PDA

View Full Version : குழந்தையின் எதிர்ப்பு!



குணமதி
03-04-2010, 01:38 AM
குழந்தையின் எதிர்ப்பு!


திறமையாகவும் தேர்ந்த தந்திரத்திலும்

எளிதாக ஏமாற்றிவிடலாம்

எதுவானாலும் குழந்தையை;

என்றாலும், ஏமாற்றுவது

குழந்தைக்குப் புரிகிறது!

அதனளவில் அழகாக

அருமையாக எதிர்க்கிறது...

வெறுப்பைக் காட்டி!

அமரன்
03-04-2010, 10:03 PM
சரிதான் குணமதி்.
ஒரு குழந்தையின் முகம் திருப்பலை விஞ்சிய தண்டனை/எதிர்ப்பு நிச்சயமாக இல்லை.

அதேவேளை, தோற்றதாய்த் தோற்றங்காட்டி வெற்றிகொண்டானான குழந்தைகளும் இல்லாமல் இல்லை.

பாராட்டு.

குணமதி
04-04-2010, 02:02 AM
நல்ல விளக்கம்.

நன்றி அமரன்.

சிவா.ஜி
04-04-2010, 05:56 AM
என்ன சொல்ல வருகிறீர்கள்? குழந்தைக்குக் கூட குரோதம் இருக்கிறதா?

குணமதி
04-04-2010, 06:11 PM
என்ன சொல்ல வருகிறீர்கள்? குழந்தைக்குக் கூட குரோதம் இருக்கிறதா?

தவறு சிவா.

குழந்தை என்றபோது அப்படி நினைக்க வேண்டா.

இயல்பான உணர்வு வெளிப்பாடு.

அவ்வளவே!

நன்றி.

இளசு
06-04-2010, 06:49 PM
குணமதி

நல்ல சிந்தனை..

அமரன் சொன்னதுபோல்
வளர்ந்தவர் '' வெற்றி''யும் அங்கு தோல்வியே
குழந்தையின் '' தோல்வியும்'' வெற்றியே!

குணமதி
07-04-2010, 04:38 AM
குணமதி

நல்ல சிந்தனை..

அமரன் சொன்னதுபோல்
வளர்ந்தவர் '' வெற்றி''யும் அங்கு தோல்வியே
குழந்தையின் '' தோல்வியும்'' வெற்றியே!

உண்மையே.

மிக்க நன்றி.

செல்வா
07-04-2010, 07:12 PM
அன்பு அமரனும் அண்ணல் இளவலும் சொன்னபின் நானென்ன சொல்ல...

வித்தியாசமான கவிப்பொருள்
வாழ்த்துக்கள்...

குணமதி
08-04-2010, 01:34 AM
நன்றி செல்வா.