PDA

View Full Version : தமிழன் இன்றே!



குணமதி
04-04-2010, 02:28 AM
தமிழன் இன்றே!


அன்பெலாம் வறண்ட நெஞ்சம்

.......... அழுக்கெலாம் திரண்ட எண்ணம்

முன்பெலாம் இருந்த மேன்மை

.......... முழுவதும் மறந்த உள்ளம்

தன்னலம் முன்னே நிற்கும்

..........தமிழின அழிவ தற்கும்

முன்துணை நின்ற கீழ்மை

.......... முழுமையாய் இழிவின் சின்னம்!



ஆற்றுநீர் உரிமை எல்லாம்

.......... அடியுடன் பறிகொ டுத்தும்

ஏற்றமாய்த் தன்கு டும்பம்

.......... இருந்திடும் எண்ணம் ஒன்றே

ஊற்றமாய்த் தங்கும் ஈழ

.......... உடன்பிறப் பழிவ தற்கும்

ஆற்றலாய்த் துணையும் போனான்

.......... ஆமவன் தமிழன் இன்றே!

ஆதி
04-04-2010, 03:46 AM
கோப கர்ஜனை கொப்பளிக்கும் வரிகள் குணமதி..

அறுசீரில் சத்தம் வைத்து எழுத நிறைய தேர்ச்சி வேண்டும், அதை நீங்கள் அடைந்திருக்குறீர்கள்..

பாராட்டுக்கள்..

சிவா.ஜி
04-04-2010, 05:23 AM
மரபுக் கவிதை அருமை

அமரன்
04-04-2010, 04:23 PM
மரபுக் கவிதை அருமை

நீங்கள் என்ன நினைத்துச் சொன்னீர்களோ தெரியாது சிவா. அரசியல் மரபை தாங்கி வந்த இந்தக் கவிதை அருமைதான்.

பாராட்டு குணமதி!

குணமதி
05-04-2010, 03:11 AM
கோப கர்ஜனை கொப்பளிக்கும் வரிகள் குணமதி..

அறுசீரில் சத்தம் வைத்து எழுத நிறைய தேர்ச்சி வேண்டும், அதை நீங்கள் அடைந்திருக்குறீர்கள்..

பாராட்டுக்கள்..

மிக்க நன்றி.

குணமதி
05-04-2010, 03:12 AM
மரபுக் கவிதை அருமை

பாராட்டுக்கு நன்றி.

குணமதி
05-04-2010, 03:13 AM
நீங்கள் என்ன நினைத்துச் சொன்னீர்களோ தெரியாது சிவா. அரசியல் மரபை தாங்கி வந்த இந்தக் கவிதை அருமைதான்.

பாராட்டு குணமதி!

நன்றி அமரன்.