PDA

View Full Version : நல்ல கணிணி வாங்க ஆலோசனை தேவை



venkatesan1985
04-04-2010, 07:43 AM
நான் கணிணி வாங்கலாம் என நினைக்கிறேன்.அதற்கு சில ஆலோசனை தேவை
1.மிக குறைந்த விலையாக எவ்வளவு விலைக்கு வாங்கலாம்?
2.பழைய கணிணி வாங்கலாமா?
3.அசெம்புள் கணிணி வாங்கலாமா?
4.வாங்கும்போது கவனிக்கவேண்டியவை என்ன?
5.மேற்படி கேள்விகளுக்கு தக்க விளக்கம் அளிக்கும்படி மன்ற நண்பர்களை வேண்டிக்கொள்கிறேன்

வியாசன்
04-04-2010, 09:32 PM
நண்பரே
நீங்கள் கணனி வாங்கும்போது

பழைய கணனிகள் பொருத்திய கணனிகளை தவிர்த்து கொள்ளுங்கள். இவை பலநேரங்களில்(Driver) பிரச்சனைகளை கொடுக்கும்.

கணனியின் சிபியூ வேகம் ராம் என்பற்றை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஒரு தரமான நிறுவனத்தின் கணனியை வாங்கினால் தொல்லைகள் குறைவு.

அடுத்தது என்ன தேவைக்காக கணனியை வாங்குகின்றீர்கள் என்பதை பொறுத்தது. கிராபழிக்ஸ் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கு வேகம் ராம் கிராபிக்ஸ் காட் என்பன மிக முக்கியமாக நன்றாக இருக்க வேண்டும்

விலையை என்பது நீங்கள் வசிக்கும் நாட்டை பொறுத்தது

rajesh2008
09-04-2010, 04:34 PM
நீங்கள் கம்ப்யூட்டரில் கத்துக்குட்டி என்றால் யூஸ்ட் கம்ப்யூட்டரில் கொஞ்சம் அடித்து நொறுக்கி விட்டு பின்னே புதுசு வாங்கிக்கலாம், 5000க்கேல்லாம் யூஸ்ட் பி 4 கிடைக்குது.நாளிதழைப் பாருங்கள்.

இல்லை என்றால் கம்பெனி புராடக்ட் என்றால் நல்லது, சர்வீசும் நல்லா இருக்கும்.

தீர யோசித்துக்கோங்க

மயூ
10-04-2010, 12:30 PM
பாவித்த கணனிகளை வாங்குவதை தவரித்துக் கொள்ளவம் நண்பரே. அனேகம் அவை பிரைச்சனைகளைத் தரக்ககூடியவை.

தங்கவேல்
20-04-2010, 04:26 AM
சிவம் எல்லா கம்ப்யூட்டருமே அசெம்பிள்ட் தான். பிராண்ட் நேம் மற்றும்தான் ஒன்று. பழையது வேண்டாம். ஏகப்பட்ட பிரச்சினைகள் வர வாய்ப்புகள் அதிகம்.

1) Intel Dual Core 2.7 Ghz Processor. ரூபாய் 3,200.00
2) Intel Desktop Board DG31PR Classic Series. Rs. 2,925.00
3) Segate Hard Disk 1TB - Rs 4,250.00
4) LG TFT Monitor Rs. 5100.00
5) Transcend 2GB DDR2 Desktop Memory Rs. 1,850
6) Sony 20x DVD RW Black Oem SATA Rs. Rs. 1,240
7) Cabinet Rs. 1,350
8) Keyboard and mouse Rs. 1500.00
9) Speaker Rs. 1500.00
10) Web Camera Rs. 1000.00
11) Head Phone Rs 500.00
12) UPS Rs. 2000.00
13) Computer Table Rs. 1200.00
14) Chair Rs 1200.00
15) Pen Drive 8 GB Rs 1000.00

Total Rs : 29815.00 only

OS Operating System and Antivirus kit extra.

மேலே இருப்பவை சாதாரண கம்ப்யூட்டர்தான். ஆனால் வெகு நல்ல பெர்பார்மன்ஸ் தரும். அசெம்பிள் செய்வது எப்படி என்று யூடியூபில் பார்த்துக் கொள்ளவும். வேறேதேனும் சந்தேகமிருந்தால் பதிவிடவும்.