PDA

View Full Version : எடை குறைக்க வாரீகளா?



KAMAKSHE
11-04-2010, 07:37 AM
அனைத்து ( வெயிட்டான) தமிழ் மன்ற நண்பர்களுக்கும் வணக்கம்.

இதில் பங்கு பெறும் தகுதி உள்ளவர்கள் ......

1. எடை அதிகம் (அ) அளவுக்கதிகம் இருந்து... அதைக் குறைக்க வேண்டும் என்ற கனவு, உள்ளவர்கள்...

2. என்னைமாதிரி முயற்சிகள் சரியாகச் செய்யாமலேயே.. தோற்றுவிட்டோம் என்று நினைப்பவர்கள்......

3. மருத்துவ அட்டவணைப்படி இந்த வயசுக்கு இந்த எடைதான் இருக்கணும் என்று தம் சக்திக்கு மீறி ஆசைப் படாதவர்கள்...,...

4. தன் மருத்தவர் சொன்னபடி மட்டும் செய்து எடை குறைக்க விரும்புவோர்...

5. தன் மனதின் விருப்பத்திற்கேற்ப தன் சக்திக்கு உட்பட்டு செயல்பட விரும்புவோர்...

கவனிக்கவும்,.... இதில் பங்கு பெறும் தகுதி இல்லாதவர்கள் ...

1. தங்கள் அதிக எடையுடன் மிக மகிழ்ச்சியாக இருப்பவர்கள்...

2. மருத்தவ ஆலோசனை இன்றி செயல்பட விழைபவர்....

இங்கு நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகும் விஷயங்கள் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.

நான் சொல்லப்போகும் விஷயங்களில் ஒன்றோ, இரண்டோ ஓரிரு நபர்களை மட்டும் குறிக்கலாம்

ஆனால் 90 சதவீதம் ...நம் உலகில்.....நம் நாட்டில்........நம் ஊரில்......நம் தெருவில்........... நம் வீட்டில்......... உள்ள ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதுதான்..

அப்படி என்ன சொல்லப்போகிறேன் என்று தானே கேட்கிறீர்கள்??

சொல்கிறேன் கேளுங்கள் ...ஆனால் ஒன்று... இந்த 90% இல் நீங்களும் ஒன்றானால் உங்களுடைய தினசரி வாழ்க்கையின் நடைமுறை அசெளரியங்களையும் நீங்கள் பட்டியல் இடுவீரா மனசாட்சிப் படி?

பொய் கூறுவது சுலபம்... ஆனால் அவசியமாக உண்மையைக் கூறுவீரா?

ம்........! அப்படி நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உண்மைகளை பகிர்ந்து கொண்டால் நாம் நினைத்த நேரத்தில், நினைத்த படி எடை குறைந்து விடுவோமே...!?

நினைத்தபடி எடை குறைந்து விட்டால் !!
அய்யோ அப்புறம் என்ன?
வியாதிகள் பயந்து ஓடும்....
நம் வீட்டு பீரோவில் தூக்கிப் போட மனதில்லாமல் 10 வருடங்களாக தூங்கும்.. ‘சரி உடம்பு இளச்சப்பறம் இந்த டிரஸ்ஸைப் போட்டுக்கலாம்’ என்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 10 பழைய ஆடைகளை நாம் உடுத்திக் கொள்ளலாமே! அதை விட சுகம் வேறு இருக்கா?
இருக்கே?
நமக்கு கல்யாண வயதில் மகன் அல்லது மகள் இருந்தாலும் , நம்மைப் பார்க்கும் ஒவ்வொருத்தரிடமிருந்தும் வித விதமாய் கேள்விகள் பறக்கும்..

“குழந்தைகள் உண்டா?” ( ஏன்னா பாத்தா தெரியல அவங்களுக்கு....அதான்) அல்லது
“அய்யோ உங்களுக்கு இத்தனை பெரிய பையன் இருக்கானா?”
யோக ஜாதகம் உள்ள இன்னும் சிலரைப் பார்த்து
“என்னங்க உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”
“காலேஜ் படிக்கிறீங்களா...” அப்படி வருங்க கேள்வி....

நாம் விண் வெளியில் மிதப்போமுங்க...!!!

நமக்கு வேறென்ன வெணும் சொல்லுங்க?

இதை விட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும் நம் வாழ்க்கையில் ?

யார் வர்றீங்க இந்த (சீரியஸ்) விளையாட்டுக்கு?

இது நாம் சேர்ந்து எடுக்கும் முயற்சிங்க....

நான் கீழே புதிய திரியில் ஆரம்பிக்கறேங்க.........
காமாக்ஷி
11-4-2010

கீதம்
11-04-2010, 08:27 AM
முதலில் என் பாராட்டுகளைப் பிடியுங்கள், காமாக்ஷி. எடை குறைப்பு என்பது இன்னமும் பலருக்கு எழுத்தளவிலேயே இருக்கும் நிலையில் உங்கள் ஆரோக்கியப் பயணத்துக்கான முதல் அடியை எடுத்துவைத்துள்ளமைக்கு என் பாராட்டுகள். தமிழ் மன்றத்தில் இதைப் பதிப்பதன் மூலம் மற்றவர்களும் அறியச் செய்து வலுக்கட்டாயத்தின் பேரிலாவது அல்லது வீம்புக்காகவாவது எடையைக் குறைத்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிட்டீர்கள். கூடிய விரைவில் நிச்சயம் உங்கள் இலக்கை அடைந்துவிடுவீர்கள்.

இதை நான் எப்படி சர்வ நிச்சயமாய் சொல்கிறேன் என்றால் உங்கள் விடாமுயற்சியைப் பற்றியும், கடுமையான உழைப்பைப் பற்றியும் நானறிவேன். நான் உங்களைப் பார்த்தது இல்லை. ஆனாலும் மன்றத்தில் இணைந்த புதிதில் நீங்கள் எழுதிய கதைக்கும், இப்போது எழுதும் கதைகளுக்கும் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தாலே அது உங்களுக்குப் புரியும். போட்டிகள் இருக்கலாம்; பொறாமை இருக்கக்கூடாது என்பார்கள். ஆனால் பிறரை வருத்தாத, மற்றவர் மனம் பாதிக்காத, ஒரு நல்ல இலக்குக்கான பொறாமை இருக்கலாம் என்பதை உங்கள் மூலம் அறிகிறேன்.

குண்டாக இருப்பது சிலருக்கு உடல் வாகாகவும் இருக்கலாம். மரபணுக்களின் ஆளுமையாகவும் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, பருமனோ, ஒல்லியோ, எப்படி இருந்தாலும் சரி, நோயற்று வாழவேண்டும். அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்று யோசித்துச் செயல்படுவதே புத்திசாலித்தனம். உப்பைக் குறைப்பதை நாம் குழந்தைகளுக்கும் ஆரம்பத்திலிருந்தே பழக்கினால் நல்லது. வீட்டில் அனைவருக்கும் பொதுவாய்த் தயாரிக்கப்படும் உணவில் உப்பைக் குறைப்பது சாத்தியமில்லையெனில், தயிர் சாதத்திற்கு உப்புப்போடாமல் சாப்பிட்டுப் பழகினாலே போதுமானது. எங்கள் வீடுகளில் இப்படிதான் செய்கிறோம்.

அடுத்தது, நடைப்பயிற்சி. இதை உடல் இளைக்க மட்டுமின்றி சாதாரணமாகவே எல்லோரும் பின்பற்றினால் நல்லது. எடை குறைகிறதோ, இல்லையோ, ஆனால் நடைப்பயிற்சியின் மூலம் நாம் அடையும் நன்மைகள் பல.

உணவுக்கட்டுப்பாட்டுக்கு முக்கியம் மனக்கட்டுப்பாடு. அது இருந்தால்தான் வாயைக் கட்டி பின் வயிற்றையும் கட்டமுடியும். உங்கள் மனக்கட்டுப்பாடு நிலைத்து நிற்கவேண்டுமென்று நான் விரும்பி வாழ்த்துகிறேன். இன்னொன்று, நம் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே அதிக கொழுப்புள்ள தின்பண்டங்களையும், நொறுக்குத்தீனியையும் தவிர்ப்பது நல்லது. பிற்காலத்தில் அவர்களும் நம்மைப் போல் கூடுதல் எடை குறித்துப் புலம்புவதைத் தவிர்க்கலாம். இன்றைய குழந்தைகளுக்கு உடல் ரீதியிலான விளையாட்டுகள் மிகக்குறைவு என்பதும் ஒரு காரணம்.

விரைவிலேயே இந்தத்திரியில் உங்கள் எடைகுறைந்த விபரம் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். மன்ற நண்பர்கள் மேலும் ஆலோசனை தந்து உதவுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். நம் மன்றத்தில் யவனிகா அவர்கள் எழுதிய இந்தத்திரியையும் பார்வையிடுங்கள். http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12676நிறைய பயனுள்ள விஷயங்கள் சொல்லியிருக்கிறார்.

உங்கள் வெற்றி இலக்கை விரைந்து அடைய என் வாழ்த்துகள், காமாக்ஷி.:icon_b:

KAMAKSHE
11-04-2010, 01:45 PM
மிக்க நன்றி கீதம் . உடனடியாக படித்து பாராட்டியதற்க்காக.....

இதன் முயற்சி என்னவெனில்... எடைக்குறைப்பு தேவை என நினைப்பவர்கள்

இந்தத் திரியில்

அவர்களின் எடைக் குறைப்பில் தென்படும் பிரச்சனைகளையும்...

அதாவது மனக்கட்டுப்பாட்டின்மையால் ஏற்படுபவை---

உணவு ,மற்றும் உடற்பயிற்சி செய்வதில் உள்ள சோம்பல்களை... திமிர்

ஆகியவற்றை மனம் விட்டு மன்றத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் எடை குறைய என்ன செய்ய வேண்டும் என்ற பெரிய பட்டியலே நம் எல்லொருக்குமே தெரியும் . நாம் எல்லோருமே ஒரு புத்தகமே எழுதிவிடுவோம்..

நான் இப்படி...இப்படித்தான் உணவுக் கட்டுப் பாட்டுடன் இருக்கிறேன் ....

(அல்லது) உடற்பயிற்சி செய்ய வில்லை ......
.
இன்று 30 நிமிடம் நடக்கவில்லை ...

இன்று 1 மணி நேரம் பார்க்கில் நடந்தேன் .. ஆகா... ரொம்ப சந்தோஷமா இருக்கு...

இன்று கேக் 3 சாப்பிட்டு விட்டேன் ... ஆனால் தவிர்த்திருக்க முடியும்...

உண்மைக் காரணங்களோடு சொல்ல வெண்டும்..

(பல சமயம் பொய்யும் சொல்வார்கள் சோம்பலில் நடக்காமலிருந்தால்...)

மன்ற நண்பர்கள் ஒருவருக்கொருவர் இப்படிச் சொல்வது இருவருக்கும் நன்மை அளிக்கும் - அவ்வளவே-

புரிய வையுங்கள் முடிந்தால்- கீதம்

புரிந்தவர்கள் ஆரம்பியுங்கள் .........

ஐந்தெழுத்து... ஏழெழுத்து வார்த்தை விளையாட்டை விட அருமையாக இருக்கும்.

ஆரம்பிக்கும் முன் மேலே நான் எழுதிய திரியை படித்து விட்டு ஆரம்பிக்கவும்

KAMAKSHE
11-04-2010, 02:04 PM
11-4-2010

நான் நேத்திக்கு சாயங்காலம்... ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன்.. எனக்கு 4 சீட் தள்ளி என் நாத்தனார் உட்கார்ந்திருந்தார்... என்னை விட அவர்கள் வயதில் பெரியவர்கள். நான் என் நாத்தனாரை பொறாமையோடு பார்த்தேன் ... ஏன் ? அவர்கள் என்னைப் போல் குண்டாக இல்லை. அதான்..

முதல் வரிசை என்பதால் நான் மகிழ்ச்சியாக இருந்தாலும்.. , என் தொப்பையை உள்ளே இழுத்துக் கொண்டு உட்காருவது ரொம்ப சிரமமாக இருந்தது... நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நடுவில் மறந்து வேறு போய் விடும் சனியன்.... இந்த தொப்பையை உள்ளிழுக்கும் சமாச்சாரம்... அது மட்டும் இன்றி 10 நாள் முன்பு என் முட்டி வீங்கி வலியில் நடக்கமுடியாமல் போனது. நடந்தேன் 90 வயசு கிழவி போல. அதற்கு மருத்துவர் முதல் 3 நாள் உப்பின்றி இருக்கச் சொன்னார். பின்னர் உப்பை உணவில் குறைக்கச் சொன்னார். எடை குறைக்க எண்ணைப் பண்டங்களையும்.. இனிப்புகளையும் தவிர்க்கச் சொன்னார். வலிக்கு 3 நாளுக்கு மாத்திரைகள் தந்தார். உடற்பயிற்சி முட்டி சரியான பின்புதான் என்றார் . நான் தான் எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லயே.. எனக்கென்ன கவலை...? உப்பை குறைக்க முயன்றேன். தோற்றேன். . பத்து நாளும் ஓடி விட்டது. மாத்திரை மட்டும் சாப்பிட்டேன் . வேறு ஏதும் முயன்றும் முடியவில்லை. இதோ இன்று இங்கு விழாவில் வலி மாத்திரையைப் போட்டுக் கொண்டு முட்டி வலியா? எனக்கா? எப்போ? என்பது போல் சமாளித்து நடந்து வந்தேன்....ஆனால் மனதுக்குள்ளே சங்கடங்களும், பயமும், குற்ற உணர்வும் இல்லாமலில்லை.

என் நாத்தனார் கடந்த 7-8 வருடங்களாகவே ஒரே சீராக ( சிறிது அதிகமானாலும்) தன் எடையை பராமரித்து வருகிறார். என்ன மனோ திடம்? .. அதனால் எனக்குப் பொறாமை.
இரண்டு வருடம் முன்னர் சக்கரை நோயின் ஆரம்பம் என்று அவர்களுக்கு மருத்தவர் சொல்லி விட்டார்.. காரணம் மன அழுத்தம், அவர்களின் எடை, மற்றும் சக்கரை நோய் தாய் வீட்டு பரம்பரை சொத்தும் கூட... அவ்வளவு தான் .. அழுதே விட்டார்.. மருத்துவர் சொன்னவை ---

1.தினமும் 40 நிமிடங்கள் நடக்கவும்...
2.கண்டிப்பாக இனிப்பைத் தொடக் கூடாது..
3.அளந்துதான் உணவை உண்ண வேண்டும்...
4.திருமண விழாக்களுக்குச் சென்றால் உண்பதைத் தவிர்க்க வேண்டும் (அ) தான் உண்ணவேண்டிய உணவை மட்டும் அளவோடு உண்ண வேண்டும்.
5. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்..
6. நிறைய பச்சைக் காய்கறிகள் + ( அனுமதிக்கப்பட்ட) பழங்கள் உண்ணலாம்

ஒரு வாரம் சோர்வாக இருந்தார்.. அப்புறம் நிதானமாக 20 நிமிடம் ஒரு நாளுக்கென நடக்க ஆரம்பித்தார்... வேலைக்கார பெண்ணின் உதவியோடு வீட்டில் சமையலில் மாறுதல்களை ஏற்படுத்தினார். 2 மாதங்களில் நடப்பது 40 நிமிடமாக அதிகரித்தது. சக்கரை வியாதி என்பதால் உணவின் அளவுக் கட்டுப்பாடு அத்தியாவசியமாகையால் முன்பு சாப்பிடும் அளவை விட சாப்பாடு பாதிக்கு மேல் குறைந்தபடியால்.. 3 மாதங்களிலேயே நன்கு எடை குறைந்து தோன்றினார்.

என் பொறாமையை என்ன சொல்ல? எனக்கு சக்கரை வியாதி இருக்குன்னு டாக்டர் சொல்லலேன்னு பொறாமையா? இல்ல சொன்னாலும் நான் என் நாத்தனாரைப் போல வைராக்கியமாக இருக்க முடியாதுன்னா?

8 மாதங்களில் எடுத்த அவங்களோட ப்ளட் டெஸ்டில் --- சக்கரை வியாதியின் அறிகுறி கூட இல்லை...

என் நாத்தனாரே அதை எதிர்பார்க்கவில்லை.. மகிழ்ச்சியில் முடிவெடுத்தார்.. தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டைத் தொடர்வதென்று. இன்று வரை செய்கிறார்... பிடித்த உடைகளை அணிகிறார். மறைத்துக் கொண்டு உட்காரவேண்டிய கவலை இல்லை .. தொப்பையும் இல்லை .. ஆள் குண்டும் இல்லை...

நான் பொறாமைப் படாமல் என்ன செய்ய?
பொறாமைப் பட்டால் உன் ஆழ் மனதின் ஆசை உனக்கு சீக்கிரம் விளங்குமாம்..நீ எதைப்பார்த்து பொறாமைப் படுகிறாயோ நீ அதுவாக ஆக ஆசை தானே படுகிறாய்.. ஆகலாமே.. அவவளவு தான்.... தமிழ் மன்றத்தில் பல எழுத்தாளர்களைப் பார்த்தும் தான் பொறாமையாக இருக்கிறது... நம்மால் அது மாதிரி இன்று முடியவில்லையே என்று.. ஆனால் உன் நோக்காவது உனக்கு விளங்கி விட்டதே.. பார்த்து கற்றுக்கொள்ள முன் மாதிரியையும் நீயே தயார் செய்து விட்டாய் ... பொறாமையின் மூலம்....

நான் விழாவின் முதல் வரிசையிலேயே என்னிடம் இருந்த ஒரு சின்ன தாளில் எழுதினேன் என் ஆதங்கத்தை...
“நான் கூனிக் குறுகுகிறேன்... .. ஒரு சின்ன உணவுக் கட்டுப் பாட்டை என்னால் கடை பிடிக்க முடியவில்லை.. அவர்களால் முடிகிறது.. என்னால் முடியவில்லை... நான் பிறந்தது முதல் எத்தனை ஸ்வீட்ஸ் தின்றிருக்கிறேன்? எத்தனை ஹோட்டல்களில் வித வித மாய் தின்றிருக்கிறேன் ?.. எத்தனை திருமணங்களில் விருந்துகளைக் களித்திருக்கிறேன்? ... 3 நாள் உப்பில்லாமல் இருந்தால் என்ன கேடு வந்துவிடும்,,, கால் சரியாகப் போகுமே? ஏன் என்னால் முடியாது? சீச்சீ வெட்கம் பிடுங்கித் தின்கிறது.. வேதனை யாக உணர்கிறேன் .. எனக்குப் பிடித்த உடையில் நான் இன்று தலை நிமிர்ந்து மகிழ்ச்சியின் எல்லையில் உட்கார்ந்திருந்தால் எப்படி இருக்கும்...? திடீரென் ஒரு எண்ணம் மின்னல் மாதிரி... நான் ஏன் தமிழ் மன்றத்தில் இதைப் பற்றி எழுதக் கூடாது? ”

என் மகனுக்கு பசி உயிர் போகிறது.. இடைவேளையில் சபாவின் மணக்கும் கேன்டீனுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு எந்தப்பக்கம் திரும்பினாலும் இவைதான்.. எண்ணை மிதக்க..... கிச்சடி...மசால் தோசை... ஆனியன் ரவா... ரவா பொங்கல்...வெண் பொங்கல்... சாம்பார் வடை.. இட்லி வகைகள்.. போண்டா.. கட்லெட் வேறு...ஊத்தப்பம்... அய்யோ பசிக்கும் குழந்தைக்கு முன்னே பசித்தது எனக்கு.... ஆர்டர் செய்தேன் ஒரு மசால் தோசைக்கு. மகனுக்கு மட்டும்தான் . நாலு பேர் இருப்பதைப் பற்றி கவலைப் படாமல் பொறுமையின்றி கோபப்பட்டான். நான் மனதுக்குள் அழுதேன் ... அத்தனை உணவு வகைகளையும் ருசி பார்க்க வேண்டும் போல் இருந்தது எனக்கு. தோசை வந்தது. மகன் சாப்பிட்டான். வீட்டில் உள்ளவர்களுக்காக பார்சல் ஆர்டர் செய்தேன். அங்கே ஒரு ஸ்வீட் கடை வேறு.. பாதாம் அல்வா,, பாம்பாய் அல்வா.. ரசகுல்லா.. லட்டு, காஜர் கத்லி.. இன்னும் என்னென்னவோ ... மிக்சர்.. காராசேவை... பக்கோடா வேறு... வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் இனிப்பு வாங்கிக் கொண்டேன்...நான் அனைத்தையும் நன்கு பார்த்துக்கொண்டேன்... வீட்டிற்கு வந்த பின்னும் .. மற்றவர் சாப்பிட்டாலும் நான் எதையும் தொடவில்லை..பழங்கள் மட்டும் எடுத்துக் கொண்டேன்.

தமிழ் மன்றத்தில் எழுதி விடுவதென்று முடிவெடுத்ததை நிறைவேற்ற கணிணி முன் அமர்ந்தேன்.

இதோ என் வீட்டு பசங்க இன்னிக்கு பிஸ்ஸாதான் மதிய உணவுக்கு சாப்பிடப் போறாங்க. அவங்க கிட்ட சொன்னேன் .. நீங்க மிச்சம் வைக்கறது உங்களுக்கே அப்பறம் வேணும்னு என் கிட்ட மிரட்டிச் சொல்லிட்டுப் போங்கன்னேன்...நாங்க... இப்பவே முடிச்சுடுவோம்னாங்க....5 நிமிட மன சஞ்சலத்திலிருந்து தப்பித்தேன்.

இதுவரை அவ்வளவு தான் . இன்னும் இன்றைய பொழுது கழிய 9 மணி நேரங்கள் உள்ளது... அடுத்த பதிவில் நல்ல செய்தி கொடுக்க ஆசை தான் முயற்சிக்கிறேன்.......

தகுதியுள்ளவர்கள் தொடருங்கள் .

காமாக்ஷி

jayashankar
11-04-2010, 03:12 PM
காமாட்சி அவர்களே!

வணக்கம்.

பல மாதங்களாக நினைத்திருந்த ஒரு விசயம்தான். ஆனால் மனம் ஒத்துழைக்க மறுத்துக் கொண்டேயிருந்தது.

70 கிலோ என்பது என் உயரத்திற்கு அதிகம் என்றாலும், அக்டோபர் 2009 மாதத்திலிருந்து உடலில் ஒரு வித கனத்தை எப்போதும் சுமப்பது போன்ற ஒரு எண்ணம், அதை மூளையும் பறைசாற்றியது.

சரி என்று டிசம்பர் மாதம், ஒரு நாள் மார்கெட் போய் எடை மற்றும் உடல் கழிவுகளை நீக்க தேவையான விசயத்தை வாங்கி வந்தேன். பின்பற்றினேன்.

விடை கிடைத்தது. உடலினுள் இருந்த கழிவுகள் அப்புறப்படுத்தப் பட்டன எளிமையாக. உடல் எடை 4 1/2 கிலோ குறைந்தேன் ஒரே வாரத்தில்.

இது நடந்தது டிசம்பரில் அப்போதிருந்து இப்போது வரை மீண்டும் ஒரு கிலோ ஏற்றம் கண்டிருக்கின்றேன். ஆனாலும், உடல் கனம் போன்ற எண்ணம் இன்னும் வரவில்லை. அடுத்த முறையும் முயற்சிப்போமா என்ற எண்ணம் வருகின்றது.

சீக்கிரமே இந்த மாதத்திலேயே தொடங்குவேன்.

என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள். நிச்சியம் வெற்றி உண்டு.

வாழ்த்துக்கள்.

வாங்க என்னுடன் அந்த 7 நாட்கள்.

jayashankar
11-04-2010, 03:14 PM
இந்த 7 நாள் விரதத்திற்கு, பெயர் “U.S . Department of agriculture and their Food & Drug Administration.” இந்த தரம் பார்த்து உண்ணும் நோன்பை “Board of Directors of General Motor Corporation at a general meeting on August 15, 1995” அங்கிகரித்து பயனும் அடைந்தது.

நீங்களும் முயற்சிக்கலாம் தப்பேயில்லை.

விதிமுறைகள்:

- இந்த நோன்பை 40 + இருப்பவர் பயன்படுத்தலாம்.

- உடல் எடை அதிகமாக இருப்பவர் பயன்படுத்தலாம்

- அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுபவர்கள் பயன்படுத்தலாம்.

- குழந்தைகள் பயன்படுத்தக் கூடாது. எடை மிக அதிகமாக உள்ள குழந்தைகள் மருத்துவரின் அறிவுரையுடன் பயன்படுத்தலாம் ( இருப்பினும், குழந்தைகளுக்கு இயற்கையாகவே உடல் சுத்திகரிப்பு நடக்கும். ஏனெனில், வயதில் சிறியவர்களில்லையா.)

- எத்தனை முறை வேண்டுமானாலும் இதனை பின்பற்றலாம். ஆனால், 3 நாட்களிலிருந்து ஒரு வாரம் வரை இடைவெளியுடன் செய்தல் வேண்டும். அதுதான் முக்கியம்.

அப்புறம் நண்பர்களே எனக்குத் தெரிந்த வகையில் மொழிபெயர்ப்பும், அதனுடன் என் அனுபவத்தையும் உங்களுக்கு கொடுக்கப் போகின்றேன் தமிழில்.

பயனடைந்தவன் என்ற முறையில், இதனை உங்களுக்குத் சொல்வதில் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

jayashankar
11-04-2010, 03:15 PM
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கிட்னியில் கல் வந்ததால், கடுமையான மருந்து வகைகளை உண்டதால் எடை கூடிவிட்டது.

மீண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மறுபடியும் அதே தொந்தரவு. இந்த மருத்துவ வழியை பின்பற்றுவதற்கு முன்பு ஒரு கல் மீதமிருந்தது. அதிக மருந்து உண்டதால் எடை மற்றும் உடலும் சிறிது துவண்டது 40 வயதை கடந்ததால். உடற்பயிற்சி செய்து எடையை கட்டுக்குள் வைத்தாலும், எடை குறைப்பு என்பதும் உடல் ஒத்துழைப்பு என்பதும் கடினமாக இருந்தது.

எனவே, இந்த வழியை பின்பற்றினால் உடலில் உள்ள கழிவுகள் நீங்க அதிக வாய்ப்பிருப்பதால் சரி தொடங்குவோம் என்று முடிவு செய்தேன்.

என் உடலை சுத்தப்படுத்துதல் முக்கிய காரணம். அப்படியே இந்த விசயத்தை பின்பற்றினால் நிச்சயம் உடலின் எடை குறையும் என்பதாலும் சரி என்று எண்ணினேன்.

இனி இந்த முறையில் என்ன செய்வது என்று பார்ப்போம்.

இது 7 நாட்கள் ( ஒரு வாரம் ) விரதம் என்பது போல் பின்பற்றப் படவேண்டும்.

jayashankar
11-04-2010, 03:16 PM
முதல் நாள்:

வெறும் பழங்கள். மற்றும் 10 கிளாஸ் தண்ணீர். பழங்களில் வாழைப்பழம் மட்டும் விதிவிலக்கு. 10 கிளாஸ் தண்ணீர் மிக முக்கியம்.

தர்பூசணிப்பழத்தை அதிகம் உண்ணலாம். ஏனெனில் இதில் தண்ணீர் சத்து அதிகம் நார் சத்தும் அதிகம். அப்புறமென்ன அளவெல்லாம் கிடையாது. இஷ்டம் போல் உண்ணுங்கள். பசித்திருக்க கூடாது என்பது விதி. எனவே, பல வகைப் பழங்களை உண்ணுங்கள்.

ஒரு சூப் ரெசிப்பியை கொடுக்கின்றேன். இதை நீங்கள் 7 நாட்களும் எடுத்துக் கொள்ளலாம். அளவெல்லாம் இதற்கும் இல்லை. ஆனால் என் பரிந்துரை முதல் நாள் வேண்டாமே ஃப்ளீஸ். என் அனுபவம்.

என்ன செய்கின்றது இந்த பழங்கள்..

இது நம் உடலை தயார் செய்கின்றது. சர்க்கரை சத்தை உடலுக்கு அளிக்கின்றது. இருந்தாலும், கார்போ ஹைட்ரேட்டும், கொழுப்பு சத்தும் இன்று அரவே கிடையாது நம் உடலுக்கு. அதனால்தான் வாழைப்பழத்திற்கு தடை. சரிங்களா.

இந்த மாற்றங்களால், நமது உடலில் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட விசயங்கள் கழுவப்படுகின்றன.

சூப் ரெஸிபி:

தண்ணீர், பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, முட்டைகோஸ், காரட் இவற்றுடன் மிளகு காரத்திற்கு, சிறிதே சிறிது உப்பு. உப்பில்லாவிட்டால் இன்னும் நல்லது. இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சூப்பை எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம். தப்பில்லை.

என் நிலை:

முதல் நாள் நான் என்ன செய்தேன் என்று கேட்கின்றீர்களா. வெறும் தர்பூசணி பழம், பப்பாளிப் பழம், ஆப்பிள். இவைதான் கிடைத்தது. அதையே உண்டேன். 11 கிளாஸ் தண்ணீர் குடித்தேன்.

சிறிதும் உற்சாகத்திற்கு குறைவில்லாமல் இந்த நாள் கழிந்தது வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி. இதனாலேயே அடுத்த 6 நாட்களை சமாளித்து விடலாம் என்ற ஒரு உறுதி வந்துவிட்டதும் உண்மை.

இன்னும் 6 நாள் போகணுமில்ல. அப்ப அடுத்த நாளப் பத்தி பார்ப்போமா.

jayashankar
11-04-2010, 03:19 PM
இரண்டாம் நாள் :

இன்று வெறும் காய்கறிகள். நீங்கள் விரும்பும் காய்கறிகள் உண்ணலாம். கிழங்கு வகைகளை சாப்பிடக்கூடாது.

இருந்தாலும், அதிகாலை உணவில் ஒரு முழு பெரிய உருளைக்கிழங்கை சாப்பிட வேண்டும் வேகவைத்து. பிறகு இந்த கிழங்குகளுக்கு தடை இன்று. வெறும் காய்கறிகள்தான். எந்த விதத்தில் என்பது உங்கள் விருப்பம். எண்ணெய், தேங்காய் போன்றவை 7 நாட்களுக்கும் தடை ஞாபகமிருக்கட்டும்.

என்ன செய்கின்றது இந்த காய்கறிகள் :

நமக்கு நார்சத்தை வழங்குகின்றது. உருளைக்கிழங்கு கார்போஹைட்ரேட்டை வழங்குகின்றது. எனவே வயிற்றிற்கு வேலை அதிகம். ஆனால், கொழுப்பு சத்து கார்போஹைட்ரேட் சத்து என்பது மிகவும் குறைவு. எனவே, இன்றும் நமது உடலில் இரத்தில் இருக்கும் கெட்ட விசயங்கள் அதிக வேகமாக கழுவப் படுகின்றன. நார் சத்துக்களின் வேலையே அதுதானே.

இதுமட்டுமின்றி, வேலை செய்யத் தேவையான சக்தியை நம் உடலில் உள்ள அதிகமாக இருக்கும் கொழுப்பிலிருந்து எடுக்க தொடங்குகின்றது நம் உடல். இதுதான் இந்த 7 நாட்களின் மர்மம்.

வயிறும் காயக்கூடாது, அதிக கொழுப்புகள் கரையணும். அப்புறம் நம் உடலும் சுத்தப்படுத்தப்படணும். சரிங்களா.

காய்கறி, அப்புறம் நம்ம சூப் இப்படி மாற்றி மாற்றி உண்ண வேண்டியதுதான்.

10 கிளாஸ் குடிநீர் இவைகளுடன் குடிப்பதற்கு மறக்க வேண்டாம் நண்பர்களே. இந்த குடிநீர்தான் அடிப்படை விசயம்.

என் நிலை என்ன என்று பார்ப்போமா:

காலை உணவில் பெரிய உருளைக்கிழங்கு கிடைக்கவில்லை எனவே, இரண்டு சிறிய உருளைக்கிழங்கும், காய்கறி சாலட் வேறென்ன.

முளைவிட்ட பயிறு கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். இரண்டாம் நாள் இதை சாப்பிடக் கூடாது என்றார்கள். இருந்தாலும் சிறிதளவே எடுத்துக் கொண்டதால் எனக்கு பிரச்சினையில்லை.

இருப்பினும் மதிய உணவின் போது, போதும் என்று நினைத்து எடுத்துச் சென்ற காய்கறிகள் மற்றும் சூப் போதாமல் மீண்டும் வீட்டிலிருந்து மறுபடியும் வரவழைத்து சாப்பிட்டேன். எனவே, வேலைக்குப் போகின்றவர்கள் கவனம்.இரண்டாம் நாள் சிறிது என்னை தாளம் போட வைத்த நாளாகும்.

இருப்பினும், சாலட், சூப் இருந்தால் சமாளித்து விடலாம் என்றுதான் தோன்றுகின்றது.

இந்த இரண்டு நாட்களும் உடல் தன்னைத்தானே சுத்தம் செய்து கொண்டும், அதிக கொழுப்பிலிருந்து தனக்குத் தேவையான சக்தியை எடுக்கத் தொடங்குகின்றது.

jayashankar
11-04-2010, 03:20 PM
அடடே, விடிந்துவிட்டது நண்பர்களே. இன்று மூன்றாம் நாள்

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

நாள் 3:

இன்றைக்கு கடந்த இரண்டு நாட்களாக பாடுபட்டமைக்கு விஷப்பரிட்சை நாள்.

ஆம் இன்று பழம் மற்றும் காய்கறிகள் மட்டுமே. மாவு சத்துக்கு இன்று கட்டாய விடுமுறை. எனவே, உருளைக்கிழங்கு, வாழைப்பழம், தேங்காய், எண்ணெய் போன்றவற்றின் வாசமும் நம்மீது படக்கூடாது.

ஆனா, எவ்வளவு பழம் வேண்டுமோ, எவ்வளவு காய்கறி வேண்டுமோ தயங்காமல் பல விதங்களில் உண்ணுங்கள். இந்த சர்க்கரை கூடாது சரியா. ( 7 நாட்களுக்கும் சர்க்கரை கூடவே கூடாது ). பச்சைக் காய்கறிகளை வெட்டி உண்ணும் போது சாதாரண உப்புக்குப் பதில் செந்நிற உப்பு ( ஹிந்தியில் காலா நமக் என்றும், rock salt என்று ஆங்கிலத்திலும் கூறுவார்கள்) நல்லது. உப்பின் சுவை இருந்தாலும், பச்சைக் காய்கறிகள், பழங்கள் சாப்பிடும்போது இவை சுவை கூட்டத்தான் செய்கின்றது.

வேறென்ன சொல்லப் போகின்றேன் அந்த 10 கிளாஸ் குடிநீர் மறக்கலையே. யாருப்பா இவ்வளவு குடிநீர் குடிப்பார்கள் என்பவர்களே.. நீங்கள் குடிநீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து குடிக்கலாம் தப்பேயில்லை. எலுமிச்சையும் ஒரு வகையில் நல்லதுதான். உங்களுக்கு சக்தியை கொடுக்கும் அறுமருந்து. 7 நாட்களும் இப்படி குடிநீருடன் எலுமிச்சை சேர்க்கலாம் தப்பில்லை.

இன்று மாவுச் சத்து இல்லை. அதே சமயம், நார்சத்தும், புரதச்சத்து அதிகமாக உடலுக்குள் செலுத்தப் படுகின்றன. இன்றைய தினத்தில் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளுக்கு திண்டாட்டம்தான். எனவே, அதிக பழம் காய்கறிகள் நல்லது. பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்றைய தினத்தில் என் நிலை:

இன்று பழமும், காய்கறிகளும் சூப்பும் என் வயிற்றை நிரப்பியதால், இன்று பிரச்சினையில்லை. அதேசமயம் எடை மேடை நான் 1 ½ கிலோ குறைந்ததை காட்டியது. ம்கவும் மகிழ்ச்சி. அந்த அய்ர்ச்சி என்ற விசயமும் சிறிது கட்டுப்பட்டது. எனவே, இந்த மந்திரம் வேலை செய்கின்றது என்பதை கண்கூடாக கண்டேன்.

இனிமேல்தான், அடுத்த கட்ட சுத்திகரிப்பு வேலையை உடலுக்குத் தர வேண்டும். அது என்னவென்று நான்காவது தினத்தை எட்டிப் பார்த்தால் தெரிந்துவிடும் தானே. போலாங்களா.

jayashankar
11-04-2010, 03:21 PM
நாள் 4:

இன்று நம் உடலில் குறைந்த கால்சியம் மற்றும் பொட்டாசிய சத்தை சமனப்படுத்தும் நாள்.

எனவே இன்றைய நம் பட்டியலில் ஒரு ராஜா ஒரு ராணி தேவையென்றால் ஒரு மந்திரி.பாதுகாப்பு இல்லையென்னும் பட்சத்தில் மட்டும் படைவீரர்கள்.

என்ன புரியவில்லையா. இன்றையா ராஜா 8 வாழைப்பழம், ராணி 3 கிளாஸ் பால், மந்திரி தேவையென்றால் காய்கறி சூப் ஒரு கிளாஸ். இதுவும் பத்தாது நான் சாப்பாட்டுராமன் என்றால் இருக்கவே இருக்கின்றார் நமது வீராதி வீரர் சூப்.

இன்று 8 வாழைப்பழமும் 3 கிளாஸ் பாலும் குடிக்கவேண்டும் மூன்று வேளைகளில் அவ்வளவுதான். ரொம்ப கஞ்சப்பிரபுவாயிருக்குறீங்களே என்றால் ஒரு கிளாஸ் காய்கறி சூப் குடிக்கலாம். அப்புறம் 10 கிளாஸ் குடிநீர்.

கடந்த மூன்று நாட்களாக நாம் இழந்த கால்சியம் பொட்டாசியம் ஈடுகட்டப்படுகின்றது. வேறென்ன ஜாலியா 10 கிளாஸ் தண்ணி ( சுத்தமான குடிநீர் ) அடிச்சி கொண்டாடுங்க.

என் நிலை:

இன்றும் ஒரு பிரச்சினையுமில்லை. சாப்ப்டுவதற்கு 6 வாழைப்பழங்கள்தான் கிடைத்தது. நேரெமின்மையால் கடைக்குப் போய் வாங்க முடியவில்லை. இருப்பினும் நம் சூப் கை கொடுத்ததால் பிரச்சினையில்லை.

இன்று இன்னும் லேசா லேசா….

அடுத்த நாளைக்கு போலாமா

jayashankar
11-04-2010, 03:22 PM
நாள் 5:

இன்று நம்து உணவு ஒரு கப் சாதம். அப்புறம் 6 முழு தக்காளிகள் பச்சையாக.. மற்றபடி வயிற்றை நிரப்ப சூப் அவர்களின் உதவியை நாட வேண்டியதுதான்.

இன்றும் உடலில் நாம் உற்பத்தி செய்த யூரிக் அமிலத்தை துரத்துவதற்காகத் தான் இந்த தக்காளி. அப்புறம் சாதம் நமக்கு சிறிது சக்தியை அதிகப்படுத்த. யூரிக் அமிலத்தோடு போரிடப் போகின்றோம் அல்லவா.
:
என் நிலை:

என்னடா இது தக்காளியை அதுவும் பச்சையாக ஆறு தக்காளிகள். ஒரு கடுப்பாக யோசிக்க வைத்த நாளிது.

ஆனா நம்மகிட்ட இது எல்லாம் வேகாதில்ல. வெறும் சாதத்திற்கு பதில் பைத்தியம் பருப்பு மிகவும் குறைவாக போட்ட பொங்கலும், தக்காளியை மிக்சியில் போடு ஒரு சிறு பச்சைமிளகாய் சிறிதளவு உப்பு போட்டு அரைத்து பொங்கலுடன் சாப்பிட்டுவிட்டேன். தக்காளி, ஒரு கப் சாதம் முடிந்தது. மதியம் சூப், இரவும் சூப்.

அப்புறம் இன்னிக்கு யூரிக் அமிலத்தை வெளியேற்றும் நாள் அல்லவா 13 கிளாஸ் குடிநீரைக் குடிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கின்றது என்பதை மறக்காதீங்க தோழர்களே.


இனி வருவது ஒன்னுமில்லீங்க, சுத்திகரிப்பு மட்டுமே மீண்டும்.

jayashankar
11-04-2010, 03:23 PM
நாள் 6 :

இன்று மறுபடியும் காய்கறிகள் மட்டுமே உண்ணவேண்டும். இன்று மாவு சத்துக்கு தடை மீண்டும்.

வேண்டுமட்டும் காய்கறிகளை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிடுங்கள்.

இன்று நமக்கு அவ்வளவு கஷ்டம் தெரியாது. ஏனெனில், நம் உடல் இந்த 5 நாட்களில் இந்த உணவு பழக்கத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுவிட்டதே.

10 கிளாஸ் குடிநீர். உங்களுக்கு சொல்லியாதரணும் என்ன செய்யணும்னு.

என் நிலை:

புதுசா ஒன்னுமில்லீங்க. இன்று நான் அதிகமாக் சூப் அதில் அளவுக்கதிகமாக காய்கறிகளைப் போட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டேன்.

மற்றபடி இன்று எடை பார்த்ததில் 3 கிலோ குறைந்திருந்தேன்.

jayashankar
11-04-2010, 03:24 PM
நாள் 7:

இன்று ஒரு கலப்படமான நாள். ஒரு கப் சாதம், ஒரு கிளாஸ் பழச்சாறு( பழத்தை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் குடித்து விடவேண்டும். பிறகு வெறும் காய்கறிகள்தான் இன்று முழுவது, அப்புறம் சூப்புக்கு எந்த தடையுமில்லை.

இன்று சிறிது மாவு சத்து, சிறிது சர்க்கரை சத்து பிறகு அதிகமாக நார்சத்து. இந்த கலப்படம் நம் உடலை சமனப்படுத்தத்தான்.

அப்புறம் வழக்கமான 10 கிளாஸ் குடிநீர் அருந்த வேண்டும்.

என் நிலை:

சாதமும் பழச்சாறும் சாப்பிட்டவுடன் அவ்வளவாக பசியே எடுக்கவில்லை. இருப்பினும்,காய்கறி சூப், பச்சைக் காய்கறிகள் என்று கலக்கிக்கொண்டுதான் இருந்தேன்.

மறுநாள் காலை உண்மையிலேயே மிகவும் லேசாக உணர்ந்தேன். அதுமட்டுமா 4 1/2 கிலோ எடையும் குறைந்திருந்தேன்.

KAMAKSHE
11-04-2010, 04:54 PM
நாள் 7:

இன்று ஒரு கலப்படமான நாள். ஒரு கப் சாதம், ஒரு கிளாஸ் பழச்சாறு( பழத்தை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் குடித்து விடவேண்டும். பிறகு வெறும் காய்கறிகள்தான் இன்று முழுவது, அப்புறம் சூப்புக்கு எந்த தடையுமில்லை.

இன்று சிறிது மாவு சத்து, சிறிது சர்க்கரை சத்து பிறகு அதிகமாக நார்சத்து. இந்த கலப்படம் நம் உடலை சமனப்படுத்தத்தான்.

அப்புறம் வழக்கமான 10 கிளாஸ் குடிநீர் அருந்த வேண்டும்.

என் நிலை:

சாதமும் பழச்சாறும் சாப்பிட்டவுடன் அவ்வளவாக பசியே எடுக்கவில்லை. இருப்பினும்,காய்கறி சூப், பச்சைக் காய்கறிகள் என்று கலக்கிக்கொண்டுதான் இருந்தேன்.

மறுநாள் காலை உண்மையிலேயே மிகவும் லேசாக உணர்ந்தேன். அதுமட்டுமா 4 1/2 கிலோ எடையும் குறைந்திருந்தேன்.

ரொம்ப மகிழ்ச்சி ஜெய்சங்கர் அவர்களே. தங்களுடைய பங்களிப்புக்கு.

இந்த ஜி.எம் டயட்டை நானும் முயற்சித்திருக்கிறேன்... ஒரு வருடத்திற்கு முன்னால். வெற்றியும் கண்டேன்.

சொல்லப்போனால் இன்று இரண்டாம் நாள் என் ஜி.எம் டயட்டில்- காய்கறிகள் தினம்..
இருந்தும் கோதுமை பிரெட் 3 எடுத்துக் கொண்டுவிட்டேன் - காரணம் நான் சரியான அளவில் காய்கறிகளை தயார் செய்து வைத்துக் கொள்ள வில்லை. ஆனால் சாதமோ ... நொறுக்கோ வேறு ஒன்றும் எடுத்துக் கொள்ள வில்லை.
நாளை 3 ம் நாள் சரியாக செய்கிறேன் - சொல்கிறேன் தங்களுக்கு.

தமிழில் சந்கேகங்களுக் கிடமின்றி தெளிவாக எழுதியுள்ளீர்...

எல்லோரும் பலனை அனுபவிக்கட்டும்.

KAMAKSHE
11-04-2010, 05:09 PM
சரி மன்ற நண்பர்கள் யாரெல்லாம் நாளை முதல் நாளென கொண்டு ஜெய்சங்கர் விவரமாக மேலே கொடுத்துள்ள அட்டவணைப்படி ஜி. எம் டயட்டை ஆரம்பிக்கப் போகிறீர்கள்?. சேர்ந்து ஆரம்பிக்கலாமே... ஒவ்வொருவரும் சரியாகச் செய்து பலனை அனுபவிக்கலாம்..
ஆனால்... முதல் நாளுக்கு தேவையான உணவு வாட்டர் மெலென் தான் --- எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம்... வேலைக்கு செல்பவர்கள் ... எப்படி அதைச் செய்வது என்று சரியாக ப்ளான் போட்டு செயல் பட வேண்டும் . காய் பழங்களை வீட்டில் உள்ளவர் உதவியோடு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் . இல்லாவிடில் வேறு எதையாவது தின்று விடுவோம் பசியில்.

ஆரம்பிக்க நான் ரெடி.......... உங்கள்ள யாரு ரெடி.... நாளை ஒன்றாம் நாள் ??

jayashankar
11-04-2010, 08:22 PM
ரொம்ப மகிழ்ச்சி ஜெய்சங்கர் அவர்களே. தங்களுடைய பங்களிப்புக்கு.

இந்த ஜி.எம் டயட்டை நானும் முயற்சித்திருக்கிறேன்... ஒரு வருடத்திற்கு முன்னால். வெற்றியும் கண்டேன்.

சொல்லப்போனால் இன்று இரண்டாம் நாள் என் ஜி.எம் டயட்டில்- காய்கறிகள் தினம்..
இருந்தும் கோதுமை பிரெட் 3 எடுத்துக் கொண்டுவிட்டேன் - காரணம் நான் சரியான அளவில் காய்கறிகளை தயார் செய்து வைத்துக் கொள்ள வில்லை. ஆனால் சாதமோ ... நொறுக்கோ வேறு ஒன்றும் எடுத்துக் கொள்ள வில்லை.
நாளை 3 ம் நாள் சரியாக செய்கிறேன் - சொல்கிறேன் தங்களுக்கு.

தமிழில் சந்கேகங்களுக் கிடமின்றி தெளிவாக எழுதியுள்ளீர்...

எல்லோரும் பலனை அனுபவிக்கட்டும்.


ரொம்ப நல்லதுங்க...

இருந்தாலும், முதல் மூன்று நாள் மிகவும் முக்கியம். நம் உடலிலுள்ள கெட்ட சங்கதிகளையெல்லாம் வெளியேற்றும் நாளாகையால் சிறிது கவனமாக இருத்தல் முக்கியம்.

இல்லாவிட்டாலும் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. நீங்கள் பெரிய உருளைக் கிழங்கை எடுத்துக் கொள்ளாமல் இந்த பிரட்டை எடுத்துக் கொள்ளலாம். தவிர்த்தால் நல்லது. அவ்வளவுதான்.

உடம்பில் இரத்தத்தில், மற்றும் மற்ற இடங்களில் உள்ள கெட்ட விசயங்களை இவை வெளியேற்றுவதாலேயே நம் உடலில் சுத்திகரிப்பு நடந்து உடல் தன்னை தயார்படுத்திக் கொள்கின்றது.

மிகவும் நல்ல திட்டம். இதில் பட்டினியே கிடக்க வேண்டாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

நடத்துங்க நடத்துங்க...

இப்போது இங்கே காயறிகளின் மற்றும் பழங்களின் விலைகள் ஆகாயத்தை தொட்டுக் கொண்டிருக்கின்றன. ( முன்பிருந்த பிரச்சினை போய்விட்டாலும் இன்னும் அவ்வளவாக கிடைப்பதில்லை). எனவே, அடுத்த வாரம் தொடங்கலாம் என்றிருக்கின்றன.

இந்த வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கொழுப்பு சக்தி நிறைந்த பொருள்கள்தான் தவிர்க்கப்பட வேண்டும்.

jayashankar
11-04-2010, 08:28 PM
ஆனால்... முதல் நாளுக்கு தேவையான உணவு வாட்டர் மெலென் தான் --- எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம்... வேலைக்கு செல்பவர்கள் ... எப்படி அதைச் செய்வது என்று சரியாக ப்ளான் போட்டு செயல் பட வேண்டும் . காய் பழங்களை வீட்டில் உள்ளவர் உதவியோடு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் . இல்லாவிடில் வேறு எதையாவது தின்று விடுவோம் பசியில்.




வாட்டர் மெலோனை காலையில் முடிந்த அளவு சாப்பிட்டு விடுங்கள். பப்பாளிப்பழமும் மிகவும் நல்லது. பிறகு இரவு உணவில் வாட்டர் மெலோனை சேர்த்துக் கொள்ளுங்கள். நான் அப்படித்தான் செய்தேன்.

தயவுசெய்து, ஆப்பிள், ஆரஞ்சு பழம், பப்பாளிபழம், போன்ற பழங்களை சிறிது அதிகமாகவே எடுத்துச் செல்லுங்கள் அலுவலகத்திற்கு 4 மணியளவில் பசிக்கு சாப்பிடலாம்.

இரண்டு நாள் மனதை கட்டுப்ப்டுத்திக் கொண்டால் போதும் அடுத்த 5 நாட்கள் மிக எளிதாக கடக்கலாம்.

இரண்டாம் நாளிலிருந்து சூப் குடிப்பதால் அப்படி எதுவும் பெரிய விசயமில்லை. சூப்பில் கேபேஜ் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். காரம் வேண்டுமென்றால் மிளகுதூளை பயன்படுத்தவும்.

அமரன்
11-04-2010, 08:42 PM
எனக்கு ஒரு சீட்டை முன்பதிவு செய்கிறேன்.

ஹி...ஹி....
யவனிக்காவின் ஜாலியாய் இளைக்கலாம் வாங்கவிலும் நானேதான் முதல் சீடன்.

ஆனாலும் எந்தப் பிரயோசனமும் இல்லை... ஏன்னா... ஏன்னா... காமாக்*ஷி சொன்னதில் அடங்கி இருக்குக் காரணம்.

நன்றிப்பா ஜெய்.

நன்றி காமாக்*ஷி.

jayashankar
11-04-2010, 09:21 PM
உண்மை அமரரே!

வாழ்க்கை எப்போதும் வற்புறுத்தலில் மட்டுமே செல்கின்றது.

கஷ்டமான் விசயங்களை அடைய மனமிருந்தால் மட்டுமே மார்க்கமுண்டு.

KAMAKSHE
12-04-2010, 12:40 AM
எனக்கு ஒரு சீட்டை முன்பதிவு செய்கிறேன்.

ஹி...ஹி....
யவனிக்காவின் ஜாலியாய் இளைக்கலாம் வாங்கவிலும் நானேதான் முதல் சீடன்.

ஆனாலும் எந்தப் பிரயோசனமும் இல்லை... ஏன்னா... ஏன்னா... காமாக்*ஷி சொன்னதில் அடங்கி இருக்குக் காரணம்.

நன்றிப்பா ஜெய்.

நன்றி காமாக்*ஷி.

சீட்டை முன் பதிவுன்னா என்ன அர்த்தம்?. ஆரம்பீங்க சார்... இன்னிக்கு டயட்டுக்கு முதல் நாளா? ... இல்ல உடற்பயிற்சிக்கா.... ?

காமாக்ஷி சொன்ன மாதிரின்னெல்லாம் தப்பிக்க முடியாது . உண்மைய போட்டு ஒடைக்கணும்

KAMAKSHE
12-04-2010, 04:04 AM
நேற்று திரியை ஆரம்பித்தேன் . இன்று நான் டய்ட்டையும் ஆரம்பித்து விட்டேன்.

நாள் ஒன்று- 1 - பழங்கள் தினம் மற்றும் 1 லிட்டர் தண்ணீர்

நாள் இறுதியில் எனது வெற்றியை பகிர்கிறேன்

Akila.R.D
12-04-2010, 04:58 AM
நீங்க சொல்ற இந்த டயட் எடையும் அதிகம் இருந்து உடம்பும் அதிகம் இருப்பவர்களுக்கு.. ஆனால் எனக்கு எடை தேவையை விட கம்மியாக உள்ளது...
அனால் உடம்பு மட்டும் அதிகம் உள்ளது... உணவு பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை... எடை குறையாமல் உடல் மட்டும் மெலிய எதாவது வழி உள்ளதா?...

jayashankar
12-04-2010, 06:45 AM
நீங்க சொல்ற இந்த டயட் எடையும் அதிகம் இருந்து உடம்பும் அதிகம் இருப்பவர்களுக்கு.. ஆனால் எனக்கு எடை தேவையை விட கம்மியாக உள்ளது...
அனால் உடம்பு மட்டும் அதிகம் உள்ளது... உணவு பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை... எடை குறையாமல் உடல் மட்டும் மெலிய எதாவது வழி உள்ளதா?...

நீங்கள் இதனை பின்பற்றுங்கள். இதில் முக்கியமாக தேவையில்லாத விசயங்கள் மட்டுமே வெளியேற்றப்படுகின்றன.

இதிலேயே தெரிந்துவிடும். பிறகு உங்கள் எடையைப் பாருங்கள்.

பிறகு அதற்கேற்றாற்போல் உணவு பழக்கத்தை மாற்றவேண்டியிருக்கும் கூடவே உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

செல்வா
12-04-2010, 07:14 AM
பங்காளியோட நானும் இடத்தைப் பங்கு போட்டுக்கிறேன்

பகிர்தலுக்கு நன்றிகள் காமாக்ஷி மற்றும் ஜெய்.

நேசம்
12-04-2010, 07:23 AM
அருமையான பதிவு சகோதரி.எனக்கும் மனம் நாடினாலும்,அதை செயல்படுத்த முடியவில்லை.அதிலும் ஜெயசங்கர் தரும் ஆலோசனை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.ஆனாலும் செய்து பார்ப்போம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன்

KAMAKSHE
12-04-2010, 07:36 AM
பங்காளியோட நானும் இடத்தைப் பங்கு போட்டுக்கிறேன்

பகிர்தலுக்கு நன்றிகள் காமாக்ஷி மற்றும் ஜெய்.

இதப்பாருங்க .. பங்கு எதில் தர்பூசினியிலா....?

அதெல்லாம் சரி விஷயத்துக்கு வாங்க .. என்னிக்கு ஆரம்பிக்கறீங்க... ?

அன்றிலிருந்து உண்மையா உடற்பயிற்சி மற்றும் தின உணவு வகைகளை நண்பர்களோட பகிர்ந்துக்கணும்...

இன்னிக்கா? இப்பவா?

jayashankar
12-04-2010, 10:16 AM
அருமையான பதிவு சகோதரி.எனக்கும் மனம் நாடினாலும்,அதை செயல்படுத்த முடியவில்லை.அதிலும் ஜெயசங்கர் தரும் ஆலோசனை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.ஆனாலும் செய்து பார்ப்போம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன்

இதில் மலைப்பிற்கு ஒன்றுமில்லை நேசரே!

இதில் நீங்கள் தினமும் பழம், காய்கறிகள், ஒரு வித காய்கறி சூப், தக்காளி ( ஒரு நாள்), சாதம்(இரண்டு நாள்) என்று கூறிய விதத்தில் சாப்பிடவேண்டும்.

பழங்கள் தின்னும் நாளென்றால், பசி அடங்கும்வரை பழங்கள் சாப்பிடவேண்டும். ஒரே வேளையில் முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. மூன்று வேளை என்பதை 6 வேளையிலும் சாப்பிடலாம் 8 வேளையிலும் சாப்பிடலாம். எவ்வளவு சாப்பிடுகின்றோமே அவ்வளவு நல்லது.

என்ன இந்த வாழைப்பழம், தக்காளி, சாதம், உருளைக்கிழங்கு போன்றவற்றை மட்டும் கூறிய படி கூறிய நேரத்தில்தான் சாப்பிடவேண்டும்.

எனக்கும் இதனை ஆரம்பிக்க என்னை தயார் செய்ய நான் இரண்டு மாதம் எடுத்தேன். யாரும் எனக்கு வழிகாட்ட இல்லாததால், நானே முயற்சி செய்ததால் இவ்வளவு நேரம்.

வயிற்றை பட்டினி போடாத ஒரு டயட் என்பதால் பிரச்சினையேயில்லை.

முயற்சி செய்யலாம்.

KAMAKSHE
12-04-2010, 12:18 PM
முதல் நாளான இன்று இதுவரை -

நிறைய.......

ஆப்பிள்
ஆரஞ்சு
பப்பாளி
திராட்சை
தண்ணீர்

சாப்பிட்டாச்சு.........

இன்னும் இந்நாள் கழிய நிறைய நேரம் இருக்கு..

தர்பூஸ் ரெடியா இருக்கு ...ஆரம்பிக்க

பசங்களுக்கு உணவு கொடுக்கும் போது ருசி பார்த்து பிசைவது வழக்கம் - அதனை தம்மாத்தூண்டாக கொறச்சுட்டேன்...

( பரவால்லீங்களா ஜெய்சங்கர்??)

எங்க வீட்டுக்கு கிட்ட இருக்கிற பழக்காரி நாளைக்கும் இதே மாதிரி பழம் வாங்கி சாப்பிடச் சொல்றா ... இன்னிக்கு அவளோட முழுக்கூடையும் நான் தானே வாங்கினேன் ....:D

KAMAKSHE
12-04-2010, 04:45 PM
நாள் ஒன்று - பழங்கள் தினம்
முடிந்தது....

காய் + கனிகள் நாளை ----

யாராவது ஆரம்பித்தீர்களா.... ஏன் சத்தமே காணோம்...

ஜனகன்
12-04-2010, 09:45 PM
நானும் வந்துட்டேன்.எனக்கு கிடைத்த பழங்களுடன் (தோடம்பழம், அப்பிள்,முந்திரி) இன்று ஆரம்பித்துள்ளேன்.
தண்ணீர் ஜெய் சொன்ன படி எடுத்துக்கொண்டேன்.


மற்றவர்கள் விதம் விதமாக சாப்பிடும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.என்றாலும் ஏழுநாள் தானே வைராக்கியத்துடன் இருக்கின்றேன்.

நாளை காய்கனிகள் நாள். மீண்டும் நாளை வருகின்றேன்.

KAMAKSHE
13-04-2010, 02:59 AM
அப்புறம் உடல் இளைக்கணும்னு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து ஒத்திப் போட்டவங்களே நீங்க யாராவது ஆரம்பிச்சீங்களா?

jayashankar
13-04-2010, 09:52 AM
முதல் நாளான இன்று இதுவரை -

நிறைய.......

ஆப்பிள்
ஆரஞ்சு
பப்பாளி
திராட்சை
தண்ணீர்

சாப்பிட்டாச்சு.........

இன்னும் இந்நாள் கழிய நிறைய நேரம் இருக்கு..

தர்பூஸ் ரெடியா இருக்கு ...ஆரம்பிக்க

பசங்களுக்கு உணவு கொடுக்கும் போது ருசி பார்த்து பிசைவது வழக்கம் - அதனை தம்மாத்தூண்டாக கொறச்சுட்டேன்...

( பரவால்லீங்களா ஜெய்சங்கர்??)

எங்க வீட்டுக்கு கிட்ட இருக்கிற பழக்காரி நாளைக்கும் இதே மாதிரி பழம் வாங்கி சாப்பிடச் சொல்றா ... இன்னிக்கு அவளோட முழுக்கூடையும் நான் தானே வாங்கினேன் ....:D

ஒன்னும் பிரச்சினையில்லீங்க. கவலயேப் படாதீங்க..... சிறிது அப்படி இப்படி ஆவதுதான். முதல் நாள் தர்பூசனி அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஏனென்றால் அதில் அதிக நீர் சத்தும், நார்சத்தும் உண்டு. அதே சமயம் உடலுக்கு தேவையான சர்க்கரையும் கிடைக்கின்றது.

ஜனகன்
13-04-2010, 10:37 AM
http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/1_pla.jpg
http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/1_pra.jpg

இன்று இரண்டாவது நாள்>

காலை 1.உருளைகிழங்கு அவித்து சாப்பிட்டு ஆரம்பித்தேன்.

பூகோவா,ப்ராகொல்லி அவித்து சாப்பிட்டேன்.கரட், தக்காளி பச்சையாக சாப்பிட்டேன்.

மற்றும் தண்ணீர் எடுத்து கொண்டேன்.

பிரச்சனை இல்லாமல் போகின்றது.நன்றி மீண்டும் வருகின்றேன்.

KAMAKSHE
13-04-2010, 10:44 AM
http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/1_pla.jpg
http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/1_pra.jpg

இன்று இரண்டாவது நாள்>

காலை 1.உருளைகிழங்கு அவித்து சாப்பிட்டு ஆரம்பித்தேன்.

பூகோவா,ப்ராகொல்லி அவித்து சாப்பிட்டேன்.கரட், தக்காளி பச்சையாக சாப்பிட்டேன்.

மற்றும் தண்ணீர் எடுத்து கொண்டேன்.

பிரச்சனை இல்லாமல் போகின்றது.நன்றி மீண்டும் வருகின்றேன்.

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ஜனகன்.

நான் இன்று காலை முதல் சாப்பிட்டவை

அவித்த உருளை ( உப்பும் காரமும் கலந்து விட்டேன் -??)

2 வெள்ளரி
சமைத்த கீரை---- கூட்டு

தண்ணீர்

jayashankar
13-04-2010, 11:59 AM
http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/1_pla.jpg
http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/1_pra.jpg

இன்று இரண்டாவது நாள்>

காலை 1.உருளைகிழங்கு அவித்து சாப்பிட்டு ஆரம்பித்தேன்.

பூகோவா,ப்ராகொல்லி அவித்து சாப்பிட்டேன்.கரட், தக்காளி பச்சையாக சாப்பிட்டேன்.

மற்றும் தண்ணீர் எடுத்து கொண்டேன்.

பிரச்சனை இல்லாமல் போகின்றது.நன்றி மீண்டும் வருகின்றேன்.


ஜனகரே!

ஒரே ஒரு பிரச்சினை. இந்த 7 நாட்களில் தக்காளி என்பது ஒரு நாள் சாப்பிட வேண்டிய விசயம்.

மற்ற நாட்களில் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. இருந்தாலும் சாப்பிட்டவுடன் ஒன்றும் செய்ய முடியாது.

பரவாயில்லை.

ஜனகன்
13-04-2010, 02:06 PM
ஜனகரே!

ஒரே ஒரு பிரச்சினை. இந்த 7 நாட்களில் தக்காளி என்பது ஒரு நாள் சாப்பிட வேண்டிய விசயம்.

மற்ற நாட்களில் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. இருந்தாலும் சாப்பிட்டவுடன் ஒன்றும் செய்ய முடியாது.

பரவாயில்லை.

இன்று (இரண்டாம் நாள்) தக்காளி எடுத்த படியால், இனிவரும் நாட்களில் அதை எடுக்காமல் விட்டால்.
இந்த டயட்க்கு அது பொருந்துமா? அல்லது நான் என்ன செய்யவேண்டும் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா ஜெய்.

jayashankar
13-04-2010, 04:09 PM
இன்று (இரண்டாம் நாள்) தக்காளி எடுத்த படியால், இனிவரும் நாட்களில் அதை எடுக்காமல் விட்டால்.
இந்த டயட்க்கு அது பொருந்துமா? அல்லது நான் என்ன செய்யவேண்டும் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா ஜெய்.

ஜனகரே!

5 ஆம் நாள்தான் தக்காளி. தக்காளி நம் உடலில் இந்த 4 நாட்களில் ஊறியிருக்கும் யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதற்காக 6 தக்காளி சாப்பிட வேண்டும் என்பது.

நீங்கள் இரண்டாம் நாளே சாப்பிட்டு இருக்கின்றீர்கள். இருந்தாலும் 6தக்காளி என்ற கணக்கில் இருக்காது என்று நம்புகின்றேன்.

கவலையேப் படாதீங்க. 5 ஆம் நாள் தக்காளி எடுத்துக்க மறாக்காதீங்க....

இங்கே யாரும் நக்கீரர் இல்லை.

தருமி போல் எவ்வளவு பிழையோ அதற்கேற்றாற்போல் கூடியோ குறைத்தோ உங்களுக்கு பலன் கிடைக்கும். அவ்வளவுதான்.

அதற்காக விட்டுவிடாதீர்கள். தினப்படி தகவலை ஒருமுறை படித்து மீண்டும் மனதில் நிறுத்திக் கொண்டு தொடருங்கள்.

ஆனால், எதிலும் தவறில்லை. இந்த டயட்டின் முக்கிய விசயமே இதுதான்.

7 நாட்களுக்குப் பிறகு பெரும்பான்மையான உடற்கழிவுகள் நீக்கப்பட்டு நீங்கள் சுத்தப்படுத்தப் படுகின்றீர்கள். கூடவே போனஸாக எடை குறைப்பு.

இந்த எடை குறைப்பு என்பது 3 லிருந்து 5 கிலோ வரை.


அதே போல் 4 நாள் 8 வாழைப்பழம் மற்றும் 3 கிளாஸ் பால் நீங்கள் மூன்று நாட்களில் இழந்த பொட்டாசியம் மற்றும் கால்சியத்துக்காக. எனவே, மறக்காமல் வாழைப்பழம் மற்றும் பால் இவைதான் 4 ஆம் நாள். இவை தவிர தண்ணீர் சூப் அவ்வளவுதான். கவனம்.

வேறேன்ன வேண்டும். தொடருங்கள்....

ஜனகன்
14-04-2010, 11:08 AM
இன்று மூன்றாம் நாள்.
நான் எடுத்து கொண்டவை. கரட், கோவா, பட்டாணிகடலை அவித்து சாப்பிட்டேன்.
மற்றும் பழம்கள், தண்ணீர். (தண்ணீருடன் லெமன் யூஸ் சிறிது உப்பும் போட்டு குடித்தேன்.நன்றாக இருந்தது.)
இது வரை எந்தபிரச்சனையும் இல்லை.

jayashankar
14-04-2010, 01:34 PM
ஜனகரே பட்டாணிக் கடலை எல்லாம் காய்கறிகளில் வராது. பாத்துப் பண்ணுங்க.

மற்றபடி வேறு ஒன்றுமில்லை.

ஜனகன்
15-04-2010, 04:35 PM
நான்காம் நாள் நன்றாகவே போனது.


இன்று நான் எடுத்து கொண்டது > வாழைப்பழம்,பால் அந்தந்த அளவின் படி.

காய்கறி சூப் ஒரு கிளாஸ்.மற்றும் தண்ணீர்.

jayashankar
16-04-2010, 10:38 AM
கலக்குறீங்க ஜனகரே...

ஜனகன்
16-04-2010, 11:24 AM
இன்று 5.ம் நாள். எல்லாம் நல்ல படியாய் போகின்றது.

இன்னும் இரண்டுநாள் தான், சமாளிச்சுடலாம்.

ஆனால் இன்னமும் எனது வெய்ட்டை (நிறையை) பார்க்கவில்லை. 7.ம் நாள் சொல்லுகின்றேன்.

இன்று நான் எடுத்து கொண்டவை.


http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/1_wat.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/2_ris.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/2_tomat.jpg

jayashankar
17-04-2010, 02:53 PM
குறைந்தது 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இதுதான் அடிப்படை மந்திரம்.

ஏனெனில், வெளியேற்றப்படும் கழிவுகளுக்கு வடகாலே இந்த தண்ணீர்தான். இல்லையென்றால் சுத்திகரிப்பு சரியாக இருக்காது.

ஒரு கிளாஸ் என்பது 320 மிலி. எனவே, குறைந்தது. 3 ஒரு லிட்டர் பாட்டில்கள் தண்ணீர் குடிக்கவெண்டும்.

5 நாட்கள் சமாளித்து விட்டீர்கள். இனி பிரச்சினையில்லை.

உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

திங்கள் முதல் நான் மீண்டும இதனை கடைப்பிடிக்க உத்தேசித்து இருக்கின்றேன்.

ஜனகன்
18-04-2010, 03:58 PM
குறைந்தது 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இதுதான் அடிப்படை மந்திரம்.

ஏனெனில், வெளியேற்றப்படும் கழிவுகளுக்கு வடகாலே இந்த தண்ணீர்தான். இல்லையென்றால் சுத்திகரிப்பு சரியாக இருக்காது.

ஒரு கிளாஸ் என்பது 320 மிலி. எனவே, குறைந்தது. 3 ஒரு லிட்டர் பாட்டில்கள் தண்ணீர் குடிக்கவெண்டும்.

5 நாட்கள் சமாளித்து விட்டீர்கள். இனி பிரச்சினையில்லை.

உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

திங்கள் முதல் நான் மீண்டும இதனை கடைப்பிடிக்க உத்தேசித்து இருக்கின்றேன்.

நீங்கள் சொன்ன அளவின் படிதான் தண்ணீர் எடுத்துக்கொண்டேன். 10கிளாஸ்.
தண்ணீர் படம் போடவேண்டும் என்பதற்காக, அப்படிபோட்டேன்.
எழு நாட்களும் எதவித பிரச்ச்சனையும் இல்லாமல் நன்றாகவே போனது
மீண்டும் நாளை வருகின்றேன்.

jayashankar
18-04-2010, 09:28 PM
நல்லது ஜனகரே!

நாளை சொல்லுங்க எப்படி உணர்தீர்கள் என்று என்ன பயனென்று.

நாளை (திங்கள்) முதல் நான் தொடங்கவுள்ளேன் இதனை.

பார்ப்போம் இந்த முறை என்னவாகின்றது என்று....

தங்கவேல்
19-04-2010, 07:55 AM
ஒரு நாள் உணவு தேவை என்ன தெரியுமா? (இது ஏசியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மட்டும்)

காலையில் சுமார் ஆறு மணி அளவில் ப்ளாக் டீ வித் நாட்டுச் சர்க்கரை. பால் வேண்டவே வேண்டாம். இடையிடையே டீயும், காஃபியும் வேண்டவே வேண்டாம்.

எட்டு மணி அளவில் இரண்டு அல்லது மூன்று எண்ணெய் சேர்க்காத கோதுமை தோசையுடன், புதினாவோ அல்லது கொத்து மல்லியோ அல்லது தக்காளியோ சட்னியாக இரண்டு டீஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளவும். கோதுமை தோசை, மாவு தோசை(இரண்டு மட்டும்), இட்லி இரண்டு மட்டும், சப்பாத்தி இரண்டு(கண்டிப்பாக எண்ணெய் தவிர்க்கவும்). மேலும் கொஞ்சம் பழங்கள் ஏதாவது சேர்த்துக் கொள்ளவும். சீசனுக்கு தகுந்தவாறு பழங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் சாப்பிடவும்

பின்னர் ஒரு மணிக்கு ஒரு கப் (400கிராம்) சாதத்தோடு, ஒரு கப் கீரை, ஒரு கப் காய்கறியை (கண்டிப்பாக உருளைக் கிழங்கு தவிர்க்கவும்) பருப்போடோ அல்லது குழம்பாகவோ அல்லது கூட்டாகவோ செய்து தேங்காய் தவிர்த்து சாப்பிடவும். இதே அளவில் டேஸ்ட் வேறு வேறாக வரும்படி செய்து சாப்பிடவும். கோதுமையில் சாதம் கூட சேர்க்கலாம்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் குடிக்கவும்.

இரவு எட்டு மணி அளவில் மீண்டும் கோதுமை தோசையோ அல்லது கோதுமை ரவையோ சட்னியுடன் சேர்த்துக் கொள்ளவும். ஊத்தப்பம் சேர்க்கலாம் அல்லது இடியாப்பம் கூட ஓகே. இரவில் குறைவாக உண்ணும் போது நடு இரவில் பசிக்கும். தண்ணீர் குடித்துக் கொள்ளவும். நாளடைவில் நிம்மதியான உறக்கம் நிச்சயம். குறட்டை வரவே வராது.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் குடிக்கவும்.
இது வரையிலும் ஒன்றரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் அருந்தியிருப்பீர்கள்.

மேலும் ஒரு லிட்டரை கூட சேர்த்தால் நாளொன்றுக்கு தேவையான மூன்று லிட்டர் தண்ணீர் தேவை முடிந்து விடும். ஆகையால் இடை இடையே கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

அதிக உப்பு, பால், வெள்ளைச் சர்க்கரை மூன்றையும் நிச்சயமாய் தவிர்த்து விடவும். வெள்ளைச் சர்க்கரை விஷம். இந்தச் சர்க்கரை சேர்த்த எந்த பொருளானாலும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் சேர்த்து தவிர்த்து விடவும். ஹோட்டல் சாப்பாடு வேண்டவே வேண்டாம். ஹோட்டலில் சாப்பிட்டே ஆக வேண்டுமென்றால் அதற்கு பதில் அவித்த காய்கறிகளோடு கொஞ்சம் பழங்களைச் சாப்பிட்டுக் கொள்ளவும்.

மேலும் இரவில் படுக்கச் செல்லும் முன்பு இரண்டோ அல்லது மூன்று சுமாரான துண்டுகள் நன்கு பழுத்த பப்பாளியைச் சாப்பிடவும். காலையில் டாய்லெட் செல்லும் போது வயிற்றைச் சுத்தம் செய்து விடும். நோய் எதுவும் அண்டாது.

மேலும் சில அவசியக் குறிப்புகள் :

புளிக்குப் பதிலாக கொடபுளியை உணவில் சேர்க்கவும். இது கொழுப்பைக் குறைத்து விடும். நாட்டுக் காய்கறிகளைச் சுவையாக செய்து தரும்படி வீட்டுக்கார அம்மாவிடம் சொல்லி வையுங்கள். உப்பு நாளொன்றுக்கு முக்கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் சூடான இடத்தில் நின்று வியர்வை வெளியேறுமாறு செய்து கொள்ளவும். மூன்று டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கலாம். அதற்கு மேல் சேர்த்தால் கொழுப்பு சேரும்.

மட்டன் வேண்டவே வேண்டாம். சாப்பிட்டே ஆக வேண்டுமென்றால் இரண்டு துண்டு கொஞ்சம் குழம்பு சாப்பிடவும். இதற்கு பதிலாக தொடர்ந்து சற்றே எண்ணெய்,உப்பு தவிர்க்கவும். கோழியில் நாட்டுக்கோழி உத்தமம். மசாலா குறைத்து, எண்ணெய் குறைத்து சமைத்து வாரம் ஒரு முறை உண்ணலாம். மீனில் திருக்கை வேண்டாம். மற்றவை குழம்பு வைத்து சாப்பிடவும். வறுத்த மீண் வேண்டவே வேண்டாம். குழம்பில் கொடபுளியைச் சேர்க்கவும். காரம் கொஞ்சூண்டு சேர்க்கவும். சாம்பாரில் புளி கொஞ்சமாய் இருக்க வேண்டும்.

சாதத்தோடு மோர் சேர்க்கலாம். பசும்பாலில் ஆடை நீக்கிய மோர் நல்லது. தினமும் எக்சர்சைஸ் செய்ய வேண்டியது இல்லை. தேவையென்றால் நடக்கவும். அது போதும். காய்கறிகளில் நாட்டுக்காய்கறிகள் நல்லது. கிழங்கு வகைகள் தேவையில்லை. தண்ணீர் சத்து அதிகமிருக்கும் உணவுகள் உத்தமம். வியர்வையில் நாம் உண்ணும் உப்பு வெளியேற வேண்டும். இது ரொம்பவும் முக்கியம்.

இவ்வாறு சாப்பிட்டு வந்தால் நூறாண்டுகள் நிச்சயம். இடையிடையே ஏற்படும் காய்ச்சல், சளி தொல்லைகளை எளிதில் சமாளித்து விடலாம். பெரு நோய்கள் வந்தால் வேதனையுடன், விரயமும் உண்டாகும். தமிழக அரசின் இலவச மருத்துவக்காப்பீடு இருக்கிறது என்று எண்ணி ஆப்பசைத்த குரங்காகி விடாதீர்கள் ஜாக்கிரதை.

தங்கவேல்
19-04-2010, 07:59 AM
குண்டு உடம்பு குறைய நான் மேலே எழுதியிருக்கும் விஷயத்தை கடை பிடித்தால் போதும். ஒரே வாரம். ஒல்லியாய் மாறி விடுவீர்கள். குறட்டை விடுபவர்களுக்கு நிச்சயம் குறட்டை வராது. நிம்மதியான உறக்கம் நிச்சயம்.

விடுபட்ட ஒன்று இருக்கிறது. டிவி பார்க்காதீர்கள். அப்படியே பார்க்க வேண்டுமென்றால் அரை மணி நேரம் மட்டும் பார்க்கவும்.

ஜனகன்
19-04-2010, 08:05 AM
நல்லது ஜெய், ஆரம்பியுங்க உங்கள் ராஜாங்கத்தை.

ஏழாம் நாள் முடிவில் நான் மூன்று கிலோ எடைதான் குறைந்தேன்.ஆனால் எனது உடல்நிலை மிகவும் லேசாக இருப்பதாக உணர்ந்தேன்.

இந்த திரியை தொடக்கி வைத்த காமாட்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

ஏழு நாள் விரதத்தை மிக அழகாக எடுத்து கூறிய ஜெய் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பாராட்டுக்கள்.
இத் தகவல்களை எனது வேலைத்தள நண்பர்களுடனும் (வேற்று மொழிக்காரர்) பகிர்ந்து கொண்டேன்.அவர்களும் பயன்பெரட்டுமே.

jayashankar
19-04-2010, 02:07 PM
தங்கவேலு அவர்களின் பங்களிப்புக்கு நன்றி.

jayashankar
19-04-2010, 02:08 PM
3 கிலோ குறைந்தது முக்கியமில்லை.

இந்த இலேசாக உணர்ந்தது இருக்கின்றதே. அதுதான் முக்கியம்.

இனி, கண்டதை உண்ணாமல் சிறிது கவனம் வைத்தாலே போதும். எடை கட்டுப்படுவதோடு உடலும் இலேசாக இருக்கும்.

jayashankar
19-04-2010, 02:11 PM
இன்று முதல் நாள்.

காலையில் எழுந்து ஒரு மூன்று கிளாஸ் தண்ணீர் குடித்து இந்த விரதத்தை தொடங்கினேன்.

விரதத்திற்கு ஏற்றவாறு நேற்று மாலையே சென்று பழங்களும் காய்கறிகளும் வாங்கி வந்துவிட்டேன்.முதல் இரண்டு நாட்களுக்கு.

இந்தமுறை என் மனைவியும் என்னோடு கலந்து கொண்டுள்ளார்.

எனவே, துணையோடு விரதம் இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால், கேட்காமலேயே தேவையானது கிடைத்துவிடும் இல்லையா.. அதான்.

பார்ப்போம் இந்த நாள் இனிய நாளா என்று.

KAMAKSHE
19-04-2010, 02:50 PM
இன்று முதல் நாள்.

காலையில் எழுந்து ஒரு மூன்று கிளாஸ் தண்ணீர் குடித்து இந்த விரதத்தை தொடங்கினேன்.

விரதத்திற்கு ஏற்றவாறு நேற்று மாலையே சென்று பழங்களும் காய்கறிகளும் வாங்கி வந்துவிட்டேன்.முதல் இரண்டு நாட்களுக்கு.

இந்தமுறை என் மனைவியும் என்னோடு கலந்து கொண்டுள்ளார்.

எனவே, துணையோடு விரதம் இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால், கேட்காமலேயே தேவையானது கிடைத்துவிடும் இல்லையா.. அதான்.

பார்ப்போம் இந்த நாள் இனிய நாளா என்று.


கண்டிப்பா வெற்றிதான் உங்களுக்கு. வாழ்த்துக்கள்

jayashankar
19-04-2010, 03:21 PM
நன்றிங்க...

உங்களுக்கு என்னாச்சுன்னு சொல்லவேயில்லை.

KAMAKSHE
19-04-2010, 05:40 PM
ஒண்ணும் ஆலேங்க ... பாதியில நின்னுடுச்சு... நானும் நாளை மறுபடியும் ஆரம்பிக்கறேன்

ரவிசங்கர்
19-04-2010, 06:17 PM
ஏ..... அப்பா, இளைக்க இத்தனை கஷ்டங்களா, சிறிய வயதில் உடற்பயிற்சி செய்யாததால் வந்தது தான்.

jayashankar
20-04-2010, 05:24 PM
ஒண்ணும் ஆலேங்க ... பாதியில நின்னுடுச்சு... நானும் நாளை மறுபடியும் ஆரம்பிக்கறேன்


ஹி ஹி திரிக்கு நீங்களே மதிப்பு கொடுக்கலேன்னா எப்பூடிங்க.....

ஆகையால்தான், சென்ற திங்களே தொடங்க வேண்டிய விசயத்தை ஒரு வாரம் தள்ளிப் போட்டு நேற்று தொடங்கினேன்.

பரவாயில்லை. இப்ப தொடங்குங்க..

jayashankar
20-04-2010, 05:26 PM
முதல் நாள் வழக்கம் போல் நல்லமுறையில் சென்றது.

இன்று இரண்டாம் நாள், முன்பு செய்தது போலவே இந்த இரண்டாம் நாள் சிறிது தடுமாற்றத்தை தந்தது என்னமோ உண்மை. இருந்தாலும், காய்கறிகள், சூப் என்று இதுவரை சமாளித்து விட்டேன்.

இனி பார்க்க வேண்டும் இன்னும் 6 மணி நேரம்தான்.

இந்த நாளைக் கடந்து விட்டால் போதும் மற்ற நாட்களில் எந்த பிரச்சினையும் வர காரணமில்லை.

பார்ப்போம்

jayashankar
25-04-2010, 03:51 PM
இன்று கடைசி தினம். இதுவரை ஒன்றும் பிரச்சினையில்லை.

இதுவரை 3 1/2 கிலோ எடை குறைந்துள்ளேன்.

நாளை காலை மறுபடியும் பார்க்க வேண்டும்.

பால்ராஜ்
02-05-2010, 12:11 PM
நேக்கும் ரொம்ப நாளா ஆசைன்னா...!
ஆன தொப்பை மட்டும் குறைந்தால் எப்படி இருக்கும் என்று...!

யவனிகா
04-05-2010, 06:17 AM
உபயோகமுள்ள நல்ல பதிவு.அழகான நடை. காமாஷி தொடங்கி வைக்க ஜெயசங்கர் அவர்களின் ஜிஎம் டயட் பதிவுகள் நன்றாகவே பயனளிக்கும் என்று நம்புகிறேன்.இன்னும் அதிகம் பேர் முயற்சி செய்து வெற்றிகாண வேண்டும்.

ஸ்ரீதர்
04-05-2010, 12:02 PM
நானும் நாளை முதல் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.

ஒரு சந்தேகம். இரண்டாம் நாள் காய்கறிகள் மட்டும் சாப்பிட வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள் . மக்கா சோளம் காய்கறியில் சேர்த்துக்கொள்ளலாமா??

ஸ்ரீதர்
05-05-2010, 07:18 AM
முதல் நாள்

தண்ணீர் குடித்து விரதத்தை ஆரம்பித்து விட்டேன் .

காலையில் ஒரு ஆப்பிளும் சில திராட்சை பழங்களும் எடுத்துக்கொண்டேன்.

இதுவரை 1 1/2 பாட்டில் தண்ணீர் குடித்து விட்டேன்.

இப்போதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.

அடுத்த நாள் காய்கறி நாள் .... மக்கா சோளம் காய்கறியா?? அதை சேர்த்துக்கொள்ளலாமா? இதை மட்டும் யாரவது எனக்கு சொல்லுங்களேன் ....

ஸ்ரீதர்
05-05-2010, 02:35 PM
இதோ முதல் நாள் முடியப்போகிறது. இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.

நிறைய பழங்கள் , குறிப்பாக தர்பூசணி சாப்பிட்டதால் அவ்வளவாக பசி எடுக்கவில்லை.
நான் சாப்பிட்ட பழங்கள் - தர்பூசணி , திராட்சைகள், பேரிக்காய் , ஆப்பிள் , சப்போட்டா

சூப் முதல் நாள் வேண்டாம் என்பதால் அதை சாப்பிடவில்லை. நாளை முதல் சூப் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும் .

அடுத்த நாள்தான் கடினமாக இருக்கும் என நண்பர்கள் கூறி இருக்கிறீர்கள். பார்ப்போம் ..

அடுத்த நாளுக்காக காய்கறிகள் வாங்க கிளம்பிவிட்டேன் .

செல்வா
05-05-2010, 03:14 PM
வெற்றிபெற இப்போதே என் வாழ்த்துக்களைக் கூறிவிட்டேன்.. :)

சிவா.ஜி
05-05-2010, 03:24 PM
மக்காச்சோளம் தாராளமாய் சாப்பிடலாம். மிகக்குறைந்த கலோரிகளேயுடைய மக்காச்சோளம் உடலுக்கு மிக நல்லது. கொழுப்பும் இல்லை.

ஸ்ரீதர்
06-05-2010, 05:25 AM
இரண்டாம் நாள் :-

காலையில் ஒரு வேகவைத்த உருளைக்கிழங்கு, சூப் , மற்றும் கேரட் , கோஸ் , குடை மிளகாய் கலந்த சாலட் எடுத்துக்கொண்டேன் . கிட்டத்தட்ட ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து இருக்கிறேன் .

மதியம் ஒரு மக்கா சோளம் , கொஞ்சம் சூப் மற்றும் பாபி காரன் (baby corn) எடுத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன் .

மதி
06-05-2010, 06:00 AM
வெற்றி பெற வாழ்த்துகள்...!!

jayashankar
06-05-2010, 06:49 AM
ஸ்ரீதர் அவர்களே!

சிவா கூறியதுபோல் மக்கா சோளம் எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாம் நாளின் முக்கியத்துவமே நார் சத்தை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே.

தண்ணீரும், காய்கறிகள் எந்த வகையானாலும் எடுத்துக் கொள்ளலாம். கிழங்கு மட்டும் காலையில் மட்டுமே அதுவும் குறைந்த அளவு மட்டுமே.

இந்த 7 நாட்களுக்கும் தேங்காய், எண்ணெய் போன்றவைகள் எடுத்துக் கொள்ளக் கூடாது.

அப்புறம் மூன்றாம் நாள், காய்கறி மற்றும் பழங்கள்.

காலையில் பழங்கள் சாப்பிட்டு பிறகு காய்கறி மட்டும் சாப்பிடுங்கள். அப்படி பழங்கள் சாப்பிட நினைத்தால், பப்பாளி மற்றும் தர்பூசணி சிறந்தது.

வாழ்த்துக்கள் ஸ்ரீதர் அவர்களே...

ஸ்ரீதர்
06-05-2010, 07:57 AM
பின்னுட்டம் மற்றும் பதில்களுக்கு நண்பர்கள் சிவா , ஜெய் , செல்வா & மதி அவர்களுக்கு மிக்க நன்றி ....

மக்கா சோளம் எனக்கு மிகவும் பிடித்ததாகையால் இன்னும் சந்தோஷமாக இவ்விரதத்தை தொடர்கிறேன்.


பார்ப்போம் இந்த நாள் எப்படி போகின்றது என்று !!!

ஸ்ரீதர்
06-05-2010, 05:42 PM
இதோ இரண்டாம் நாள் முடியப்போகிறது.

மதியமும் இரவும் மக்கா சோளம் , காய்கறி சாலட் மற்றும் சூப் சாப்பிட்டேன் . தண்ணீரும் நிறைய குடித்தேன் .

எந்தவித சிரமும் இல்லை .

நாளை காய்கறி மற்றும் பழங்கள் இரண்டையும் சாப்பிட வேண்டும்.

அடுத்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன்.

ஸ்ரீதர்
07-05-2010, 11:09 AM
முன்றாம் நாள் :-

இன்று காய்கறியும் பழங்களும் சாப்பிட வேண்டும்.

காலையில் நிறைய தர்புசனி பழங்கள் சாப்பிட்டேன்.

மதியம் , ஒரு கப் சூப் , ஒரு மக்க சோளம் மற்றும் காய்கறி சாலட் சாப்பிட்டேன் ..

இதுவரை பிரச்சனை இல்லை. உடல் கொஞ்சம் லேசாக இருப்பதை போல் உணர்கிறேன்.


நாளை 8 வாழைப்பழங்கள் மற்றும் 3 கிளாஸ் பால் தான் சாப்பிட வேண்டும். அதற்காக பழங்கள் வாங்கிவர வேண்டும்.

நாளை தான் என்ன நடக்கும் என ஆவலாக உள்ளது. சூப் இருப்பதால் சமாளித்து விடலாம் என நினைக்கிறேன் .

ஐந்தாம் நாள் தான் ஒரு கப் சாதம் சாப்பிட சொல்லி இருக்கிறீர்கள் . வெறும் சாதத்தை எப்படி சாப்பிடுவது ? ஏதாவது யோசனை சொல்லுங்களேன் .....

ரங்கராஜன்
07-05-2010, 08:30 PM
ஆஹா இந்த திரியை இப்போ தான் பார்த்தேன். எனக்கு ரொம்ப நாளாய் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசை........... நண்பர்களிடம் கேட்டால் வித்தியாசமாக சில பதில்கள் வந்தது.

தினமும் உடலில் இருந்து ஒரு ஒரு கிலோ சதையை அறுத்து போடு அப்போ தான் உன்னால் எடையை குறைக்க முடியும்

ஒரு நாளைக்கு மூன்று வேலை மட்டும் சாப்பிடு 9 முறை வேண்டாம்

மனசு சுத்தமாக இருக்க வேண்டும் என்கிறார்கள்

இப்படி பல மாதிரி கிண்டல் செய்வார்கள்............ ஆனால் இந்த திரியில் அருமையான பல யோசனைகள் இருக்கிறது நாளையில் இருந்து செய்து பார்க்க போறேன்.

jayashankar
07-05-2010, 10:55 PM
முன்றாம் நாள் :-

இன்று காய்கறியும் பழங்களும் சாப்பிட வேண்டும்.

காலையில் நிறைய தர்புசனி பழங்கள் சாப்பிட்டேன்.

மதியம் , ஒரு கப் சூப் , ஒரு மக்க சோளம் மற்றும் காய்கறி சாலட் சாப்பிட்டேன் ..

இதுவரை பிரச்சனை இல்லை. உடல் கொஞ்சம் லேசாக இருப்பதை போல் உணர்கிறேன்.


நாளை 8 வாழைப்பழங்கள் மற்றும் 3 கிளாஸ் பால் தான் சாப்பிட வேண்டும். அதற்காக பழங்கள் வாங்கிவர வேண்டும்.

நாளை தான் என்ன நடக்கும் என ஆவலாக உள்ளது. சூப் இருப்பதால் சமாளித்து விடலாம் என நினைக்கிறேன் .

ஐந்தாம் நாள் தான் ஒரு கப் சாதம் சாப்பிட சொல்லி இருக்கிறீர்கள் . வெறும் சாதத்தை எப்படி சாப்பிடுவது ? ஏதாவது யோசனை சொல்லுங்களேன் .....

ஸ்ரீதர் கவலைப்படாதீங்க....

5 ஆம் நாள், வெறும் ஒரு கப் சாதம் மட்டுமல்ல, 6 தக்காளி சாப்பிட்டாக வேண்டும் அதுவும் பச்சையாக. பச்சைத் தக்காளி சாப்பிடுவது சிறிது சிரமம்.

நான் ஏற்கனவே கூறியதுபோல், 5 தக்காளிப்பழத்தையும் மிக்ஸியில் போட்டு, காரத்திற்கு சில மிளகு அல்லது பாதி பச்சை மிளகாய் போட்டு சிறிது உப்பு போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தக்காளி சட்னியை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். நிச்சயம் பயனுண்டு.

6 தக்காளி சாபிடுவது உங்கள் உடம்பில் ஊறிய யூரிக் ஆசிட்டின் அளவை சமனப்படுத்துவதற்கு.

5 ஆம் நாள் எடுத்துக் கொள்ளும் தண்ணீரின் அளவு குறைந்தது 4 லிட்டர் தண்ணீராகும். அப்போதுதான் யூரிக் அமிலம் வெளியேறும்.

jayashankar
07-05-2010, 10:58 PM
முன்றாம் நாள் :-

இன்று காய்கறியும் பழங்களும் சாப்பிட வேண்டும்.

காலையில் நிறைய தர்புசனி பழங்கள் சாப்பிட்டேன்.

மதியம் , ஒரு கப் சூப் , ஒரு மக்க சோளம் மற்றும் காய்கறி சாலட் சாப்பிட்டேன் ..

இதுவரை பிரச்சனை இல்லை. உடல் கொஞ்சம் லேசாக இருப்பதை போல் உணர்கிறேன்.


நாளை 8 வாழைப்பழங்கள் மற்றும் 3 கிளாஸ் பால் தான் சாப்பிட வேண்டும். அதற்காக பழங்கள் வாங்கிவர வேண்டும்.

நாளை தான் என்ன நடக்கும் என ஆவலாக உள்ளது. சூப் இருப்பதால் சமாளித்து விடலாம் என நினைக்கிறேன் .

ஐந்தாம் நாள் தான் ஒரு கப் சாதம் சாப்பிட சொல்லி இருக்கிறீர்கள் . வெறும் சாதத்தை எப்படி சாப்பிடுவது ? ஏதாவது யோசனை சொல்லுங்களேன் .....

8 வாழைப்பழம் மற்றும் 3 கப் பால் மிகவும் அதிகமாகப் படும் உங்களுக்கு இந்த பாலும், பழமும் பொட்டாசியம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. தேவைப்பட்டால், எத்தனை கப் சூப் வேண்டுமானாலும் குடிக்கலாம்.

ஆனால், பசியோடு மட்டும் இருக்காதீர்கள். அதுதான் ரகசியமே....

ஸ்ரீதர்
08-05-2010, 02:03 AM
நான் ஏற்கனவே கூறியதுபோல், 5 தக்காளிப்பழத்தையும் மிக்ஸியில் போட்டு, காரத்திற்கு சில மிளகு அல்லது பாதி பச்சை மிளகாய் போட்டு சிறிது உப்பு போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தக்காளி சட்னியை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். நிச்சயம் பயனுண்டு.

அப்படியா !!! சூப்பர் ஐடியாவா இருக்கே !!! ரொம்ப நன்றிங்க .... முயற்சித்து பார்க்கிறேன்


8 வாழைப்பழம் மற்றும் 3 கப் பால் மிகவும் அதிகமாகப் படும் உங்களுக்கு இந்த பாலும், பழமும் பொட்டாசியம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. தேவைப்பட்டால், எத்தனை கப் சூப் வேண்டுமானாலும் குடிக்கலாம்.

ஆனால், பசியோடு மட்டும் இருக்காதீர்கள். அதுதான் ரகசியமே....
__________________

இன்று நான்காம் நாள் ஆரம்பம்.

சமாளித்து விடுவீர்கள் என்ற நண்பர் ஜெய் யின் ஊக்கம் மனதில் ஒரு தைரியத்தை கொடுக்கிறது. காலையில் என் நிலை - அவ்வளவாக பசிக்க வில்லை.

jayashankar
08-05-2010, 08:20 AM
பசியில்லாவிட்டாலும் முடிந்தவரை சாப்பிடுங்கள்.

இன்றிலிருந்து சாப்பிடுவது தானாகவே குறைய ஆரம்பிக்கும். இருந்தாலும், இன்று முடிந்தவரை வாழைப்பழம் மற்றும் பால் எடுத்துக் கொள்ளுங்கள். மிகவும் முக்கியம். உங்கள் உடலின் கழிவுகளோடு சுண்ணாம்புச் சத்து பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் மிகவும் குறைந்திருக்கும்.

இந்த 4 மற்றும் 5 ஆம் நாள் அதனை பூர்த்திசெய்வதோடு உங்கள் உடலை அடுத்த முக்கிய இரண்டு நாட்களுக்கு தயார் செய்வதும் நடக்கும்.

அதிக தண்ணீர் என்பதுதான் மந்திரம். முடிந்தவரை உடலின் கழிவுகள் நீக்கப்படும் இதனால்.

5 ஆம் நாள் அதிக தண்ணீர் முக்கியம்.

நடத்துங்க....

என் மனைவி மீண்டும் ஒரு வார வித்தியாசத்தில் தொடங்கி இன்று 5 ஆம் நாளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்.

பார்ப்போம் அவருக்கு என்னவாகின்றது என்று ?

சிவா.ஜி
08-05-2010, 09:47 AM
நான் என் உயரத்துக்கேற்ற எடையிலும் குறைவாகவே இருக்கிறேன். ஆனால் லேசாய் தொப்பைபோடத் தொடங்கியிருப்பதால்...இந்த ஜி.எம் டயட் உதவுமா ஜெய்.

ஆனால் என்னால் இங்கு அதனைப் பின்பற்ற* முடியாது. இங்கெல்லாம் கிடைப்பதைத்தான் உண்ண வேண்டும். ஊருக்குப் போனால் முயற்சிக்கிறேன்.

முயற்சி செய்யும் அனைவருக்கும் வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்.

jayashankar
08-05-2010, 01:58 PM
சிவா! உங்களால் இங்கே தொடர முடியாது.

அதுமட்டுமின்றி இது நைஜீரியா தண்ணீரின் அருமை. ஏதாவது காரணங்களை தேடிப் பிடித்து தொப்பை போட்டு விடுகின்றது.

தொப்பைக் குறைப்பு என்பது பெரிய விசயம்.

சிறிது கட்டுப்பாடு (இந்த ஊரில் சாத்தியப்படுவதில்லை), சிறிது உடற்பயிற்சி, சிறிது மூச்சுப் பயிற்சி. இவை போதும் கட்டுப்படுத்த.

மற்றபடி ஒரு 50 கிராம் இஞ்சி மற்றும் 1 கிளாஸ் தண்ணீர் போட்டு மிக்ஸியில் அரைத்து பிறகு சுடப்படுத்தி 1/2 கப் வந்தவுடன் அதில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். 30 நாட்களில் மாற்றம் கிடைக்கும். ஆனால் உங்களுக்கு இதுவும் செய்ய வாய்ப்பில்லை.

ஆகவே, மூச்சுப் பயிற்சி, நடைப்பயிற்சி இரண்டும்தான் சிறந்த மற்றும் உங்களால் முடிந்த விசயம்.

பின்பற்றிப் பாருங்கள்....

சிவா.ஜி
08-05-2010, 03:15 PM
ரொம்ப நன்றி ஜெய். மூச்சுப்பயிற்சியை சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் பயிலரங்கத்தில் பயின்றிருக்கிறேன். அதைச் செய்யமுடியுமென்றே நினைக்கிறேன். மற்றபடி நடைப்பயிற்சி செய்கிறேன்...ஆனால் அதுவும் சில சமயங்களில் மழையினால் தடைப்பட்டுவிடுகிறது. அறைக்குள்ளேயே சிட் அப்ஸ் செய்வதுதான் நல்லது.

jayashankar
08-05-2010, 03:47 PM
மூச்சுப் பயிற்சியும், சிட் அப்ஸ் போதும் சிவா.

உங்களுடைய தொப்பை ஒன்றும் அவ்வளவு அதிகமானதல்ல....

நீங்கள் இருக்கும் அளவோடு இருந்தாலும் போதுமானதுதான்.

சிவா.ஜி
08-05-2010, 03:50 PM
ரொம்ப நன்றி ஜெய்.

ஸ்ரீதர்
08-05-2010, 04:07 PM
நான்காம் நாள் வெற்றிகரமாக முடித்து விட்டேன் ...

நண்பர் ஜெய் சொன்னதுபோல சாப்பிடுவதும் பசியும் குறைந்துள்ளது .. ஒரு வாழைப்பழம் மீதம் உள்ளது. முடிக்க முயற்சிக்கிறேன் ..

அடுத்த நாளுக்கு என்னை தயார் படுத்திக்கொண்டுள்ளேன் ..

ஸ்ரீதர்
09-05-2010, 07:14 AM
ஐந்தாம் நாள் :-

காலையில் ஒரு கப் சாதம் அத்துடன் , 6 தக்காளியை மிக்சியில் சிறு பச்சை மிளகாய் , உப்பு சேர்த்து அரைத்து , சாதத்துடன் கலந்து சாப்பிட்டு விட்டேன் ..

மதியமும் , இரவும் சூப் சாப்பிட வேண்டும்..

நிறைய தண்ணீர் குடிக்க மறக்கவில்லை.

jayashankar
09-05-2010, 08:07 AM
நான்காம் நாள் வெற்றிகரமாக முடித்து விட்டேன் ...

நண்பர் ஜெய் சொன்னதுபோல சாப்பிடுவதும் பசியும் குறைந்துள்ளது .. ஒரு வாழைப்பழம் மீதம் உள்ளது. முடிக்க முயற்சிக்கிறேன் ..

அடுத்த நாளுக்கு என்னை தயார் படுத்திக்கொண்டுள்ளேன் ..

நல்லது ஸ்ரீதர், இந்த வாழைப்பழமும் பாலும் ஒரு வித சிறந்த கல்ப்பு என்றாலும், கலோரியிலும், சர்க்கரை சக்தியிலும் அதிகம் என்பதால் நமக்கு அனைத்தையும் உண்பதில் சிறிது தடுமாற்றம் வருவது இயற்கை.

ஒன்றை கவனிக்க வேண்டும். பசியில்லாவிட்டாலும், வேலை செய்வதில், மற்றபடி சுறுசுறுப்பாக இருப்பதில் நமக்கு எந்த பங்கமும் வருவதில்லை. அதுதான் முக்கியம்.

அப்புறம் தக்காளியும் சாதமும் சாப்பிட்டாகிவிட்டதா?

ரொம்ப நல்லது. தண்ணீரும் சூப்பும் குடித்துக் கொண்டேயிருங்கள்.

காலை மதியம் இரவு மட்டுமே உண்ண வேண்டும் என்றில்லை. எப்போதெல்லாம் பசி எடுத்தாலும் நீங்கள் அந்த சூப்பைக் குடிக்கலாம் தயக்கமேயில்லாமல். ஏனெனில், இது பட்டினி வைத்தியமில்லை பத்தியம் அவ்வளவே.

நிச்சயம் உங்கள் உடலில் உள்ள கழிவுகள் 60% நீங்கியிருக்கும்.

எடை குறைப்பு என்பது நாளை முதல் நீங்களே உணரலாம்.

ஸ்ரீதர்
10-05-2010, 04:47 AM
ஐந்தாம் நாள் வெற்றிகரமாக முடிந்தது.

நான்காம் நாள் பசி குறைவாக இருந்ததால் ஐந்தாம் நாளுக்காக கொஞ்சம் குறைவாக சூப் செய்திருந்தேன் . மதியம் மற்றும் இரவு வெறும் சூப்பினால் வயிற்றை நிரப்ப வேண்டியிருந்ததால் சூப் போதாமல் மீண்டும் செய்து கொண்டேன் ..

அதனால் சிறிது தடுமாற்றம் வந்தது. மற்றபடி உடல் லேசாக இருப்பதாய் உணர்கிறேன் .

ஸ்ரீதர்
10-05-2010, 04:53 AM
ஆறாம் நாள் :-

இன்று காய்கறி நாள் ஆகையால் பிரச்சனை இருக்காது என நினைக்கிறேன் ...

காலையில் சூப் , வெள்ளரிக்காய் , பேபி காரன் எடுத்துக்கொண்டேன் .

மதியம் சாப்பிட காய்கறி சாலட் , சூப் மற்றும் மக்கா சோளம் தயாராக உள்ளது.

இடையிடையே சூப்பும் , தண்ணீரும் சாப்பிடலாம் என்றும் இருக்கிறேன்.

நாளை மீண்டும் வெறும் சாதம் சாப்பிட வேண்டும் ... அதற்கு ஒரு யோசனை சொல்லுங்களேன் ஜெய்..

நன்றி.

jayashankar
10-05-2010, 12:01 PM
7 ஆம் நாள் சாதம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற அவசியமில்லை ஸ்ரீதர்.

அதிகாலையில் ஒரு கிளாஸ் ஜூஸ் குடியுங்கள். மாம்பழம், வாழைப்பழம், அன்னாசி பழம் தவிர்த்து, சாத்துக்குடி ஆப்பிள் போன்ற ஜூஸ் குடிக்கலாம். சர்க்கரை போடாமல். வெறும் பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து சிறிது எலுமிச்சைபழம், மற்றும் ராக் சால்ட் எனப்படும் சாலட் உப்பையோ அல்லது கடல் உப்பையோ போட்டு குடியுங்கள்.

அப்புறம் காய்கறிகள் சாப்பிடுங்கள். அன்றைய தினமும் பிரச்சினையில்லாமல் செல்லும். ஒன்றும் பயப்பட வேண்டாம்.

இந்த காரட், வெள்ளரிக்காய் போன்றவையுடன் உங்களுக்கு பிடித்த மக்கா சோளம் போதும் 7 ஆம் நாளை சமாளிக்க.

சர்க்கரை சத்துக்காகத்தான் ஒரு கிளாஸ் ஜூஸ் எடுத்துக் கொள்கின்றீர்களே....

அப்புறம் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம் தப்பில்லை. இன்னும் வேண்டுமென்றால் தர்பூசணியும் எடுத்துக் கொள்ளலாம் சிறிதாக.

பசியோடு மட்டும் இருக்காதீர்கள். அவ்வளவுதான்.

jayashankar
10-05-2010, 12:02 PM
அந்த 7 நாட்களுக்கு பிறகு உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சரிங்களா...!

ஸ்ரீதர்
10-05-2010, 02:03 PM
நன்றி ஜெய் !

ஆறாம் நாள் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. நன்றாக போய்க்கொண்டிருக்கிறது ...
நாளை வெற்றிகரமாக முடிப்பேன் என நினைக்கிறேன்.

நிச்சயம் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் ..

அறிஞர்
10-05-2010, 04:11 PM
ஜி.எம். டயட் கிட்டத்தட்ட 5 வருடமாக... வருடத்திற்கு 2 முறை.... செய்வேன்.

ஒவ்வொரு முறையும் 4-5 கிலோ குறையும் (பிறகு எவ்வளவு ஏறும் எனக் கேட்கக்கூடாது).

அதை நம் கலாச்சாரத்திற்கு தகுந்தவாறு மாற்றி, தமிழில் கொடுத்த ஜெய்சங்கருக்கு நன்றி

எனக்கு கிடைத்த முறை ஆங்கிலத்தில்
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=513

ஸ்ரீதர்
11-05-2010, 06:33 AM
ஏழாம் நாள் :-

இன்று கடைசி நாள். காலையில் வெள்ளரிக்காயும் ஒரு டம்ளர் தர்புசனி ஜுசும் எடுத்துக் கொண்டேன்.

மதியம் காய்கறி சாலட், சூப் மற்றும் மக்கா சோளம் சாப்பிட இருக்கிறேன்.

இந்த நாளை நிச்சயமாக முடித்துவிட முடியும்.

உடல் மிக லேசாக இருக்கிறது.

இதற்கு முன் டைட் ஆக இருந்த பேண்ட் இப்போது கச்சிதமாக பொருந்துகிறது.

இரவு அலுவலகம் முடித்து வீடு திரும்பும்போது எடை பார்த்துவரச்சொல்லி வீட்டு காரம்மாவிடமிருந்து ஆர்டர் !!! "எஸ் யுவர் ஆனர்" சொல்லிவிட்டு வந்திருக்கிறேன் .

மற்ற விவரங்களை நாளை பகிர்ந்து கொள்கிறேன் .

jayashankar
11-05-2010, 10:25 AM
ஸ்ரீதர் அவர்களே!

இந்த 7 நாட்கள் விரதத்தை தொடங்கும் முன் மற்றும் முடித்த பின் எடை எடுக்கும் நேரம் விதம் அனைத்தும் சரியாய் இருந்தால்தான் எவ்வளவு குறைந்தீர்கள் என்று தெரியும்.

நான் காலை எப்போதும் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்தவுடன் எடை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் பார்ப்பது வழக்கம்.

இது உங்கள் சரியான எடையைச் சொல்லும்.

இருந்தாலும், பேண்ட் லூசாகப் போவது போன்றவையும் உறுதிப்படுத்தும் நாம் நினைத்த இடத்தில் நினைத்த விதத்தில் எடை குறைந்திருக்கின்றோம் என்று.

எடையை விட முகவும் முக்கியமானது உடலிலிருந்து வெளியேறும் கழிவுகள்தான்.

இதனால், கிட்னி, கல்லீரல், வயிறு, இரத்தம் போன்றவை சுத்தமாகின்றது.

எவ்வளவு எடை குறைந்தீர்கள் என்று நாளை சொல்லுங்கள்.

அப்புறம், இந்த விரதத்தை மாதத்திற்கு ஒரு முறை செய்வது நல்லது உடல் எடை அதிகமிருந்தாலோ அல்லது 40 வயதுக்கு மேலோ....

சரிங்களா.....

ஸ்ரீதர்
11-05-2010, 11:56 AM
விரதத்தை தொடங்குமுன் என் எடையை குறித்து வைத்துள்ளேன் ஜெய் அவர்களே!

நாளை நிச்சயம் குறைந்த எடையை பகிர்ந்து கொள்கிறேன் .

jayashankar
11-05-2010, 07:53 PM
சொல்லுங்க சொல்லுங்க...

காத்திருக்கின்றோம்.

ஸ்ரீதர்
12-05-2010, 03:10 AM
வெற்றி கரமாக ஏழு நாள் விரதத்தை முடித்து விட்டேன்.

இப்போது முக்கியமான கட்டத்த்திற்கு வருகிறேன்.

எடை மேடை 5 கிலோ குறைவாக காட்டியது. மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இப்போது இந்த வெற்றியை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதுதான் அடுத்து உள்ள கேள்வியே!!!!

ஆகவே இன்று முதல் நீண்ட நாட்களாக விட்டுப்போயிருந்த யோகாசன பயிற்சியை தொடங்கி விட்டேன்.

உணவு பழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருக்க முடிவு செய்துள்ளேன்.

அடுத்த மாதம் மீண்டும் இந்த விரத்த்தை கடைபிடிக்க விரும்புகிறேன்.

இந்த விரத காலத்தில் என் அனுபவங்கள் :-

1) ஒரு நாள் கூட பசித்திருக்கவில்லை.
2) நாள் முழுவதும் சோம்பேறித்தனம் இல்லாமல் சுறுசுறுப்பாக இருந்தது
3) உடல் மிக லேசாக இருக்கிறது.
4) உடல் லேசானாலேயே ஒரு தன்னம்பிக்கை வரும்
5) என் அலுவலக வேலை இவ்விரத்த்தால் பாதிப்படையவில்லை.
6) காபி , டீ , புகை மற்றும் மாமிசம் பழக்கம் இல்லாத்தால் இவ்விரத்த்தை கடைபிடிப்பது எளிதாக இருந்தது.
7) தர்பூசணி சீசன் இருந்ததால் அது என்னை காப்பாற்றியது.
8) மக்கா சோளம் மிகவும் உதவியாக இருந்தது காய்கறி நாளில் என்னை காப்பாற்ற.

அடுத்த மாதம் இவ்விரதத்தை இன்னும் சிறப்பாக , திட்டமிட்டு நிறைவேற்ற ஆவலாக உள்ளேன்.

இந்த ஏழு நாளும் என் சந்தேகங்களுக்கு குறைவில்லாமல் பதில் கூறிய நண்பர் ஜெய்க்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி ஜெய் !!!!

இத்திரியை தொடங்கிய காமாட்சி அவர்களுக்கும் நன்றி

மற்ற மன்ற நண்பர்களும் இதில் வந்து பயனடைய அன்புடன் அழைக்கிறேன்.

jayashankar
12-05-2010, 06:39 AM
ஆஹா! மிகவும் நல்லது.

5 கிலோ எடை குறைப்பு என்பது மிகப் பெரிய விசயம்.

நடைப் பயிற்சியும் யோகாவும் செய்வது எடையை தக்க வைக்க நிச்சயம் உதவும்.

சிறிது உணவு, சிறிது நடை பயிற்சியே கூட போதும் உங்கள் உடல் எடை அதிக மாற்றத்தை அடையாது.

மிகவும் மகிழ்ச்சி.

இப்படி நன்றி சொல்லியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது ஸ்ரீதர்.

நான் சென்னை வரும்போது நிச்சயம் பார்ப்போம். ஜூன் 15 முதல் ஜூலை 6 வரை தமிழ்நாட்டில் இருப்பேன். சென்னைக்கு எப்போது வருவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவாகிவிட்டது தெரியப்படுத்துகின்றேன்.

ஸ்ரீதர்
12-05-2010, 06:45 AM
ஆஹா! மிகவும் நல்லது.

5 கிலோ எடை குறைப்பு என்பது மிகப் பெரிய விசயம்.

நடைப் பயிற்சியும் யோகாவும் செய்வது எடையை தக்க வைக்க நிச்சயம் உதவும்.

சிறிது உணவு, சிறிது நடை பயிற்சியே கூட போதும் உங்கள் உடல் எடை அதிக மாற்றத்தை அடையாது.

மிகவும் மகிழ்ச்சி.

இப்படி நன்றி சொல்லியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது ஸ்ரீதர்.

நான் சென்னை வரும்போது நிச்சயம் பார்ப்போம். ஜூன் 15 முதல் ஜூலை 6 வரை தமிழ்நாட்டில் இருப்பேன். சென்னைக்கு எப்போது வருவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவாகிவிட்டது தெரியப்படுத்துகின்றேன்.

ஆஹா!!! நிச்சய்மாய் சந்திப்போம் ஜெய்!!! தங்களை நேரில் காண்பதும் எனக்கு மிக்க மகிழ்ச்சி..

உங்கள் வருகையின் விவரங்களை எனக்கு தனி மடலிடுங்கள். உங்களுக்கு உதவிட மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்.

நன்றி.

jayashankar
12-05-2010, 10:07 PM
ரொம்ப நல்லதுங்கோ....

ஸ்ரீதர்
17-06-2010, 01:12 PM
வணக்கம் நண்பர்களே.

இதோ இரண்டாம் முறை இந்த விரதத்தை இருந்து இன்று கடைசி நாளில் இருக்கிறேன்.

இந்த முறை எவ்வளவு குறைந்தேன் என்பதை நாளை பகிர்கிறேன்.

ஜெய் !!! தமிழகம் வந்தாச்சா ??

அமரன்
17-06-2010, 05:28 PM
காமாட்சியை எங்கேங்க..

கொஞ்ச நாளாகக் காணோம்..

jayashankar
19-06-2010, 12:19 PM
வணக்கம் நண்பர்களே.

இதோ இரண்டாம் முறை இந்த விரதத்தை இருந்து இன்று கடைசி நாளில் இருக்கிறேன்.

இந்த முறை எவ்வளவு குறைந்தேன் என்பதை நாளை பகிர்கிறேன்.

ஜெய் !!! தமிழகம் வந்தாச்சா ??


வந்தாச்சுங்க.

என்னுடைய தொலைப்பேசி எண் தனிமடலில் அனுப்புகின்றேன்

தங்க கம்பி
23-02-2011, 03:04 PM
அற்புதம். மிகமிக அருமை. நன்றி நண்பரே.

ஆளுங்க
27-03-2011, 05:33 PM
மருத்துவம் படிக்க முடியாமல் பொறியியல் சென்றதால், எனக்கு இயல்பாகவே மருத்துவத்தின் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டு இருந்தது!!

எனவே, இதுவரை நான் இந்த பகுதியிலேயே நுழைய வில்லை...

என் அம்மா மதியம் மன்றத்தில் கதைகள் படிப்பார் )..
அப்போது, இந்த திரியைக் கண்டு என்னிடம் சொன்னார்..

இன்னும் ஒரு வாரத்தில் சோதனையைத் துவங்குகிறேன்..

எனக்கு சில சந்தேகங்கள்:

1. விரத நாட்களில் தேநீர், காபி ஆகியவற்றுக்கு முழு தடையா?

2. தக்காளிக்கு மாற்றாக எதுவும் உண்டா (பச்சைத் தக்காளிக்காவது!)?