PDA

View Full Version : தாயகம்



சரோசா
09-04-2010, 07:54 PM
:traurig001: கடற்கரை ஓரத்தில் படகைப் பார்த்து நண்டு
கேட்டது, " வண்ண வண்ண மீன்களை எல்லாம் பிடித்துக் கொண்டு போனார்களே --------எதற்கு?
படகு சொன்னது
." அந்த.. மீன்களை எல்லாம் சின்னச் சின்ன
தொட்டிகளில் அடைத்து..இருக்கிறார்களாம்.....
அப்புறம் ?
"படகு சொன்னது
. " எட்டி எட்டி அலையை --- தேடுகிறதாம்
தொட்டிகளில் கடல் மீன்".........

இளசு
09-04-2010, 08:57 PM
நீலக்கடலும் நீர்த்தொட்டியும் ஒன்றாகுமா?
புகலிடம் தாய்மடி ஆகுமா?

தீரா ஏக்கங்கள் தீருமா?
ஏங்கியே ஆயுள் தீருமா?


---------------------------------------

பகிர்வுக்கு நன்றி சரோசா அவர்களே..

(மூலம் என்ன ? தெரிந்தால் பதியுங்கள்.)