PDA

View Full Version : மாத்திரைகள்....



பா.சங்கீதா
10-04-2010, 03:48 PM
சிரித்து கொண்டே விற்பனை செய்தார்கள்
மாத்திரையை,
உடல் குணமாக வாங்கினார்கள்
மற்றோர்கள்
இன்றோ கண்ணீர்விட்டு அழுகிறார்கள்
காலாவதியான மாத்திரையால்............
:frown:

பா.ராஜேஷ்
10-04-2010, 03:51 PM
என்ன செய்வது. வாங்குபவர்கள் விழிப்புடன் இருப்பதை விட வேறு வழி இல்லை.

பா.சங்கீதா
10-04-2010, 04:44 PM
விழப்பாக இல்லாததால் விழியை இழந்தவர்கள் நிறைய பேர் உண்டு....

நன்றி அண்ணா :)

அமரன்
10-04-2010, 05:24 PM
கதை கதையாய் சொல்கின்றன சஞ்சிகைகள்.

சதை சதையாய் சொரிகின்றன கண்கள்..

பிஞ்சுகள், பொட்டுகள், பூக்கள் என எத்தனை பேரை கோரப்பலி எடுக்கின்றன இந்த கோடாலிக்காம்புகள்.

இந்தப் போலிகளை பொலி போட்டாலும் பாதகமில்லை..

போலி மருந்துக் குவியல்களை இந்தியாவிலிருந்து ஹொலண்டூடாக ஏதோ ஒரு ஆபிரிக்க நாட்டுக்கு கடத்தப்பட்ட சேதியை ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்னர் பத்திரிக்கையில் படித்தேன்.

இப்போது.......... மாத்து இரைகளாக இந்தியர்கள்..

மீண்டும் கொதிக்கிறது.

செல்வா
10-04-2010, 06:34 PM
தன் காலத்தில் நடக்கும் அநீதிகளைக் கண்டு
கொதித்தெழுந்து தனது கலை வாயிலாக அதன் எதிர்ப்பைக் காண்பிப்பவன் தான்
மக்கள் கவிஞன் அல்லது மக்களின் கலைஞன் ஆகிறான்.

நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என்ற பாரதியின் வரிகள் மனதிலாடுகின்றன.

மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாத நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகிக் கொண்டிருக்கிறது.

இங்குதான் மனிதவளம் மலிவாகக் கிடைக்கிறதே...

போலிமருந்து விற்றால் என்ன
காலாவதியான மருந்து விற்றால் என்ன
காசு கைக்கு வந்தால் போதும்...

கவிதையின் கரு இதயத்தைச் சுடுகிறது....

கவிதை வரிகளுக்கு இன்னும் சற்று மெனக்கட்டிருக்கலாமோ...

நிறைய எழுதுங்கள்
நிறைய வாசியுங்கள்...

தொடர்ந்து எழுதுங்கள்...

பா.சங்கீதா
12-04-2010, 04:39 AM
நன்றி அமரன் அண்ணா

பா.சங்கீதா
12-04-2010, 04:40 AM
நன்றி செல்வா அண்ணா....

govindh
19-04-2010, 10:10 PM
உயிர்களை அழிக்க முனையும் ....
போலிகள் ஒழியட்டும்...!

பா.சங்கீதா
21-04-2010, 09:43 AM
நன்றி கோவிந்த் அண்ணா ...:)