PDA

View Full Version : இளநரை



venkatesan1985
04-04-2010, 07:50 AM
என் நண்பர் ஒருவருக்கு 25 வயது தான் ஆகிறது.அவருக்கு நிரைய முடி நரைத்திருக்கிறது.அதை தடுக்க என்ன வழி?

அமரன்
04-04-2010, 04:21 PM
சிவம்..

மன்றம் ஒரு பல் கலைக் களஞ்சியம். அதில் இளநரையைப் பற்றி ஒரு அன்பர் களஞ்சியப்படுத்தியுள்ளார். Similar Threads இல் தெரிகிறது பாருங்கள். அதை விட இன்னும் சிலவும் உள்ளது. மருத்துவப்பகுதியில் தேடுங்கள்.

ஜனகன்
05-04-2010, 07:23 PM
http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/1_narai.jpg


தற்போது பெரும்பாலான இளைய தலைமுறைக்கு தலையாய பிரச்சினையே தலை முடிதான். தலை முடி உதிர்வது, இள நரை, பொடுகு போன்றவைதான்.

இவை பெரும்பாலும், சுற்றுச்சூழல் கெட்டிருப்பது மற்றும் பணிச் சுமை காரணமாக ஏற்படுகிறது.

இளநரையைப் போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலச இளநரை மாறும்.

இலந்தை இலையையும் சிறுகிளைகளையும் நன்கு அரைத்து கட்டிகள், கொப்புளங்களின் மீது வைத்துக் கட்ட அவை சீக்கிரம் பழுத்து உடையும்.

மேலும், இள நரை ஏற்பட்டதும் மனம் கலங்கிவிடாமல், உணவில் அதிகமான அளவு கறிவேப்பிலையை சாப்பிட்டு வர வெள்ளை முடிகள் மீண்டும் கருப்பாக மாறும்.

ஷண்முகம்
07-07-2010, 04:44 PM
இக்கால இளைஞர்களுக்கு பயனுள்ள குறிப்பு.

sures
17-11-2010, 03:26 PM
உண்மையில் பயனுள்ள ஒரு தகவல்.

ஜனகன் அவர்களும் நோர்வே நாட்டில் தான் வசித்து வருகிறார் என்பதை இப்போது தான் பார்த்தேன். :)

srivinoth
19-12-2010, 04:42 PM
இளநரைக்கு ஆங்கில மருத்துவத்தில் தீர்வுகள் கிடையாது!!!

goldseenu
26-12-2010, 02:03 PM
நன்றி திரு ஜனகன் அவர்களே ., தங்களின் மருத்துவ குறிப்புக்கு மிக்க நன்றி ,,அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள் :icon_rollout: