PDA

View Full Version : ஹைக்கூ-1



gvchandran
07-04-2010, 10:39 PM
நீதிபதி


வீதியில் சீட்டாடிய
வீராசாமிக்கு 500ரூ அபராதம்
விதித்தவரோ
நைட் கிளப்பில் தினம்
சீட்டாடும் சீமான்

அமரன்
08-04-2010, 05:35 AM
நீதிபதிகள் தேசநீதியைக் கடைப்பிடிக்கிறார்களே தவிர நெஞ்சுக்கு நீதியை அல்ல.

சூதாட்டம் அழிவின் ஆட்டம் எனில் ஒட்டு மொத்தமாக தடை செய்ய வேண்டும் சட்டசபை.

ஒரு வேளை நீதிபதி அபராதம் விதித்தது தெருவில் விளையாடி மக்களுக்கு இடையூறு செய்ததால் இருக்குமோ.

நறுக் குறுங்கவிதை சந்திரன்.


என் பாராட்டு.

கலையரசி
08-04-2010, 09:07 AM
ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி என்பது எழுதப்படாத சட்டம் நம் நாட்டில்!
பாராட்டு சந்திரன்.

aren
08-04-2010, 09:09 AM
கிளப் வைத்திருப்பவர்கள் அதற்கான அனுமதி பெற்றே கிளப் நடத்தமுடியும், ஆனால் தெருமுனையில் இருந்து அதை அனுமதியில்லாமல் செய்வது தவறு.

ஒரு நீதிபதி மீதி குற்றம் சுமத்துவது தவறு என்பது என் கருத்து.

அக்னி
08-04-2010, 10:14 AM
ஆரென் அண்ணா சொல்லுவதுபோல,
சட்டமீறல் நியாயப்படுத்தப்படக்கூடாதுதான்...

ஆனால்,
பணக்காரர்களுக்கு நைட்கிளப்போல
ஏழைகளுக்கு ரோட்கிளப்பும்
இருந்தால்,
சட்டப்படி எல்லோரும் விளையாடலாமே...

ஏழையானதால்
ராஜாவைப் பார்க்க
முடியவில்லை,
சீட்டுக்கட்டிற் கூட...

‘நறுக்’ ஹைக்கூ...

ஆதி
08-04-2010, 10:24 AM
நா.காமராசன் கவிதை வரியை ஞாபகமூட்டுகிறது இந்த கவிதை..

குடிசைக்கு தடை
மாளிகைக்கு பர்மீட்டு..

சாராயத்தை பற்றி சொல்லுவார்..

நீங்க சீட்டாட்டத்தை பற்றி சொல்றீங்க..

சூதாட்டம் பாரத போருக்கு காரணமானது.. இன்று பல போர்கள் பாரதத்தில் நடந்து கொண்டிருக்கின்றன, சின்ன வித்யாசம் பாஞ்சாலிகளின் தாலிகள் மார்வாடி கடைகளில்..

கரு.. கருத்து நன்று.. ஆனால் இது ஹைக்கூ இல்லை..

வாழ்த்துக்கள் சந்திரன்..

அக்னி
08-04-2010, 03:34 PM
இது ஹைக்கூ இல்லை..
:eek: :eek: :eek:
அப்போ குட்டிக் கவிதை மட்டும்தானா... :confused: