PDA

View Full Version : தமிழே வாழி!



குணமதி
07-04-2010, 04:49 AM
தமிழே வாழி!


அன்னை மொழியே! அறமுணர்த்தும்

..........அறிவே, உணர்வே அரும்பண்பே!

முன்னைப் பழமைப் பெருமையுறை

..........முதல்தாய் மொழியே, செந்தமிழே!

பின்னைத் தமிழர் பேதைமையால்

..........பெருமை குலைந்த பேரழகே!

உன்னை ஆய்ந்தே அயல்நாட்டார்

..........உரைத்தார் நீசெம் மொழியென்றே!



ஒப்பில் கழக இலக்கியமும்

..........உலகிற் சிறந்த முப்பாலும்

துப்பில் திகட்டா பாவியங்கள்

..........சுவையாய் ஐந்தும் சுமந்தவளே!

தப்புத் திருத்தித் தருங்கம்பன்

..........தகைசால் பாவும் பெருங்கதையும்

செப்பஞ் சிறக்கத் தேர்ந்தணியும்

..........திருவாந் தமிழே வாழியவே!

செல்வா
07-04-2010, 07:10 PM
உலகில் இரண்டு விடயங்களைப் பற்றி எத்தனை முறை பாடினாலும்
சலிக்காது...

ஒன்று காதல் இன்னொன்று தாய்...

தாய் மொழியைப் பற்றிப் பாடும் போது மட்டும் சலித்திடுமா என்ன?

நல்ல கவிதை குணமதி...

வார்த்தைகள் உங்களுக்கு மிகவும் வசப்படுகின்றன.

வெறும் வாழ்த்தோடு நின்று விடாமல் இன்னும் நாம் செய்யவேண்டிய செயல்களையும் நினைவு படுத்தினால் கவிதை இன்னும் செழிக்குமே...

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

இளசு
07-04-2010, 09:21 PM
உண்மைதான் செல்வா

தமிழை எத்தனை முறை வாழ்த்திப்பாடினாலும், படித்தாலும் திகட்டுவதில்லை..


குணமதி அவர்களுக்குப் பாராட்டுகள்.

செம்மொழி மாநாட்டுக் குழுவினர்க்கு அனுப்பத்தக்க அருமையான படைப்பு.

குணமதி
08-04-2010, 01:28 AM
ஆக்கமான கருத்துரைத்தீர்கள்.

நன்றி செல்வா.

குணமதி
08-04-2010, 01:29 AM
மிக்க நன்றி இளசு.

கீதம்
08-04-2010, 07:41 AM
அழகுத்தமிழில் அன்னைத்தமிழுக்கு ஒரு வாழ்த்துப்பா. மிக நன்று. பாராட்டுகள் குணமதி அவர்களே.

ஆதி
08-04-2010, 08:12 AM
விருத்தத்தில் அறுசீர் கொண்டு
...விண்தொட்ட தமிழன் னைக்கு
நறும்மொட்டு வார்த்தை தூவி
...நயமான வாழ்த்து பாடி
கருத்ததனில் ஏற்றி வைத்த
...கவிகுணம திக்கு வாழ்த்து
விருத்தத்தின் தளைகெ டுக்க
...விளைந்திருக்கு ஓர்சீர் மட்டும்..

//உன்னை ஆய்ந்தே அயல்நாட்டார்

..........உரைத்தார் செம்மொழி நீயென்றே!//

மா இலக்கணம் தானே வரும், விள இலக்கணம் வந்திருக்கு கவனிக்கவும்..

பாராட்டுக்கள் குணமதி..

கலையரசி
08-04-2010, 09:21 AM
"பின்னைத் தமிழர் பேதைமையால்

.........."

தமிழரின் பேதைமை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகும் இந்நாளில் தேவையான ஒரு வாழ்த்துப்பா. பாராட்டுக்கள் குணமதி அவர்களே!

குணமதி
08-04-2010, 04:50 PM
விருத்தத்தில் அறுசீர் கொண்டு
...விண்தொட்ட தமிழன் னைக்கு
நறும்மொட்டு வார்த்தை தூவி
...நயமான வாழ்த்து பாடி
கருத்ததனில் ஏற்றி வைத்த
...கவிகுணம திக்கு வாழ்த்து
விருத்தத்தின் தளைகெ டுக்க
...விளைந்திருக்கு ஓர்சீர் மட்டும்..

//உன்னை ஆய்ந்தே அயல்நாட்டார்

..........உரைத்தார் செம்மொழி நீயென்றே!//

மா இலக்கணம் தானே வரும், விள இலக்கணம் வந்திருக்கு கவனிக்கவும்..

பாராட்டுக்கள் குணமதி..

பாட்டால் பாராட்டியதற்கு முதலில் நன்றி.

நீங்கள் சொன்னது சரியே!

உரைத்தார் நீசெம் மொழியென்றே! என்றே எழுதினேன்.
படி எடுக்கையில் தவறினேன்.
திருத்திவிடுகிறேன்.
மிக்க நன்றி.

குணமதி
08-04-2010, 04:53 PM
"பின்னைத் தமிழர் பேதைமையால்

.........."

தமிழரின் பேதைமை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகும் இந்நாளில் தேவையான ஒரு வாழ்த்துப்பா. பாராட்டுக்கள் குணமதி அவர்களே!

மிக்க நன்றி.

குணமதி
08-04-2010, 04:57 PM
அழகுத்தமிழில் அன்னைத்தமிழுக்கு ஒரு வாழ்த்துப்பா. மிக நன்று. பாராட்டுகள் குணமதி அவர்களே.

மனமார்ந்த நன்றி.

govindh
08-04-2010, 05:35 PM
தமிழே வாழி.....
கவி படைத்த குணமதி அவர்களுக்குப் பாராட்டுக்கள்...

குணமதி
08-04-2010, 06:30 PM
நன்றி கோவி.

kavitha
28-04-2010, 06:18 AM
மரபுத்தமிழ் பாட்டுக்காக 100 இபண அன்பளிப்பு. இன்னும் பல மரபுக்கவி எழுத வாழ்த்துகிறேன். :))

வசீகரன்
28-04-2010, 09:45 AM
தமிழுக்கும் அமுதென்று பேர்..
அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..

தமிழ்த்தாய்க்கு வாழ்த்து கூறி கவி அமைத்திருக்கும் குணமதிக்கு என் இதயம் மகிழ்ந்த நன்றிகள்..!

குணமதி
29-04-2010, 02:52 AM
மரபுத்தமிழ் பாட்டுக்காக 100 இபண அன்பளிப்பு. இன்னும் பல மரபுக்கவி எழுத வாழ்த்துகிறேன். :))

பாராட்டுக்கும் பணஅளிப்பிற்கும் மனமார்ந்த நன்றி.

மரபுப்பாவிற்கு வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. தொடர்ந்து எழுதுவேன்.

மீண்டும் நன்றி.

குணமதி
29-04-2010, 02:53 AM
தமிழுக்கும் அமுதென்று பேர்..
அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..

தமிழ்த்தாய்க்கு வாழ்த்து கூறி கவி அமைத்திருக்கும் குணமதிக்கு என் இதயம் மகிழ்ந்த நன்றிகள்..!

நன்றி வசீகரன்.