PDA

View Full Version : புனித வெள்ளிmuthuvel
02-04-2010, 06:09 AM
சிந்தினான் எனக்காக ,
என் சிந்தையெல்லாம் உனக்காக ,
புனித வெள்ளி ...


காயபடுத்தியது உன்னை ,
சுத்தபடுத்தியது என்னை,
புனித வெள்ளி ..நீ குளித்தாய் குருதியில்,
பாவஅழுக்கு நீங்கியது என் தேகத்தில் ,
புனித வெள்ளி ..

சரண்யா
02-04-2010, 07:21 AM
தவறு செய்தவனையும் மன்னிக்க புனித வெள்ளியை பற்றிய கவிதை பகிர்வுக்கு நன்றி...

richard
02-04-2010, 07:49 AM
சிந்தினான் எனக்காக ,
என் சிந்தையெல்லாம் உனக்காக ,
புனித வெள்ளி ...


காயபடுத்தியது உன்னை ,
சுத்தபடுத்தியது என்னை,
புனித வெள்ளி ..


http://img638.imageshack.us/img638/1930/goodfriday.gifமனித குலத்திற்காக பாடுபட்ட இயேசு,

கொலைச் செய்யப்பட்ட தினம்

புனித வெள்ளியாக உலகம் முழுவதும் இன்று

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொல்கொத்தா மலையில் மக்களின் பாவங்களுக்காக தன்னையே பலியாக்கிய இயேசு,

பிற்பகல் 3 மணிக்கு உயிர்விட்ட நேரத்தில் தங்களுக்குரிய கருத்துக்களை வேண்டிக் கொண்டால் அதற்குரிய பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை கிறிஸ்தவ மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

richard
02-04-2010, 08:15 AM
புனித வெள்ளி - ஆண்டவரின் திருப்பாடுகள

மிகப் பழைமையான வழ்க்கப்படி, இன்றும் நாளையும் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை.

சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாயிருக்கும்.

பிற்பகலில், குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்ப, இதற்குப் பிந்தின நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்: இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து.

இன்று இறைமக்களுக்கு இச்சடங்கில்மட்டும் திருவுணவு கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கும் எந்நேரத்திலும் திருவுணவு கொண்டுபோகலாம்.

திருப்பலிக்குரிய சிவப்பு நிற உடைகள் அணிந்த குருவும் திருத்தொண்டரும் பீடத்தின்முன் வந்து, வணக்கம் செலுத்தி, முகம் குப்புற விழுந்து அல்லது வசதிக்கேற்ப முழந்தாட் பணிந்து இருப்பார்கள்: எல்லாரும் சிறிது நேரம் மௌனமாக மன்றாடுவர்.

பின் குருவும் பணியாளரும் தத்தம் இருக்கைக்குச் செல்வர். குரு அங்கு மக்களை நோக்கி நின்று, கைகுவித்துக் கீழுள்ள மன்றாட்டுகளில் ஒன்றைச் சொல்வார்.

மன்றாட்டு: (செபிப்போமாக அல்லது மன்றாடுவோமாக என்று சொல்வதில்லை)

இறைவா, உம் திருமகன் கிறிஸ்து
உம் மக்கள் எங்களுக்காகத் தமது இரத்தத்தைச் சிந்தி உயிர் நீத்துப் பாஸ்கா மறைநிகழ்ச்சியை நிறைவேற்றினார்.
அவரது சாவிகளை இன்று சிறப்பாக நினைவுகூர்ந்து கொண்டாடுகின்ற நாங்கள்
எங்கள் சிந்தனை, சொல, செயல் அனைத்தாலும் இத்திருவழிபாட்டில் ஆழ்ந்து பங்கேற்கச் செய்தருளும். எங்கள்.

எல். ஆமென்.(அல்லது)இரக்கமுள்ள இறiவா,

முதல் மனிதரின் பாவத்தின் விளைவான சாவுக்குத் தலைமுறை தலைமுறையாக நாங்கள் ஆளாகித் தவிக்கின்றோம்.
எங்கள் ஆண்டவராகிய உம் திருமகன் கிறிஸ்துவின் பாடுகளினால் நீவிர் அந்தச் சாவினை அழித்தீர்.
இயற்கை நியதிப்படி பழைய ஆதாமின் சாயாலைத் தாங்கியிருக்கும் நாங்கள்,உமது அருளால் புனிதமடைந்து,
புதிய ஆதாமாகிய கிறிஸ்துவின் சாயலைத் தாங்கி, அனைத்திலும் அவரைப்போல் ஆகிடச் செய்தருளும்.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்

இறைவாக்கினர் எசாயா திருநூலிருந்து வாசகம்:

13 இதோ, என் ஊழியர் சிறப்படைவார்@ அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.

14 அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்@ அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது@ மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.

15 அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்@ அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்@ ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்@ தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.

அதிகாரம் 53

1 நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?

2 இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்@ நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை@ நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை@

3 அவர் இகழப்பட்டார்@ மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்@ வேதனையுற்ற மனிதராய் இருந்தார்@ நோயுற்று நலிந்தார்@ காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்@ அவர் இழிவுபடுத்தப்பட்டார்@ அவரை நாம் மதிக்கவில்லை.

4 மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்@ நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்@ நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.

5 அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்@ நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்@ நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்@ அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.

6 ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்@ நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்@ ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.

7 அவர் ஒடுக்கப்பட்டார்@ சிறுமைப்படுத்தப்பட்டார்@ ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை@ அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

8 அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்@ அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்@ என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்.

9 வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை@ வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை@ ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்@ செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.

10 அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்@ அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்@ எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்@ ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.

11 அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்@ நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்@ அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

12 ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்@ அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்@ ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்@ கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்@ ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்@ கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி

தியானப்பாடல் : திருப்பாடல் 31: 2,6 12-13, 15-16, 17, 25


பல்லவி: தந்தையே உம் கையில் என் ஆவியயை ஒப்படைக்கிறேன்

ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்
ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்
உம்முடைய நீதியின்படி என்னை விடுவித்தருளும்.
உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே
வார்தையில் தவறாத இறைவா
நீர் என்னை மீட்டருள்வீர்

என் எதிரிகள் அனைவரும்டையவும் பழிச்சொல்லுக்கு நான் ஆளானேன்
என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்
எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன்
வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்
இறந்து போனவன் போல் பிறர் கண்களுக்கு மறைவானேன்
உடைந்து போன மட்கலத்தைப் போலானேன்

ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நான் உம்மீது நம்பிக்கை வைக்கன்றேன்
நீரே என் கடவுள் என்றேன்
என்கதி உம் கையில் உள்ளது ஆண்டவரே
என் எதிரிகளிடமிருந்தும் என்னைத்
துன்புறுத்து வோரிடமிருந்தும்
நீர் என்னை விடுவித்தருளும்

கனிந்த உம் திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்
உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்
ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்களே
மனத்திடன் கொள்ளுங்கள்
உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்

http://www.bibleintamil.com/prayer/goodfriday.html

richard
02-04-2010, 08:18 AM
ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா திருவிழிப்பு


http://www.bibleintamil.com/prayer/easter-vigil.html

அக்னி
02-04-2010, 09:08 AM
புனித வெள்ளி...

தாயகத்திலிருக்கையில் இந்த நாளின் அமைதி நிறைந்த பிரார்த்தனைகளில்
நானும் இணைந்திருக்கின்றேன்.

அந்த நாளின் அமைதியை எந்நாளிலும் நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை.

எமக்கு ஒருவர் உதவினாலே
அவர்பற்றி மனம் எப்போதும் உவகையான மரியாதை வைக்கும்.
அப்படியானால், எமக்காக உயிர் கொடுத்தவரை...

இப்புனிதநாளில்,
மத சம்பிரதாயங்களைக் கடந்து,
மன்னிக்கும், பிறர்நலன்காக்கும் மனப்பாங்குகளுக்காக உறுதிகொள்வோம்...

சிவா.ஜி
02-04-2010, 09:26 AM
புனித வெள்ளி...

இப்புனிதநாளில்,
மத சம்பிரதாயங்களைக் கடந்து,
மன்னிக்கும், பிறர்நலன்காக்கும் மனப்பாங்குகளுக்காக உறுதிகொள்வோம்...

உண்மையான வரிகள். இந்தப் புனித நந்நாளில் இதை நமது உறுதிமொழியாக்குவோம்.

muthuvel
03-04-2010, 07:02 AM
உண்மையான வரிகள். இந்தப் புனித நந்நாளில் இதை நமது உறுதிமொழியாக்குவோம்.

சரியாக சொன்னிர்கள்

ஆதி
03-04-2010, 05:54 PM
கவிதையில் நிறைய திருத்தம் வேண்டி இருக்கு முத்துவேல் சரிபாருங்க..

சத்தம் சரியா அமைய மெனக்கெட்டிருக்கீங்க.. சங்கதி சரியா அமையல..

---------------

மற்றோரின் பாவங்களுக்கான கூலியை
நீ மட்டுமே பெற்றுக் கொண்டாயே..
நீயொரு சுயந்லவாதி தான் கர்த்தா...

muthuvel
08-04-2010, 03:15 AM
புனித வெள்ளி - ஆண்டவரின் திருப்பாடுகள


பகிர்வுக்கு நன்றி