PDA

View Full Version : ஆலோசனை

venkatesan1985
02-04-2010, 06:21 PM
நம் மன்றத்தில் ஆன்மீகம் உள்ளது போல் ஜோதிடத்திற்கென ஒரு பகுதி வைத்தால் என்ன?மேலும் புகார் என தனி பகுதி வைத்து அதில் நாம் அன்றாடம் சமூகத்தில் சந்திக்கும் மனக்கசப்புகள்,அடைந்த வேதனைகள் போன்றவற்றையும் அது மற்றவருக்கு ஏற்படாமல் இருக்க ஆலோசனை வழங்கும் பகுதியாக இருக்கலாமே?மன்றம் ஏற்குமா இதை.உதாரணமாக கடவுச்சீட்டு,வாக்காளர் அடையாள அட்டை.,குடும்ப அட்டை,பட்டா போன்றவைகளை எப்படி பெருவது?எப்படி பெயர் மாற்றம் செய்வது?யாரை அணுகுவது? இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே

இளசு
02-04-2010, 06:30 PM
வாருங்கள் நண்பரே..

ஆலோசனைகளுக்கு நன்றி.

சோதிடம் தொடர்பான பதிவுகள் அதிகம் வர வாய்ப்பில்லை.
எனவே ஆன்மீகப் பகுதியிலேயே அவற்றைத் தரலாம்.

அடுத்து நீங்கள் சொன்னவை பொதுவிவாதங்கள் பகுதியில் தரலாம்.

அமரன்
02-04-2010, 09:21 PM
வாருங்கள் நண்பரே..

ஆலோசனைகளுக்கு நன்றி.

சோதிடம் தொடர்பான பதிவுகள் அதிகம் வர வாய்ப்பில்லை.
எனவே ஆன்மீகப் பகுதியிலேயே அவற்றைத் தரலாம்.

அடுத்து நீங்கள் சொன்னவை பொதுவிவாதங்கள் பகுதியில் தரலாம்.

ஆமாம் அண்ணா..

பொது விவாதங்களுடன் உதவுங்கரங்களையும் பயனுள்ள தகவல்களையும் பயன்படுத்தலாம்.

cselvaraj1
14-08-2010, 02:58 AM
இந்த தமிழ் மன்றத்தில் இணைய அனுமதி அளித்தற்கு முதல்கண் நன்றி.
நான் ஒரு சோதிட மாணவன். கடந்த 2004 முதல் பி.ஏ சோதிடம், தற்சமயம் எம்.எஸ்.சி Applied Astrology கோவை கற்பகம் பல்கலைகழகத்தில் பயின்ரு வருகிறேன். எனவே சோதிடத்திற்கு தனி பகுதி இருந்தால் முறையான இந்த கலையை அனைவரும் அறிய, தெரிய வாய்ப்பு இருக்கிறது. நன்றி.

அமரன்
14-08-2010, 09:31 AM

செல்வராஜ்.

சிவம் அவர்களுக்குச் சொன்ன பதிலே உங்களுக்கும். இப்போதைக்கு ஆன்மீகப் பகுதியில் ஜோதிடத்தை வைத்துக்கொள்வோம். தேவை ஏற்பட்டுக் காலம் கேட்டால் தனிப்பிரிவு உருவாக்குவோம்.

cselvaraj1
14-08-2010, 09:49 AM
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி

கலையரசி
17-08-2010, 04:37 AM
சிறுவர் மையம் பகுதியில் பெரும்பாலும் விளையாட்டுப் பொழுது போக்கு அம்சங்களே மிகுந்திருப்பதால், சிறுவர் கதைகள் என்ற உப பிரிவைக் கதைகள் பகுதியிலேயே ஏற்படுத்தி விட்டு, அதனைப் பொழுது போக்கு மையம் எனப் பெயர் மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என்பது என் யோசனை.

ஆதவா
17-08-2010, 08:58 AM

அப்பறம் எங்களை மாதிரி சிறுவர்களெல்லாம் எங்கே போவது??? :sauer028::sauer028:

பேசாமல் விளையாட்டு மையம்னு வெச்சிடலாம். அவ்வளோ விளையாட்டு இருக்கு!! இப்படி உப உப உப பிரிவுகளா போயிட்டு இருந்தா, தேடறது கஷ்டமாயிடப்போவுதுங்க!! அதையும் பார்த்துக்கோங்க.

கலையரசி
17-08-2010, 12:18 PM

ஏற்கெனவே சாமந்தி மன்றத்துல விளையாட்டுன்னு ஒரு பிரிவு இருக்குதே! அதனால் அதே பேரை வைச்சா குழப்பம் வரும்னு தான் பொழுதுபோக்கு மையம்னு வைக்கலாம்னு சொன்னேன்.

கதை பகுதியில் சிறுகதை, தொடர்கதை என்ற பிரிவு மட்டும் தானே இருக்கு. வேறு உப பிரிவு இல்லையே!
மேலும் உபபிரிவு தேடுதலை எளிமையாக்குமேயொழிய, கஷ்டப்படுத்தாது.

நமக்குத் தோணறதைச் சொல்றோம். அதை நடைமுறைப்படுத்த முடியுமா, முடியாதாங்கிறதை யோசிச்சி அமரன் முடிவு எடுத்துக்கொள்ளட்டும்.

தமிழ் மைந்தன்
17-08-2010, 12:27 PM

எனக்கும் கலையரசி அவர்கள் யோசனை சரியாகத்தான் படுகிறது.

அமரன்
22-08-2010, 10:09 AM
சிறுவர் மையம் பகுதியில் பெரும்பாலும் விளையாட்டுப் பொழுது போக்கு அம்சங்களே மிகுந்திருப்பதால், சிறுவர் கதைகள் என்ற உப பிரிவைக் கதைகள் பகுதியிலேயே ஏற்படுத்தி விட்டு, அதனைப் பொழுது போக்கு மையம் எனப் பெயர் மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என்பது என் யோசனை.

நன்றி கலைக்கா.

சிறுவர் மையத்தில் பொழுது போக்கு மையம் துணைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

மன்ற நட்புகள் விளையாடி மகிழ அந்த இடம் பயன்படும்.

சிறுவர் மையத்தில், பாப்பாக்கதை, பப்பாப்பாப் பாட்டு, இதர பயன்மிக்க சிறுவர் தொடர்பானவை எல்லாம் இடம்பெறும்.

கலையரசி
22-08-2010, 10:42 AM
நன்றி கலைக்கா.

சிறுவர் மையத்தில் பொழுது போக்கு மையம் துணைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

மன்ற நட்புகள் விளையாடி மகிழ அந்த இடம் பயன்படும்.

சிறுவர் மையத்தில், பாப்பாக்கதை, பப்பாப்பாப் பாட்டு, இதர பயன்மிக்க சிறுவர் தொடர்பானவை எல்லாம் இடம்பெறும்.

என் யோசனையை உடனே ஏற்றுச் செயல்படுத்தியமைக்கு நன்றி அமரன்!