PDA

View Full Version : உன்னுடனான உரையாடல்கள்..



அகத்தியன்
31-03-2010, 01:33 PM
ஒரு கனவுப்புள்ளியில் ஆரம்பமானது..
உன்னுடனான உரையாடல்கள்..
காலம் கரைக்கும் அவை பற்றி
உனக்கும் எனக்கும் யாதொரு கவலையுமில்லை.
உன் தோழியர் பற்றி..
அவர்களின் காதல் பற்றி..
இன்னும் உன் கனவுகள் பற்றி ..
இன்னும் இன்னும்
கண்கள் விரிய ..
ஓர் அபிநயத்துடன் சொல்லிச்செல்வாய்..
எதுவும் என்னுள் மிஞ்சாது.. உன் அபிநயங்கள் தவிர்த்து.

கனவுகள் இறந்து..
நிஜங்கள் மீதமான போது..
என்னுடன் நீயுமில்லை..
நாம் தொடர்ந்த அப்புள்ளியும் மறைந்தே போயிற்று.

ஆனாலும்
நான் சேமித்தே வைத்துள்ளேன்..
உன் அபிநயங்களினையும்…
நீ கொஞ்சமாய் தந்துவிட்டுப்போன உன்காதலையும்..

சிவா.ஜி
31-03-2010, 02:46 PM
உண்மைதான்....காதலி அருகமர்ந்து...வாய்கொள்ளாமல் பேசும்போது, வார்த்தைகள் எதுவும் மனதில் தங்குவதில்லை...ஒவ்வொரு வார்த்தைக்கும், அவள் கண்களின் அசைவும், உதடுகள் காட்டும் மாயக்காட்சிகளும், கன்னக்கதுப்புகளின் நிற மாறுதல்களும்...என எல்லாமும் உள்ளேத் தங்கிவிடுகிறது...

அருமையாய் அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் அகத்தியன். கடைசி வரிகள் கவிதைக்கு அழகு சேர்க்கின்றன. வாழ்த்துக்கள்.

பா.ராஜேஷ்
31-03-2010, 03:59 PM
பத்திரமாய் சேமியுங்கள். அதை தவிர வேறு என்ன செய்ய முடியும்...

குணமதி
31-03-2010, 05:46 PM
தவிர்க்க இயலாச் சேமிப்பு!

உணர்வு வெளிப்பாடு - நன்று.

ஜனகன்
31-03-2010, 07:14 PM
உள்ளங்களை தேடுபவன் மனிதன்.
உணர்வுகளை தேடுபவன் மாமனிதன்.
நீங்கள் தேடுவதோ கனவுகள்.
நன்றாக எழுதியுள்ளீர்கள், வாழ்த்துக்கள்.

Akila.R.D
01-04-2010, 05:32 AM
கவிதை மிகவும் நன்றாக உள்ளது...

வாழ்த்துக்கள் அகத்தியன்...

சேமிப்பு வங்கி நிறைந்து விட்டதா?..

govindh
10-04-2010, 12:21 PM
"உன்னுடனான உரையாடல்கள்.."
உணர்வு பூர்வமாய்... கவி வரிகள் அருமை அகத்தியன்.
வாழ்த்துக்கள்...