PDA

View Full Version : செல் பேசியில் தமிழ் மொழி



மயூ
10-04-2010, 05:21 AM
இணையத்திலும் கணனியிலும் தமிழில் எழுதி வாசிப்பது இப்போது இலகுவான காரியம் ஆகிவிட்டது. ஆனால் தகவல் தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்து வரும் செல்லிடத் தொலைபேசிகளில் தமிழின் பாவனை மந்தமாகவே உள்ளது. அண்மையில் செல்பேசி மூலம் ஒரு ட்விட்டர் செய்தியிட அது எப்படி என்று காங்கோன் கேட்டதன் விழைவே இந்தப் பதிவு.

பொதுவாக செல்பேசிகளில் ஆங்கில மொழி இயல்பிருப்பாகவும் பிரஞ்சு, சீனம், ஜப்பானிய மொழிகள் இணைப்பாகவும் வருவதுண்டு. தற்போதைய நிலையில் மற்றய மொழிகளுக்கு இணையாக ஹிந்தி மொழிக்கு செல்பேசிகளில் தனியிடம் வழங்கத் தொடங்கியுள்ளனர். தமிழ் மொழியை ஏதோ கண்டும் கணாதது போலத்தான்.

குறிப்பாக விலை குறைந்த தொலைபேசிகளில் தமிழ் ஆதரவு இருந்தாலும் விலை கூடிய செல்பேசிகளில் தமிழ் ஆதரவு இருப்பதில்லை. இந்த நிலையில் செல்பேசி உலாவியில் தமிழ் தளங்களைப் பார்த்தால் அனைத்தும் பெட்டி பெட்டிகளாகத் தெரியும்.

இந்த பிரைச்சனையில் இருந்து விடுபட டிவிஸ் எழுதிய பதிவைப் படியுங்கள் (http://tvs50.blogspot.com/2009/06/problem-view-tamil-fonts-in-mobile.html). ஒபெரா மினி எனும் உலாவி மூலம் தமிழ் தளங்களைப் படிக்க கூடிய வசதியுள்ளது. ஆனாலும் இதன் மூலம் தமிழில் உள்ளிட முடியாது. ஒபேரா மினி இப்போது தமிழ் மொழியிலும் கிடைக்கின்றது என்பதைக் குறிப்படவேண்டும்.

தமிழில் உள்ளிட வேண்டுமானால் தொலைபேசியில் தமிழ் உள்ளிடுவதற்கான ஆதரவு இருக்கவேண்டும். பெரும் பாலான தொலைபேசிகளில் இந்த வசதி இருப்பதில்லை.

நான் அறிந்த வரையில் இந்திய, இலங்கை சந்தைகளுக்காகச் செய்யப்பட்ட தொலைபேசிகளில் தமிழ் உள்ளீட்டு ஆதரவு இருக்கும். ஆனாலும் பெரும்பாலான தொலைபேசிகளில் இது இருப்பதில்லை. இலங்கையில் வெளியாகும் தமிழ் ஆதரவு செல் பேசிகளில் கீ-பாட் பெரும்பாலும் சிங்களத்திலேயே இருக்கும். ஆனாலும் தமிழகத்தில் கீ-பாட்டையும் தமிழில் செய்து வைக்கின்றார்கள்.

சில வருடங்களிற்கு முன்னமே தமிழிற்கு ஒரு செல்பேசி தளக்கோலம் தேவை (http://blog.ravidreams.net/2007/04/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95/) என்று ரவி கூறியிருந்தார். அண்மையில் ரவி வாங்கிய நொக்கிய 5310 இல் தமிழ் கீ பாட் மற்றும் தமிழ் இடைமுகம் (http://blog.ravidreams.net/2009/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/) இருப்பதாகக் கூறியிருந்தார். நொக்கியாவில் எவ்வாறு தமிழில் தட்டச்சிடுவது (http://blog.ravidreams.net/2009/10/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/) என்றும் ரவி ஒரு பதிவிட்டுள்ளார். அவ்வகையான தொலைபேசிகள் மூலம் இணையத்தில் உலாவுவதுடன் தமிழ் மொழியில் உள்ளிடவும் முடியும். இயல்பிருப்பாக இந்த தொலைபேசிகளில் தமிழ் மொழி ஆதரவு இருப்பதினால் SMS, Email போன்றவற்றையும் தங்குதடையின்றி தமிழ் மொழியில் பார்க்கலாம்.

http://mayuonline.com/blog/wp-content/uploads/2010/04/NOkia-2730-139x300.jpg

நொக்கியா 2730

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நொக்கியா 2730 எனும் தொலைபேசியை சுமார் 11,000 ரூபாவிற்கு (110 USD) வாங்கினேன். இந்த தொலைபேசியின் சிறப்பு என்னவெனில் 3G வசதியுள்ளமை. 3G வீடியோ அழைப்புகளை எடுக்க முடியாவிட்டாலும் WCDMA வேகத்தில் இணையத்தில் உலாவ முடியும். அத்துடன் கணனியுடன் இணைத்தால் சாதாரண அகலப்பட்டை இணைப்பு வேகத்தில் இணையத்தில் உலாவ முடியும்.

இந்த நொக்கியா 2730 இல் தமிழ், சிங்களம், ஹிந்தி, வங்க மொழி ஆகிய மொழிகளுக்கு ஆதரவு வழங்ப்படுகின்றது. இதில் இயல்பிருப்பாகவே MSN Messenger, Opera Mini, Email Client போன்றவை இருக்கின்றமை சிறப்பியல்பு.

Gmail, Hotmail போன்றவற்றை செல் பேசியிலேயே வாசிக்க கூடியதாகவும் தமிழிலேயே பதில் போடக் கூடியதாகவும் இருப்பது இரட்டை மகிழ்ச்சி. நாங்கள் அதிகம் பாவித்தால் அதிகம் கேட்டால் தானே மற்றய புதிய மாதிரிகளிலும் தமிழ் ஆதரவு தருவார்கள். நானும் ஒரு தமிழ் ஆதரவு நொக்கியாவைப் பயன்படுத்துவதில் சந்தோஷம்

நொக்கியா 2730 பிடித்துவிடவே அது பற்றிய உதவிக் குறிப்புகளை ஒரு வலைப்பதிவில் எழுத தொடங்கியுள்ளேன் (http://mynokia2730.blogspot.com/). நீங்கள் அந்த தொலைபேசி பாவிப்பவரானால் நீங்களும் சென்று படித்துப் பயனுறுங்கள்.

இந்த வலைப்பதிவை நீங்கள் உங்கள் செல்பேசியில் காண இந்த முகவரிக்குச் செல்லுங்கள்.

பாரதி
10-04-2010, 12:01 PM
நல்ல சேதிகளை தருவதில் எப்போதும் மயூவிற்கு இணை மயூதான்!!
உங்கள் முயற்சி தமிழ் பரவுவதற்கு மேலும் ஒரு ஊன்றுகோலாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை.
மிக்க நன்றி மயூ.

மயூ
10-04-2010, 12:18 PM
நன்றி பாரதி அண்ணா :)

aravindhraju
13-04-2010, 05:38 AM
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றிகள்

அக்னி
13-04-2010, 06:17 AM
செல்பேசியை எப்படித் தமிழாதரவுச் செல்பேசியாக மாற்றுவது என்பதற்கு ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா?
தமிழ் எழுத்தை செல்பேசியினுள் நுழைத்துவிட்டால், குறித்த வகைச் செல்பேசிகள் தேடி அலையத் தேவையில்லையே...

opera mini மூலம், மன்றத்தினுள் உள்நுழைந்து பதிவும் இட்டிருக்கின்றேன்.
மன்றத்தில் ஒருங்குறிமாற்றி இருப்பதனால் சாத்தியப்பட்டது.

பார்க்க...
அலைபேசியூடாகத் தமிழ் எழுதலாம்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23160)
தமிழிற் குறுஞ்செய்தி... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23218)

மற்றும்படி தமிழ் எழுத்துக்கள் கட்டம் கட்டியே நிற்கின்றன...

இணையத்தில் வலைபோட்டுத் தமிழ் தேடிக் கொண்டுவரும் உங்களுக்கு எனது நன்றி!
தொடரட்டும் உங்கள் சேவை...

மயூ
14-04-2010, 02:57 AM
அரவிந்த் ராஜூ மற்றும் அக்னி நன்றிகள்.

அக்னி அவர்களே உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். எனது தொலைபேசியில் நேரடியாகவே தமிழில் உள்ளிடக் கூடிய வசதியிருப்பதால் இவ்வாறு மாற்றிகளைப் பயன்படுத்த தேவையில்லை.

தமிழ் எழுத்துருக்களை S60 ரக தொலைபேசிகளில் எவ்வாறு நிறுவுவது என்று இணையத்தில் பல குறிப்புகளை கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அதை எனது சகோதரனின் தொலைபேசியில் முயன்றும் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை.

அனைத்தும் பெட்டி பெட்டியாகவே தெரிகின்றது. ஏதாவது வழிமுறை தெரிந்தால் அறியத் தருகின்றேன்.

ஒரு முறை நொக்கியாவிற்கு உதவி கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களின் பதிலின் படி, அருகில் உள்ள நொக்கியா சேவை நிலையத்திற்கு தொலைபேசியை எடுத்துச் செல்லுமாறும் அங்கே சிறிய தொகையைக் கொடுத்து தமிழ் ஆதரவை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தனர்.

எங்களூரில் நொக்கியாவின் சேவை நிலையம் இல்லை. இருப்பவர்கள் முயற்சித்துப் பார்த்து அறியத் தாருங்களேன்.

அக்னி
14-04-2010, 07:08 AM
தமிழ் எழுத்துருவை அலைபேசியினுள் உள்நுழைக்க, நானும் பல தடவை முயன்று தோற்றுவிட்டேன்.

நொக்கியா சேவை நிலையங்களுக்குச் செல்லமுடிந்தால், முயற்சிக்கின்றேன்.

மயூ
14-04-2010, 02:46 PM
தமிழ் எழுத்துருவை அலைபேசியினுள் உள்நுழைக்க, நானும் பல தடவை முயன்று தோற்றுவிட்டேன்.

நொக்கியா சேவை நிலையங்களுக்குச் செல்லமுடிந்தால், முயற்சிக்கின்றேன்.
வெற்றி கிடைத்தால் அறியத் தாருங்கள் அன்பரே.

மயூ
09-08-2010, 08:27 AM
தமிழ் எழுத்துருவை அலைபேசியினுள் உள்நுழைக்க, நானும் பல தடவை முயன்று தோற்றுவிட்டேன்.

நொக்கியா சேவை நிலையங்களுக்குச் செல்லமுடிந்தால், முயற்சிக்கின்றேன்.
உங்கள் தொலைபேசியில் ஏதாவது ஒரு இந்திய மொழிக்கு ஆதரவு இருக்குமானால் நொக்கியா சேவை நிலையத்திற்குச் சென்று தமிழ் மொழி ஆதரவை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னையில் இருக்கும் ஒரு நண்பர் மூலம் அறிந்து கொண்டேன்.

mojahun
16-08-2010, 02:20 AM
அடிப்படைக் கைபேசிகளில் தமிழ் வசதியை நோக்கியா அளித்திருந்தாலும், கைக் கணிணி போன்ற smart phoneகளில் தமிழ் மொழிக்கான ஆதரவை அளிக்கவில்லை. எந்தவொரு கைபேசி நிறுவனமும் அளிக்கவில்லை என்பது வருந்தத் தக்கதாக உள்ளது. நானும் எனது கைபேசியில் பல முறைகளைக் கையாண்டும் எதுவும் பலன் தரவில்லை.

Mano.G.
16-08-2010, 07:00 AM
UCSC Sellinam இந்த மென் பொருள் அலைபேசியில்
நிறுவி குறுந்தகவல் அனுப்பலாம்.

ஆனால் இதே மென் பொருள் பதிவேற்றப்பட்ட
அலைபேசியில் தான் தமிழ் எழுத்துக்களை
காணலாம்,

பதிவிறக்க சுட்டி இதோ:
http://uploaded.to/file/g6n8e0


http://forum.dailymobile.se/index.php?topic=14830.0

அனுராகவன்
28-09-2010, 07:36 PM
மிக்க நன்றிகள்,,,,,,,,,,,