PDA

View Full Version : கல்லறையொன்றை கடக்க நேரும் போது



ஆதி
12-04-2010, 04:47 PM
கல்லறையொன்றை
கடக்க நேரும் போது
ஒரு மசூதியைப் போன்றோ
ஒரு ஆலயத்தைப் போன்றோ
ஒரு கோவிலைப் போன்றோ
அதற்கு மரியாதை செலுத்துங்கள்..

ஏனெனில்,
உங்களுக்கு தெரியாமல்
உங்களுக்கு தெரிந்த
யாரையும் புதைத்திருக்கலாம் அங்கு..

உங்களுக்கு தெரியாமல்
உங்களையும் நாளை
யாரும் புதைக்கலாம் அங்கு..

govindh
12-04-2010, 05:31 PM
"கல்லறையொன்றை கடக்க நேரும் போது" ....

உண்மை தான்.
கலங்கி விட்டேன்.

இளசு
12-04-2010, 09:09 PM
நமக்கு முன் மிக நீ...................ண்ட காலம் கண்டது உலகு..
நமக்குப் பின் மிக நீ..................ண்ட காலம் இருக்கும் இவ்வுலகு..


நம் வசிப்பு சிறிது..

நினைவூட்டிகள் சில..

தலையாயது - கல் அறை.

இன்று இவர்..
நாளை நீ... நான்...

நிலையாமையைச் சொன்ன கயாம், பட்டினத்தார், கண்ணதாசன் வரிசையில்
நம் ஆதன்...


பாராட்டுகள் ஆதன்..

கீதம்
13-04-2010, 01:03 AM
கல்லறைகளையும் இடுகாடுகளையும் கடக்க நேர்கையில் நீங்கள் சொல்வதைப்போல் ஒரு மரியாதை (பயபக்தி) உருவாகும் என் மனதில். ஆனால் அதன் காரணம் இன்றுதான் விளங்கியது, உங்கள் கவிதை வாயிலாய்.

பாராட்டுகள் ஆதன் அவர்களே.

பா.ராஜேஷ்
13-04-2010, 07:52 PM
சில நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்கள் கவிதை. மிக அற்புதம், உண்மை. பாராட்டுக்கள் ...

பா.சங்கீதா
16-04-2010, 12:52 PM
நிம்மதியாக தூங்க இடம் தேடினேன்
நீண்ட நாட்களுக்கு பின்பு கிடைத்தது
கல்லறையாக.....

கவிதை மிக அருமை
வாழ்த்த்கள் .....

அமரன்
06-07-2010, 08:13 PM
நிலையாமை மட்டுமே நிலைத்து நிற்கும் இவ்வுலகில் அவசியமான கருத்து.

ஆதனுக்குப் பாராட்டு.

nambi
06-07-2010, 08:40 PM
ஆமாம் எத்தனை கொள்ளு தாத்தாக்கள் இருக்கிறார்களோ? எத்தனை கொல்லப்பட்ட தாதாக்கள் இருக்கிறார்களோ? யாருக்கு தெரியும்? முன்னே பின்னே செத்திருந்தா சுடுகாடு தெரியும்? வரிகள் அருமை! எளிமையான வரிகள்...பகிர்வுக்கு நன்றி!

பாலன்
11-07-2010, 04:33 PM
நீங்க வேண்டுகோள் விடுக்கிறீங்களா, வேதாந்தம் பேசுறீங்களான்னு தெரியலை. எதுவா இருந்தாலும் நீங்க சொல்ல வந்த விசயம் நல்ல விசயம். அதை எளிமையா புரியும்படி சொன்னதுக்கு நன்றி.

த.ஜார்ஜ்
11-07-2010, 04:47 PM
[QUOTE=ஆதன்;466430

உங்களுக்கு தெரியாமல்
உங்களையும் நாளை
யாரும் புதைக்கலாம் அங்கு..[/QUOTE]

:icon_b:

nellai tamilan
11-07-2010, 07:39 PM
கல்லறைகளை கடக்கும் போது...

ஒரு பயம் கலந்த மரியாதை கண்டிப்பாக தேவை.

அந்த மரியாதைதான் எதுவுமே நிரந்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைக்கும்

நல்ல வித்தை நெஞ்சில் விதைத்த
அருமையான கவிதை

சுடர்விழி
15-07-2010, 08:47 AM
அருமையான சிந்தனை.....ரொம்ப நல்லா இருக்கு கவிதை....கல்லறையைப் பார்த்து வரும் பயம் இனி மரியாதையாய் மாறவேண்டும்...

வெற்றி மகிழன்
15-07-2010, 05:04 PM
கல்லரை, சுடு காடு என்றால் நம் நினைவுக்கு வருவது பல..
சட் என்று என் மனதில் தோன்றியது "மௌனம்".
பார்க்கும் ஒரு நொடியில் அங்கு பல உயிர்கள் மண்ணோடு மண்ணாக போய் இருந்தாலும். உங்களின் இந்த கவிதையை கண்டு என் மனதில் உடனே சொல்ல நினைத்தவை.
கல்லரை
ஆட்டம் கண்ட மனிதனும்,அடாவடி மனிதனும், தலை கனம் கொண்டவனும், தலைக்கு மேல் ஆடியவனும், கோடியில் புரண்டவனும், தெருக் கோடியில் அழுதவனும், இவர்கள் யாவரும் இறுதியில் அனுபவிப்பது "மௌனம்" ஒன்று தான். அதனால் தான் கல்லரைகளும் சுடுகாடுகளும் உயிருடன் வாழும் மனிதனுக்கு சொல்லும் உண்மை.ஆடும் வரை ஆடிக்கோள்.பாடும் வரை பாடிக்கொள் "மௌனம்" ஒன்றே மரணத்தின் பிறகு.