PDA

View Full Version : தொடரும் ஆசை...

KAMAKSHE
06-04-2010, 07:11 AM
விஜய சினிமா போக மகனுக்கு ஆசை

சூர்யா சினிமா போக மகளுக்கு ஆசை

சுட்டி யில் படம் பார்க்க குட்டிக்கு ஆசை

சூரிய செய்தி மட்டும் பார்க்க அப்பனுக்கு ஆசை

ஆனால்...............

விளக்கு வைத்த பின் பிழியப் பிழிய அழுதாலும்,

மூக்குச்சளி வழிந்தாலும்,

திருடன் வந்து இடித்தாலும்,

பிள்ளை படிக்காமல் போனாலும்,

கணவனே திசை மாறி போனாலும்,

அக்கம் பக்கம், உற்றார், உறவினர் இல்லாமல் போனாலும்,

தொத்து வியாதியாய் குடும்பத்தை ஆட்டிப் படைத்தாலும்,

தலை சுற்றி பயித்தியமே முற்றினாலும்,

தன் குடும்ப குதூகலம் குறைந்தாலும்,

தினம், தினம், வித விதமாய்,

திங்கள் முதல் வெள்ளி வரை வரும்...

மெகாத் தொடர்கள் மட்டுமே பார்க்க ஆசை

பார்த்து....பார்த்து .. கண்கள் பூத்து

மெகா ஜோதியில் (மகரஜோதி இல்லை) கலக்க ஆசை....

கொள்ளை ஆசை....

பாட்டிக்கும், அம்மாவுக்கும் அப்பாவுக்கும், ஏன் மகள் மகனுக்கும் கூட
--------------------
காமாக்ஷி

கீதம்
06-04-2010, 07:47 AM
தொடர்களில் மூழ்கி தம் சுயம் மறக்கும் பெண்களின் மீது ஏனோ கழிவிரக்கம்தான் வருகிறது எனக்கு! நனவுலகில் வாழ விரும்பாமல் தம்மைத் தொலைப்பதிலேயே குறியாய் இருக்கின்றனர் என்றால்.......என்ன சொல்வது? மெகாஜோதியில் கலந்து தம் வாழ்க்கைத் துயரத்தை மறக்கத் துணிகின்றனரோ? ஒருவகையில் அவர்களும் பரிதாபத்திற்குரியவர்களே!

கவிதைச்சாடல் அருமை. தொடர்ந்து எழுதுங்கள், காமாக்ஷி. வாழ்த்திப் பாராட்டுகிறேன்.

aren
06-04-2010, 07:52 AM
சீரியலை இதைவிட அருமையாக கண்டிக்க யாராலும் முடியாது என்று சொல்லும் விதத்தில் இருக்கிறது உங்கள் கவிதை.

வார்த்தைகள் வெகுநன்றாக வந்து விழுந்திருக்கிறது.

KAMAKSHE
06-04-2010, 08:00 AM
தொடர்களில் மூழ்கி தம் சுயம் மறக்கும் பெண்களின் மீது ஏனோ கழிவிரக்கம்தான் வருகிறது எனக்கு! நனவுலகில் வாழ விரும்பாமல் தம்மைத் தொலைப்பதிலேயே குறியாய் இருக்கின்றனர் என்றால்.......என்ன சொல்வது? மெகாஜோதியில் கலந்து தம் வாழ்க்கைத் துயரத்தை மறக்கத் துணிகின்றனரோ? ஒருவகையில் அவர்களும் பரிதாபத்திற்குரியவர்களே!

கவிதைச்சாடல் அருமை. தொடர்ந்து எழுதுங்கள், காமாக்ஷி. வாழ்த்திப் பாராட்டுகிறேன்.

நன்றி கீதம்

இது தான் நான் என் வாழ்க்கையில் எழுதும் இரண்டாவது கவிதை

KAMAKSHE
06-04-2010, 08:03 AM
சீரியலை இதைவிட அருமையாக கண்டிக்க யாராலும் முடியாது என்று சொல்லும் விதத்தில் இருக்கிறது உங்கள் கவிதை.

வார்த்தைகள் வெகுநன்றாக வந்து விழுந்திருக்கிறது.

மிக மிக நன்றி ஆரென் அவர்கள்.

பயங்கரமாக ஊக்குவிக்கிறது உங்கள் வார்த்தைகள்.

சிவா.ஜி
06-04-2010, 08:09 AM
இரண்டாவதுக் கவிதையா?...ஆச்சர்யமாக இருக்கிறது. மிக அருமையாய்க் கோர்க்கப்பட்ட வார்த்தைகளுடன் எதார்த்தம் சொல்லும் கவிதை.

மெகாத்தொடரில் மூழ்கி, சுற்றம் மறந்து, சுயம் மறந்து கனவுலகில் வாழுபவர்களுக்கு நல்ல சாட்டையடி.

மனமார்ந்தப் பாராட்டுக்கள் காமாக்ஷி.

govindh
06-04-2010, 08:33 AM
சின்னத் திரை சீரியலுக்கு ...சுளீர்..அடிகள்..
கவி வரிகள் அருமை...பாராட்டுக்கள்...

Akila.R.D
06-04-2010, 10:11 AM
சரியாக கூறினீர்கள் காமாக்ஷி...

தொடர் பார்க்க ஆரம்பித்துவிட்டால் சமையலைக்கூட கவனிப்பது இல்லை வீட்டில்...

KAMAKSHE
06-04-2010, 11:42 AM
சரியாக கூறினீர்கள் காமாக்ஷி...

தொடர் பார்க்க ஆரம்பித்துவிட்டால் சமையலைக்கூட கவனிப்பது இல்லை வீட்டில்...

நன்றி அகிலா

KAMAKSHE
06-04-2010, 12:27 PM
சின்னத் திரை சீரியலுக்கு ...சுளீர்..அடிகள்..
கவி வரிகள் அருமை...பாராட்டுக்கள்...

நன்றி கோவிந்த் அவர்களே

குணமதி
06-04-2010, 01:06 PM
அப்படிப் போடுங்கள், அறுவாளை!

KAMAKSHE
06-04-2010, 02:44 PM
நன்றி குணமதி அவர்களே

KAMAKSHE
07-04-2010, 03:15 AM
தொடர்களில் மூழ்கி தம் சுயம் மறக்கும் பெண்களின் மீது ஏனோ கழிவிரக்கம்தான் வருகிறது எனக்கு! நனவுலகில் வாழ விரும்பாமல் தம்மைத் தொலைப்பதிலேயே குறியாய் இருக்கின்றனர் என்றால்.......என்ன சொல்வது? மெகாஜோதியில் கலந்து தம் வாழ்க்கைத் துயரத்தை மறக்கத் துணிகின்றனரோ? ஒருவகையில் அவர்களும் பரிதாபத்திற்குரியவர்களே!

கவிதைச்சாடல் அருமை. தொடர்ந்து எழுதுங்கள், காமாக்ஷி. வாழ்த்திப் பாராட்டுகிறேன்.

தங்கள் வரிகளை என் கவிதையில் சேர்த்திருந்தேன் பார்த்தீரா?

க.கமலக்கண்ணன்
07-04-2010, 05:44 AM
அருமையாக இருக்கிறது கவிதை

அற்புதமான வரிகள்

அசாத்தியமான சாட்டையடி பாராட்டுக்கள்

கீதம்
07-04-2010, 07:44 AM
தங்கள் வரிகளை என் கவிதையில் சேர்த்திருந்தேன் பார்த்தீரா?

பார்த்தேன், ரசித்தேன்.

பாராட்டுகள் காமாக்ஷி.

செல்வா
07-04-2010, 07:06 PM
எனக்கென்னவோ இந்தக் கவிதை நெருடுகிறது.

வீட்டு வேலைகளை கவனிக்காமல் நெடுந்தொடர் பார்த்துக் கொண்டிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள்.

அப்படி என்றால் வீட்டு வேலைகளை மற்றவர்கள் பார்க்கிறார்களா?

கவிதையில் அப்படித் தெரியவில்லையே...

ஒருவருக்கு விஜய் திரைப்படம் , இன்னொருவருக்கு சூர்யா திரைப்படம் இன்னொருவருக்கு சன் செய்திகள் மட்டும்

எனக்கு நெடுந்தொடர் பார்ப்பவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை...

இதில் ஒரு சாராரை மட்டும் குறை சொல்வது...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....

தொடர்ந்து எழுதுங்கள்....!

இளசு
07-04-2010, 09:40 PM
தொடர்கதைகள் என்னும் சொற்றொடரையே தமிழ் இலக்கியத்தில் இருந்து அழிக்க வந்த சாத்தான்கள் - இந்த தொ(ல்)லைத் தொடர்கள்!

வீட்டுக்குள் நுழைந்த தொடர்சனியன்கள்..

எத்தனை சாடினாலும் தகும்.

பாராட்டுகள் காமாட்சி அவர்களே..

KAMAKSHE
09-04-2010, 01:42 AM
எனக்கென்னவோ இந்தக் கவிதை நெருடுகிறது.

வீட்டு வேலைகளை கவனிக்காமல் நெடுந்தொடர் பார்த்துக் கொண்டிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள்.

அப்படி என்றால் வீட்டு வேலைகளை மற்றவர்கள் பார்க்கிறார்களா?

கவிதையில் அப்படித் தெரியவில்லையே...

ஒருவருக்கு விஜய் திரைப்படம் , இன்னொருவருக்கு சூர்யா திரைப்படம் இன்னொருவருக்கு சன் செய்திகள் மட்டும்

எனக்கு நெடுந்தொடர் பார்ப்பவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை...

இதில் ஒரு சாராரை மட்டும் குறை சொல்வது...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....

தொடர்ந்து எழுதுங்கள்....!

திரு செல்வா அவர்களே ,

தொடர்ந்து ‘பாராட்டுக்கள் ‘ ஆல்லது ‘ மிக நன்று’ என்று வரும் விமர்சனங்களைவிட தங்களின் கேள்வி/விமர்சனம் வித்தியாசமாக இருந்தது. என்னை யோசிக்க வைக்கிறது.
நான் சொல்ல வந்தது மகன், மகள் அப்பாவுக்கு ஒரு ஆசை என்றால்.. வீட்டுப் பெண்களின் ஆசையை இத்தொடர்கள் ஒட்டு மொத்தமாய் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்பதைத்தான். தினசரி வீட்டு வேலைகள் செய்யாமல் என்று நான் சொல்லவில்லை ( அது அகிலா அவர்களின் அனுபவம்..)– விளம்பரங்களை காதால் கேட்டுக்கொண்டே சில வேலைகள் ஆகும். மற்ற சமையல், இதர சின்ன வேலைகள் காலங்காத்தாலே முடித்துவிடுவாங்க. அப்ப ஒண்ணும் சீரியல் இல்லயே!! நான் சொல்லும் உதாசீணங்கள் குடும்பத்துடன் செலவிடும் தரமான நேரம் மற்றும் மனம், அன்பு சார்ந்தவை..

தங்கள் உதவியால் நான் யோசித்தவை –

மெகாத்தொடர்கள் மட்டும் அல்ல சினிமாக்களும் தான் மக்களை பாதிக்கின்றன. ஆனால் தொடர்களோ நம் வரவேற்பறையில் தினம் தினம். நம்மில் ஒருவராக. நம் எண்ணங்களோடு கலந்துவிடுகிறது.

விஜய் சினிமா என்று சொல்வதை தியேட்டரில் என்று வைத்துக் கொண்டால் அது வாரத்தில் ஒன்று கூட இருந்துவிட்டு போகட்டுமே விடுங்கள்...!! இல்லை டீ வி யில் தான் என்றாலும் பள்ளி செல்லும் (அ) படிக்கும் நேரம் போக அவ்வப்பொழுது தான் குழந்தைகள் பார்க்கலாம் .

இந்த மாமூல் தமிழ் சினிமாக்களும் , அவைகளின் மனதை பாதிக்கும் பழி வாங்கும் படலங்களும் படிக்கும் பசங்களுக்கு கண்டிப்பாக ரொம்ப தேவையற்றது. சரி.... ஆனால் அது 70 வருடங்களாக இருப்பதாயிற்றே. தொடர்ந்து எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்... என்று போய்க்கொண்டே இருக்கிறது பட்டியல். ( இவை ஒரு Known Devil - )

ஆனால் டீ. வி யின் ஆதிக்கம் - எப்படி இருக்கு?...
வாரம் ஒரு நாள் பார்ப்போம் ஒளியும் ஒளியும் தூர்தர்ஷனில் - அன்று - இன்று வாரம் நூறு முறை பார்க்கலாமே ஆபாச நடனங்களை குழந்தைகளும் சேர்ந்து பார்க்கிறார்களே!.டீ.வியில் அது போதாதென்று பார்த்த படங்களையே வேறு திருப்பித் திருப்பி பார்க்கிறார்கள்.

சரி -- இந்த மெகாத் தொடர்களுக்கு வருவோம். -- இரண்டோ, மூன்றோ நல்ல தொடர்கள் வரத்தான் செய்கின்றன... எப்போதாவது...
ஆனால் 95% தொடர்கள் எப்படி இருக்கின்றன..? ( Unknown Evil ) ஏதோ வெறும் பொழுது போக்கு மட்டும் இருந்தாலும் பரவாயில்லை - கதை இல்லை - கருத்தும் இல்லை - கவியும் இல்லை - நடிப்பு - இருக்கா ( நீங்களே சொல்லுங்களேன் ) அப்புறம் சிரிப்பு இருக்கா வயிற்றை புண்ணாக்க ? மனசை லேசாக்க? வித்தியாசமான கதை இருக்கா? ஆனா இருக்கு சோகம், அழுகை, துக்கம், பாவம், பழி, பொறாமை - இவை மட்டும் கூடை கூடையாய். இத்தொடர்கள் தாய்மார்களுக்காவே ப்ரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை - ஏனெனில் விளம்பரதாரர்கள் அவர்களுடைய சோப்பு, ஷாம்பூக்களின் விளம்பரங்களுக்கு மத்தியில் அம்மாதிரி கதைகளைத் தான் விரும்புகிறார்கள். தொத்து வியாதியாய் வேறு எல்லோரையும் பிடித்துக் கொள்கிறது குடும்பத்தில்...... பெப்சி, லேஸ் சிப்ஸை விட மோசம். எத்தனை ஆண்கள் வீட்டுப் பெண்கள் பார்ப்பதால் தாங்களும் சீரியல்களுக்கு அடிமையாகிப் பார்க்கிறார்கள் தெரியுமா? எத்தனை தாத்தாக்கள் ? குழந்தைகள்,?-- ஏதாவது ஒரு சீரியலை தாங்கள் ஒரு 20 தொடர்கள் வரிசையாக பார்த்து விட்டு தான் சொல்லுங்களேன் – தங்களையும் வியாதி பிடித்துக்கொள்கிறதா இல்லையா என்று ?- தைரியமாக சந்தர்ப்பமிருந்தால் செய்து தான் பாருங்களேன்..

ஒரு கற்பனை---சரி இத்தொடர்களே தினமும் நல்ல பொழுது போக்காகவும் இருந்து, நம்மை சிந்திக்கவும் வைத்து, குலுங்க சிரிக்க வைத்து , ஏதோ ஒரு வகையில் நம்மையும், நம் குழந்தைகளையும் ஒரு சிறிது மேன்மை பெற வைத்தால் எப்படி இருக்கும்? சரி சார் விடுங்கள். ஒரு நல்ல டீ.வி நிகழ்ச்சியும் வேண்டாம்... வரவேற்பறையில் நாம் சில மணி நேரம் அமைதியை ரசித்திருந்தாலே போதுமே .. எப்படி இருக்கும்!!? நாம் எவ்வளவோ தேறிவிடுவோம்...

தயவு செய்து , தப்பாக நினைக்க வேண்டாம்.

என்னை இத்தனை எழுதவும், யோசிக்கவும் வைத்தமைக்கு மிக்க நன்றி.
காமாக்ஷி

கலையரசி
09-04-2010, 04:37 AM
மெகாத் தொடர்கள் நம் வீட்டுப் பெண்களை மூளைச் சலவை செய்து அடிமையாக்கி வைத்துள்ளன. மது, போதை போல் இதுவும் ஒரு விதத்தில் பெண்களைப் பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது. குடும்ப உறவைச் சிதைப்பதிலும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் நாத்தனார், மாமியாராக வரும் பாத்திரங்கள் அனைத்தும் மகா வில்லிகளாக, கொடுமைக்காரர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். இதைப் பார்க்கும் திருமணமாகா இளம் பெண்களுக்கு மாமியார், நாத்தனார் எல்லாரும் இப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்து விடும். பின் இதுவே குடும்பம் சிதைவுற முக்கிய காரணமாக அமைந்துவிடும்.
முக்கியமான ஒரு பிரச்சினையை எடுத்து கவிதை வார்த்தமைக்குப் பாராட்டு. தொடர்ந்து எழுதுங்கள் காமாட்சி.

KAMAKSHE
09-04-2010, 11:36 AM
இளசு அவர்களே நன்றி.

செல்வா அவர்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி எனினும், என்னை நிறைய எழுதவும் வைத்துள்ளது.

செல்வா
10-04-2010, 07:57 AM
உண்மைதான். நான் அந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்க்கவில்லை.

சினிமாக்களை ஒப்புநோககிப் பார்க்கும் போது நெடுந்தொடர்களின் பாதிப்பு மிக மிக அதிகம் தான்.

எனது கருத்து என்ன என்றால் ஒன்றைத் தவறென்று சொல்வதற்காக இன்னொரு தவறை சரியெனச் சொல்லிவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில் பதியப்பட்ட பின்னூட்டம் அது.

உங்களது நீண்ட விளக்கம் அருமை...

இதில் தவறாக நினைத்துக் கொள்ள ஏதுமில்லை...

மன்றத்தின் பழையப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால்
சில நேரங்களில் படைப்புகளின் மீது பெரும் விவாதமே நடந்திருக்கும்.

சில படைப்புகளை விட அவற்றின் மீதான பின்னூட்ட விவாதங்கள் அருமையாக இருக்கும்

இதுவே இம்மன்றத்தின் பலம் என்றும் நான் நினைக்கிறேன். ஆனால் இது இப்போது அருகி வருகிறது. நாம் நினைத்தால் இன்னும் முன்னெடுக்கலாம்.

முன்பு போல் விவாதங்கள் இப்போது மன்றத்தில் இல்லை என்ற வருத்தம் எப்போதும் எனக்குண்டு ... ஆரோக்கியமான விவாதங்கள் எப்போதும் அறிவுப்புரட்சிக்கு வழிவகுப்பவை.

உங்கள் புரிதலுக்கு நன்றிகள் காமாக்ஷி.

அமரன்
10-04-2010, 11:12 AM
சரோஜா திரைப்படத்தில் வெங்கட்பிரபுவின் எண்ணமும் எழுத்தும் எள்ளலுடன் துள்ளும் இடமொன்று..

சினிமா நடிகர்களாவது பரவாயில்லை. போனாத்தான் இம்சிப்பாங்க. ஆனா இவங்க வீட்டுக்குள்ள வந்தே இம்சை கொடுப்பாங்க..

தொலை-காட்சிகளைக் காட்டாது,
நெஞ்சுக்கு நெருக்கமான காட்சிகளை மையமாக வைத்து பின்னப்பட்ட,
பொருந்தாத பொருள் கொண்ட நெடுந்தொடர்கள்...
இதனால் ஆனார்கள் பலர் நொந்தவர்கள்..

இந்த நெடுந்தொடர்களால்
நாமிழந்த நெடுங்கால நல்வழக்கங்கள்
எத்தனை... எத்தனை...?
வேதனை..!

கூட்டுக் குடும்பம் தனிக்குடும்பமாகி விட்ட காலச்சூழலில்
தனிக்குடும்பத்தையே சிதைத்து தனி நபராக்கும் நாசகாரிகளில்
தொலைக்காட்சித் தொடர்களும் முக்கிய பங்காற்றுகின்றன.

இப்படி எத்தனையோ......
அடுக்கிக் கொண்டு போனாலும்..

ஏழு பிள்ளைப் பெற்று
வீடு நிறைந்து வாழ்ந்த
அய்யாவும் அம்மாவும்
அக்கால நினைவுச் சூடுகளுடன்
இக்கால நெடுந்தொடர்களுக்குள்
நுழைந்து இழையும் நேரங்கள்
குலைந்து போக வைக்கின்றன
நெடுந்தொடர்கள் மீதான கோபத்தை..

வல்லிய எளிய நடையில்
அள்ளி எடுக்கும் கவிதை.

பாராட்டுகிறேன் காமாக்*ஷி.

KAMAKSHE
10-04-2010, 04:02 PM

உண்மையில் நான்கு நாட்களுக்கு முன் எழுதிய எனது இரண்டாவது கவிதை....

தங்கள் கவிதைக்கூற்று என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது

நன்றிகள் ஆயிரம் அமரன் அவர்களே
காமாக்ஷி

KAMAKSHE
11-04-2010, 02:15 AM

நன்றி கலையரசி