PDA

View Full Version : காரும் காரிகையும்!



குணமதி
31-03-2010, 10:41 AM
காரும் காரிகையும்!


கார் என்றால் கருமை நிறம். மழை பெய்யக் கூடிய சூல் கொண்ட முகில் கருமை நிறங் கொண்டிருக்கும். மழை பெய்யும் காலத்தைக் கார் காலம் என்கிறோம்.

பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் தன் ஆருயிர்த் தலைவியைப் பிரிந்து செல்லுகின்றான். பிரியும் போது, கார் காலம் வருவதற்குள் வந்து விடுகின்றேன் என்று தலைவிக்கு உறுதி கூறிச் செல்கின்றான்.

கார் காலமும் வருகிறது. தலைவன் இன்னும் வரவில்லை. தலைவி பசலை நோயால் வருந்துகிறாள். அவன் வருவான் என்று பிரிவுத் துயரைப் பொறுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் நிலைகண்டு மனமிரங்குகிறாள் தோழி. கார்காலந் தொடங்கியதை அறிந்து தலைவன் வந்துவிடுவான் என்று ஆறுதல் கூறுகிறாள்.

இந் நிகழ்ச்சியைப் பாடலில் விளக்குகிறார் மதுரை கண்ணங் கூத்தனார் என்னும் புலவர். அப்பாடலின் பொருள் :

நடனமாடும் பெண்களைப் போல் மயில்கள் அழகாக ஆடுகின்றன; காடெங்கும் கொன்றை மலர்கள் கவினுடன் பூத்திருக்கின்றன; பாடுகின்ற வண்டுகளெல்லாம் மலர்களில் உட்கார்ந்து ஊதுகின்றன. இதுதான் காதலர் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம். மூங்கில் போன்ற அழகிய தோள்களை உடையவளே! இந்தப் பருவம் தான், உன்னை வருத்துகின்ற பசலை நோய்க்கு மருந்தாகும் என்பதாகும்.
அந்தப்பாடல் இதுவே :

ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்
காடுங் கடுக்கை கவின்பெறப் பூத்தன
பாடுவண் டூதும் பருவம் பணைத்தோளி
வாடும் பசலை மருந்து.

பாடலில் விளக்கும் இயற்கைக் காட்சிகள், இன்றும் மழைக் காலத்தில் காடுகளில் காணக்கூடிய காட்சிகளாகும். அவற்றை விளக்கி, மழைக்காலம் வந்துவிட்டதால் தலைவனும் வந்துவிடுவான் என்று கூறி தலைவியைத் தேற்றும் தோழியின் திறம் பாராட்டத் தக்கதாக வுள்ளதை அறிந்து மகிழ முடிகிறது.

இப்பாடல், கார் நாற்பது என்னும் பதினெண் கீழ்க்கணக்கு நூலில் நான்காம் பாடலாக இடம்பெற்றுள்ளது.

சிவா.ஜி
31-03-2010, 11:57 AM
அருமை

govindh
31-03-2010, 01:38 PM
கார் காலத்தில் காதலன் வருகைக்காகக்
காத்திருக்கும் காரிகை....விளக்கம் அருமை...

குணமதி
31-03-2010, 06:02 PM
நன்றி சிவா.

குணமதி
31-03-2010, 06:02 PM
கார் காலத்தில் காதலன் வருகைக்காகக்
காத்திருக்கும் காரிகை....விளக்கம் அருமை...

நன்றி கோவி.

ஜனகன்
31-03-2010, 07:18 PM
நெஞ்சுக்கு உரம் பாச்சும் வரிகள்.வாழ்த்துக்கள் குணமதி.

கீதம்
01-04-2010, 12:51 AM
கார்காலத்தின் அழகைத் தோழியின் தேற்றலூடே சொன்ன விதம் அருமை. எளிய முறையில் விளக்கம் தந்து அப்பாடலை ரசிக்கச்செய்த குணமதி அவர்களுக்கு நன்றி.

குணமதி
01-04-2010, 04:20 AM
நெஞ்சுக்கு உரம் பாச்சும் வரிகள்.வாழ்த்துக்கள் குணமதி.

நன்றி நண்பரே.

குணமதி
01-04-2010, 04:21 AM
கார்காலத்தின் அழகைத் தோழியின் தேற்றலூடே சொன்ன விதம் அருமை. எளிய முறையில் விளக்கம் தந்து அப்பாடலை ரசிக்கச்செய்த குணமதி அவர்களுக்கு நன்றி.

மிக்க நன்றி.

இளசு
01-04-2010, 08:25 PM
மரங்கள் தீப்பிடித்தனவோ உச்சியில் என எண்ண வைத்தனவாம்
பூத்து நின்ற கொன்றைமலர்கள்...


சங்க இலக்கியங்களில் காலம், நிலம் - பொருந்தி வரும் வர்ணனைகள்..
இக்கால ''இயக்குநர் கைவண்ணம் ' போல் அழகாய் மிளிரும்..
பகிர்தலுக்கு நன்றி குணமதி அவர்களே..


( முன்னர் எம்ப்பரர் பகிர்ந்த குறுந்தொகைத் திரி நினைவாடலில்..)

PunithaDeviC
01-04-2010, 10:59 PM
என் தமிழ் ஆசிரியர் சிறு வயதில் செய்யுள் பகுதிக்கு உரை கூறும் தருணத்தை நினைவு படுத்தினீர்கள். மிக சிறப்பு..

குணமதி
02-04-2010, 01:32 AM
நன்றி இளசு.

குணமதி
02-04-2010, 01:33 AM
என் தமிழ் ஆசிரியர் சிறு வயதில் செய்யுள் பகுதிக்கு உரை கூறும் தருணத்தை நினைவு படுத்தினீர்கள். மிக சிறப்பு..

நன்றி.