PDA

View Full Version : போதும் அம்மா...



simariba
08-04-2010, 12:39 AM
போதும் அம்மா...

மடி கணினியை
மடியை விட்டு
தூக்கி எறி....

என்னை
வைத்துக்கொள்....

தொலைக்காட்சி
பேசியது போதும்
நீ பேசு என்னுடன்...

பொம்மைகளோடு என்
விளையாட்டு போதும்
நீ விளையாடு என்னுடன்...

வலை பதிந்தது போதும்
என் கன்னத்தில்
முத்தம் பதி...

போதும் அம்மா....

Akila.R.D
08-04-2010, 04:38 AM
தாய் வேலைக்கு சென்றால் குழந்தையின் நிலைமை இதுதான்...

அதுவும் அந்தத்தாய் கணிப்பொறி வல்லுனராக இருந்தால் குழந்தைக்கு தாயின் முகமே மறந்து விடும்...

அமரன்
08-04-2010, 05:30 AM
தோப்பில் உள்ள தனி மரம் மாதிரி நம் குழந்தைகள் வளர்வது கொஞ்சம் வேதனை தருவதுதான்.

அழகிய நிலைப்படக்கவிதை.

பாராட்டு அன்பரே

simariba
08-04-2010, 06:49 AM
பாராட்டுக்கு நன்றி அமரன், நன்றி அகிலா.

கீதம்
08-04-2010, 07:51 AM
நிஜம் சொல்லும் கவிதை.
இன்று......தாய்.
நாளை......குழந்தை!
கணினி விளையாட்டில் கவனம்...
கண்ணெடுத்தும் பாராது தாயை...
காலச்சக்கரத்தின் நிலை இதுதான்.

பாராட்டுகள் அபி. தொடர்ந்து எழுதுங்கள்.

கலையரசி
08-04-2010, 09:04 AM
வேலைக்குச் செல்லும் பெண்ணின் குழந்தைக்கு ஏற்படும் ஏக்கத்தை அந்தக் குழந்தையின் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்திய விதம் நன்று. பாராட்டு அபி. மேலும் எழுதுங்கள்.

அக்னி
08-04-2010, 09:35 AM
கணினி மயப்படுத்தப்பட்ட
வாழ்க்கையில்,
மாயமாகித்தான் போகின்றது
வாழ்க்கை.

வாழ்க்கையிற் கணினி அவசியம்தான்.
இருக்கட்டும்.
ஆனால்,
கணினிக்குள் வாழ்வது,
வாழ்வைத் தொலைத்துவிடும்.

நானும் திருந்தவேண்டும்.
ஆனால்,
அதைக்கூடக் கணினியிற்தானே சிந்திக்கின்றேன்...

பாசத்திற்கேங்கும் பிள்ளைகளிடம்,
பாசத்திற்கேங்குகையிலும்,
நிரப்பப்போவது கணினிதான்...
இதுதான் நிகழ்கால உண்மை...

கணினியை ஒதுக்க முடியாது.
கணினிக்கான நேரத்தை ஒதுக்கவேனும் முயற்சிப்போம்.
(என்னையும் சேர்த்துத்தான்...)

சாத்தியமாகுமா...???

பராட்டு simariba அவர்களுக்கு...

simariba
09-04-2010, 02:51 AM
பாராட்டுக்கு நன்றி நண்பர்களே!

செல்வா
09-04-2010, 05:46 AM
காலத்திற்கேற்ற சிறிய சீரிய கவிதை...
கவிதை சிறிது ஆனால் காரம் பெரிது...

வாழ்த்துக்கள் சிமரிபா.

simariba
09-04-2010, 01:28 PM
நன்றி செல்வா.

govindh
09-04-2010, 01:51 PM
"வலை பதிந்தது போதும்
என் கன்னத்தில்
முத்தம் பதி..."

குழந்தையின் ஏக்கம் ...
நெஞ்சில் அறைகிறது...

கவி நன்று...வாழ்த்துக்கள் ..

குணமதி
09-04-2010, 05:05 PM
குழந்தையின் குரலில் கொடுக்கப்படும் சூடு!

பா.சங்கீதா
10-04-2010, 07:38 AM
ஒரு குழந்தையின் உண்மையான ஏக்கம்.....
பாராட்டுகள் :)

simariba
13-04-2010, 07:32 AM
நன்றி கோவிந்த், குணமதி, சங்கீதா.

ஆதி
13-04-2010, 07:41 AM
இன்றைய குழந்தைகள் அனைத்தையும் புரிந்து கொள்கிறார்கள், என்றாலும் பெற்றவர்களும் அவர்களின் ஏக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும், பிள்ளைகளுக்கென்று நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் செலவிட வேண்டும்..

வாழ்த்துக்கள் அபிராமி அவர்களே...

simariba
15-04-2010, 10:29 AM
வாழ்த்துக்கு நன்றி ஆதன்.