியில்லை வாள்களை
நானும் வீசினால்...
உன் சரியில்லை
சரியான நிஜமாகிவிடும்...

உன்மீது காதல் அப்படியே
இருக்கிறது கண்ணா...
மனமிருந்தால்
உன் வாளை கீழே போடு..

நான் என் கேடயத்தை
கீழே போடுகிறேன்...

காவியமாய் வாழலாம்...

இல்லையென்றால்
இருக்கவே இருக்கிறது
இருதுருவமாக போர்க்களத்தில்
வாள்களுடனும் கேடயங்களுடனும்
சராசரி வாழ்க்கை...

Akila.R.D
13-04-2010, 04:02 AM
சுட்டெரிக்கும் உண்மை அபி...

//இருதுருவமாக போர்க்களத்தில்
வாள்களுடனும் கேடயங்களுடனும்
சராசரி வாழ்க்கை//...

நானும் இது போன்ற இரு துருவங்களைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன்...
மனமொத்த தம்பதியரை பார்ப்பது மிகவும் அரிதாகி விட்டது...

உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியிலும் உண்மை உள்ளது...கவிதை முழுதும் ஏக்கமும் சோகமும் நிரம்பி உள்ளது...


விரைவில் வாளையும் கேடையத்தையும் கீழே போட வாழ்த்துக்கள்...

simariba
13-04-2010, 07:16 AM
நன்றி அகிலா.

பா.ராஜேஷ்
13-04-2010, 07:48 PM
மிக உண்மை. அதை மிக அழகாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள்

simariba
18-04-2010, 08:22 AM
நன்றி ராஜேஷ்.

govindh
18-04-2010, 10:06 AM
"உன் வாளை கீழே போடு..
நான் என் கேடயத்தை
கீழே போடுகிறேன்...
காவியமாய் வாழலாம்..."

வாழ்க்கையில் வாள்களுக்கும்.., கேடயங்களுக்கும்...தேவை ஏற்படாமல் போகட்டும்...!

நன்றாக எழுதியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள்...