PDA

View Full Version : என்னை போல் ஒருவன்:



umakarthick
08-04-2010, 04:11 PM
உங்களை போல ஒருவரை பார்த்திருக்கிறீர்களா???

தபு சங்கரின் கவிதை ஒன்று நியாபகத்திற்கு வருகிறது..

கண்ணாடியிலும் புகைப்படத்திலும்
அல்லாமல் எப்படியாவது என்னை
ஒரு முறை நேரில பார்த்திட வேண்டும்


இதை பத்தி என்னைகாது யோசிச்சிருக்கீங்களா? சினிமாவில் டபுள் ஆக்டில் அன்ணன் தம்பிக்கு மீசையில் இரண்டே இரண்டு முடியை விட வேற எந்த வித்தியாசமும் இருக்காது..

நமக்கு தெரிந்தது எல்லாம் இது தான்..சினிமா இரட்டையர்கள் அல்லது நிஜ வாழக்கையில் நாம் பார்க்கும் இரட்டையர்கள் ..இவையல்லாமல் உங்களை போல சாயலில் ஒரு வரை பார்த்திர்க்கிறீர்களா?

அந்த மாதிரி ஒருத்தரை பார்க்கும் போது உங்கள் ரியாக்சன் எப்படி இருக்கும்?


பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் போது பல பள்ளியில் இருந்து பதினொன்றாம் வகுப்பில் சேர நிறைய புதிய மாணவர்கள்..நான் அதே பள்ளியில் 6 ஆம் வகுப்பில் இருந்து படிப்பதால் மணி அடிக்கும் சுந்தர் அண்ணன் வரை எல்லாருக்கும் என்னை நல்லாத் தெரியும்

இப்படி என்னை நல்லாத் தெரிந்த எல்லாருமே என்னிடம் அடிக்கடி 'அன்னைக்கு நான் உன்னை பார்த்தேன் நீ பார்க்காம பிகு பன்னிட்டு போய்ட்ட..தென்காசி வாகினி தியேட்டர் பக்கத்துல நின்னு தம் அடிச்சிட்டு இருந்தது நீ தானே..அது ஒரு மாதிரி தியேட்டர் ஆச்சே' என பேச ஆரம்பிக்க குழம்பினேன்


இதுக்கிடையில் ஒரு நாள் என் அக்கா அப்பாவிடம் ஏதோ போட்டுக்கொடுத்து

நான் அடிவாங்குவதை பார்க்க ஆவலுடன் காத்திருந்தாள்..அப்பா ரொம்பவே கோவப்படுவார்..அடி செமையாய் கிடைக்கும்..'மந்தியூர் ஆத்து பக்கம் நீ ஏண்டா போன..எங்கே சட்டைய காட்டு ..நனையலையே எங்கேயோ போய் காயவைச்சுட்டு வந்திருக்கா என அடி வெளுக்க ஆரம்பிக்க எனக்கு முதன் முறையா அவனை பார்க்கனும் போல தோனியது


அவன் ஹிஸ்டரி க்ரூப்பில் இருந்தான்..நாங்க சயின்ஸ்,மாத்ஸ் ,கம்யூட்ட பசங்க ஒரே வகுப்பு ஹிஸ்டரி மட்டும் குஜாலாய் கோஎட் ..ஜாதிகள் இல்லையடி பாப்பா...


பேரு ஐயப்பன் நெத்தியில் சந்தனம்..வாய் முழுக்க புன்னகை வியாழக்கிழமை காலை இரண்டாம் பீரியட் ஹிஸ்டரி க்ரூப்புக்கும் எங்களுக்கும் பிடி பிரியட் ஒண்ணாய் வரும்


அவன் வகுப்பில் இருந்த என் நண்பர்கள் எங்களை லின்க் பண்ணி விட நாங்க அவங்களை டிலிங்க் பண்ணி விட்டு நடக்க ஆரம்பித்தோம்..அவனையும் சில பேர் நான் என தப்பாய் நினைத்து அணுகியிருப்பதை பற்றி சொன்னான்..கிரவுண்டில் இருந்து ஆற்றுப்பக்கம் நடந்தோம் அவன் பில்டர் பற்ற வைத்தான் அடிக்கிறியா என்றான்..அதற்க்கு முன்னர் ஒரே ஒரு முறை புகைத்திருக்கிறேன்..அப்போதெல்லாம் புகையை அதிகமாய் வெளிவிட்டாலே பெருமையாய் இருந்தது..நிறைய பேசினோம் அவன் வகுப்பு பெண்ணை காதலிப்பது பற்றி..நானும் அவனும் பல முறை கடந்து போனதை பற்றி..

அவன நேரம் கிடைக்கும் போதெல்லம் சந்தித்து பேசினேன்..பெருசாய் ஒன்றும் சுவாரசியமில்லை தான் என்று நாங்கள் இருவரும் ஒறே மாதிரி இருக்கிறோம் என பிறர் சொல்லும் ஒரு காரணம் அப்படி பேசுவதற்கு போதுமானதாயிருந்தது

ஒரு நாள் என் வீட்டுக்கு அழைத்து போனேன் அம்மாவிடம் காட்டினேன் ..பாரு என்னய மாதிரி இருக்கான்லா..அம்மாவின் ரியாக்சன் வேறு மாதிரியிருந்தது..நீயே பெருங்கொடுமை இதுல உனக்கு ஸெராக்ஸான்னு நினைத்திருக்கலாம் ஒரு வேளை..

அப்புறம் ஜீன்ஸ் படம் பார்த்தோம் ஒண்ணாய் தென்காசி பரதனில் இதுக்கிடையில் என் காதல் பிரச்சினை..படிப்பு பிரச்சினைன்னு சுத்தி வளைக்க ஐயப்பனிடம் தொடர்பு மெதுவாய் அறுந்தது..

கடைசியாக 12 த் ரிசல்ட்ஸ் அன்று நான் முதல் மதிப்பெண் என அறிந்து அழுந்தக் கைக்குலுக்கினான்..அன்று அவன் நெற்றியில் சந்தனம் இல்லை



பின்குறிப்பு 1:

இப்படி ஒருவன் என்னை மாதிரியே இருந்தான் என என் மனைவியிடம் ஒரு நாள் சொன்ன போது அவளுடைய ரியாக்சன் மேற்சொன்ன என் அம்மாவின் ரியாக்சனை ஒத்திருந்தது

பின்குறிப்பு 2:


அவனுக்கு எனக்கு ஏன் ஒரு பிணைப்பு ஏற்பட வில்லை என யோசித்து பார்த்தேன்..அதுக்கான காரணம் மேலே சொன்ன கவிதையிலேயே இருக்கிறது புரியாதவர்கள் கேட்க்கவும்

பின்குறிப்பு 3:
-----------------------------------------------------------------

நனையலையே எங்கேயோ போய் காயவைச்சுட்டு வந்திருக்கா என அடி வெளுக்க ஆரம்பிக்க ////////////////////////


நான் உண்மையில் அன்று செட்டிமடம் ஆற்றுக்கு தான் போயிருந்தேன் இடத்தை மாத்தி சொல்றாரே நைனா ன்னு சைடுல ஒரு யோசனை வேறு..



செட்டி மடம் ஆற்றை பற்றி இங்கே சொல்லியாக வேண்டும் ..ராமநதியிலிருந்து கிளம்பி பிரிந்து உருண்டு ஜம்வி ஜம்பி ஜம்பு நதியாய் பெயர் பெற்று

செட்டிமடத்தில் அணைக்கட்டி வயல்களுக்கு பாத்தியாய் மாறி கடைசியில் அப்படிக்கா போயி அம்பாசமுத்திரத்தி தாமிரபரணியில் இணையும்



செட்டிமடத்து பக்கத்திலேயே சுடுகாது அதனல் அந்தப்பக்கம் போக விட மாட்டார் அப்பா .ஆனால் எங்க பேவரைட் ஸ்பாட்டே அது தான்..இது மட்டுமில்லாமல் மொட்டைக்கிணறு, வாசகிரி மலை,ராம நதி டேம் எல்லாவற்றை பற்றியும் நிறைய கதையிருக்கிறது சொல்ல..


செட்டிமடம் பற்றி மட்டும் இங்கே கொஞ்சம்..

பாவாடை கட்டிகுளிக்கும் பெண்கள்,அவர்களை அடைக்காக்கும் ஆண்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்க்க அரை பாக்கெட் கோல்ட் பில்டர் ஒரு ரப்பர் பந்துடன் நாங்கள்..கேட்ச் பிடித்து விளையாடுகிறோம் என் ஆடை நனைத்து அதை காயவைத்து அப்பா வரும் முன்ன்ரே வீடு போய் சேர்ந்து என மறக்க முடியாத வயசு

இந்த பத்திகள் பதிவின் நீளம் கருதி கட் பண்ணப்பட்டது :)..படம் முடிந்து பின் அந்த படத்திலிருந்து நீக்க பட்ட காட்சிகள் போட படுவது ஒரு டிரை இங்கே மத்த படி நீங்க தப்பா நினைச்சா அதுக்கு ரஞ்சிதா பொறுப்பல்ல!