PDA

View Full Version : நீ எங்கே...?



govindh
12-04-2010, 05:44 PM
உனைக் கண்ட போது தான்...
என் உடைந்த பேனாவிற்கு..
உயிர் வந்தது...

வெற்றுக் காகிதங்கள்
கவிதைப் புத்தகமானது...

வாடிய முகம் -
வண்ண மலரானது...

சுருங்கிய இதயம் -
ஒரு சுற்று பெரிதானது...

வதங்கிய மனம் -
உரம் பெற்று வளமானது..

மூடிய வாழ்க்கை -
உனைத் தேடியே கழிகிறது...!

பா.ராஜேஷ்
13-04-2010, 07:57 PM
வந்ததும் போனதும் தெரியவில்லை
வருவதும் போவதும் தெரியவில்லை
வஞ்சி மட்டும் நெஞ்சமெங்கும் !!

govindh
05-06-2010, 01:11 PM
ஆம்...உங்கள் கவியும் அருமை.
பாராட்டுக்கள்.

nambi
05-06-2010, 02:38 PM
கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி!

குணமதி
05-06-2010, 04:47 PM
நன்றாக இருக்கிறது.

பாராட்டும் வாழ்த்தும்.

அமரன்
05-06-2010, 09:39 PM
சும்மாவா சொன்னாங்க...
காதல் சோடியில்
ஒன்றுக்கு ஒன்று கடவுள் என்று..

கட உள்..

பாராட்டுகள் நண்பனே!

சுடர்விழி
06-06-2010, 12:52 AM
எப்பவும் ’இதயம் நொருங்கியது’ அப்படினு எதிர்மறையாகத் தான் சொல்லுவாங்க...நீங்க காதலால் நடந்த நல்ல விஷயத்தை அழகாக கவிதையாக்கி இருக்கீங்க...பாராட்டுக்கள்

govindh
06-06-2010, 08:44 AM
கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி!

மிக்க நன்றி நம்பி அவர்களே,...

govindh
06-06-2010, 08:45 AM
நன்றாக இருக்கிறது.

பாராட்டும் வாழ்த்தும்.

பாராட்டுக்கு மிக்க நன்றி குணமதி அவர்களே....

govindh
06-06-2010, 08:48 AM
சும்மாவா சொன்னாங்க...
காதல் சோடியில்
ஒன்றுக்கு ஒன்று கடவுள் என்று..

கட உள்..

பாராட்டுகள் நண்பனே!

ஆஹா....கட உள்....
அருமையான விளக்கம்....அமரன் அவர்களே....
மிக்க நன்றி ...

govindh
06-06-2010, 08:51 AM
எப்பவும் ’இதயம் நொருங்கியது’ அப்படினு எதிர்மறையாகத் தான் சொல்லுவாங்க...நீங்க காதலால் நடந்த நல்ல விஷயத்தை அழகாக கவிதையாக்கி இருக்கீங்க...பாராட்டுக்கள்

ஊக்கமிகு பாராட்டுக்கு மிக்க நன்றி ....சுடர்விழி அவர்களே...

"பொத்தனூர்"பிரபு
25-08-2010, 03:01 PM
கவிதை அருமை

jawid_raiz
02-09-2010, 04:25 AM
சுவையான கவிதை.
வாழ்த்துக்கள் கோவிந்த்