PDA

View Full Version : மருத்துவ ஆலோசனை தேவைgvchandran
07-04-2010, 04:10 AM
என் 17 வயது பெண் ஆஸ்துமா
நோயினால் தினமும் அவதிப்படுகிறாள்.
இதற்கு யாராவது நல்ல சிகிச்சை சொல்லுங்க ப்ளீஸ்

praveen
07-04-2010, 10:10 AM
இம்மாதிரி பிரச்சினைகளுக்கு மருத்துவர் கிசிக்சையே சிறந்தது, இம்மாதிரி பாரத்தில் கேட்டு சரி செய்ய இயலாது. ஏனென்றால் அவர்கள் தான் நோயாளியை நேரிலே பரிசோதித்து என்ன நிலையில் இருக்கிறது, வேறு என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது, அவர் உடல்நிலை கருத்தில் கொண்டு உரிய மருந்துக்களை பரிந்துரைப்பர்.

இருந்தாலும், உங்கள் கேள்விக்கு பதிலாக இனையத்தில் கண்டதை இங்கே தந்திருக்கிறேன், படித்துக்கொள்ளுங்கள்.


வைத்தியக்குறிப்பு வலைப்பூவில் இருந்து


ஆஸ்துமா..
ஆஸ்துமா என்றால் என்ன?
இது ஒரு பரவலான நோய்.
மூச்சுக்குழாய், அதன் கிளைகள் எதிர்பாராத தருணங்களில்
சாதாரண நிலை (விட்டம்) யில் இருந்து, திடீரென
சுருங்கி விடும் நிலை. மீண்டும் மீண்டும் நாம் அழைக்காமலேயே
வலிய நம் நுரையீரல் வீட்டுக்கு வந்து வந்து போகும் வேண்டாத விருந்தாளி.
அவர் இல்லாத நேரம் வீடு நல்லாகவே இருக்கும்!!

இந்த மாற்றம் சில மணி நேரங்களில்...ஏன் சிலருக்கு
சில நிமிடங்களிலேயே கூட நிகழ்ந்துவிடும்.
மூச்சுக்குழாயின் (Air-ways, Trachea and its branches..--> Bronchi)
அகவணிச் சவ்வு ( Bronchial Mucosa) அழற்சியால்
சிவந்து, வீங்கி, நீர்ச் சளி தேங்கி இந்த விட்டக்குறுகல் நேர்கிறது.

ஏன் வருகிறது ?

இந்த அழற்சிக்கு முக்கியமான தூண்டுதல்கள்:
வீட்டு தூசி
போர்வை, தலையணை " அழுக்கு"
இலை, பூ மகரந்தங்கள்
செல்லப்பிராணிகளின் கேசம், காய்ந்த எச்சில்
புகை (அடுப்பு சமையல் அறையிலோ, அப்பாவின் வாயிலோ இருக்கலாம்)
உடற்பயிற்சி
குளிர்க்காற்று
பி.எஸ். வீரப்பா, மதன்பாப் பாணி சிரிப்பு
மனநிலை சோர்வு, தளர்வு ( பிளஸ் 2 தேர்வுகள்...!!!)
இவற்றின் ஒட்டுமொத்த பெயர் : ஒவ்வாதவை (Allergens)


யாருக்கு வரும் ?

எந்த வயதிலும் வரலாம்.
சிறுவயதில் வந்தால், டீன் ஏஜில் குறைந்து மறைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.
உறவினருக்கு இருந்தால், நமக்கு வரும் சாத்தியம் சற்று அதிகம்.

நோய்க்குறிகள் என்ன ?

வறட்டு இருமல்
நார் போல் துப்ப சிரமம் தரும் சிறு சளி
விசில் போல் மூச்சுடன் சப்தம் (Wheezing)
சாதாரணப் பணிகளுக்கே மூச்சு வாங்குதல்
சும்மா இருக்கும்போதே மூச்சு (வெளியே) விட சிரமம்


ஆஸ்துமா: நிவாரணம் என்ன ?

பொது அறிவுரை:
1) நல்ல குடும்ப மருத்துவரின் ஆலோசனை
2) அவர் பரிந்துரையில், தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவரின் அவதானிப்பு
3) புகையில்லா சூழல்
வாகனப் புகையை குறைக்கத்தான் முடியவில்லை.
வாய் விடும் புகை, ஆஸ்துமா நோயாளிகள் அருகில் போகாமல் தவிருங்கள்.
பொதுவாக, Passive Smoking -ன் கேடுகள், குறிப்பாக குழந்தைகள்
பாதிக்கப்படுவது இன்னும் பரவலாக பலரால் அறியப்படவில்லை.
ஒரு அறை / காருக்குள் குழந்தை இருந்தால்... தயவுசெய்து
புகைக்காதீர்கள்/ புகைக்க அனுமதிக்காதீர்கள்.
4) ஆரோக்கியம் தரும், உங்கள் உடலுக்கேற்ற உடற்பயிற்சி
5) மருத்துவர் ஆலோசனைப்படி, மருந்துகளை சரியாகப்
பயன்படுத்துங்கள் - உடல் நலமாய் இருந்தாலும்.


மருந்துகள்:

Inhalers __> இன்ஹேலர்ஸ் (மூச்சில் உறிஞ்சுபவை)

1) தீர்ப்பவை = Relievers
வந்துவிட்ட மூச்சுத்திணறலை உடனடியாக கட்டுப்படுத்த/ போக்க.
சுருங்கிய காற்றுக் குழாய்களின் தசைகளை தளர்த்தி
விட்டத்தை அதிகரிக்கிறது.
எப்போதும் (காலாவதியாகாத) மருந்து கைவசம் இருக்கட்டும்.
(எதிர்பாராத விருந்தாளி ஆயிற்றே நம் ஆஸ்துமா...!)
கண்டிப்பாய் வரும் என (பழக்கத்தால்) நீங்கள் கண்டுகொண்ட சூழல்களில்
(விளையாட்டு, குளிர்க்காற்று), அவற்றை எதிர்கொள்ளும் சற்று முன்பே
(முன் ஜாமீன்) இவற்றைப் பயன்படுத்தலாம்.
அடிக்கடி, தினமும் இவை தேவைப்பட்டால், வருமுன் காக்கும் அடுத்த கட்ட
மருந்துகள் தேவை என்று அர்த்தம்.

2) காப்பவை = Preventers
காற்றுக்குழாய் அகவணி அழற்சியைக் கட்டுப்படுத்தி, வீக்கம், சளிநீர் கோர்ப்பதை
மட்டுப்படுத்தும்.
தொடர்ந்து , உடல் நலமாக இருப்பினும் பயன்படுத்த வேண்டும்.
மருந்தளவு கூட்ட, குறைக்க மருத்துவர் ஆலோசனை தேவை.

இதற்கு அடுத்த கட்ட சிகிச்சைகள்:
நெபுலைசர் ( சிறுதுகள்களான "தீர்ப்பவை" ரக மருந்துகளை
வேகமாக ஒரு கருவி மூலம் மூச்சுக்குழாய்க்குள் செலுத்துவது)
ஆக்ஸிஜன்
ஸ்டீராய்டு மாத்திரைகள்
போன்றவை உங்களைப் பரிசோதித்த மருத்துவரின் நேரடி
கண்காணிப்பில் நடக்க வேண்டிய சமாச்சாரங்கள்.ஈகரை வேர்ட்பிரஸில் இருந்து


ஆஸ்துமா என்றால் என்ன?

மிகவும் சிரமப்பட்டு மூச்சு விடுதல் அல்லது மூச்சுத் திணறலைத்தான் ஆஸ்துமா என்றழைக்கின்றோம். இது ஒரு கிரேக்க வார்த்தை, ஈளை, திகைப்பு, திகறடி, மாந்தம், அள்ளுமாந்தம், உப்புச நோய், கணச்சூடு, இசிவு நோய், இரைப்பு நோய், இளைப்பு நோய், மந்தார காசம், சுவாச காசம், சுவாசத் தொய்வு, ஈரம் எனத் தமிழில் பல பெயர்களில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்நோய் குறிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோய்த் தாக்கத்திற்கு பரம்பரைத் தன்மை, ஒவ்வாமை இயல்பு, பலவகை அலர்ஜிகள் காரணமாகின்றன!


ஆஸ்துமா பற்றிய தவறான எண்ணங்கள் :

« ஆஸ்துமா நோய் அச்சத்துடன் வெட்கப்படவேண்டிய, ஏளனமாகப் பேசப்படும், தலை குனிவை உண்டாக்கி அவமானம் தரும் நோய்.

«ஆஸ்துமா ஒரு தொற்று நோய்.

« ஆஸ்துமா வந்தாலே போகாது.

« ஆஸ்துமா இருந்தால் கண்டிப்பாகக் காச நோயும் இருக்கும்.

« இந்நோய்க்காரர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.

« ஆஸ்துமா நோயுள்ளவர்களின் குழந்தைகளுக்கும் இந்நோய் கண்டிப்பாக வரும்.

« இந்நோய் கண்டவர் அனைவரும் எப்போதும் கடற்கரை ஓரங்களில், மலை வாசஸ்தலங்களில் குளிர்ப் பிரதேசங்களில், ஏசி அறைகளில் வசிக்கவும் கூடாது. அங்குப் போகவும் கூடாது.

« இந்நோய் வந்தால் மற்றவர்கள் போல் சராசரி வாழ்க்கை வாழ முடியாது.

« இதய நோய், சர்க்கரை நோய் போலவே ஆஸ்துமா நோய்க்கும் உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம்.

அறிவியல் உண்மைகள்

« உயர் இரத்த அழுத்தம், இதயநோய், நீரிழிவு போன்று இதுவும் சாதாரணமாகக் காணப்படும் ஒரு நோய். எய்ட்ஸ் போல் நாமாக வரவழைத்துக் கொள்ளும் நோயும் அல்ல. அச்சமும், அவமானமும் தேவையில்லாதது.

« ‘‘சார்ஸ்’’ போல் அதிநுண் கிருமிகளால் பரவுவதே தொற்று நோய்கள். ஆஸ்துமா, கிருமிகளால் பரவும் தொற்று நோயல்ல.

« அல்லோபதி மருத்துவத்தால் நன்கு கட்டுப்படுத்தவும், அல்லோபங்சர் அணுகுமுறையில் முழுவதும் சிகிச்சை அளித்துப் போக்கக் கூடிய பல நோய்களில் இதுவும் ஒன்று.

« அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை. ஆஸ்துமா நோய்க்காரர்களும் காசநோய் உள்ளதா என்றும், காசநோய்க்காரர்களுக்கு ஆஸ்துமா நோயும் உள்ளதா என்றுதான் பரிசோதிக்க வேண்டும்.

« திருமணம் இந்நோய்க்குத் தடை அல்ல. எல்லோரும்போல் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். மனைவி வழி ஆஸ்துமா, ஒவ்வாமை நோய்கள் இல்லாமலிருப்பது நல்லது.

« பெற்றோர் இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால், வாய்ப்புகள் அதிகமே தவிர, கட்டாயம் ஒன்றும் இல்லை.

« இவைகளால் குறிப்பிட்ட சில வகையினருக்கு மட்டும் ஆஸ்துமா தாக்கம் அதிகமாகிறது என்று மருத்துவர்கள் உறுதியுடன் சொன்னாலொழிய, அச்சம் கொள்ளத் தேவையில்லை.

« இந்நோய் கண்ட பலர், பல வெற்றிகளைக் குவித்துள்ளனர். புகழ்பெற்ற அரசியல்வாதிகளாகவும், நாட்டுத்தலைவர்களாகவும், நடிகர்களாகவும், பின்னணிப் பாடகர்களாகவும், விளையாட்டு வீரர்கள், வழக்கறிஞர், பொறியியல், மருத்துவ வல்லுநர்களாகவும் உலா வருகிறார்கள்.

« தீவிரமான உணவுக் கட்டுப்பாடு தேவையில்லை. பின் இரவிலும், எப்போதும் வயிறு முட்டவும் சாப்பிட வேண்டாம். உணவு உண்டு 2_3 மணி கழித்துப் படுப்பது நல்லது.


தமிழ்24ஹவர்ஸ் என்ற தளத்தில் இருந்து


ஆஸ்துமா - உணவு முறையே சிகிச்சையாக

ஆஸ்துமா என்பது ஒவ்வாமையால் ஏற்படும் நோய் என்பது அனைவரும் அறிந்ததே. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் போதிலும் கூட ஆஸ்துமா தொல்லைக்கு பலர் ஆட்பட்டு வருகின்றனர்.

சிலருக்கு சுற்றுச்சூழல் நிலைமைகளாலும், சிலருக்கு கோதுமை, முட்டைகள், பால், சாக்கலேட்டுகள், பீன்ஸ், உருளைக்கிழங்கு, மாட்டிறைச்சி போன்ற உணவுகளாலும் கூட ஆஸ்துமா ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

மேலும் சிலருக்கு மனச்சிக்கல்கள் காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது. இளம் வயதில் ஆஸ்துமா ஏற்படும் 25 சதவீதத்தினருக்கு உணர்வுபூர்வ பாதுகாப்பின்மை, பெற்றோர்கள் அன்பும் அரவணைப்பும் இன்மை ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் பரம்பரையில் யாருக்கேனும் சரும ஒவ்வாமை, ஆஸ்துமா இருந்தால் அது பின்வரும் தலைமுறையினரையும் பாதிக்கிறது.

ஊட்டச்சத்து மருத்துவ நிபுணர் டாக்டர் ராயல் லீ, ஊட்டச்சத்து குறைபாடுகளாலும், அட்ரினலின் போதாமையாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது என்கிறார். மேலும் இவர் தனது ஆய்வில் மாவுச்சத்துப் பொருட்கள் (Carbohydrates) ஏற்காமை மற்றும் குறைந்த சர்க்கரை ஆகியவற்றாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது என்கிறார்.

உணவு பழக்க வழக்கமே சிகிச்சை

நவீன மருத்துவத்தில் ஆஸ்துமாவை அத்ரதையாக ஒழிக்க முடியவில்லை. தற்காலிக சிகிச்சைகளே உள்ளன. மேலும் ஆஸ்துமாவிற்கு கொடுக்கப்படும் மருந்துகள் நோயாளிகளை மருந்தடிமைகளாக மாற்றி விடுகிறது. மேலும் இவைகள் ஆஸ்துமாவை நிரந்தரமாக்கி விடுகின்றன.

ஆஸ்துமாவிற்கு பிரதம காரணமாக கூறப்படும் அலர்ஜியும் கூட தவறான வாழ்முறை, குறையும் தடுப்பு சக்தி, உணவுப் பழக்க வழக்க தவறுகளால் குலையும் உடல் ஒத்திசைவு போன்றவற்றின் அறிகுறியே. எனவே ஆஸ்துமாவிற்கு உண்மையான சிகிச்சை என்பது கழிவகற்ற உறுப்புகளின் பழுதை நீக்கி அதை நல்ல முறையில் செயலாற்றத்தூண்டுவது மற்றும் முறையான உணவுப் பழக்க வழக்கங்களால் வேஸ்ட் மற்றும் நச்சுப் பொருட்களை உடலிலிருந்து அகற்றுவதுமாகும்.


முதலில் எலுமிச்சை சாறு, தேன் ஆகியவை மட்டுமே உட்கொண்டு 3 முதல் 5 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இந்த உண்ணாநோன்பு காலகட்டத்தில் வென்னீர் கொண்டு குடலை சுத்தம் செய்ய வேண்டும். உண்ணா நோன்பிற்கு பிறகு உடல் நச்சுச் பொருளை அகற்ற வெறும் பழங்களை மட்டுமே 5 அல்லது 7 நாட்களுக்கு உட்கொள்வது நலம். பிறகு சிறிது, சிறிதாக பிற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு நோய் குணமடைவதில் முன்னேற்றம் தெரியும் காலக்கட்டத்தில் சீரான இடைவெளிகளில் சிறு உண்ணா நோன்புகள் அவ்வப்போது தேவைப்பட்டால் மேற்கொள்வது நலம்.

ஆஸ்துமாவிற்கு வெஜிடேரியன் உணவு முறைகளே சிறந்தது. மாவுச்சத்துகள், கொழுப்புச் சத்துகள் மற்றும் புரோட்டீன்களை குறைவாக உட்கொள்ள வேண்டும். பழங்கள், பச்சைக் காய்கறிகள், பழுத்த விதைகள் மற்றும் தானியங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.

காலை உணவு - உலர் கொடி முந்திரியுடன் சில வகை உலர் பழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.

மதிய உணவு - வேகவைத்த காய்கறிகளுடன் கோதுமை ரொட்டி அல்லது சப்பாத்திகள்.

இரவு உணவு - சமைக்கப்படாத காய்கறிகளால் ஆன சாலட்.

இரவு உணவை உரங்கச் செல்வதற்கு 2 மணி நேத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ளவும்.

கபம் சேரும் உணவு வகைகளான அரிசி, சர்க்கரை, அவரை விதைகள் மற்றும் தயிர், வறுக்கப்பட்ட சீரணிக்க சிரமம் ஏற்படுத்தும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். ஸ்ட்ராங் டீ, காபி, மது, ஊருகாய்கள், பதப்படுத்தப்பட்ட பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுகளை கைவிடுவது நல்லது. முதல் சில தினங்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிறிது குணம் தெரிந்த பிறகு சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆஸ்துமா நோயாளிகள் தாங்கள் சாப்பிடும் திறனுக்குக் கீழே சிறிய அளவில் உணவு உட்கொள்ள வேண்டும். மேலும் உணவை நன்றாக அரைத்து மென்று விழுங்க வேண்டும். தினமும் 8 முதல் 10 டம்ளர் குடிநீர் அருந்த வேண்டும், சாப்பிடும்போது நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

கடுமையாக ஆஸ்துமா தாக்கும்போது, பசியின்மை ஏற்படும். அப்போது அவர்களை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. 2 மணிக்கொருதரம் வென்னீர் கொடுத்து வந்தால் போதுமானது.

ஆஸ்துமா சிக்சையில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. மூச்சுத் திணறல் இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தேனை நிரப்பி அதை மூக்கின் அருகே வைத்து மூச்சை இழுத்தால் மூச்சு விடுதலில் உள்ள சிரமம் நீங்கும். இது ஒரு மணி நேரம் வரை தாங்கும். தேனின் வாசனையை உள்ளுக்கு இழுத்தாலும், தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து அருந்தினாலும் நல்ல பலனை கொடுக்கும்.

ஆஸ்துமா சிகிச்சையில் தேன் ஒரு அற்புத மருந்தாக பரிணமிக்கிறது. மூச்சுக் குழல் நோய்களுக்கு 1 ஆண்டு பழைய தேன் உதவுவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் ராபர்ட் டி. ரெய்னால்ட்ஸ், ஆஸ்துமாவில் வைட்டமின் பி-6 குறைபாடு பங்களிப்பு இருந்தால், நாளொன்றுக்கு இருமுறை வைட்டமின் பி-6ஐ 50 மி.கி. எடுத்துக் கொண்டால் மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார். தினமும் பி-6 வைட்டமின் சத்துக்களை சேர்ப்பது மூச்சுத்திணறலை ஒரு வாரத்தில் குணப்படுத்தி விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

காற்று, சூரியன், தண்ணீர் இவை மூன்றும் மிகச்சிறந்த இயற்கை நிவாரணிகளாகும். வாரம் ஒரு முறை உண்ணா நோன்பு, எப்போதாவது எனீமா, மூச்சுப்பயிற்சிகள், புதிய காற்று, உலர்ந்த தட்பவெப்பம், இலகுவான தேக பயிற்சிகள் ஆகியவைகளும் ஆஸ்துமாவின் நீண்ட நாளைய சிகிச்சையில் பங்களிக்கும், மேலும் விவரங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகுவது எப்போதுமே சிறந்தது.

Akila.R.D
07-04-2010, 10:33 AM
முறையாக யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் குணமடையும்...

கலையரசி
07-04-2010, 10:40 AM
பிரவீன் சொன்னது போல சிறந்த மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவதே நல்லது.

இளசு
07-04-2010, 09:36 PM
பிரவீண்

வைத்தியக்குறிப்பு வலைப்பூவில் இருப்பது
நம் மன்றத்தின் பதிவுதான்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=432

gvchandran
07-04-2010, 10:33 PM
சிறப்பான பதில் தந்த
அன்புள்ளஙளுக்கு நன்றி

சிவகுமார்
18-05-2010, 06:56 PM
என் வலைப்பூவின் தகவலையும் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி!!! :icon_b:

sarcharan
19-05-2010, 07:04 AM
என் 17 வயது பெண் ஆஸ்துமா
நோயினால் தினமும் அவதிப்படுகிறாள்.
இதற்கு யாராவது நல்ல சிகிச்சை சொல்லுங்க ப்ளீஸ்

என் தந்தையார் ஒரு ஆஸ்த்மா நோயாளி.

முன்பு அவர் ஒட்டஞ்சத்ரம் சென்று மருந்து எடுத்து வந்தார். ஒரு சிறிய மீனுக்குள் மருந்து வைத்து கொடுப்ப்பார்கள். அம்மருந்தினால் சற்று பலன் இருந்தது. அனால் பத்தியம் காக்க வேண்டும்.
கடும்
தூசு, அழுக்கு, குப்பை, புகை இவைகளில் இருந்து அறவே ஒதுங்கி இருக்கணும்
புகை பிடிக்க கூடாது, இது போன்ற பல...

சில வருடங்கள் கழித்து ஆங்கில மருந்துகள் உபயோகிக்க தொடங்கினார்.

Asthalin, Beclate-50 inhalers
Wysolone - tablet

இடையில் ஒரு தெலுங்கு வைத்தியர் ஒரு மருந்து தந்தார். அம்மருந்தை தேனில் குழைத்து சாப்பிட சொன்னார்.

ஆச்சர்யம்!! பெரும்பாலும் நோய் குறைந்தது.. ஆனால் அந்த வைத்தியர் பணத்துக்கு ஆசைப்பட்டு வேறு ஒரு மருந்தை கொடுத்தார்.

அது side effect ஆகி சுவாசம் முட்டி அப்பப்பா...

என் தந்தையார் மீண்டும் ஆங்கில மருந்துகளையே உபயோகித்து வருகின்றார்.

சிவகுமார்
19-05-2010, 09:03 AM
ஆஸ்துமா என்பது ஒரு அழற்சி நோய்தானே!!! மேலும் மழைக்காலங்களில் சற்றுக் கவனமுடன் இருக்க வேண்டும்!! ஆங்கில மருந்துதான் விரைவான தீர்வுக்கு வழிவகுக்கிறது!!! ஏதாவது ஒரு சிறந்த inhaler வீட்டில் வாங்கி வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று!!!

கோ.முத்து
20-06-2010, 07:17 AM
நான் 45 வயது ஆண் இடுப்புவலி
நோயினால் தினமும் அவதிப்படுகிறேன்.
இதற்கு யாராவது நல்ல சிகிச்சை சொல்லுங்க ப்ளீஸ்

ரவிசங்கர்
25-06-2010, 04:55 PM
முத்து அவர்களே, அறிமுக பகுதியில் உங்களை பற்றி சொல்லலாமே.

நன்றி.

கோ.முத்து
24-07-2010, 01:36 PM
:sprachlos020: நண்பர் ரவிசங்கர் அவர்களுக்கு வண்க்கம்.
எனக்கு இந்த உதவி காட்டியமைக்கு,
மீண்டும் நன்றி.:lachen001:

nambi
24-07-2010, 04:39 PM
தூதுவளை என்ற கீரையை வாரமொருமுறை தவறாது உண்டுவந்தால் ஆஸ்துமா நீங்கும்...இலையின் பின்பக்கம் முள் இருக்கும்....இன்னும் இதர...இதய நோய் உள்ளவர்களும் தூதுவளை கீரையை உட்கொள்ளவார்கள். பொதுவாகவே உணவில் வாரொருமுறை இந்த கீரையை நேர்த்துக் கொள்ளலாம். அடிக்கடியும் சேர்த்துக்கொள்ளலாம். யோகா முறையிலும் இதை குணப்படுத்த ஆலோசனை கூறப்படுகிறது.

தூதுவளை பாட்டி வைத்தியம்...எங்களுக்கு சிறுவயதில் செய்ததை வைத்து கூறியது. இப்போதும் இந்த கீரையை அவ்வப்பொழுது பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். அடிக்கடி கிடைப்பதில்லை.

ஒமியோபதி, ஆயுர்வேதா போன்ற மருத்துவத்தின் உள்ள நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெறலாம். அவர்களின் ஆலோசனைப்படி சில உடற்பயிற்சிகளும் மேற்கொள்ளலாம்.
................
இடுப்பு வலிக்கு ''உக்கிளி'' செய்து சாப்பிடுவார்கள்....அரைத்த உளுந்த மாவு (பொடி) உடன் சர்க்கரை சேர்த்து வாணலியில் கிண்டி சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும். இதுவும் பாட்டி வைத்தியம். பெண்கள் இந்த வைத்திய முறை கையாள்வர்.
செய்முறையை விளக்கமாக....கேட்டு...பதிவிடுகிறேன்...

பாலகன்
24-07-2010, 06:14 PM
என் தந்தையார் ஒரு ஆஸ்த்மா நோயாளி.

ஒரு சிறிய மீனுக்குள் மருந்து வைத்து கொடுப்ப்பார்கள். அம்மருந்தினால் சற்று பலன் இருந்தது. அனால் பத்தியம் காக்க வேண்டும்.
.

எனக்கு ஒரு சந்தேகம்!

அந்த மீன் நுரையீரலை அடைந்தபின் மருந்து வேலைசெய்யும் என்று நினைக்கிறேன். பின் அந்த மீன் என்ன ஆகும்??????????
:fragend005:

nambi
25-07-2010, 01:48 PM
ஆந்திராவில் ஒரு ஆசிரமத்தில் இந்த மாதிரி விழா ஒன்று நடத்தி அனைவரும் விழுங்கினார்கள்.. வருடா வருடம் நடக்கின்றது... அன்றைய ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடுவும் ஒரு மீனை விழுங்கினார்...அந்த மீன் நுரையிரலில் சென்று அந்த நோய்தாக்குதல் கிருமிகளை சாப்பிடுவதாகவும் மக்களால் நம்பப்படுகிறது....

மீன் செல்வது வயிற்றுக்குள் அங்கிருந்து எப்படி சீரணபைக்குள் செல்லும் என்பது தெரியவில்லை...இந்த மீன் விழுங்கும் திருவிழாவை செய்தியாக தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

....ஒரு வேளை நம்பிக்கைக்காகவும் இருக்கலாம்...அது என்ன மருந்து என்பதை இதுவரை அறிவிக்கவில்லை...இந்திய மருத்துவக் குழுவும் இதை அங்கிகரிக்கவில்லை என்பதாக தகவல்.

praveen
26-07-2010, 06:01 AM
மீனை விழுங்கினால் அது ஜீரனப்பையில்(வயிற்றுக்குள்) தான் செல்லுமே அன்றி (சுவாசக்குழாய்) நுரையீரலுக்கு செல்லாது, சென்றால், சென்ற பின் மரணம் ஏற்படும்.

சாப்பிடும் போது தப்பித்தவறி ஒரு பருக்கை இடம் மாறி சுவாசக்குழாய் செல்ல முற்பட்டால், புரையேறி அந்த துனுக்கை நுரையிரலில் இருந்து உணவுக்குழாய்க்கு உடல் அமைப்பே மாற்றி விடும்.

இதெல்லாம் நம்பிக்கையே அன்றி வேறில்லை, இந்த மீன் மருத்துவத்தால் சுகமடையாதவர் பலர் இருக்கலாம். வெளியே தெரிவதில்லை. விளம்பரம் தான்.

பால்ராஜ்
30-07-2010, 07:32 AM
மருத்துவரை அணுகுவதே சரி...
கண்ட கண்ட 'மருந்து'களையும் சாப்பிட்டு அவதிப்படுவதைக் காட்டிலும்...!