PDA

View Full Version : ஸ்போக்கன் இங்கிலிஷ்



umakarthick
08-04-2010, 04:10 PM
12 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் டோட்டலுக்காக படிக்கும் ஒரு பாடமாகவே இருந்தது பெரும்பாலும் கிராம பள்ளிகளில் ஆங்கிலத்தை மதிக்கவே மாட்டார்கள் தமிழ் வாத்தியார்க்கு கூட ஆங்கில வாத்தியாரை பிடிக்காதுன்னா பாருங்களேன்


எனக்கு 10 ஆம் வகுப்பு வரை ஆங்கிலத்தின் ஒரு ஈடுபாடு இருந்தது அதற்கு பின் வேற பல விஷயங்களில் ஈடுபாடு வந்தமையால் ஆங்கிலம் கசக்க தொடங்கியது

அதுவும் 11 ஆம் 12 ஆம் வகுப்பில் ஆங்கில எடுத்த வாத்திக்கு ஆங்கிலமே தெரியாது புத்தகத்தில் என்னமோ இருக்கும் இந்தாளும் என்னமோ ஒப்பிப்பாரு அந்த பாட வேளையில் பெரும்பாலும் மசூதின் டிபன் பாக்ஸில் சோற்றுக்கிடையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மட்டன் துண்டுகளை லாவகமாக திருடுவதும் முன் பெஞ்சு பையன்னுக்கு டஸ்டரின் கிழிந்த துணியால் வால் கட்டி விடுவதுமே நடக்கும் ..நான் தட்டி தடுக்கி 12 த்தில் 174 எடுத்து விட்டேன் ..

ஆனால் அத்தோட ஆங்கில என்னை விட வில்லை
தமிழில் ஆர்வம் இருந்தமையால் 10 ஆம் வகுப்பில் டிஸ்க்டிக்ட் முதல் வந்தமையால் 12 த்திலும் ஸ்டேட் பர்ஸ் வாங்கனும்டோய் கனா கண்டு மண்ணைக்கவ்வினேன்..

கல்லூரியில் ஆங்கிலம் தான் பேசுவார்கள் ஆங்கிலத்தில் தான் படம் எடுப்பார்கள் ஆங்கிலத்தில் தான் தும்முவார்கள் என கேள்விப்பட்டு ஈரக்கொல நடுங்க ஆரம்பித்தது

ஆனால் பயந்தது போல அவ்வளவாய் ஆங்கிலம் யாரும் பேச வில்லை பெரும்பாலும் எல்லாம் பட்லர் ஆங்கிலம் தான் பேசினார்கள் ஒரு மேடமை தவிர

அது 'சி' எடுத்தது (அழகாக இருக்கும் கண்ணை உருட்டி உருட்டி பார்க்கும்)அந்த மேடமை எனக்கு மிகப் பிடித்திருந்தது ஆனால் அதுக்கு என்னை ஏனோ பிடிக்க வில்லை ..அடிக்கடி ஆங்கிலத்தில்கேள்வி கேட்டு நிப்பாட்டி விடும்

நான் என் நியாபக பரணில் இருந்து அதற்கான பதிலை எடுத்து வருவதற்குள் அது என்னை நக்கலடித்து விட்டு அடுத்தவனை கேட்க ஆரம்பித்து விடும் ..அவமானமும் வேதனையும் பிய்த்து பிடுங்க அப்போ பேமஸான பிசினஸான ஸ்போக்கன் இங்கிலிஷில் சேரலாமென முடிவெடுத்தேன்

காந்திபுரத்துக்கு தான் போயாகனும் விவேகானந்தா மாதிரி இடங்களுக்கு போனால் எங்கே டிவியில் காமித்து பல பெண்கள் லவ் பண்ண ஆரம்பித்தி விடுவார்களோ என பயந்தோ என்னவோ சேக்ஸ்பியர் னு ஒரு இடத்தில் சேர்ந்தேன்.

ராஜ ராஜேஸ்வரி டவரில் பீடாக்கரை படிகளில் ஏறி இரண்டாவது மாடிக்கு போனால் ஒரு பிரவுசிங் செண்டர் வரும் அங்கே பிரவுசிங்கை தவிர மற்ற எல்லாம் பண்நுவார்கள் நமக்கு அது வேணாம் இன்னும் கொஞ்சம் ஏறி மூணாவது மாடிக்கு போங்க இடது பக்கம் ஒரு டேபில் அதுக்கு முன்னாடி ஒரு தடியன் வாயில் பாக்கோடு அதுக்கு அடுத்த பெரிய ஸ்க்ரீன் அதை திறந்து பார்த்தால் ஒரு ஆண்ட்டி போர்டில் கிறுக்கிட்டு இருந்தது அது தான் மேடம் அப்போ வாயில பாக்கோட அவரு சாராம்

ஸ்நேகா படம் போட்ட ஒரு நோட்டு போக வர 20ரூபா தம் எக் பப்ஸ் டி சாப்பிட 20 ரூபா டெய்லி கிளம்பிடுவேன் கோவைப்புதூரிலிருந்து 3 டியில்.

அந்த மேடம் பார்க்கும் போது நல்லவே தெரிந்தது ஹிந்தி வாலான்னு பெரிய சுரிதார் கையில் மெகந்தி முகத்தில் வியர்வை சால் போட்டிருக்காது ஒரு வேளை அதை தான் முன்னாடி ஸ்கீரீனா போட்டிருகாங்களோன்னு எனக்கு ரொம்ப நாள் டபுட்.

ஒளிமயமான எதிர்காலம் இருக்குடா உனக்கு நீ மட்டும் இங்கிலிஷ் கத்துக்கிட்டேன்னா லிஜிலிஜி மாத்யூஸிடம் ஓட்ட மலையாளத்தில் பேசுவதை விட்டு ஸ்டையாய் பேசலாம் என கலர் கனவுகள் பலவுடன் போக ஆரம்பித்தேன் கிளாசுக்கு..ஆனால் அங்கேயும் ராமா கில்டு பை ராவணா என ஆக்டிவ் வாய்ஸ் பேசிவாய்சினார்கள் செம டென்சன் ஆச்சு இதெல்லம் 7 ஆம் வகுப்பிலே முடிச்சாச்சுன்னு ரெண்டு நாள் கிளாசுக்கு மட்டம் போட்டேன்

ஆனால் அந்த பாக்கு வாயன் 300 ரூபாய் வாங்கிட்டானேன்னு ம்றுபடியும் போனேன் இப்போ சிம்பில் காம்பவுன்ட் க்கு வந்திருந்தார்கள்
சார்(மிஸ்டர்.பாக்கு) ஒவ்வொரு நாளும் பீஸ் கொடுத்திடியான்னு கேட்பான் அவனுக்கு பதில் சொல்ல எரிச்சலா இருக்கும்

வகுப்பு போரடிக்கையில் மெதுவா பக்கத்திலிருந்து குஜிலிகளிடம் பேசியதில் ஒரு பெண் காருண்யா இன்னொன்னு அமிர்தான்னு தெரிய வர பரவாயில்ல உனக்கு கம்பெனி இருக்குன்னு தேத்திக்கிட்டேன்

என்னைய இந்த கிளாசுக்கு சேர்த்து விட்ட என் கிளாஸ் பையன் பின்னர் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டதால் பாக்கு என்னிடம் அவனை பற்றி நோண்ட ஆரம்பித்தான் அவனிடம் பீஸ் வாங்கி தருமாறு சொன்னான்

இதுக்கிடையில் பாடம் சூடுபிடிக்க நான் ஸ்போக்கன் இங்கிலிஷில் ஏ பி சி டி படிக்க ஆரம்பித்திருந்தேன்..மேடமும் சளைக்காமல் சகித்து என் மொக்கை டபுட்டுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருந்தது அடுத்த மாதம் பீஸ் தரும் நாள் வந்தது

எப்போது வாசலில் இருக்கும் சாரை காணலை மேடம் வகுப்பின் இடயில் டக்குன்னு என் பக்கம் வந்து கார்த்தி பீஸ் கொண்டு வந்திருக்கியான்னு கேட்டு வாங்கி அவசரமா சுடிதாரில் மறைத்துக்கொண்டது

இன்னொரு நாள் மேடம் மூஞ்சியெல்லாம் வீங்கி ரோஸ் பவுடர் போட்டிருந்தது

கொஞ்ச நாட்கள் போக நானும் ஏதோ கத்துக்கொண்டிருந்தது போல தோன ஆரம்பித்த அந்த சுபமங்கள நன் நாளில்
வழக்கம் போல வகுப்புக்கு போயிருந்தேன் பார்த்தால் வகுப்பு சட்டர் போட்டு மூடியிருந்தது சாலையும் சாரையும் கானோம்

பக்கத்திலிருந்த மிக்ஸ் ரிப்பேர் கடையில் விசாரித்தால் மேடமுக்கு சாருக்கும் ரிப்பேரானது தெரிய வந்தது இனிமே திறக்க மாட்டார்ககள் எனவும் வாடகை பாக்கி எனவும் தெரிய வந்தது

அப்புறமாய் லிஜி மாத்யூஸை மலையாளம் நன்றாக படிக்கும் எம் சி ஏ பையன் கரக்ட் பண்ணிட்டான்(ஸ்போக்கன் மலையாளம் போயிருக்கலாமோ??)

நானும் பட்டு பட்டு ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டேன்(ஆனால் அதை எங்கேயும் யூஸ் பண்ணுவதில்லை என்பதை இங்கே தேவையில்லாத விஷயம்)

ஆங் அப்புறம் அந்த ஸ்நேகா நோட்டை இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்:)

rajesh2008
08-04-2010, 04:47 PM
இனிமையான அனுபவம் உங்களுக்கு லிஜி மடங்கியிருந்தால், அவள் தமிழ் படித்திருக்கலாம், நீங்கள் மலையாளம் படித்திருக்கலாம்.எங்கட பறங்கிமலை ஜோதிபோல் அங்கே கோவையில் ஏதும் டியூசன் சென்டர் இல்லையா?

அக்னி
09-04-2010, 06:27 AM
நல்லாத்தான் போயிருக்கு பிஸினெஸு...

சிட்டுவேஷன் சாங் மாதிரி, சிட்டுவேஷன் நோட் புக் (அதாங்க, சினேகா பட நோட்டு)...
காந்தித்தாத்தா நோட்டு மாதிரியோன்னு நெனச்சு ஒரு நிமிஷம் குழம்பிட்டேன்.

ஆங்கிலம் புரிய ஆரம்பிக்கறபோது சொல்லாம கொள்ளாம நிறுத்தினதுக்கு,
கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்டிருக்கலாமே...

ஹூம்...
ஸ்போக்கன் இங்கிலிஷ் என்றதாலயோ என்னமோ, இந்தப் பதிவிலயும் தமிங்கிலிஷ் அதிகமா போச்சுது...

பாரதி
09-04-2010, 07:14 AM
நினைவலைகளை விட....

வாத்தி, இந்தாளு, அது, தடியன், பாக்குவாயன் என பாடம் கற்பித்தவர்களை அழகுத்தமிழில், அஃறிணையில் நீங்கள் விளித்திருப்பதைப் படிக்கும் போது........

என்ன சொல்ல..... ???

அக்னி
09-04-2010, 07:56 AM
பாரதி அண்ணா குறிப்பிட்டது என் மனதிலும் உறுத்தியது.

ஏமாற்றுபவர்களைக் குறித்து வருவதை ஓரளவு சகிக்க முடிந்தாலும்,

அது 'சி' எடுத்தது (அழகாக இருக்கும் கண்ணை உருட்டி உருட்டி பார்க்கும்)அந்த மேடமை எனக்கு மிகப் பிடித்திருந்தது ஆனால் அதுக்கு என்னை ஏனோ பிடிக்க வில்லை ..அடிக்கடி ஆங்கிலத்தில்கேள்வி கேட்டு நிப்பாட்டி விடும்

இதனைச் சகிக்க முடியவில்லைதான்.

குணமதி
09-04-2010, 10:18 AM
நீங்கள் எழுதியதைப் படிக்கும் போது, இவ்வளவு ஆங்கிலம் கற்றுக் கொண்டிருக்கிறீர்களே என்று பொறாமையாக இருந்தது!

கலையரசி
09-04-2010, 11:43 AM
ஆசிரிய்ரைக் கேவலமாக விளித்திருப்பது இடரினாலும், உங்களது அனுபவத்தை நகைச்சுவை இழையோட தந்த விதம் நன்று. ஆங்கிலம் கிடக்கட்டும். தமிங்கிலிஷைக் குறைத்து அழகு தமிழில் எழுத முயலுங்கள். பாராட்டு.

விகடன்
09-04-2010, 06:17 PM
ஆங்கிலமா?
யாருக்குத்தான் அது பிடிக்கும்?
மொழியாக படித்திருந்தால் எப்போதோ ஏறியிருக்கும். அதை ஒரு சுமையாகவே படிப்பிப்போரும் படிப்போரும் கையாளுவதால் ஜென்மத்துக்கு படிக்கமுடியாது.
எனக்கும் ஆங்கிலத்துக்கும் சரியே வராது. நல்லவேளை, ஸ்போக்கின் இங்கிலீஸ் என்று இதுவரை ஒரு சதமேனும் தொலைக்கவில்லை.

இளசு
09-04-2010, 07:55 PM
உமாகார்த்திக் அவர்களே

எண்பது சதம் அப்படியே சுஜாதா போன்ற தேர்ந்த எழுத்தாளரின் அனுபவப்படைப்பு போல மிகவும் கவர்ந்தது.


பாரதி சுட்டிய இடங்கள் இருபது சதம் - சுகமான நையாண்டிக் கோட்டை மெல்ல உரசி அப்புறம் போகும் அபாயத்துடன்.

கொஞ்சம் லாவகமாய் அவ்வகை இடங்களைக் கையாண்டால், முழு சுகமே..

உங்கள் எழுத்துத் திறமைக்கு நல்ல சான்று.


பாராட்டுகள்..


இன்னும் பல நினைவலைகள் தொடரட்டும்..


( கொஞ்சநாளாய்க் காணோம் நீங்கள்.... இல்லையா?)

sakthim
11-04-2010, 04:03 AM
வரிக்கு வரி நக்கல் நையாண்டி, அழகான அனுபவம்!!!

Akila.R.D
13-04-2010, 04:34 AM
நல்ல அனுபவம் கார்த்திக் உங்களுக்கு...

umakarthick
13-04-2010, 03:38 PM
நன்றி அனைவருக்கும் :)