PDA

View Full Version : உறவுகள்



Ravee
02-04-2010, 12:47 AM
http://www.traveladventures.org/continents/southamerica/images/medellin-san-pedro-cemetery07.jpg


உறவுகள்

இயற்கையாய் நடந்தது இது எல்லாம்
விதை சிறு துளிர் விட்டது
துளிர் மெல்ல தளிர் விட்டது
தளிர் பின் குறுஞ்செடியாய் ஆனது

காலம் கூடியதும் மொட்டுக்கள் பிறந்தன
வண்ண மொட்டுக்கள் பூவாய் பூத்தன
பூ காயாக , காய் பழமாக
விதைகள் வெடிக்க விழுந்தது பழம்

செடிகள் காய்த்து ஓய்ந்த பின்
சருகாகி காணாமல் போனது மண்ணுக்குள்
என்னடா விதிஎன்று ஏங்கி தவிக்கையிலே
மீண்டும் விதை சிறுதுளிர் விட்டது.

இது எல்லாம் இயற்கை என்று
ஏற்றுக்கொள்ளும் மனம் - இடையில்
காம்பை பிரிந்த பூவை பார்த்து
பட்டி மன்றம் வைப்பது ஏன் ???

Ravee
02-04-2010, 01:24 AM
கணிப்பொறியியல் படிப்பின் கடைசி வருட படிப்பை முடிக்கும் தருணத்தில் இறந்த நண்பரின் நினைவாக இந்த கவிதை :huh:

சிவா.ஜி
02-04-2010, 06:05 AM
உதிர்ந்தப் பூவை எண்ணி செடி அழுவதில்லை, முறிந்தக் கிளையை எண்ணி மரம் கண்ணீர் விடுவதில்லை....ஆனால் மனிதன்....வளர்த்த மீன் இறந்தாலும் மனம் வருந்துகிறான். தோற்றமும், மறைவும் இயற்கையென்றாலும்.....இழப்பை அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

பூவும், கிளையும் தன் எந்த நினைவையும், செடியிடமும், மரமிடமும் விட்டுச் செல்வதில்லை....ஆனால் உறவுகள்...???

உங்கள் நண்பருக்கு என் அஞ்சலிகள் ரவீ.

அக்னி
02-04-2010, 06:41 AM
ஒவ்வொரு வினாடிகளிலும்
மரணம் தேடித்
தேடாமலே செல்லுவதுதான்
நம் வாழ்வு...

காலக் கழியலில்
மரணத்தை நெருங்குவதைத்
தவிர்க்க முடியாது...
இதனை நினைத்து
மரணம் மனதை நெருக்குவதைத்
தவிர்த்திடாவிட்டால்
தினமும் முட்படுக்கைதான்...

மரண அளவீடு
எதனடிப்படையில் என்பது புதிர்தான்...
ஆயுளின் அடிப்படை
எது என்பதற்கு விடை இல்லைதான்...

மரணம் வரும்போது வரட்டும்.
அதுவரைக்கும்
மனங்கள் சந்தோஷிக்கட்டும்...

மொட்டவிழும் தருணத்தில்,
பூ ஒன்று இறைவன் சந்நிதானத்தில்...
அங்கு இதழ்விரித்து,
மாறா மணம்பரப்பி,
வாடாதிருக்கும்...

நம்புவோம்... பிரார்த்திப்போம்...

Ravee
02-04-2010, 07:37 AM
தோற்றமும், மறைவும் இயற்கையென்றாலும்..... இழப்பை அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

பூவும், கிளையும் தன் எந்த நினைவையும், செடியிடமும், மரமிடமும் விட்டுச் செல்வதில்லை....ஆனால் உறவுகள்...???

உங்கள் நண்பருக்கு என் அஞ்சலிகள் ரவீ.

ஆறறிவு என்று நமக்கு ஆண்டவன் வைத்த ஆப்பு அதுதானே சிவா . மறதி என்ற மருந்து ஒன்றே இழப்பு என்னும் காயங்களை குணமாக்கும் .

Ravee
02-04-2010, 07:42 AM
காலக் கழியலில்
மரணத்தை நெருங்குவதைத்
தவிர்க்க முடியாது...
இதனை நினைத்து
மரணம் மனதை நெருக்குவதைத்
தவிர்த்திடாவிட்டால்
தினமும் முட்படுக்கைதான்...

மரண அளவீடு
எதனடிப்படையில் என்பது புதிர்தான்...
ஆயுளின் அடிப்படை
எது என்பதற்கு விடை இல்லைதான்...



நம்புவோம்... பிரார்த்திப்போம்...

அருமையான எழுத்துக்கள் , ஆழமான சிந்தனையை எளிமையாக கொடுத்ததற்கு நன்றி அக்னி

இளசு
06-04-2010, 06:37 PM
நீலவானம் படத்தில் ஒரு வசனம் வரும் :

ஆறிலும் சாவு.... நூறிலும் சாவு..
ஆனால் இருபதில் சாவு?



சூஃபி, புத்தர் கதைகளில் இந்த அகால மரணம் எழுப்பும்
அபஸ்வரக் கேள்விகள் இன்னும் பதிலின்றி தொக்கி நிற்கின்றன.


அப்பன் சாவான் - அவன் பின்னே
மகன் சாவான்... - அவன் பின்னே
அவன் மகனும்..


இந்த வரிசை தப்பும்போதெல்லாம்
இயற்கை மேல் கோபம் வரும் எனக்கு.



ஆழ்ந்த சோகத்தைப் பகிர்கிறேன் ரவீ..

செல்வா
07-04-2010, 07:28 PM
கனியுதிரலாம்
காயுதிரலாமா?
பிஞ்சுதிரலாமா?
பூவுதிரலாமா?
மொக்குதிரலாமா?

உதிர்ந்தால் தாங்குமா மனம்...?

உங்கள் நண்பரின் பிரிவிற்கு அஞ்சலிகள்.

சோகச் சுமைதாங்கி....கனமான கவிதை...

Ravee
16-04-2010, 04:33 AM
நீலவானம் படத்தில் ஒரு வசனம் வரும் :

ஆறிலும் சாவு.... நூறிலும் சாவு..
ஆனால் இருபதில் சாவு?



சூஃபி, புத்தர் கதைகளில் இந்த அகால மரணம் எழுப்பும்
அபஸ்வரக் கேள்விகள் இன்னும் பதிலின்றி தொக்கி நிற்கின்றன.


அப்பன் சாவான் - அவன் பின்னே
மகன் சாவான்... - அவன் பின்னே
அவன் மகனும்..


இந்த வரிசை தப்பும்போதெல்லாம்
இயற்கை மேல் கோபம் வரும் எனக்கு.



ஆழ்ந்த சோகத்தைப் பகிர்கிறேன் ரவீ..


அருமையான மேற்கோள் இளசு , நண்பரை என்னும் போது எல்லாம் கண்களின் ஓரத்தில் ஒரு துளி நீர் என்னை அறியாமல்

Ravee
16-04-2010, 04:35 AM
கனியுதிரலாம்
காயுதிரலாமா?
பிஞ்சுதிரலாமா?
பூவுதிரலாமா?
மொக்குதிரலாமா?

உதிர்ந்தால் தாங்குமா மனம்...?

உங்கள் நண்பரின் பிரிவிற்கு அஞ்சலிகள்.

சோகச் சுமைதாங்கி....கனமான கவிதை...

நன்றி செல்வா என் சோகங்களை உங்கள் தோள்களில் வாங்கி கொண்டதற்கு

கலையரசி
16-04-2010, 04:41 AM
நெகிழ்ச்சியான கவிதை.
வாழ வேண்டிய வயதில் உதிர்ந்த உங்கள் நண்பரின் முடிவை எண்ணிக் கலங்குகின்றது நெஞ்சம். காலம் தான் உங்கள் மனத்துயரை ஆற்றும்.

Ravee
16-04-2010, 04:45 AM
கலை நண்பரின் பெற்றோர்களை நினைத்தால் தான் மனம் ரொம்ப கஷ்டப்படுகிறது . அவர் அவனுக்காக வீடு தொழில் என்று எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து வைத்தார். இப்போது அவைகள் மட்டும் அவர்கள் பார்வையில்